March 30, 2020
எஸ்க்-ஸூர்-அல்ஸெட், லக்ஸம்பர்க் — லக்ஸம்பர்க் நாட்டு பஹாய்கள் வழங்கிய தார்மீக கல்வியில் பங்கேற்கும் சிறுவர்கள், ஒருவரின் சமுதாயத்திற்கு சேவையாற்றுவது பற்றி கற்றுவருகின்றனர். இக்கருப்பொருள் குறித்த ஒரு வெளிப்பாடாக, தற்போதையை சுகாதார நெருக்கடியின் போது தியாகச் செயல்கள் புரிந்து வருவோருக்கு தங்களால் இயன்றதைச் செய்திட அவர்கள் உந்தப்பட்டுள்ளனர். இன்றியமையா பணிகளின் ஈடுபட்டுள்ள சுகாதார மற்றும் பிற ஊழியர்களுக்கு தங்களின் அன்பையும் பாராட்டையும் தெரிவிக்கும் செய்திகளைப் பலர் அனுப்பியுள்ளனர்.
எஸ்க்-ஸூர்-அல்ஸெட்’டில் நடைபெறும் “இளம் இரத்தினங்கள்” எனும் சிறுவர் வகுப்பு ஆசிரியர், “இணையம் வழி சந்தித்து வரும் எங்களின் வகுப்பு, இந்த நெருக்கடியின் போது இன்றியமையா சேவைகளில் ஈடுபட்டு வருவோருக்கு—மருத்துவர்கள், மருத்துவமனை மற்றும் ஆய்வுக்கூடங்களில் பணிபுரிவோர், மருந்தகங்கள் மற்றும் மளிகைக் கடை ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள் போன்றோர்– தங்களின் நன்றியைத் தெரிவிக்கும் அட்டைகளையும் சித்திரங்களையும் செய்யும் யோசனையைக் கொண்டிருந்தனர்,” என்றார்
அந்த ஆசிரியர், அந்த சித்திரங்கள் மற்றும் அட்டைகளின் மின்நகல்களை அண்டையிலுள்ள டூடலாங்கெ’வில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும் தேசிய சுகாதார ஆய்வுக்கூடத்திற்கும், ஓர் ஊக்குவிப்பு செய்தியோடு அனுப்பிவைத்தார். அந்த ஆய்வுக்கூடம் அதை மிகவும் உற்சாகத்துடன் முதாய ஊடகத்தில் பகிர்ந்துகொண்டது. “இவ்வார இறுதியில், நமது இளம் ஓவியர்களின் கரங்களிலிருந்து, எஸ்க்-ஸூர்-அல்ஸெட்’லிருந்து எங்களுக்கு வந்த ஓர் ஊக்குவிக்கும் செய்தியை தேசிய சுகாதார ஆய்வுக்கூடம் பெற்றது.
அதே போன்று, முக்கிய சேவைகளில் ஈடுபடுவோரின் தன்னலமற்ற செயல்களுக்கான நன்றி மற்றும் மதிப்புணர்வைத் தெரிவிக்கும் அட்டைகளை மற்றொரு சிறுவர்கள் குழுமமும் தயாரித்தது. உள்ளூர் மருத்துவர்களும் மருந்தக ஊழியர்களும், மளிகைக் கடைகள் அச்செய்திகளைக் கனிவோடு பெற்றுக்கொண்டனர், அச்செய்திகளைப் பெற்ற பலரின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
https://news.bahai.org/story/1406/