ஆஸ்திரேலிய பிரதமர் பஹாய் சமூகத்திற்குத் தமது நன்றியைத் தெரிவிக்கின்றார்.


BNS-head

ஆஸ்திரேலிய பஹாய் சமூகத்திற்கு ரித்வான் பண்டிகை குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மொரிஸன் அனுப்பிய ஒரு செய்தியில், கடந்த நூற்றாண்டாக சமுதாயத்திற்காக அந்த சமூகம் வழங்கியுள்ள பங்களிப்புகளுக்காக அச்செய்தி நன்றி தெரிவிப்பதோடு, இந்த நெருக்கடியின் போது அது ஆற்றக்கூடிய பங்கு குறித்தும் அதன் கவனத்தைக் கோரியுள்ளது.https://news.bahai.org/story/1411/slideshow/1/

ஆஸ்திரேலியாவிற்கு வருகை புரிந்த முதல் இரண்டு பஹாய்களான கிளாரா மற்றும் ஹைட் டன் ஆகியோர் வந்து நூறு வருடங்கள் கடந்து விட்டது. தற்போதைய சூழலுக்கு பொருத்தமான முறையில் இந்த நூற்றாண்டைக் கொண்டாட பஹாய் சமூகம் தயாராகி கொண்டிருக்கும் வேளையில், ஆஸ்திரேலியாவின் பிரதம மந்திரியான, ஸ்காட் மோரிசனிடம் இருந்து பாராட்டு மாற்று உற்சாகமளிக்கும் ஒரு செய்தியை அந்த சமூகம் பெற்றுள்ளது.

இந்த மாதத்தின் பின்பாதியில் வரவிருக்கும் ரிஸ்வான் பண்டிகையை எதிர்நோக்கி அனுப்பப்பட்டிருக்கும் அந்த செய்தி, கடந்த நூற்றாண்டிற்கு மேலாக சமுதாயத்திற்காக ஆஸ்திரேலியா பஹாய் சமூகம் அளித்து வரும் பங்களிப்பிற்கான பாராட்டை வெளிப்படுத்துயிருந்தது.

மேலும் “முன்காணப்படாத சுகாதார நெருக்கடியின் மத்தியில்”அணைத்து ஆஸ்திரேலியர்களின் ஒத்துழைப்பும் தேவைப்படும் இந்நேரத்தில், பஹாய் சமூகத்தின் பங்கு குறித்த கவனத்தை அது கோரியது. “இந்த சவால் மிக்க நேரத்தின் போது, நீங்கள் நிச்சயமாக பஹாய் போதனைகளில் இருந்தும், மனிதகுலத்தின் – குறிப்பாக மிகுந்த பாதிப்புளாகக்கூடியவர்களுக்கான – நன்மைக்கான அதன் கடப்பாட்டில் இருந்தும் உத்வேகம் பெறுவீர்கள்”

அண்மையில் உலக நீதி மன்றம் குறிப்பிட்ட மனிதகுலத்தின்“உள்ளார்ந்த ஒற்றுமை மற்றும் பரஸ்பர சார்புமை” பற்றி குறிப்பிட்டு, அதன் உணர்வுகளை பிரதம மந்திரி அவரும் ஏற்றுக் கொண்டார் , அதாவது: “நம்பிக்கையுறுதி வழங்கிடக்கூடிய ஆர்வநம்பிக்கை மற்றும் ஆன்ம வலிமை இவ்வுலகிற்கு மேன்மேலும் அதிகமாகத் தேவைப்படுகின்றது”

ஆஸ்திரேலிய பஹாய் சமூகத்திற்கான தமது செய்தியில், நாட்டின் பிரதமரான ஸ்காட் மோரிஸன், “மெய்நம்பிக்கை வழங்கிடக்கூடிய ஆன்மாவின் ஆர்வநம்பிக்கை, வலிமை என்றும் இல்லாத வகையில் இன்று உலகிற்கு அதிகமாகத் தேவைப்படுகின்றது.

அதன் பிறகு வெள்ளி கிழமையன்று ஒரு வருடம் நீடிக்கப்போகும் நூற்றாண்டின் ஆரம்பம் குறித்த நிகழ்வின் போது, ஆஸ்திரேலியாவின் தேசிய ஆன்மீக சபை தனது செய்தியில் சேவை உணர்வினை தீவிரப்படுத்த அழைத்த பிரதம மந்திரியின் செய்தியை ஏற்றுக் கொண்டனர்.

“இந்த நிச்சயமற்ற நேரத்தில், நாம் ஒன்றுகூட முடியாமல் போனாலும், தொலை தூரங்களுக்குப் பயணிக்க முடியாமல் போனாலும், அனைவரின் நலனுக்காக நாம் பிரார்த்திக்கலாம், நமது அண்டையர்கள் மற்றும் நண்பர்களுடன் புதிய ஆக்கபூர்வ வழியில் சேவையாற்றி சமூக நிர்மாணிப்பு செயல்முறையை தொடரலாம்,” என்று சபை எழுதியது.

https://news.bahai.org/story/1411/

பின்னூட்டமொன்றை இடுக