ஸியேரா லியோன் இளைஞர்கள் கொரோனா வைரஸுக்கு எதிராக சமூகத்தைப் பாதுகாக்க ஒரு காணொளி தயாரித்துள்ளனர்.
9 ஏப்ரல் 2020
மாக்கெனி, ஸியேரா லியோன் — 2014கில் எபோலா நோய் பரவலால் நேரடியாக பாதிக்கப்பட்டதாலும் கொரோனா வைரஸ்(கோவிட்-19) பரவலில் இருந்து தங்களுடைய சமூகத்தை பாதுகாக்க உதவ வேண்டும் என்ற உறுதியை கொண்டிருந்ததாலும்,ஆக்கப்பூர்வமான சுகாதார முன்னெச்சரிக்கைகள் பற்றிய தகவல் சமுதாயத்தில் எளிதாக கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காக சியரா லியோனின் இந்த பகுதியில் இருக்கும் இளைஞர்கள் ஒரு காணொளியை உருவாக்கினார்கள்.
“எபோலா வந்த நேரத்தை திரும்பி பார்க்கும் போது, எங்களில் சிலர் அதற்கு பலியானோம் – நாங்கள் எங்களுடைய தந்தையர்கள், தாயார்கள், அத்தைகள் மற்றும் மாமன்களை இழந்தோம். அது ஒரு கசப்பான அனுபவம்” என்று அங்கிருக்கும் இளைஞர்களில் ஒருவரான கொரோமா பஷீரு கூறினார்.
“ஆனால் சமுதாயத்தின் சேவையில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள் என்ற பஹாய் திருவாசகத்தினால் நாங்கள் உத்வேகம் அடைந்துள்ளோம். அதனால் உலகில் மற்றொரு கொடிய நோய் தாக்கினாலும், நாங்கள் ஒன்றிணைய வேண்டும், மனித குலத்திற்காக பணிபுரிய வேண்டும், எங்களுடைய சமூகத்திற்காக தன்னலமற்ற சேவை புரிய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.”
சமுதாயத்திற்கு சேவையாற்றுவதற்கான திறனாற்றல்களை வளர்க்கும் பஹாய் கல்வியளிப்பு திட்டங்களில் பங்கேற்று வரும் இந்த இளைஞர்கள், உள்ளூர் திரைப்பட பள்ளி மாணவர்களின் உதவியை பெற்று, தற்போதுள்ள நெருக்கடிக்கு எதிரான பாதுகாப்பிற்கு இந்நேரத்தில் தேவைப்படும் சுகாதார முன்னெச்சரிக்கைகளை பறைசாற்ற இசை மற்றும் நாடகத்தை பயன்படுத்தி ஒரு காணொளியை உருவாக்கியுள்ளனர்.

அவர்கள் உருவாக்கியிருக்கும் கல்வியளிப்பு சாதனங்களை கொண்டு, மருத்துவர்கள், கிராம தலைவர்கள், மற்றும் சமூத்தின் மற்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு உதவி, எவ்வளவு பரவலாக இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு ஏற்படுத்தி வருகின்றனர். ஆப்பிரிக்க இளைஞர் குரல்(AYV) என்ற ஊடக குழு இந்த காணொளியை ஒளிபரப்பி வருகின்றனர் மற்றும் இல்லங்களில் பார்ப்பதற்காக குடும்பங்களுடனும் பகிர்ந்துக் கொள்ளப்பட்டுகிறது.
“இத்தகைய உலக நெருக்கடியின் போது, அதிகமாக தேவைப்படும் தகவலை பரப்ப நாம் பங்களிக்க வேண்டும்,” என்று சியரா லியோன் பஹாய்களுக்கான தேசிய ஆன்மீக சபை உறுப்பினரான அல்ஹாஜி பங்குரா கூறுகிறார்.
மேலும் கொரோமா கூறுவது, “நமக்கு பொறுப்புணர்வு உள்ளது என நினைக்கிறன். நாம் அனைவரும் சந்திக்கும் சவாலை தாண்டி நாம் திடஉறுதியுடன் இருக்க வேண்டும். நமது சமுதாயம் முன் அனுபவித்ததை போன்ற எதையும் மீண்டும் அனுபவிக்காமல் இருப்பதற்காக நாங்கள் ஒன்றாக வேலை செய்கிறோம்.”