
இந்தியாவில் உள்ள உள்ளூர் ஆன்மீக சபைகளும் தனிநபர்களும் சமூகங்களும் ஒருமித்த நிலையில் செயல்படுகின்றன.
10 ஏப்ரல் 2020
புது டில்லி, இந்தியா – தேசிய அளவிலான நடவடிக்கை அலைகளாக, இந்த இலகளாவிய சுகாதார நெருக்கடியின் போது தங்களின் சக பிரஜைகளுக்கு தேவையானவற்றை வழங்குவதற்காக இந்த பஹாய் சமூகம் அவசரமாக செயல்பட்டு வருகின்றது.

https://news.bahai.org/story/1413/slideshow/1/
ஆன்மீக மற்றும் சமுதாய மேம்பாட்டிற்குப் பங்களித்திடும் நடவடிக்கைகளுடனான அதன் அனுபவத்தின் மூலமாக, இந்திய பஹாய் சமூகம், விரைவாக வளங்களைத் திரட்டுவதற்காக, குறிப்பிட்ட உள்ளூர் தேவைகளை,சமுதாய, லௌகீக, அல்லது ஆன்மீக தேவைகளை அடையாளங் காண முயன்றுவருகின்றது.
இந்திய தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினரான நஸ்னீன் ரௌஹானி,“வேதனையும் சிரமும் மிக்க இந்த துயர்மிகு சூழ்நிலை, மக்களுள் சிறந்த பண்புகளை வெளிப்படுத்துவதுடன், சமூகத்தை செயல்பட வைப்பதில் உள்ளூர் ஆன்மீக சபைகள் ஓர் இன்றியமையா பங்கை மேற்கொள்வதை நம்மால் பார்க்க முடிகின்றது.” என்றார்.
“ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும், பல மக்களிடையே ஒரே பொது மானிடம் குறித்த அதிகரித்த விழிப்புணர்வு வெளிப்படுவதைக் காண்கின்றோம். இது மற்றவர்களுக்கு அவர்கள் உதவி செய்வதையும், மக்களைப் பிரித்து வைக்கும் பாரம்பரியமான தடைகள் மற்றும் தப்பெண்ணங்களைக் கடந்துவருதலையும் தூண்டிவிடுகின்றது.”

நெருக்கடியின் ஆரம்பகாலத்தில், உள்ளூர் அமைப்புகளுடன் சேர்ந்து பஹாய் சமூகங்களும் ஸ்தாபனங்களும் கொரோனா வியாதி (கோவிட்-19) குறித்த விழிப்புணர்வை உருவாக்கி வந்தன.
நாஷிக்’கில், பொருண்மைகளைப் பரப்பிடவும் தப்பான தகவல்களை எதிர்ப்பதற்கும் ஆக்ககரமான வழிகளைக் கண்டு, தற்காப்பு நடவடிக்கைகள் குறித்த ஒரு பொது தகவலளிப்பு பரிப்பியக்கத்தை செயல்படுத்திட அங்குள்ள பஹாய்கள் உள்ளூர் போலீஸ் காவலர்களுக்கு உதவினர்.இப்பொழுது தங்கள் சமூகத்திலுள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஆதரவு கட்டமைப்புகளை உருவாக்கிட, உதாரணத்திற்கு, வீடுகளில் அடைப்பட்டுக் கிடப்போருக்கு மருந்துகளை பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுவதற்கு, அவர்கள் அதிகாரிகளுடன் உடனுழைத்து வருகின்றனர்.

தங்களின் சக குடிகளின் நடைமுறையான தேவைகளை ஈடுசெய்வதற்கு உதவியாக திட்டங்களைச் செயல்படுத்தி வரும் உள்ளூர் ஆன்மீக சபைகள் நாடு முழுவதும் பல நடவடிக்கைகளை முன்நின்று செயல்படுத்தி வருகின்றன. இரத்த தானத்திற்காக மஹாராஷ்ட்ரா மாநில சுகாதார அமைச்சரின் அவசர கோரிக்கைகளுக்கு இணங்க, மாலியாகாவன் உள்ளூர் ஆன்மீக சபை அதற்காகப் பல மக்களைத் திரட்டியது.
தேவுலாலி உள்ளூர் ஆன்மீக சபை, தானியங்களின் விலை குறிப்பிடப்படும் அளவிற்கான விலை குறைப்பு உட்பட, குடும்பங்களுக்கு அரசாங்க திட்டங்கள் சென்று சேர்வதை உறுதிப்படுத்திவருகின்றது.அந்த உள்ளூர் ஆன்மீக சபை அதிகாரிகளுடன் ஒன்றாகப் பணிபுரிந்து மளிகைக் கடைக்காரர்கள் சுகாதார நடவடிக்கைகளுக்குக் கீழ்படும் அதே வேளை அவர்களின் கடைகள் திறந்திருப்பதற்காக அவர்களுக்கு உதவிவருகின்றன.பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் இந்த வேளையில், எந்த மாணவரும் உணவின்றிப் போகாமல் இருப்பதை உறுதி செய்திட அது தலைமை ஆசிரியர்களுக்கும் உதவிவருகின்றது.
குஜராத், உத்தர் பிரதேஷ், மேற்கு வங்காளம் போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளில், நெருக்கடியினால் அவர்களின் பொருளாதார சூழ்நிலை மிகவும் நிலையற்றதாக இருக்கும் மக்களுக்கு ஆயிரக்கணக்கில் உணவுப் பொட்டலங்களை விநியோகிப்பதற்கான முயற்சிகளை உள்ளூர் ஆன்மீக சபைகள் ஒருங்கிணைத்து வருகின்றன.

ஒரு கிராமத்தில், உள்ளூர் பஹாய்களுக்குச் சொந்தமான ஒரு கட்டுமான கம்பெனி, சுமார் நெருக்கடிக்கு ஆளான சுமார் 50 கிராமங்களில் உள்ள 2500 குடும்பங்களுக்கு உணவு எடுத்துச் செல்ல அதன் லாரிகளையும் பிற வளங்களையும் பயன்படுத்தியது.
குஜராத்தில், கைவிடப்பட்ட புலம்பெயர்ந்த ஊழியர்களை நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தாண்டி அவர்களின் இல்லங்களுக்கு கொண்டுவிட அதிகாரிகளின் அனுமதியோடு உள்ளூர் பஹாய்கள் தங்களின் டிராக்டர்களைப் பயன்படுத்தினர்.
சுய பாதுகாப்பு கவசங்களுக்கான தேவைகளுக்கு கவனம் செலுத்திட, உள்ளூர் ஆன்மீக சபைகள் முகமூடிகளை செய்து விநியோகிப்பதற்காக தையற்காரர்களுடன் உடனுழைத்து வருகின்றன.
முகமூடிகள் வழங்குவதற்கும் கொரோனா வைரஸ் குறித்த துல்லியமான தகவலை வழங்குவதற்கும் அணி அணியான மக்கள் இந்தியா முழுவதும் சமூகங்களில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு விஜயம் செய்கின்றனர்
பல இதயங்கள் தங்களின் சிருஷ்டிகர்த்தர்த்தரின்பால் கூட்டு தியானத்தோடு திரும்புவதற்கான ஆவல் கொண்டுள்ள இந்த நேரத்தில், பல தனிநபர்கள் ஆன்மீக கருப்பொருள்களை ஆய்வு செய்வதற்கும் இணையத்தள வழிபாட்டுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்வதற்கும் ஊடக அடக்கப் பொருள்களை உருவாக்கி வருகின்றனர்.
புது டில்லி பஹாய் வழிபாட்டு இல்லத்திலிருந்து ஒரு வழிபாட்டு நிரல் ஒளிபரப்பப்படுகின்றது. பல இதயங்கள் தங்களின் சிருஷ்டிகர்த்தர்த்தரின்பால் கூட்டு தியானத்தோடு திரும்புவதற்கான ஆவல் கொண்டுள்ள இந்த நேரத்தில், பல தனிநபர்கள் ஆன்மீக கருப்பொருள்களை ஆய்வு செய்வதற்கும் இணையத்தள வழிபாட்டுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்வதற்கும் ஊடக அடக்கப் பொருள்களை உருவாக்கி வருகின்றனர்.

“எந்த சமூகத்தின் வள ஆதரங்களும் இயல்பாகவே ஓர் எல்லைக்குட்பட்டவை, இருப்பினும், ஆர்வநம்பிக்கை, படைப்பாற்றல், பரோபகார உணர்வு, ஆகியவற்றுடன், அதிகரிக்கும் துன்பங்களை குறைப்பதற்கு ஆணித்தரமான நடவடிக்கைகளில் ஒரு பெரும் ஆற்றல் களஞ்சியம் கால்வாயிடப்படுவதை நாம் காண்கின்றோம்,” என்றார் திருமதி ரௌஹானி.
“இவை யாவும், தனிநபர்கள், முழு சமூகங்கள், மற்றும் பஹாய் ஸ்தாபனங்கள் அதிகாரிகளுடன் உடனுழைப்பதையும் ஆயிரக்கணக்கான மக்களின் முயற்சிகளை ஒருங்கிணைப்பதையும் தேவையாக்கியுள்ளது. இந்த முக்கிய பணியாளர்கள், கூட்டு நன்மைக்கு என்ன தேவையோ அதைச் செய்திட ஒன்றாக செயல்படவும், ஒருவர் மற்றவருக்கு ஆதரவு நல்கவும் செய்கின்றனர்.”