உகான்டா நாட்டில் நெருக்கடியின் மத்தியில் வானொலி ஒலிபரப்புகள் ஆறுதலும் ஊக்கமும் அளிக்கின்றன
4 ஏப்ரல் 2020

கியுங்கா, உகான்டா> — கூட்டங் கூடுவதை தடை செய்யும் புதிய பொது சுகாதார வழிகாட்டிகளுடன், பிரார்த்தனையின் மூலம் தங்களின் அண்டையர்களுக்கு நம்பிக்கை, மகிழ்ச்சி ஆகியவற்றைக் கொண்டுவருவதற்கு வானனொலியைப் பயன்படுத்துகின்றனர்.இந்த அசாதாரன சிரமங்கள் மிகுந்த காலத்தில் வலிமைக்கான மூலாதாரமாக பிரார்த்தனையின் முக்கியத்துவத்தை இல்லங்கள் தோறும் உரையாடல்களை இந்த வானொலி ஒலிபரப்புகள் தூண்டிவருகின்றன.
கொரோனா வியாதி (covid-19) பரவலை தடுப்பதற்கான வழிகாட்டல்களை உகான்டா அதிபர் வெளியிட்டபோது, வழிபாட்டு இல்லங்கள் அனைத்தும் பல வாரங்களுக்கு மூடப்படும்படி அவர் கோரிக்கை விடுத்தார். அதே நேரம், கிராமத்து மக்கள் அவர்கள் எந்த சமயத்தவராக இருப்பினும், அவர்கள் தங்கள் இல்லங்களிலேயே தங்கள் வழிபாடுகளைத் தொடருமாறு ஊக்குவித்தார்.
சமூக அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட பல தசாப்த கால முயற்சிகளின் மூலம், உகாண்டா பஹாய்கள், நட்பின் வலுவான பிணைப்பும், பக்தித் தன்மையும் கொண்ட சமூகங்கள் எவ்வாறு நெருக்கடிகளின் காலங்களில் பெரும் விடாமுயற்சியைக் வெளிப்படுத்த முடியும் என்பதைக் கண்டுள்ளனர்.
உகாண்டா பஹாய் சமூகத்தின் உறுப்பினரான டிரேக் நங்கோலி கூறுகையில், “நம்பிக்கையற்ற தன்மை மற்றும் சோகத்தின் உணர்வைப் பொறுத்தவரை, நாட்டிலுள்ள எங்கள் சக குடிமக்களுக்கும், நாட்டிலுள்ள எங்கள் சகோதர சகோதரிகளுக்கும் ஊக்கமளிக்கும் வழிகளை நாங்கள் ஆராயத் தொடங்கினோம்” . எங்கள் தனிப்பட்ட தொடர்புகள் இப்போது குறைவாக இருப்பதால், உள்ளூர் வானொலி நிலையங்கள் மற்றும் பிற ஒளிபரப்பு சேவைகளைப் பயன்படுத்துவது குறித்து சிந்தித்தோம்.”
உகான்டா பஹாய் சமூகத்தின் உறுப்பினரான டிரேக் நங்கோலி கூறுப்போது, “பல மக்களை பாதித்திட ஆரம்பிக்கும் நம்பிக்கையின்மை மற்றும் கவலை உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, நாட்டிலுள்ள எங்களின் சக குடிகள் மற்றும் சகோதர சகோதரிகளை எவ்வாறு ஊக்குவிப்பது என்பது குறித்து ஆராய ஆரம்பித்தோம். எங்களுக்கிடையிலான பரஸ்பர தொடர்புகள் இப்போது பெரிதும் குறைந்துவிட்டதால், வானொலி நிலையங்கள் மற்றும் பிற ஒலிபரப்பு சேவைகளின்பால் நாங்கள் கவனத்தைத் திருப்பினோம்.

உதாரணத்திற்கு, கியூங்காவில், சிறிய ஸ்டூடியோ மற்றும் பொதுத்தொடர்புக் கருவியை ஒரு 90 நிமிட நேர நிகழ்ச்சிக்காக இந்த ஒலிபரப்புக் கருவியை உள்ளுர் தலைமைத்துவம் பஹாய்களுக்கு வழங்கியது. இந்தக் கருவி ஒரு நடுமையமான இடத்தில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கியாகும், மற்றும் அமைதியான மாலை வேளைகளில், பல அண்டை கிராமங்களிலெல்லாம் தெளிவாக செவிமடுக்கப்படும்.
பிரார்த்தனைகள், புனித வசனங்கள் வாசித்தல், பொதுவான பிரச்சினைகளை ஆராய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு நிகழ்ச்சியை உள்ளூர் பஹாய்கள் வழங்குகின்றனர். தினசரி ஆன்மீக ஊட்டத்திற்கான மூலாதாரமாக பிரார்த்தனையப் பயன்படுத்துவதற்கும் சமுதாயத்தில் தன்பங்களை எவ்வாறு களையலாம் என்பது பற்றி பிரதிபலித்திடவும் நேயர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
ஜெரால்ட் முகுங்கு எனும் ஓர் பஹாய் இளைஞர் கூறுவது, “இந்த ஒலிபரப்பினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உரையாடலை வலுப்படுத்துவதற்கு இளைஞர்கள் என்ன செய்யக் கூடும்? இந்த உரைாயடலின் பயனை நான் கண்டுள்ளேன், மற்றும் அதை என் குடும்பம், நண்பர்கள் மத்தியில் அதைத் தொடர்ந்து மேற்கொள்ள முயல்வேன்.”

உள்ளுர் தலைமைத்துவம் இந்த முயற்சிக்கு ஆதரவளித்ததுடன் கிராமத்தார் அதைச் செவிமடுக்கவும், கலந்துரையாடல்களில் பங்கேற்கவும், தங்கள் இல்லங்களில் பிரார்த்திக்கவும் ஊக்குவித்தது. கியூங்காவில் இடைக்கால கௌன்சில் தலைவராக இருக்கும் அந்தோனி முசாமலி கூறுவது, “இந்த சோதனைமிக்க காலத்தில் பிரார்த்தனையைச் சார்ந்திருக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுவதற்காக நாங்கள் பஹாய்களுடன் உடனுழைப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இது வலுப்படுத்தப்படுமாயின், இது கிராமவாசிகளின் பண்புகளை மேன்மைப்படுத்தி அவர்களுக்கிடையே மேன்மையான செயல்களை ஊக்குவித்திடும்.
ஓர் உள்ளூர் தலைவர் கூறுவது, “இந்த செய்தி என் மனதைத் தொட்டுவிட்டது, இந்த உரையாடல் இந்த காலத்தைத் தாண்டி மேலும் எப்படி தொடர முடியும் என்று இப்போது என்று எண்ணுகிறேன். பக்திகள் தொடர்ந்து நிகழும் வகையில் உரையாடலைத் தொடர்ச்சியாக்க வேண்டும். ”
இந்த முயற்சியினால் உத்வேகமுற்ற, உகான்டாவிலுள்ள பிற சமூகங்களும் உள்ளூர் வானொலி நிலையங்களிலும் பொதுத் தொடர்பு கருவிகளின் வாயிலாகவும் இதே போன்ற ஒலிபரப்புகளை ஆரம்பித்துள்ளன.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1409/