கிராம மக்கள் தங்கள் சமூகத்தைப் பாதுகாப்பதற்காக பல வாரங்களுக்கு முன்பே ஏற்பாடுகள் செய்தனர்
31 மார்ச் 2020

பாஸெல்ய், ஸ்லொவேனியா — தற்போது உலகளாவிய சுகாதார நெருக்கடியின் சவால்ககளை எதிர்கொள்ள தங்களின் சமூகத்திற்கு உதவிட முனைப்புடன் கூடிய முன்னேற்காடுகளைச் செய்த, 450 மக்களைக் கொண்ட இந்த சிறிய கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் முதியோரும் தகவல் பரிமாற்றத்திற்கும் அவசியமான பொருள்களைப் பெறுவதற்கும் ஆக்ககரமான வழிகளைக் கண்டு வருகின்றனர்.
மூன்று வாரங்களுக்கு முன், சமுதாய சேவைக்கு திறனாற்றல்களை உருவாக்கும் பஹாய் கல்வியல் நிரல்களில் பங்குபெற்ற ஓர் இளைஞர் குழுமம் கொரோனா வைரஸ் வியாதியின் (COVID-19) பரவலைத் தடுப்பதில் உதவிட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இளைஞருள் ஒருவர், “எங்கள் குழுமம் எங்கள் கிராமத்திற்கு எவ்வாறு சேவை செய்திட இயலும் என்பது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது, நாங்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பற்றி சிந்தித்தோம். அது எங்கள் கிராமத்தைத் இன்னுமும் தொடவில்லை எனினும், எல்லாருமே சற்று கவலை அடைந்தே இருந்தனர். ஆதலால், இந்த சூழ்நிலை குறித்த மக்கள் என்ன செய்யலாம் என்பது பற்றி அவர்களுக்கு அறிவிக்க தீர்மானித்தோம்,” என்றார்.
இணையம் வழி நாட்டின் தேசிய பொதுநல கழகத்திலிருந்து நம்பகமான தகவலைப் பெற்று, அந்த வியாதியின் பரவலைத் தடுப்பதற்கு ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் என்பது பற்றிய சுவரொட்டியைத் தயாரித்து, அதை ஒரு பொதுவிடத்தில் பகிரங்கமாக ஒட்டிவைத்தனர்.

சில நாள்களுக்குள், அவ்விடத்தில் உடல் தொடர்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் இப்பகுதியில் நடைமுறைக்கு வந்ததால், உடல் தொடர்புகளைத் தவிர்க்கும் அதே வேளை, உணவு மற்றும் பிற பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதற்கான வழியைக் கண்டுபிடிப்பது அவசியமாகியது.
அந்த சமூகத்தில் வாழும் அலெக்ஸான்ட்ரா எனும் பெயர் கொண்ட பஹாய், “தேவை ஏற்படும் போது நாங்கள் ஒன்றுகூடி, அப்பிரச்சினையை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை காண்கின்றோம்,” என்றார்.
முன்னைய தேவைகள் இப்போது இல்லாத வழக்கமான வாடிக்கையாளர்களைப்–பெரும்பாலும் உணவகங்கள்—பெற்றிருந்த உணவு மற்றும் விநியோக வியாபாரங்களில் ஈடுபட்டிருந்தோரை அவர்கள் தொடர்பு கொண்டனர். இந்த வணிகர்கள் இல்லங்களுக்கு உணவு விநியோகம் செய்திட மகிழ்ச்சியோடு முன்வந்ததைக் கண்டு, தகவல் பரிமாற்றத்திற்கென அவர்கள் ஸ்தாபித்திருந்த ஓர் இணைய குழுமத்தின் வழி இச்சேவைகள் குறித்து முழு கிராமத்திற்கும் அவர்களால் அறிவிக்க முடிந்தது.
தங்கள் உற்பத்தியை நகராண்மையின் வழி நேரடியாக வழங்குமாறு உள்ளூர் விவசாயிகளை பாஸ்லிய் மேயர் அழைத்த போது குறைந்த பட்சமான உடல் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகத்திற்கான இந்த முயற்சிகள் வலுவடைந்தன.
மக்கள் ஒற்றுமை, உடனுழைப்பு, குடும்பம், நண்பர்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி உரையாடல் கொள்வதை பஹாய் சமூகத்தின் உறுப்பினர்கள் அவதானித்துள்ளனர்; ஆன்மீக புதுப்பித்தலுக்கான தேவை, குறைந்த பட்ச லௌகீகம், நமது சமுதாயத்திற்கு நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது பற்றிய அதிகரித்த விழிப்புணர்வு
“சமய இன வேறுபாடுகளைக் கருதாமல் மக்கள் நீண்டகாலமாகவே ஒன்றாக சேவை செய்து வரும் ஒரு சிறிய இடம் இது. சர்வலோக உடனுழைத்தலை உருவாக்கிட நாங்கள் முயல்கின்றோம். ஆனால், இங்கு கூட இப்போதான இந்த நேரம் சற்று வேற்பட்டதாக இருக்கின்றது, எங்களில் பெரும்பாலானோர் நாம் நமது வாழ்க்கைகளை எவ்வாறு வாழ்கின்றோம் என்பது பற்றி சிந்திப்பதற்கான ஒரு சமயமாக இதைக் கருதுகின்றோம். உலகம் மிகவும் அணுக்கமாக தொடர்பு கொண்டிருக்கின்றது என்பதை மக்கள் காண்கின்றனர்: ஒரு விஷயம் இங்க நடந்தாலும், அல்லது தூரமாக நடந்தாலும், விரைவில் அது நம் எல்லாரையுமே பாதிக்கும்,” என்கிறார் அலெக்ஸான்ட்ரா.