இளைஞர் குழு உணவு விநியோகம் செய்கிறது, நகரம், தேசிய பாதுகாப்புத்துறை ஆகியவற்றின் ஆதரவைப் பெறுகிறது
27 மார்ச் 2020
நீயூ ரோஷெல், நியூ யார்க் – தங்களின் அண்டைப்புறத்தில் கொரோனா வைரஸ் மாமூலான வாழ்க்கையில் இடையூறு விளைவித்த போது, பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக விளைந்த அவசிய தேவைகளின்பால் தங்களின் கவனத்தை ஓர் இளைஞர் குழுமம் திருப்பியது. நியூ யார்க்கின் இந்த புறநகர்ப் பகுதியில், சமுதாயத்திற்கான சேவைக்கு திறனாற்றல்களை உருவாக்குகின்ற பஹாய் நடவடிக்கைகளில் இந்த இளைஞர்கள் ஒன்றாகப் பயின்றும் பணிபுரிந்தும் வந்துள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன் பள்ளிகள் மூடப்பட்டதால், பல பிள்ளைகள் அவர்களின் தினசரி உணவுக்கான முக்கிய மூலாதாரத்தை இழந்து நின்றனர். விரைவில் உணவு விநியோகத்திற்கான அதிகாரபூர்வ ஏற்பாடுகள் செய்யப்படும் எனினும், அந்த இளைஞர்கள் அதுவரை சமூக நிர்மாணிப்பு முன்முனைவுகளின் மூலம் கூட்டாக உருவாக்கியிருந்த உணவு விநியோகம் உட்பட நட்பு மற்றும் அனுபவம் ஆகியவை இடைக்காலத்தில் ஓர் அவசர நடவடிக்கையை ஏற்பாடு செய்திட உதவும் என உணர்ந்தனர்.“இந்த இளைஞர்கள் ஒரு சமூகத்தின் சூழலில் தங்களின் ஆன்மீக அபிவிருத்தி குறித்தும், ஒரு சிரமமான சூழ்நிலையை எதிர்கொள்வதில் உருவாகும் வலிமை குறித்தும் கற்று வந்துள்ளனர்,” என்கிறார், அந்த அண்டைப்புறத்தில் வசிப்பவரும் சமூக ஏற்பாட்டாளருமான திரு டிம்மொதி மேக்நைட்.
“இம்மாதிரியான நேரங்களில், ‘சமூகத்திற்கான எங்களின் சேவை நிற்பதில்லை, அது சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளப்படுகின்றது, என்பதற்கான ஆற்றல் அவ்விளைஞர்களுக்கு உண்டு. இப்பொழுது, நாங்கள் வியாதியின் பரவலைத் தடுப்பதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் விலிகியிருந்து, மக்களின் நலனை கருத்தில் கொண்டு எங்களால் இயன்ற அளவு உதவிட முயல்கிறோம்.

பள்ளிகள் மூடப்படுகின்றன என அறிவிக்கப்பட்ட அந்த இரவன்று, அந்த இளைஞர்கள் கல்வி வாரியத்துடன் தொடர்பு கொண்டதுடன் உணவு தானம் செய்ய ஒப்புக்கொண்ட, அப்பகுதியிலுள்ள பல உணவு விற்பனையாளர்களையும் சந்தித்துப் பேசினர். தாங்கள் வாழும் அடுக்குமாடி காம்ப்லெக்ஸ்’இல் ஒரு சமூக அறையை ஒரு விநியோக தளமாக்கிட ஏற்பாடுகள் செய்து, அதில் மக்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் சற்று தள்ளியிருப்பது மற்றும் சுகாதாரத்தை உறுதிபடுத்துவதற்கான நடவடிக்கைகளையும் நிலைநிறுத்தினர்.
கல்வி வாரியம் குடும்பங்களுக்கு அறிவித்தும், அடுத்த நாளே அவர்கள் சூடான உணவை பெற முடிந்தது. இது சிறுவர்கள் குறைந்த மனிதத் தொடர்புடன் வீட்டிலேயே நல்ல உணவைப் பெறுவதற்கும் முடிந்தது.
“இளைஞர்கள் செயல்திறம் உடையவர்களாக இருந்ததனாலும், தங்களின் அண்டைப்புறத்தில் செயல்படுவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு இருந்ததனாலும், ஒரு நெருக்கடி நேரத்தில் அவர்கள் ஆரம்ப செவிசாய்ப்போராக இருந்திட முடிந்து, அரசாங்க பிரதிசெயலை நிறைவு செய்திடவும் முடிந்துள்ளது,” என்றார் அந்த இளைஞர்களின் நடவடிக்கைகளில் ஒன்றாகப் பணிபுரியும் திரு நிமா யூசுஃபியான்.
இளைஞர்களின் நடவடிக்கை நகர அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. பள்ளிகள் மூடப்பட்ட இரண்டாவது நாள், அவ்விளைஞர்களின் ஏற்பாடுகள் மாநில காவல் படையின் பணியாளர்களால் உதவப்பட்ட ஓர் அதிகாரபூர்வ உணவு விநியோக மையமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
“இந்த சூழ்நிலையில் நிறைய செய்ய வேண்டியுள்ளதுடன், இந்த நெருக்கடியின் போது நகரத்திற்கு எண்ணற்ற தேவைகள் ஏற்படும். ஆனால், இளைஞர்கள் தாங்கள் மேற்கொண்டு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்தித்தே வருகின்றனர்,” என்றார் திரு யூசுஃபியான்.