கடவுள் ஜோதிமயமானவர்


பஹாவுல்லா

baha_shrine
பாஹ்ஜி இஸ்ரேலில் உள்ள பஹாவுல்லாவின்
சேதிமம்

பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லாவின் இயற்பெயர் மிர்ஸா ஹுஸேய்ன் அலி. ஆனால், அவர் தம்மை இறைவனின் அவதாரம் என பாக்தாத்தில் அறிவித்த பிறகு அவர் பஹாவுல்லா என்னும் திருநாமத்தால் அழைக்கப்பட்டார். பஹாவுல்லா என்றால் கடவுளின் ஜோதி அல்லது கடவுளின் பேரொளி அல்லது கடவுளின் மகிமை என பொருள்படும். பஹாய்களுக்கு பஹாவுல்லா எனும் நாமம் அதிவுயரிய நாமமாகும்.  பஹாவுல்லா கடவுளின் ஜோதி என்பது பஹாய்களின் நம்பிக்கை. அவர் இக்காலத்திற்கான கடவுளின் அவதாரம். கடவுளின் சாம்ராஜ்யத்தை உலகில் நிறுவ வந்தவர்.

கடவுளின் ஜோதி என்றால் என்ன?

வானில் பிரகாசிக்கும் சூரியன் அதன் ஒளிக்கதிர்களினால் அறியப்படுகிறது. சூரியனுக்கு பெயர் கொடுப்பதே அதன் ஒளிக்கதிர்களாகும். அதே போன்று பஹாவுல்லாவும் அந்த சூரியனின் ஒளிக்கதிர்கள் போன்றவர். அவர் கடவுளின் அவதாரம் எனும் முறையில் கடவுளின் ஒளியை, கடவுளின் பண்புகளை, ஒரு ஜோதியைப் போன்று பிரதிபலிக்கின்றார். பஹாவுல்லா கடவுளின் ஆன்மீகப் பண்புகளை ஒரு ஜோதியைப் போன்று பிரிபலிப்பது போன்றே மனிதர்களும் பஹாவுல்லா வெளிப்படுத்தும் ஜோதியை தங்கள் வாழ்வில் பிரதிபலித்திட வேண்டும்.

பேரொளி குறித்த நேரடி அனுபவம்

ஒரு முறை, விசுவாசி ஒருவர் பஹாவுல்லாவின் தரிசனம் பெற அக்காநகர் வந்திருந்தார். பஹாவுல்லாவை இரண்டு முறை தரிசித்த பிறகு, அவர் மனதில் பஹாவுல்லா எல்லாரையும் போல சாதாரன மனிதராகவே தோன்றினார். அவர் எதிர்பார்த்தபடி பஹாவுல்லாவிடமிருந்த எவ்வித மாயாஜாலங்களையும் அவர் பார்க்க முடியவில்லை. பிறகு சில நாள்களில் பஹாவுல்லா அவரை தமது அறைக்கு தனியே வரும்படி அழைத்திருந்தார். சேவகர் ஒருவர் அவரை பஹாவுல்லாவின் அறைக்கு அழைத்துச் சென்றார். அறைக்குள் நுழைந்தவுடன், அவ்விசுவாசி அங்கு பஹாவுல்லா நம்பமுடியாத பிரகாசத்துடனும் திகைப்பூட்டும் பேரொளியாகவும் இருந்திடக் கண்டார். இந்த ஒளியைப் பற்றிய அவரது அனுபவத்தின் தீவிரத்தினால் அவர் அக்கனமே சுயநினைவை இழந்து தரையில் வீழ்ந்தார். அதன் பின்னர் பஹாவுல்லா கடவுளின் அவதாரங்கள் ஏன் மனிதரின் போர்வையில் வாழ்கின்றனர் என்பதற்கான விளக்கத்தை அவ்விசுவாசிக்கு அருளி அவரது குழப்பத்தைப் போக்கினார்.

இறைவனின் 99 பண்புகள்

இஸ்லாமிய சமய மரபுகளின்படி கடவுளுக்குப் பல திருநாமங்கள் உள்ளன எனவும் அதில் ஒன்று மட்டும் கடவுளின் அதிவுயரிய நாமம் எனக் கூறப்படுகின்றது. பொதுவாக, இஸ்லாமிய மரபுகளில் கடவுளின் திருநாமங்கள் 99 உள்ளதென கூறப்படுகின்றது.. இந்த 99 திருநாமங்களில் ஒன்று கடவுளின் அதிவுயரிய நாமம் என இஸ்லாமிய மரபுகள் கூறுகின்றன. ஆனால், அது எந்த நாமம் என்பது வெளிப்படுத்தப்படவில்லை. காலம் கனியும் போது இது வெளிப்படுத்தப்படும் என்பது தீர்க்கதரிசனம். பஹாய்களைப் பொறுத்த வரை அத்திருநாமம் இன்று பஹாவுல்லாவின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அது ‘பஹா’ அல்லது ‘அப்ஹா’ என்னும் நாமமாகும், அதாவது ‘ஜோதி’ அல்லது ‘பேரொளி’. இன்று இந்த நாமம் பஹாவுல்லாவின் மூலம் வெளிப்படையாகியுள்ளது.

ஸ்ரீ கிருஷ்னரின் விஸ்வரூபம்

அடுத்து மஹாபாரத இதிகாசத்திற்கு வருவோம். இதில் பாரதப்போரின்போது கிருஷ்னர் தமது விஸ்வரூபத்தை அர்ஜுனனுக்கு வெளிப்படுத்தும் காட்சி ஒன்று வருகின்றது:

மஹாபாரத யுத்தத்தின் போது, பாண்டவர்களாகிய அர்ஜுனனும் அவனது சகோதரர்களும் ஸ்ரீ கிருஷ்னரை அர்ஜுனனின் தேரோட்டியாகக் கொண்டு, தங்களின் ஒன்றுவிட்ட சகோதரர்களாகிய கௌரவர்களை எதிர்த்து போரிட வேண்டியிருந்தது. எதிரே இருந்த தனது உறவினர்களைக் கொல்ல வேண்டுமே எனும் மனவுறுத்தலுக்கு அர்ஜுனன் ஆளாகினான். அவனை சாந்தப்படுத்த, கிருஷ்னர் அவனுடன் வாழ்வு, மரணம், தர்மம் மற்றும் யோகம் குறித்து உரையாடுகின்றார். பகவத் கீதையின் அத்தியாயம் 10 மற்றும் 11’களில் கிருஷ்னர் தமது அதிவிழுமிய திருவுருவை வெளிப்படுத்தி இறுதியில் விஷ்வரூபியாக அர்ஜுனனுக்கு காட்சி தரும் செய்யுள்களைக் காணலாம். இந்த விஷ்வரூபத்தைத் தரிசிப்பதற்கு உதவியாக கிருஷ்னர் அர்ஜுனனுக்கு தெய்வீக அகப்பார்வையை வழங்குகின்றார்.

இந்த விஷ்வரூபம் பின்வருமாறு வர்ணிக்கப்படுகின்றது:

दिवि सूर्यसहस्रस्य भवेद्युगपदुत्थिता |
यदि भा: सदृशी सा स्याद्भासस्तस्य महात्मन:|| 11-12

வானத்தில் ஒருங்கே ஆயிரம் சூரியன்கள் எழுவாராயின் அங்கு தோன்றும் ஒளியை அந்த மகாத்மாவின் ஒளிக்கு நிகராகக் கூறலாம். -பகவத் கீதை 11-12

அதாவது, ஒரே நேரத்தில் வானத்தில் ஆயிரம் சூரியன்கள் ஒன்றாகத் தோன்றுமாயின் அதனால் விளையும் ஒளி அந்த விஷ்வரூபத்தின் பிரகாசத்திற்கு ஒப்பாகும். இங்கு ஒளி என்பது சமஸ்கிருதத்தில் ‘பா’ அல்லது ஆங்கில எழுத்துகளில் ‘Bhah’ என வரும். இதில் விசேஷம் என்னவென்றால் இந்த பா, பஹா, அப்ஹா (‘Bhah, Bahá, Abha’) மூன்றிற்கும் அர்த்தம் ஒன்றுதான், ஜோதி அல்லது பேரொளி. அனைத்தையும் தனது பிரகாசத்தினால் மங்கச் செய்திடும் கடவுளின் பேரொளி.

வள்ளலார் இராமலிங்கர்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

சிதம்பரம் வடலூரில் உள்ள வள்ளலாரின் சத்திய ஞானசபை

வள்ளலார் கடவுளை அருட்பெருஞ்ஜோதியர் என வர்ணிக்கின்றார். மற்றோர் இடத்தில் கடவுளை ஜோதி வடிவத்தில் வணங்குமாறு தமது சீடர்களுக்குப் போதிக்கின்றார். இதன் தொடர்பில் வள்ளலார் கட்டிய ஞானசபையில் சிலை வணக்கமின்றி கடவுளை ஜோதி வடிவமாக பக்தர்கள் வழிபடுகின்றனர். கடவுள் அருட்பெருஞ்ஜோதியராய் இந்த ஞானசபையில் வீற்றிருக்கின்றார் மற்றும் அவரை அவ்வாறே வழிபடவேண்டுமெனவும் இராமலிங்கர் அறிவுறுத்தினார்.

மாணிக்கவாசகர் திருவெம்பாவை

அடுத்து மாணிக்கவாசகர் என்ன சொல்கிறார் என பார்ப்போம்:

திருவெம்பாவை இறைவழிபாட்டிற்கு மனிதர்களை அழைக்கும் போது:

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை
யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம் மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோர் எம்பாவாய்..  
        (1)

என இங்கும் இறைவனை அருட்பெருஞ்ஜோதியாய் மாணிக்கவாசகர் வர்ணிக்கின்றார்.

மரண அணிமை அனுபவம் (NDE)

இது போக, NDE எனப்படும் ‘மரண அணிமை அனுபவம்’ எனும் ஒருவித நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் தற்காலிகமாக சில நிமிடங்களுக்கு இறந்துவிடுகிறார். அந்த சில நிமிடங்களுக்குள் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பார்ப்போம்;

மரணம் சம்பவிக்கும் போது தங்கள் காதுகளில் ஏதோ ரீங்கார ஒலி கேட்பது போன்றும், தாங்கள் ஒரு சுரங்கத்தின் வழி ஈர்க்கப்படுவது போன்றும், அந்த சுரங்கத்தின் முடிவில் பெரொளியான ஆனால் அவ்வாறு வர்ணிக்க முடியாத ஓர் அருட்பெருஞ் ஜோதியர் தங்களை வரவேற்றதாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.

“அத்தருணத்திலிருந்து நான் அந்த அருளொளியின்பால் தவிர்க்கமுடியாத வகையில் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். அந்த ஒளியை நேசித்தேன். என்னை என் ‘இல்லத்திற்கு’ ஈர்த்த அச்சக்தியை நான் பெரிதும் நேசித்தேன்.”
https://prsamy.wordpress.com/2011/12/07/மரணத்திற்குப்-பின்/

இங்கு அர்ஜுனன் தரிசித்த, வள்ளலார் வணங்கிய, மாணிக்கவாசகர் குறிப்பிட்ட அந்தப் பேரொளியை, இறந்தவர்கள் நேரடியாக காணும் வாய்ப்பைப் பெறுகின்றனர் என்பது ஒன்றிலிருந்து அல்ல பல நூற்றுக்கணக்கான விவரங்களிலிருந்து வெளிப்படுகின்றது.

பஹாவுல்லாவின் திருவாக்குகள்

சூரியனுக்கான நிரூபணம் அந்த சூரியனே ஆகும். வேறெதனையும் கொண்டு சூரியனை அளவிட முடியாது. அதே போன்று பஹாவுல்லா இறைவனின் ஜோதி என்பதற்கு அவரே சாட்சி. அவர் வெளிப்படுத்திய திருவாக்குகளைப் படித்து ஆராய்வதன் மூலம் பஹாவுல்லா இறைவனின் ஜோதி என்பதற்கான நிரூபணங்களை நாம் கண்டிப்பாகக் காணலாம்.

உங்கள் செவிகளைத் தூய்மைப் படுத்தி, அவரை நோக்கி உங்கள் இதயங்களைத் திருப்புங்கள், அதன்மூலம் அதிபெரும் ஜோதியான உங்கள் பிரபுவின் வாசஸ்தலமான சைனாயில் இருந்து அதி அற்புதமான அழைப்பை நீங்கள் செவிமடுத்திடக் கூடும்.

உள்ளூர் கோவிலின் வடிவமைப்பு இந்தியாவில் வெளியிடப்பட்டது


உள்ளூர் கோவிலின் வடிவமைப்பு இந்தியாவில் வெளியிடப்பட்டது

“பீஹார் ஒரு வளமான நிலம், அதன் பல கிராமங்கள் இந்திய கிராமப்புற வாழ்வின் காலத்திற்கு அப்பாற்பட்ட காட்சியை வழங்குகின்றன” என கட்டிடக் கலைஞர்களுள் ஒருவரான சுதித்யா சின்ஹா கூறுகின்றார். இந்த வளமான, கிராமப்புற சூழலில் வழிபாட்டு இல்லம் தோன்றவிருக்கின்றது. பாரம்பரிய கட்டிடக்கலை மற்றும் கைவிணைகளினால் தூண்டப்பெற்று, உள்ளூர் மண்ணிலிருந்து செய்யப்படும் செங்கற்களை நாங்கள் பயன்படுத்த முடிவு செய்வோம். இந்த நிலம் உண்மையாகவும், உவமான ரீதியிலும் கோவிலின் வடிவத்தில் வார்க்கப்பட்டள்ளது.”

29 ஏப்ரல் 2020


புது டில்லி — பீஹார் ஷாரிஃபில் கட்டப்படவிருக்கும் உள்ளூர் பஹாய் கோவிலுக்கான வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நிலவுகின்ற சூழலில், இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்ச்சியை குறிக்கும் நிகழ்ச்சிக்குப் பதிலாக இது குறித்த செய்தியை இணையத்தின் வழி அறிவித்திட் இந்தியாவின் தேசிய ஆன்மீக சபை முடிவெடுத்துள்ளது.

இது இந்திய நாட்டின் இரண்டாவது பஹாய் கோவிலாக இருந்திடும். நாட்டில் பல தசாப்தங்களாக நம்பிக்கை மற்றும் ஒற்றுமைக்கான சின்னமாக விளங்கி வந்துள்ள புதி டில்லியில் உள்ள வழிபாட்டு இல்லம், எல்லா சமய மற்றும் மரபுகள் சார்ந்த இந்தியர்களுக்கான ஆன்மீக பிரதிபலிப்பு மற்றும் புத்துயிர்ப்பிற்கான அன்புமிகு ஸ்தலமாகியுள்ளது.

தாமரைக் கோவிலின் கட்டிட அமைப்பில் உத்வேகமூட்டக்கூடிய தளசக்தியை நாங்கள் சுயமாக அனுபவித்துள்ளோம், மற்றும் நாங்கள் சிறுவர்களாக இருந்ததிலிருந்தே அக்கோவிலுக்கு விஜயம் செய்து வந்துள்ளோம்,” என அப்புதிய கோவிலை வடிவமைத்துள்ள நிறுவணம் குறிப்பிட்டது. “பீஹார் ஷாரிஃபில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லம், அதன் சூழலில் பணிவுடன் அமர்ந்துள்ள அதே வேளையில், தெய்வீகத்தன்மைக்கான சூழலையும் அது வழங்கிட வேண்டும்.”

“பீஹார் ஒரு வளமான நிலம், அதன் பல கிராமங்கள் இந்திய கிராமப்புற வாழ்வின் காலத்திற்கு அப்பாற்பட்ட காட்சியை வழங்குகின்றன” என கட்டிடக் கலைஞர்களுள் ஒருவரான சுதித்யா சின்ஹா கூறுகின்றார். இந்த வளமான, கிராமப்புற சூழலில் வழிபாட்டு இல்லம் தோன்றவிருக்கின்றது. பாரம்பரிய கட்டிடக்கலை மற்றும் கைவிணைகளினால் தூண்டப்பெற்று, உள்ளூர் மண்ணிலிருந்து செய்யப்படும் செங்கற்களை நாங்கள் பயன்படுத்த முடிவு செய்வோம். இந்த நிலம் உண்மையாகவும், உவமான ரீதியிலும் கோவிலின் வடிவத்தில் வார்க்கப்பட்டள்ளது.”

பீஹார் மாநிலத்தின் மதுபானி மரபுக்கலையில் காணப்படும் வடிவ தோரணிகளிலிருந்தும், அந்த மண்டலத்தின் நீண்டகால கட்டிடக்கலை மரபிலிருந்தும் உத்வேகம் பெற்ற அந்நிறுவணம், மாறி மாறி வரும் வளைவுகளைக் கொண்ட ஒரு வடிவமைப்பை உருவாக்கியது.குவிமாடத்தைக் கொண்ட அக்கட்டிடம் அடித்தலத்தில் அமைந்துள்ள ஒன்பது வளைவுகளிலிருந்து மேலெழுந்து, ஒவ்வொரு பகுதியும் ஒரே ஒற்றை வடிவவியலாகும் வரை பன்மடங்காகி வரும்.குவிமாடத்தின் மையத்திலும், வளைவுகளின் ஒவ்வொரு வளையத்திலும் உள்ள திறப்புகள் கூரையின் எடையைக் குறைக்கும், அதே நேரத்தில் மென்மையான ஒளி உள்வர அனுமதிக்கும்.

குவிமாடத்தின் மையத்திலும், வளைவுகளின் ஒவ்வொரு வளையத்திலும் உள்ள திறப்புகள் கூரையின் எடையைக் குறைக்கும்.

“நாம் கடந்துகொண்டிருக்கும் இந்த கடின காலங்களில், முன் எப்போதையும்விட மக்கள் தங்களின் சிருஷ்டிகர்த்தரின்பால் திரும்பிட உந்தப்படுகின்றனர். ஆதலால், பீஹார் ஷாரிஃபில் கோவிலைக் கட்டுவது இப்பொழுது மேலும் அதிக அர்த்தமுடையதாக இருப்பதோடு, அதன் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளோரின் பாதுகாப்பு மற்றும் உடல்நலனை உறுதிப்படுத்தும் அதே வேளை நாங்கள் இந்த செயல்முறையை கண்டிப்பாக தொடரவும் வேண்டுமென உணர்கின்றோம்.”

பீஹார் ஷாரிஃப் பஹாய்களின் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் உள்ள சேவை மற்றும் வழிபாட்டிற்கிடையிலான தொடர்பை புதிய கோவிலும் அதன் சுற்றிடங்களும் மேம்படுத்தும்.எல்லாருக்கும் திறந்துவிடப்படும் அதன் கதவுகளுடன், எல்லா மக்களிடையிலும் உள்ளிணைத்தல் மற்றும் ஒத்துழைப்பு குறித்த ஒரு கலாச்சாரத்தை அக்கோவில் பராமரித்து வரும்.

குவிமாடத்தைக் கொண்ட கட்டிடம் அடித்தலத்தில் அமைந்துள்ள ஒன்பது வளைவுகளிலிருந்து மேலெழுந்து, ஒவ்வொரு பகுதியும் ஒரே ஒற்றை வடிவவியலாகும் வரை பன்மடங்காகி வரும்

https://news.bahai.org/story/1421/

ஆங்கிலம் பயில்வோர் சமூகம் சுகாதார நெருக்கடியின் போது ஒருவர் மற்றவருக்கு ஆதரவு நல்குகின்றனர்.


ஆங்கிலம் பயில்வோர் சமூகம் சுகாதார நெருக்கடியின் போது ஒருவர் மற்றவருக்கு ஆதரவு நல்குகின்றனர்.


22 ஏப்ரல் 2020


வான்கூவர், கேனடா – கடந்த 15 வருட காலமாக, வான்கூவர் நகரில் ஆங்கிலம் கற்போருக்கான ஒரு பஹாய்-உத்வேக திட்டம், சமுதாய முக்கியத்துவம் சார்ந்த தலைப்புகள் மீதான உரையாடல்களின் சூழலில் மொழித்திறனை பயிற்சி செய்திட ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுதிரட்டியுள்ளது. இப்பொழுது உருவாக்கப்பட்டுள்ள ஆழ்ந்த நட்பின் பந்தங்கள், இந்த சவால் மிக்க காலத்தில் வலிமை மற்றும் மீள்திறத்திற்கான மூலாதாரமாக இருந்திட காணப்படுகின்றன.

கேனடா, வான்கூவர் நகரின் ஆங்கில கார்னர் திட்டத்தின் பங்கேற்பாளர்கள் உருவாக்கிக்கொண்டுள்ள ஆழ்ந்த நட்பின் பந்தங்கள், இந்த சவால் மிக்க காலத்தில் வலிமை மற்றும் மீள்திறத்திற்கான மூலாதாரமாக இருந்திட காணப்படுகின்றன.

“கோலிப்ரி கற்றல் அறக்கட்டளையின் இயக்குனர் சைமன் கிராண்டி கூறுகையில், “வலுவான நட்பும் கூட்டு முயற்சி உணர்வும் ஆங்கில கார்னர் திட்டத்தில் உணர்வுபூர்வமாக வளர்க்கப்பட்டுள்ளன. ” இந்த கடினமான நேரங்களைக் கடப்பதற்கு மட்டுமின்றி, சமுதாயத்திற்கான சேவையில் பஹாய் போதனைகளிலிருந்து ஆழ்ந்த கருத்துக்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி உரையாடலைத் தொடர்வதிலும் கடந்த கால மற்றும் தற்போதைய பங்கேற்பாளர்கள் ஒருவர் மற்றவரிடமிருந்து பயன்பெற முடியும் என்பதைக் கண்டுவருகின்றனர்.”

ஆங்கில கார்னர் குழுக்கள் ஒன்றுகூடும்போது, பங்கேற்பாளர்கள் மொழி திறன்களுக்கும் அதிகமாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும், நட்பு, ஒற்றுமை மற்றும் அனைவரையும் கவனித்துக்கொள்வதற்கான சமூகங்களின் பொறுப்பு போன்ற கருப்பொருள்களை அவர்கள் ஆராய்வார்கள். ஒவ்வொரு தலைப்பும் தனிநபர்கள் எனும் முறையில் அவர்களை எவ்வாறு பாதிக்கிறது, அது சமூகத்தை எவ்வாறு பாதிக்கிறது, விவாதிக்கப்பட்ட யோசனைகளை செயல்படுத்துவதற்கு அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியும் அவர்கள் பிரதிபலிக்கின்றனர்.

வான்கூவர் நகர் முடக்க நடவடிக்கைகளுக்கு உட்பட்டிருப்பதால், பயிற்சி அமர்வுகள் இணையதளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

“இந்த மனவழுத்தமிக்க நாட்களில் ஒரு சமூகமாக எங்களிடையே தொடர்பில் இருப்பது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்,” என்று பங்கேற்பாளர்களில் ஒருவரான ஐஸ்லின் கூறுகிறார். “நான் அதிக சாந்தமாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறேன், ஏனென்றால் நான் இன்னும் தொடர்பில் இருப்பதோடு, மற்றவர்களுடன் கற்கிறேன்.”

ஒவ்வொரு கூட்டத்திலும், நட்பு, ஒற்றுமை மற்றும் எல்லாருக்கும் அக்கறை செலுத்தும் சமூகங்களின் கடமை குறித்த கருப்பொருள்களை ஆங்கில கார்னர் குழுமங்கள் ஆராய்கின்றனர்.

சமீபத்தில், இந்த திட்டத்தின் ஒரு வழிநடத்துனர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டத்தில் பங்கேற்றும்  பின்னர் இத்தாலிக்குத் திரும்பியுமிருந்த ஒருவரிடமிருந்து எதிர்பாராத தொலைபேசி அழைப்பைப் பெற்றார். அந்த நாட்டில் பொது சுகாதார நடவடிக்கைகள் காரணமாக தனது வீட்டில் முடக்கி வைக்கப்பட்டிருந்தபோது, இந்த நபர் தனது குழுவுடன் பகிர்ந்து கொண்ட பரஸ்பர தொடர்புகளின் கனிவை நினைவு கூர்ந்தார், “இங்கே மிகவும் தனிமையாக இருக்கின்றது, மற்றும் நாங்கள் பயன்படுத்திய அர்த்தமுள்ள உரையாடல்களை நினைவுகூர்ந்து, ஆங்கில கார்னருடன் தொடர்புகொள்ள விரும்பினேன்.”

“சில நேரங்களில் மனம்விட்டு உரையாடுதல் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர்வதில்லை,” என்கிறார் சைமன்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொருவர் விளக்குகிறார், “நெருக்கடியின் போது, ஆங்கில கார்னர் உண்மையிலேயே மிகவும் உதவியாக இருந்தது. … நாம் ஒருவர் மற்றவரின்பால் பச்சாத்தாபத்தை உணர முடிகின்றது, ஏனென்றால் இந்த சூழ்நிலை குறித்து எல்லோரும் கவலையடைவதை நாங்கள் அறிவோம். நம் உலகம் பெரியதாயினும், நாம் அனைவரும் நட்பில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்கிறோம்.”

https://news.bahai.org/story/1418/

அப்துல்-பஹாவின் நினைவாலயத்திற்கான தளத்தில் பணிகள் தொடர்கின்றன.


அப்துல்-பஹாவின் நினைவாலயத்திற்கான தளத்தில் பணிகள் தொடர்கின்றன.


23 ஏப்ரல் 2020


பஹாய் உலக மையம் — அப்துல்-பஹாவின் நினைவாலயத்தை எழுப்புவதற்கான முக்கியத்துவம் மிக்க செயல்முறை தடையின்றி மேம்பாடு கண்டுவருகின்றது, அதே வேளை கட்டுமானப் பகுதியில் பணிபுரிவோருக்கான பொது சுகாதார நடவடிக்கைகள், அதிகாரிகளால் கோரப்படும் பொது சுகாதார ஏற்பாடுகளுடன் இணக்கமாக இருக்கின்றன.

பணித்தளத்தில் பணிபுரிவோரின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் சில கட்டுமான அம்சங்கள் சற்று மந்தமாகிய போதும், அஸ்திவார பணிகள் மேம்பாடு கண்டு பூர்த்தியடையும் நிலையில் உள்ளன.

ஒரு கோபுர பாரந்தூக்கி இயந்திரம் இப்போது தளத்தின் மீது உயர்ந்து, நினைவாலயத்தின் அஸ்திவாரங்களை அமைக்கும் பணிகளுக்கு உதவுகிறது. கடந்த வியாழக்கிழமை, மேலே அமைக்கப்பட்ட கட்டமைப்பிற்கு ஸ்திரத்தன்மையை வழங்கிட உதவும்  தளத்தின் மையத்தில் ஆழமாக இறக்கப்பட்டிருந்த ஆதார பைலிங் வேலைகள் ஓர் அடுக்கு கான்கிரீட்’டினால் மூடப்பட்டன.

மைய கட்டமைப்பை நோக்கிய வடக்கு மற்றும் தெற்கு நுழைவாயில்களுக்கு ஆதரவளிக்கும் அடித்தலங்களும், ஓர் உட்புறமான தோட்டத்தைச் சுற்றிய சுவர்கள் இப்பொழுது உருபெற்று வருகின்றன. இதன் விளைவாக, வடிவமைப்பின் நேர்த்தியான வடிவவியல் உரு  இப்போது முதல் முறையாகத் தென்படுகின்றது.

அப்துல்-பஹா நினைவாலய கட்டுமானத்தின் ஆகாய மார்க்கமான காட்சி

சில நடவடிக்கைகள் மெதுவாக அல்லது நிறுத்தப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளூர் அதிகாரிகளின் அங்கீகாரத்தோடு மேம்பாடு காணப்பட்டு வருகின்றது.

எதிர்கால பணிகளுக்குத் தேவையான விரிவான வடிவமைப்புகள் அவற்றின் இறுதி வடிவத்தை அடைந்து வருகின்றன, அதே நேரத்தில் கட்டுமானத்தின் கூடுதல் கட்டங்களுக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. சிக்கலான பளிங்கு மேலாடையை உருவாக்க குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி மற்றும் மேல்தள சாளரங்களை உருவாக்கத் தேவைப்படும் புதுமையான தொழில்நுட்பங்கள் குறித்து ஆரம்ப சோதனைகள் நடைபெற்று வருகின்றன, அவை மைய கட்டமைப்பிலிருந்து சுற்றியுள்ள தோட்டங்கள் வரை நீட்டிக்கப்படும்.

அப்துல்-பஹாவின் நினைவாலய தளத்தின் மையத்தில் ஆழமாக பதிக்கப்பட்டுள்ள ஆதரவு தூண்களை மூடுவதற்கு ஓர் அடுக்கு சிமென்ட்’டை ஊற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

https://news.bahai.org/story/1419/

கஸாக்ஸ்தானில் நெருக்கடியின் வழி பணிபுரிதல் அதிக சமுதாய ஒற்றுமையைப் பேணுகின்றது.


கஸாக்ஸ்தானில் நெருக்கடியின் வழி பணிபுரிதல் அதிக சமுதாய ஒற்றுமையைப் பேணுகின்றது.


25 ஏப்ரல் 2020


நூர்-சுல்தான், கஸாக்ஸ்தான் — தற்போதைய உலகளாவிய சுகாதார நெருக்கடி பல மக்கள் தங்கள் சமுதாயத்தின் வருங்காலம் குறித்து ஆழமாகப் பிரதிபலித்திடத் தூண்டுகிறது. கஸாக்ஸ்தானில் கடந்த வாரம், தற்போதைய சூழ்நிலைகளில் தங்களின் உடனுழைத்தல் முயற்சிகள் எவ்வாறு சமுதாய ஒற்றுமையைப் பலப்படுத்துகின்றன என்பதை ஆராய்வதற்கு, கல்வியாளர்கள், அரசாங்க அதிகாரிகள், சமுதாய நபர்கள், சமயப் பிரதிநிதிகள் ஆகியோருடன் பஹாய் சமூகம் ஓர் இணையதள கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது.

“இந்த கடினமான காலங்களில், வரலாறு சார்ந்த ஒற்றுமையின்மை உணர்வுகளை அப்பால் வைத்துவிட்டு, இந்த நெருக்கடியிலிருந்து நாம் வெளிப்படும் போது நம் நாடு பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்திட தற்போதைய சூழ்நிலைக்கும் அப்பால் நாம் கண்ணுற வேண்டியிருந்தது,” என நாட்டின் பொது விவகாரங்களுக்கான பஹாய் அலுவலகத்தின் பிரதிநிதியான தீமோர் செக்பர்பயெவ். (உள்ளூர் ஒவியரின் ஒவியம்)

“இந்த கடினமான காலங்களில், வரலாறு சார்ந்த ஒற்றுமையின்மை உணர்வுகளை அப்பால் வைத்துவிட்டு, இந்த நெருக்கடியிலிருந்து நாம் வெளிப்படும் போது நம் நாடு பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்திட தற்போதைய சூழ்நிலைக்கும் அப்பால் நாம் கண்ணுற வேண்டியிருந்தது,” என நாட்டின் பொது விவகாரங்களுக்கான பஹாய் அலுவலகத்தின் பிரதிநிதியான தீமோர் செக்பர்பயெவ்.

சமுதாய அகப்பிணைவு குறித்த சொல்லாடலுக்குப் பங்களிப்பதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக அலுவலகம் அக்கலந்துரையாடலை நடத்தியது.

“இந்த நெருக்கடிக்கான மறுமொழியாக, நாங்கள் நம்பிக்கையை தளரவிடாமல் அதற்கு மாறாக நாங்கள் இதுவரை கண்டிராத சமுதாய ஒற்றுமைக்கான ஓர் அளவை அடைவதற்கான சாத்தியத்தின்பால் எங்கள் கண்களைத் திருப்புகின்றோம்,” என்றார் பொது விவகாரங்களுக்கான பஹாய் அலுவலக பிரதிநிதியான செரிக் தொக்போலாட்.

அதன் குடிகள், சமூகங்கள், ஸ்தாபனங்கள் ஆகியவை ஒன்றாக செயல்பட்டு எல்லாரின் பொதுநலனுக்காக முடிவுகள் எடுப்பது ஒரு நல்லிணக்கமான சமுதாயத்தின் அடையாளங்களில் ஒன்றாகும் என பங்கேற்பாளர்கள் கருதினர்.

பொது மற்றும் அரசாங்க ஸ்தாபனங்கள் இரண்டுமே, கூட்டு முடிவுகள் எடுப்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய கோட்பாடுகளை ஆராய்வது குறித்த புரிதலில் எவ்வாறு மேலும் ஆழமாக செயல்படவேண்டும்.

கஸாக்ஸ்தானில் கடந்த வாரம், தற்போதைய சூழ்நிலைகளில் தங்களின் உடனுழைத்தல் முயற்சிகள் எவ்வாறு சமுதாய ஒற்றுமையைப் பலப்படுத்துகின்றன என்பதை ஆராய்வதற்கு, கல்வியாளர்கள், அரசாங்க அதிகாரிகள், சமுதாய நபர்கள், சமயப் பிரதிநிதிகள் ஆகியோருடன் பஹாய் சமூகம் ஓர் இணையதள கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது.

“இத்தகைய சூழ்நிலைகளில், பரஸ்பர நம்பிக்கையின் முக்கியத்துவம் தெளிவடைகிறது. நம்பிக்கையை ஊக்குவிப்பது வெளிப்படையான மற்றும் தெளிவான முடிவுகள் எடுப்பதைக் கோருகின்றது. தவறுகள் கண்டுணரப்பட்டு சரிசெய்யப்படுகின்றன என்பதை மக்கள் காணும்போது, நம்பிக்கை பிறக்கின்றது மற்றும், பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்,” என்றார் கஸாக்ஸ்தான் பாராளுமன்ற உறுபினரான அர்மான் கொஸாக்மெத்தொவ்.

ஹிந்து சமுதாயத்திலிருந்து ஒரு கண்ணோட்டத்தை வழங்கிய அக்ஷத் அதில்பயேவ், “மக்கள் அதிகரித்த அளவில் ஆன்மீகத்தைப் பற்றி பேசி பல பதில்களை சமய மறைகளிலிருந்து பதில் காணுகின்றனர்,” என்றார். நம்பகம் என்பது சமயநம்பிக்கையிலிருந்து பிறக்கின்றது. நமது அபிவிருத்தியைப் பேணுகின்ற விழுமிய ஆன்மீக கோட்பாடுகளுடன் நெருக்கமுற நம்முன் ஒரு வாய்ப்பிருக்கின்றது,” என்றார்.

கடந்தகாலமானது வருங்காலத்தை வரையறுக்க வேண்டியதில்லை எனும் உறுதியான உணர்வை எல்லா பங்கேற்பாளர்களும் பகிர்ந்துகொண்டனர்.

“அரசாங்கங்கள், அமைப்புகள், மற்றும் சமூகங்கள் முன்னோக்கிய பாதையை ஒன்றாக நிர்மாணித்து வருகின்றன. முன்பு பகைமையில் பரஸ்பரமாக செயல்பட்டவர்கள் இப்பொழுது ஒருவருக்கு ஒருவர் உதவிக்கரம் நீட்டுகின்றனர்,” என்றார் சமய நல்லிணக்க உரையாடல் அபிவிருத்திக்கான N. நஸர்பயேவ் மையத்தின் கார்லிகாஷ் கலிலகாநோவா. இந்த நிகழ்வைப் பிரதிபலிக்கும் வகையில், கஸாக்ஸ்தான் பஹாய்களின் தேசிய ஆன்மீக சபை உறுப்பினரான லியாஸ்ஸாத் யங்கலியேவா கூறுகிறார், “போட்டி என்பது பொது வாழ்வின் ஒழுங்கமைப்பிற்கு மையமாகவும் அபிவிருத்தியின் இயந்திரமாகவும் கருதப்படும் ஒரு யோசனையாகும். ஆனால் இந்த யோசனை காலாவதியானது என்பது இப்போது பலருக்கு தெளிவாகி வருகிறது. இன்று நாம் எதிர்கொள்ளும் சிரமங்களை சமாளிக்க அதிக அளவு ஒற்றுமையும் அனைவரின் பங்கேற்பும் அவசியம். ”

https://news.bahai.org/story/1420/

புதிய தகவல்கள் இருநூற்றாண்டு வலைதளத்தை முழுமைப்படுத்துகிறது: வேற்றுமையில் ஒற்றுமையின் தனித்துவமான பார்வை


பாப் பெருமானால் பிறப்பின் 200’வது ஆண்டு அனுசரிப்புகளிலிருந்து படங்கள், காணொளிகள், இசை ஆகியவற்றைக் கொண்ட ஒரு புதிய பகுதி இரண்டு இருநூறாம் விழாக்களின் இணையத்தளங்களைப் பூர்த்தி செய்கின்றது.

புதிய தகவல்கள் இருநூற்றாண்டு வலைதளத்தை முழுமைப்படுத்துகிறது: வேற்றுமையில் ஒற்றுமையின் தனித்துவமான பார்வை


20 ஏப்ரல் 2020


பஹாய் உலக நிலையம் — பாப் அவர்களுடைய பிறப்பின் 200’ஆம் ஆண்டு நினைவுநாள் கொண்டாட்டம் சம்பந்தப்பட்ட படங்கள், காணொளிகள் மற்றும் இசைத்தட்டுகள் இப்பொழுது அந்த இரு நூற்றாண்டு வலைதளங்களை முழுமைப்படுத்துகிறது.

பஹாய்களும் அவர்களின் சகநாட்டவர்களும் — பிரதான நகர்ப்புறநிலையங்களிலிருந்து தொலைக்கோடியிலுள்ள கிராமப்புற உள்ளூர்கள் முதல் — பஹாவுல்லா, பாப் பெருமானாரின்2017 மற்றும்  2019ல் முறையே எவ்வாறு இருநூற்றாம் ஆண்டு விழாக்களைக் கொண்டாடினர் என்பதற்கு இந்த வலைதளங்கள் ஒரு நிரந்தர சாசனமாகத் திகழும். 

இந்த வலைத்தளங்கள் பஹாவுல்லா, பாப் பெருமானாரின் 2017 மற்றும்  2019ல் முறையே எவ்வாறு இருநூற்றாம் ஆண்டு விழாக்களைக் கொண்டாடினர் என்பதற்கு ஒரு நிரந்தர சாசனமாகத் திகழும்.  

மனுக்குலத்தின் அனைத்து நிலைகளிலும் தனித்துவமான அன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாட்டை, 72-மணி நேரத்திற்கும் கூடுதலாக இந்த இரட்டை ஒளிப் பிழம்புகளின் பிறப்பின் உலகளாவிய கொண்டாட்டங்களை விரித்துரைக்கின்றன.

அந்தக் காலகட்டம் முழுவதிலும் இணையதளங்களில் உடனுக்குடனான நேரடி தகவல்கள் பகிரப்பட்டதோடு ஒன்பது மொழிகளில் மனிதகுலத்தின் ஓர் அரிய அகல்பரப்பு காட்சியும் (panorama) வழங்கப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பதிவேற்றங்கள், பல்வேறு இடங்களில் நடந்தேறிய எண்ணற்ற கலையாற்றல்மிகு திறன்களையும் சேவை நடவடிக்கைகளையும் வழிபாட்டு நிகழ்ச்சிகளின் காட்சிகளையும் பகிர்ந்தன.  அந்த வலைதளங்கள், ஒவ்வொரு கண்டத்திலுமுள்ள பஹாய் வழிபாட்டு இல்லங்களில் நிகழ்ந்த வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் நேரடியாக ஒளிபரப்பின.

இருநூற்றாண்டு கொண்டாடத்தின் 72 அந்தக் மணி நேரக் காலக்கட்டம் முழுவதிலும் இணையதளங்களில் உடனுக்குடனான நேரடி தகவல்கள் பகிரப்பட்டதோடு ஒன்பது மொழிகளில் மனிதகுலத்தின் ஓர் அரிய அகல பரப்பு காட்சியும் (panorama) வழங்கப்பட்டது.

இருநூற்றாண்டு வலைதளங்களில் சேர்க்கப்பட்டுள்ள ஆகக் கடைசியான இணைப்புகள், 150க்கும் கூடுதலான நாடுகளிலும் பிரதேசங்களிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவங்கள் அளித்த உந்துதலால் அனுசரிக்கப்பட்ட பல்வேறு கொண்டாட்டங்களை விவரிக்கும் பக்கங்களை உள்ளடக்கியிருக்கிறது.

https://news.bahai.org/story/1417/

ஐக்கிய அமெரிக்கா முழுவதும் அடித்தட்டு பதில்விணையில் இளைஞர்கள் முன்நிலைக்கு நகர்கின்றனர்


ஐக்கிய அமெரிக்கா முழுவதும் அடித்தட்டு பதில்விணையில் இளைஞர்கள் முன்நிலைக்கு நகர்கின்றனர்


15 ஏப்ரல் 2020


சிக்காகோ — ஐக்கிய அமெரிக்கா முழுவதும் பஹாய் சமூக நிர்மாணி்பபு முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ள இளைஞர்கள் கொரோனாவைரஸ் வியாதி (COVID-19) பரவலினால் விளைந்துள்ள பல தேவைகளுக்கு விரைவாக பதில்விணையாற்றுகின்றனர்.

“சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிக்க பல மாதங்களாக அல்லது பல ஆண்டுகளாக ஒன்றிணைந்து செயல்படும் மக்களிடையே ஆழமான நட்புறவு உள்ளது” என்று நாட்டின் பஹாய் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளைப் பின்பற்றும் கேண்டஸ் வான்ஸ் கூறுகிறார். “இதன் காரணமாகவும், தங்கள் சமூகங்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பின் காரணமாகவும், பல இளைஞர்கள் இந்த நெருக்கடியை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்பதை உணர்கின்றனர்.”

“சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிக்க பல மாதங்களாக அல்லது பல ஆண்டுகளாக ஒன்றிணைந்து செயல்படும் மக்களிடையே ஆழமான நட்புறவு உள்ளது” என்று நாட்டின் பஹாய் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளைப் பின்பற்றும் கேண்டஸ் வான்ஸ் கூறுகிறார். “இதன் காரணமாகவும், தங்கள் சமூகங்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பின் காரணமாகவும், பல இளைஞர்கள் இந்த நெருக்கடியை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்பதை உணர்கின்றனர்; அவர்கள் தேவைப்படுவோருக்கு உதவிட தங்களின் பஹாய் கல்வியல் நிரல்களில் பங்கெடுத்ததன் மூலம் உருவாக்கிக்கொண்டுள்ள திறமைகளையும் திறனாற்றல்களையும் பயன்படுத்துகின்றனர்.”

ரொக்வால், டெக்சஸில் உள்ள ஒரு குடும்பம் பொது பாதுகாப்புக்காக முகமூடிகளை தயாரித்து அவற்றைத் தங்களின் அண்டையர்களுக்காக வைக்கின்றனர்.

சிக்காகோவில் உள்ள ஓர் இளைஞர், தமது குழும முயற்சிகளின் இயல்பை வர்ணிக்கின்றார். எங்கள் அண்டைப்புறத்தில் தொண்டுசெய்வோரையும் பல்வேறு வளங்களையும் கண்டறிவதற்கான கருவிகளை நாங்கள் காலப்போக்கில் உருவாக்கியுள்ளோம்; இப்பொழுது, கிருமிநாசினி துடைப்பான்களை சேகரிப்பது மற்றும் விநியோகிப்பது போன்ற பல்வேறு தேவைகளின்பால் மக்களை விரைவாக எங்கள் இணைத்திட முடிகின்றது.”

அந்த இடத்திலுள்ள மற்ற இளைஞர்கள், சமூகத்தில் பொதுவாகப் பேசப்படக்கூடிய மொழிகளில் சுகாதார நடவடிக்கைகள் குறித்த தகவலளிக்கும் காணொளிகளை உருவாக்கி வருகின்றனர். மொழிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் குடும்பங்கள் அரசாங்க சேவைகளின் பயனைப் பெறுவதற்கும் அவர்கள் உதவிவருகின்றனர்.

இல்லினோயில் உள்ள குடும்பங்கள் பொதுவிடங்களில் பஹாய் திருவாசக குறிப்புகளை வைப்பதன் மூலம் அங்கு கடந்து செல்கின்றோருக்கு மகிழ்சியையும் பிரதிபலித்தலையும் தூண்டுகின்றனர்.

பிரின்ஸ் வில்லியம் மாவட்டம் போன்ற பிற இடங்களில், மொழிபெயர்ப்பு வசதியற்ற பல பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கான பள்ளி நிரல்களை போதுமான வகையில் அணுக இயலாது இருப்பது போன்ற பல தடைகள் உள்ளன.

பஹாய் கல்வித் திட்டங்களில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறுகையில், “வகுப்புகளை தவறவிடும் பிள்ளைகள் இணையத்துடன் தொடர்புடையவர்கள் என்று நாங்கள் முதலில் நினைத்தோம், ஆனால் அது தவறு என்பதையும், உண்மையில் பெற்றோர்களுக்கு பள்ளி ஏற்பாடுகள் என்ன என்பது பற்றி பெற்றோருக்கு தெரியாததே என்பதே அதன் காரணம் என்பதையும் உணர்ந்தோம்.”

கூடுதல் உதவி தேவைப்படும் குடும்பங்களை அடையாளங் கண்ட இந்த இளைஞர்கள், பல்வேறு மொழிகளில் நிர்வாகத் தகவல்களை பரப்பிடவும், தங்கள் சக மாணவர்கள் பாடங்களைச் செய்வதற்கு உதவிடவும் இணைய அமர்வுகளை வாடிக்கையாக மேற்கொண்டு வருகின்றனர்.

வட கேரோலினாவின் முக்கோன பகுதியில், சுமார் ஆறு மொழிகளாவது பொதுவில் பேசப்படும் தங்களின் அண்டைப்புறங்களில் உணவு விநியோகம், பொருளாதார உதவி, பள்ளிப்பாட போதனை ஆகியவற்றில் உதவிட பதில்விணை அணிகளை உருவாக்கியுள்ளனர்.

தங்கள் சமூகத்திலுள்ள மூத்த முதியோர் இணையம் வழி தங்களுக்குத் தேவையானவற்றைப் பெறுவதற்கு உதவியாக, டெலவேரிலுள்ள இளைஞர்கள் ஒரு போதனா முறையைத் தயாரித்துள்ளனர்.

அண்டையர்களுக்கான பராமரிப்புப் பொதிகளைத் தயாரித்த கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள குழந்தைகள் முதல், தங்கள் சமூகத்தில் வயதானவர்களுக்கு ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வதற்கு ஒரு டுடோரியலைத் தயாரித்த டெலாவேரில் உள்ள இளைஞர்கள் வரை, எல்லா வயதுடைய மற்றும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பஹாய்கள் அவர்கள் வாழும் சமூகங்களின் தனித்துவமான தேவைகளை கருத்தில் கொண்டு, நட்பை வளர்ப்பதற்கும் அவர்களின் சமூகத்திற்கு சேவையாற்றுவதற்கும் முயல்கின்றனர்.

திருமதி வான்ஸ் கூறுகிறார்: “இப்போது முன்னெப்போதையும் விட, நாடு முழுவதும் தாராள மனப்பான்மை மற்றும் படைப்பாற்றலின் நம்பமுடியாத வெளிப்பாடுகளை நாங்கள் காண்கிறோம். எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் ஒருவருக்கொருவர் உதவ, அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு மனிதனின் ஆன்மீக யதார்த்தத்தை நாம் பிரதிபலிக்கும்போது நாங்கள் நடவடிக்கையில் ஈடுபட உந்தப்படுகிறோம், இது மற்றவர்களுக்கு தாராளமாகக் கொடுப்பதையும் ஒற்றுமையுடன் செயல்படுவதையும் குறிக்கின்றது.”

https://news.bahai.org/story/1415/

ஓர் உலகளாவிய சுகாதரா நெருக்கடியின் எதிரில் உணவுக்கான உறுதியை வழங்குதல்


ஓர் உலகளாவிய சுகாதரா நெருக்கடியின் எதிரில் உணவுக்கான உறுதியை வழங்குதல்


13 ஏப்ரல் 2020


போர்ட் வில்லா, வானுவாத்து — உலகளாவிய நிலையில் கொரோனா வைரஸ் வியாதியின் விளைவின் காரணமாக எதிர்நோக்கப்படும் உணவுத் தட்டுப்பாட்டுக்கான ஒரு நிலையின் எதிரில், சமுதாய நடவடிக்கைக்கான ஆயத்தம் (PSA) எனும் பஹாய் உத்வேகம் பெற்ற கல்வியல் திட்டத்தில் ஈடுபட்டுள்ள சில தனிநபர்கள், தங்கள் சமூகங்களைக் காப்பாற்றுவதற்காக நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

வானுவாத்துவில் PSA திட்டத்தில் பங்கேற்கும் ஒருவர். “பங்கேற்பாளர்கள் தங்களை சமூகப் பொதுநல ஊக்குவிப்பாளர்களாக தங்களை காணுகின்றனர், மற்றும் அவர்கள் பிறருக்கான சேவையில் ஈடுபட்டுள்ளனர், ஆதலால் இத்தகைய சோதனைமிக்க காலங்களில் ஆர்வநம்பிக்கையுடன் இருந்து தேவைப்படுவற்றை செய்வதுமே அவர்கள் பிரதிகார்யமாக இருக்கின்றது.

“எங்கள் சமூகத்திற்கு எவ்வாறு சேவை செய்வது என்பது குறித்து என் குழுமம் எப்பொழுதுமே சிந்தித்துக்கொண்டிருக்கின்றது, மற்றும் கொரோனா வைரஸின் வருகை குறித்து நாங்கள் என்ன செய்யலாம்? நாங்கள் ஒன்றும் செய்யாமல் உட்கார்திருக்க முடியாது. எங்கள் சமுதாயத்திற்கான சேவையில் நாங்கள் ஆக்கரமாக முன்னெழ வேண்டும்.

ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, மற்றும் பசிபிக் மண்டலத்திலுள்ள 17 நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த PSA நிரல், தங்களின் சமூக அபிவிருத்திக்கு அறிவியல் சமயம் இரண்டிலுமிருந்து ஈர்க்கப்பட்ட அறிவை பயன்படுத்துவதற்கான அவர்களின் திறனாற்றலை அதிகரிக்கின்றது.

வானுவாத்திலுள்ள் PSA நிரலுக்குப் பயன்படுத்தப்படும் விவசாயப் பயிற்சிக்கான மூடப்பட்ட நாற்றங்கால். சமுதாய மேம்பாட்டிற்கான அறவாரியத்தின் ஆதரவோடு, திட்டத்தில் பங்கேற்கும் தன்னா தீவைச் சேர்ந்த ஒரு பெண்கள் குழுமம், தங்கள் சமூகத்திலும் அதே போன்ற ஒன்றைக் கட்டி, அதன் மூலம் நாற்றுகளை எரிமலை தூசுகளிலிருந்து பாதுகாக்கவும், தங்கள் பயிர்களை இழந்த அண்டையர்களுக்கு வழங்கவும் முடிகிறது.

வானுவாத்துவில் கொரோனா வைரஸ் இதுவரை பரவவில்லை எனினும், அனைத்துலக பயணம் மற்றும் வணிகம் மீதான விளைவுகள் பொருளாதார சிக்கல்களையும் உணவு இறக்குமதி குறைவுக்கும் வழிவகுத்துள்ளன. வியாதியின் பரவலைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மாமூலான PSA நடவடிக்கைகளை நிறுத்தும்படி கோரியிருந்தாலும், பங்கேற்பாளர் குழுமங்கள் தங்கள் சக பிரஜைகளுக்கு உணவு விநியோகத்திற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது மட்டுமின்றி தங்கள் நாட்டிலுள்ள பிறரும் அவ்வாறு செய்திட ஊக்குவித்துள்ளனர்.

பங்கேற்பாளர்கள் பலர், இப்பொழுது சொந்தமான காய்கள் தோட்டங்களை விஸ்தரித்து, எதிர்வரும் நிலையில்லா மாதங்களில் உறுதியான உணவு மூலாதாரங்களை உருவாக்கிட விரைவாக அறுவடை செய்யப்படக்கூடிய பயிர்களை நட்டு வருகின்றனர்.

ஹேரல்ட் சூறாவளி வானுவாத்துவின் எஸ்பிரித்து சாந்தோவை தாக்கிய பிறகு உள்ளூர் சமூக உறுப்பினர்கள் ஒரு பள்ளியில் சுத்திகரிப்பு பணிகளை ஆரம்பிக்கின்றனர். சமுதாய நடவடிக்கைக்கான ஆயத்தம் (PSA) உட்பட பஹாய் சமூகத்தின் கல்வியல் நடவடிக்கைகளின் மூலமாக பேணப்பட்ட ஒற்றுமை  மற்றும் கூட்டு செயல்பாட்டின் அளவு, பல மக்கள் விரைவாக பிரதிபணிகளில் ஈடுபடவும் மறுகட்டுமானங்கள் மற்றும் மறுநடவுகளை ஆரம்பிப்பதற்கும் உதவியுள்ளது.

வானுவாத்துவில் சமீபத்தில் ஏற்பட பேரிடர்கள் தற்போது நிலவும் நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளன.நாட்டின் வடக்குத் தீவுகள் ஓர் அழிவுகரமான புயலினால், ஹேரல்ட் சூறாவளியினால் தாக்கப்பட்ட அதே வேளை, தன்னா எரிமலை சாம்பலினால் பயிர்களின் பாதிப்பைக் கண்டது.இருப்பினும், PSA உட்பட, பஹாய் சமூகத்தின் கல்வியல் நடவடிக்கைகளின் மூலம் பேணப்பட்ட ஒற்றுமையின் அளவும், கூட்டு நடவடிக்கையும் பல மக்கள் விரைவாக பிரதிசெயல்களில் ஈடுபட்டு மறு கட்டுமானம் மற்றும் மறுநடவுகளை ஆரம்பித்திட வழிவகுத்துள்ளது.

ஒரு PSA மாணவரான அனிக்கா நையு, “அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது எங்கள் கடமை என நாங்கள் உணர்கின்றோம். உதாரணத்திற்கு ஒரு சூறாவளி அல்லது கொரோனா வைரஸினால் மனந்தளர்ந்து போவது சுலபம்.நாம் நமது சமூகத்தின் பிற உறுப்பினர்களுக்கு துணிவு மற்றும் ஆர்வநம்பிக்கைக்கான மூலாதாரமாக இருக்க வேண்டும், அதன் மூலம் அவர்கள் இந்த சவால்களில் அதிகம் கவனம் செலுத்தாமல் அதற்கு மாறாக முன்னோக்கிச் செல்ல என்ன செய்யமுடியும் என்பது பற்றி சிந்திக்கலாம். என் சகோதர சகோதரிகளுக்கு சேவை செய்வது எனக்கு அதிகம் மகிழ்ச்சியை அளிக்கின்றது,” என்றார்.”

உகான்டா நாட்டில் PSA நிரலை அமுல்படுத்தும் கிமான்யா-ங்கேயோ அறவாரியத்தின் ஆதரவுடன், உகான்டாவிலுள்ள ஒரு பங்கேற்பாளர்கள் குழுமம், உணவு உற்பத்தி குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்க உள்ளூர் வானொலியை பயன்படுத்துகின்றது.

PSA நிரலின் மூலம் உருவாக்கப்பட்ட திறனாற்றல்கள், அந்த திட்டம் வழங்கப்படும் பிற நாடுகளிலும் இன்றியமையாததாக நிரூபிக்கப்பட்டுள்ளது.உகான்டா நாட்டில் PSA நிரலை அமுல்படுத்தும் கிமான்யா-ங்கேயோ அறவாரியத்தின் ஆதரவுடன், உகான்டாவிலுள்ள ஒரு பங்கேற்பாளர்கள் குழுமம், உணவு உற்பத்தி குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்க உள்ளூர் வானொலியை பயன்படுத்துகின்றது.

இளைஞர்களின் முன்முனைவினால் உத்வேகம் பெற்ற இந்த அமைப்பு, இப்பொழுது தனது வளங்களைப் பயன்படுத்தி உணவு உற்பத்தி தொடர்வதையும் உணவு சேமங்கள் காலப்போக்கில் பராமரிக்கப்படுவதையும், உதாரணத்திற்கு, பயிர் நடவிற்காக தனது சொந்த நிலங்களை வழங்கி விதைகள் வாங்குவதற்கு நிதியிருப்பையும் உறுதிப்படுத்துகின்றது.

வானுவாத்துவில் PSA நிரலை வழங்கும் மற்றொரு அமைப்பான, சமுதாய மேம்பாட்டிற்கான அறவாரியத்தின் பிரதிநிதி ஒருவர், “ஆர்வநம்பிக்கை, பிறருக்கான சேவை உணர்வு, ஆக்கரமான செயல்பாடு ஆகியவற்றுக்கிடையில் ஒரு நேரடியான தொடர்புள்ளது,” என்கிறார். நாம் நம்மிலிருந்து மற்றவர்களின் தேவைகளையே முன்வைக்கும் போது அது நம்பிக்கையை உருவாக்குகின்றது. மற்றும், நாம் நமது ஆன்மீக யதாரத்தத்தை நினைவுகூர்ந்திடும் போது, நமது பௌதீக நிலைக்கும் அப்பால் நமது ஆர்வநம்பிக்கை பலமடைகின்றது.

வானுவாத்துவின் எஸ்பிரித்தோ சாந்தோ பஹாய் சமூகம், ஒரு பேரழிகரமான சூறாவளி, மற்றும் தற்போது உலகளாவிய சுகாதார நெருக்கடி குறித்த சவால்களுக்கு எதிரில் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியோடும் இருந்து வருகின்றது.

https://news.bahai.org/story/1414/

ஸியேரா லியோன் இளைஞர்கள் கொரோனா வைரஸுக்கு எதிராக சமூகத்தைப் பாதுகாக்க ஒரு காணொளி தயாரித்துள்ளனர்.


BNS-head

ஸியேரா லியோன் இளைஞர்கள் கொரோனா வைரஸுக்கு எதிராக சமூகத்தைப் பாதுகாக்க ஒரு காணொளி தயாரித்துள்ளனர்.

9 ஏப்ரல் 2020

மாக்கெனி, ஸியேரா லியோன் — 2014கில் எபோலா நோய் பரவலால் நேரடியாக பாதிக்கப்பட்டதாலும் கொரோனா வைரஸ்(கோவிட்-19) பரவலில் இருந்து தங்களுடைய சமூகத்தை பாதுகாக்க உதவ வேண்டும் என்ற உறுதியை கொண்டிருந்ததாலும்,ஆக்கப்பூர்வமான சுகாதார முன்னெச்சரிக்கைகள் பற்றிய தகவல் சமுதாயத்தில் எளிதாக கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காக சியரா லியோனின் இந்த பகுதியில் இருக்கும் இளைஞர்கள் ஒரு காணொளியை உருவாக்கினார்கள்.

இளைஞர்கள் இசை மற்றும் நாடகத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸ் நோய்(கோவிட்-19) பரவலை தடுக்க தங்களது சமூகத்திற்கு உதவ ஒரு காணொளியை தயாரித்துள்ளனர்.

“எபோலா வந்த நேரத்தை திரும்பி பார்க்கும் போது, எங்களில் சிலர் அதற்கு பலியானோம் – நாங்கள் எங்களுடைய தந்தையர்கள், தாயார்கள், அத்தைகள் மற்றும் மாமன்களை இழந்தோம். அது ஒரு கசப்பான அனுபவம்” என்று அங்கிருக்கும் இளைஞர்களில் ஒருவரான கொரோமா பஷீரு கூறினார்.

“ஆனால் சமுதாயத்தின் சேவையில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள் என்ற பஹாய் திருவாசகத்தினால் நாங்கள் உத்வேகம் அடைந்துள்ளோம். அதனால் உலகில் மற்றொரு கொடிய நோய் தாக்கினாலும், நாங்கள் ஒன்றிணைய வேண்டும், மனித குலத்திற்காக பணிபுரிய வேண்டும், எங்களுடைய சமூகத்திற்காக தன்னலமற்ற சேவை புரிய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.”

சமுதாயத்திற்கு சேவையாற்றுவதற்கான திறனாற்றல்களை வளர்க்கும் பஹாய் கல்வியளிப்பு திட்டங்களில் பங்கேற்று வரும் இந்த இளைஞர்கள், உள்ளூர் திரைப்பட பள்ளி மாணவர்களின் உதவியை பெற்று, தற்போதுள்ள நெருக்கடிக்கு எதிரான பாதுகாப்பிற்கு இந்நேரத்தில் தேவைப்படும் சுகாதார முன்னெச்சரிக்கைகளை பறைசாற்ற இசை மற்றும் நாடகத்தை பயன்படுத்தி ஒரு காணொளியை உருவாக்கியுள்ளனர்.

சமுதாயத்திற்கு சேவையாற்றுவதற்கான திறனாற்றல்களை வளர்க்கும் பஹாய் கல்வியளிப்பு திட்டங்களில் பங்கேற்று வரும் இளைஞர்கள், தற்போதுள்ள நெருக்கடிக்கு எதிரான பாதுகாப்பிற்கு இந்நேரத்தில் தேவைப்படும் சுகாதார முன்னெச்சரிக்கைகளை பறைசாற்ற இசை மற்றும் நாடகத்தை பயன்படுத்தி ஒரு காணொளியை உருவாக்கியுள்ளனர்.

அவர்கள் உருவாக்கியிருக்கும் கல்வியளிப்பு சாதனங்களை கொண்டு, மருத்துவர்கள், கிராம தலைவர்கள், மற்றும் சமூத்தின் மற்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு உதவி, எவ்வளவு பரவலாக இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு ஏற்படுத்தி வருகின்றனர். ஆப்பிரிக்க இளைஞர் குரல்(AYV) என்ற ஊடக குழு இந்த காணொளியை ஒளிபரப்பி வருகின்றனர் மற்றும் இல்லங்களில் பார்ப்பதற்காக குடும்பங்களுடனும் பகிர்ந்துக் கொள்ளப்பட்டுகிறது.

“இத்தகைய உலக நெருக்கடியின் போது, அதிகமாக தேவைப்படும் தகவலை பரப்ப நாம் பங்களிக்க வேண்டும்,” என்று சியரா லியோன் பஹாய்களுக்கான தேசிய ஆன்மீக சபை உறுப்பினரான அல்ஹாஜி பங்குரா கூறுகிறார்.

மேலும் கொரோமா கூறுவது, “நமக்கு பொறுப்புணர்வு உள்ளது என நினைக்கிறன். நாம் அனைவரும் சந்திக்கும் சவாலை தாண்டி நாம் திடஉறுதியுடன் இருக்க வேண்டும். நமது சமுதாயம் முன் அனுபவித்ததை போன்ற எதையும் மீண்டும் அனுபவிக்காமல் இருப்பதற்காக நாங்கள் ஒன்றாக வேலை செய்கிறோம்.”

https://news.bahai.org/story/1412/