இத்தாலி நாட்டு இளைஞர்கள் ஒரு சிறந்த உலகிற்கான தொலைநோக்கைத் தூண்டிவிட ஊடகம் உருவாக்குகின்றனர்


BNS-head

இத்தாலி நாட்டு இளைஞர்கள் ஒரு சிறந்த உலகிற்கான தொலைநோக்கைத் தூண்டிவிட ஊடகம் உருவாக்குகின்றனர்

youth-in-italy
தங்கள் நாட்டில் நிலவும் பெரும் நிச்சயமற்ற நிலையில், இளம் இத்தாலியர்கள் ஊடகங்கள் மூலம் ஆழ்ந்த முக்கியத்துவம் தொடர்பான விஷயங்களை ஆராய்ந்து, தங்களின் பிரதிபலிப்புகளை வெளிப்படுத்தும் குறு காணொளிகள் வரிசையை உருவாக்கி வருகின்றனர்.

மாந்துவா, இத்தாலிஉலகளாவிய சுகாதார நெருக்கடிக்கான உலகின் பிரதிசெயலில் ஒரு கூட்டு அடையாளத்திற்கான ஒளிக்கீற்றுகளை கண்ணுற்று, ஒரு சிறந்த உலகம் குறித்த தொலைநோக்கினால் உத்வேகம் பெற்ற இளம் இத்தாலியர் குழுமங்கள் சமுதாய தன்மைமாற்றத்துடன் தொடர்புகொண்ட ஆழ்ந்த கருப்பொருள்களை ஆராய்வதற்கு ஊடகத்தைப் பயன்படுத்துகின்றனர்.

“இந்த நேரத்தில் மானிடத்தின் பங்கிற்கு, நாம் ஒருவர் மற்றவரின் மீது உண்மையிலேயே அக்கறை காண்பிப்பதற்கான நமது திறனாற்றலை வளர்த்துக்கொள்வதை தேவையாக்கும் இதுவரை காணப்படாத ஒரு கூட்டு முயற்சி தேவைப்படுகின்றது” என தனது காணொளி ஒன்றை இணையத்தில் பகிர்ந்துகொண்ட இளைஞர் ஒருவர் வர்ணிக்கின்றார்.

இந்த இளைஞர்கள் இந்த நெருக்கடியின் போது பாடல்கள் மற்றும் கலைத்துவ வழங்கல்களை இணையத்தில் வழங்குவதன் மூலம் அதிக ஒற்றுமை உணர்வைப் பேணி வருகின்றனர். அவர்கள் திரெந்தினோ இளைஞர் ஒருவர் கூறுவது போன்று, “இதயத்தில் கொழுந்துவிடும் ஓர் ஆர்வநம்பிக்கையினால்” உந்தப்படுகின்றனர். எல்லா பின்னணியிரையும் சார்ந்த மக்களுக்கிடையில் நட்பின் பந்தங்களை உருவாக்கும் முயற்சியில், யார் வேண்டுமானால் பிரார்த்தனைகளையும் புனித வாசகங்களையும் பதிவுசெய்யக்கூடிய ஓர் இணையதளத்தை உருவாக்க உதவியுள்ளனர்.

வில்லைக்காட்சி (2 படங்கள்)
இத்தாலி இளைஞர்கள் இந்த நெருக்கடியின் போது பாடல்கள் மற்றும் கலைத்துவ வழங்கல்களை இணையத்தில் வழங்குவதன் மூலம் அதிக ஒற்றுமை உணர்வைப் பேணி வருகின்றனர்.

மானிடம் என்பது “ஒரு சமுத்திரத்தின் அலைகளாகவும், ஒரு கடலின் நீர்த்துளிகளாகவும், ஒரு ரோஜா தோட்டத்தின் மலர்களாகவும், ஒரு தோப்பின் மரங்களாகவும், ஓர் அறுவடையின் தானியங்களாகவும், ஒரு புல்வெளியின் தாவரங்களாகவும்” கருதப்படவேண்டும் எனும் அப்துல்-பஹாவின்’s வலியுறுத்தலே இந்த முயற்சிகளின் உத்வேக மூலாதாரமாக இருக்கின்றது.

அவர்களின் காணொளி ஒன்றில், மற்றவர்களுக்கு சேவை செய்வது குறித்து பேசும் இளைஞர் ஒருவர், “இது நாம் எதிர்கொள்ளும் கடைசி சவாலாக இருக்கப்போவதில்லை, ஆனால் நாம் அதிமுக்கியமான ஒன்றிற்காக குறைந்த முக்கியத்துவம் உடைய ஒன்றை விட்டுக்கொடுப்பதற்கு மானிடத்தின்பாலான நமது அன்பினால் போதுமான அளவு அகத்தூண்டல் பெற்றிருந்தால் இதை நம்மால் எதிர்கொள்ள முடியும்” எனக் கூறுகிறார்.

சமுதாயத்தின் இயல்பு குறித்தும், பல்வேறு உருபொருள்களுக்கிடையிலான உறவுகள் பற்றியும் மக்கள் ஆழமிகு கேள்விகள் கேட்கின்றனர், மற்றும் உலகம் எவ்வாறு முறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த அடிப்படையான அனுமானங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டுமென பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மானிடத்தின் உள்ளார்ந்த ஒருமை குறித்து  பெரிதும் அதிகரித்த விழிப்புணர்வு உள்ளது. ஒர் இளைஞர் கூறுவது போன்று, “எல்லாருடைய நன்மைக்காக முடிவுகள் எடுக்கும் வகையில் நமது சமுதாயத்தை எவ்வாறு ஒழுங்கமைப்பது” என்பது குறித்து பலர் ஆராய விரும்புகின்றனர்.

மற்றொரு இளைஞர், “ஒற்றுமை என்பது ஓர் உணர்ச்சிவசப்பாடோ அழகான யோசனையோ கிடையாது,” மாறாக, “தவிர்க்கவியலாத வகையில் இனி வரவிருக்கும் சவால்களுக்கு” அதுவே நடுமையமாக இருக்கும் என்றார். மற்றோர் இளம் இத்தாலியர்,  மக்கள் தங்கள் தனிப்பட்ட பொறுப்பை துல்லியமாக உணர்ந்து வரும்போது, ஒரு சிறந்த உலகத்தை அடைவதற்கு “அனைவருக்கும் ஒழுக்கமும் அதிக அன்பும் தேவை என்பது மிகவும் வெளிப்படையான விஷயமாகும்,” என்றார்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1408/