துனீசியாவில் சமய குழுக்கள் அறிவியலுக்கும் சமயத்திற்கும் இடையில் இணக்கத்தைக் கோருகின்றன

துனீஸ், தனீஸியா, 7 ஏப்ரல் 2020, (BWNS) — தற்போதைய சுகாதார நெருக்கடியின் போது பல்வேறு சமய மற்றும் பொது அமைப்புகளுடன் துனீசியா நாட்டு பஹாய் சமூகம் நம்பிக்கை மற்றும் உறுதியை வழங்கும் ஒரு செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளது. உலகத்தில் தற்போது நிலவும் சிரமமான சூழ்நிலையின் மீது பிரதிபலித்திடும் அச்செய்தி, அறிவியல், சமயம் இரண்டுமே ஒரு விளைவுத்திறமுள்ள பிரதிசெயலுக்கு வழிகாட்டுமாறு அக்கடிதம் கோருகின்றது.
அச்செய்தி, “மானிடத்தின் எல்லா உறுப்பினர்களுமே இந்த நெருக்கடியை சமமாகவே எதிர்நோக்குகின்றனர். இது ஒற்றுமை, கருணை, புரிந்துணர்வு போன்ற ஆன்மீகப் பண்புகளை உருவாக்கிக்கொள்வதுடன், கூட்டு வழிபாட்டு உணர்வு மற்றும் பொது குறிக்கோள் உணர்வையும் உண்டாக்கிக்கொள்ள நம்மை உந்துகின்றது. இந்த யாதார்த்தம் சுயநன்மைக்கு மாறாக பொது நன்மைக்கான சேவையின்பால் சார்ந்திருத்தலை தேவையை வெளிப்படுத்துகின்றது.
துனீசியாவிலும் வெளி மண்டலங்களிலும் கவனத்தைப் பெற்றுள்ள அக்கடிதம், சகஜீவிதம் குறித்த ஒரு சொல்லாடலில் தங்கள் பங்கேற்பின் மூலம் அணுக்கமான நட்பை பேணியுள்ள நாட்டிலுள்ள சமய குழுக்கள், பல்வேறு சமுதாய நடவடிக்கையாளர் ஆகியோருக்கிடையிலான உரையாடலின் வெளிப்பாடாகும்.
உடனடி நடவடிக்கைக்கான தேவையை உணர்ந்த இக்குழுமங்கள், அறிவியலுக்கும் சமயத்திற்கும் இடையில் மேலும் அதிகமான புரிந்துணர்வைக் கோருகின்றன. அவர்களின் கடிதம் அறவியலுடன் அல்லது சுகாதார வல்லுனர்களின் ஆலோசனைகளுடன் மாறுபட்டிருக்கின்ற கருத்துகளை நீக்குவது; அரசாங்கத்தினால் வெளிப்படுத்தப்படடிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான மரியாதையை ஊக்குவிப்பது; மனிதர்கள் எனும் முறையில் நமது பகிர்ந்துகொள்ளப்பட்ட அடையாளம் குறித்த உத்வேகம் மற்றும் நுண்ணறிவுக்கு சமயம் மூலாதாரமாக இருக்கின்றது எனும் புரிதலைப் பேணுவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது
அந்த நாட்டின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் திரு முகமெட் பென் மூஸா கூறுவது, “தற்போதைய சூழ்நிலை, ஒரு சமுதாயம் எனும் முறையில் நமது அடிப்படை அனுமானங்களை மறு ஆய்வு செய்திட தூண்டியுள்ளது. தற்போதைய இந்த நேரத்தில் எழுப்பப்பட்டுவரும் கேள்விகள் குறித்த கூடுதல் உரையாடல்களை ஊக்குவிக்கும் ஒரு நம்பிக்கையூட்டும் செய்தியின் தேவையை நாம் அனைவரும் உணர்கின்றோம்,”
“சமயம் அறிவியலுடனும் பகுத்தறிவுடனும் இணக்கத்துடன் இருக்க வேண்டும் மற்றும், அது மூட நம்பிக்கை மற்றும் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதலிலிருந்து அப்பாற்பட்டிருக்க வேண்டும்,” என திரு பென் மூஸா மேலும் கூறுகிறார்.
பஹ்ரேய்ன், இந்தோநேசியா போன்ற மற்ற நாடுகளிலும் அங்குள்ள பஹாய் சமூகங்கள், தங்களின் குறிப்பிட்ட சமுதாயங்களில் அதிக அளவிலான நல்லிணக்கத்தைக் கோரி அதற்கான எதிர்ப்பார்ப்பு குறித்த வாக்குமூலங்களை வெளியிட்டுள்ளன.