
ஓர் உலகளாவிய சுகாதரா நெருக்கடியின் எதிரில் உணவுக்கான உறுதியை வழங்குதல்
13 ஏப்ரல் 2020
போர்ட் வில்லா, வானுவாத்து — உலகளாவிய நிலையில் கொரோனா வைரஸ் வியாதியின் விளைவின் காரணமாக எதிர்நோக்கப்படும் உணவுத் தட்டுப்பாட்டுக்கான ஒரு நிலையின் எதிரில், சமுதாய நடவடிக்கைக்கான ஆயத்தம் (PSA) எனும் பஹாய் உத்வேகம் பெற்ற கல்வியல் திட்டத்தில் ஈடுபட்டுள்ள சில தனிநபர்கள், தங்கள் சமூகங்களைக் காப்பாற்றுவதற்காக நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

“எங்கள் சமூகத்திற்கு எவ்வாறு சேவை செய்வது என்பது குறித்து என் குழுமம் எப்பொழுதுமே சிந்தித்துக்கொண்டிருக்கின்றது, மற்றும் கொரோனா வைரஸின் வருகை குறித்து நாங்கள் என்ன செய்யலாம்? நாங்கள் ஒன்றும் செய்யாமல் உட்கார்திருக்க முடியாது. எங்கள் சமுதாயத்திற்கான சேவையில் நாங்கள் ஆக்கரமாக முன்னெழ வேண்டும்.
ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, மற்றும் பசிபிக் மண்டலத்திலுள்ள 17 நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த PSA நிரல், தங்களின் சமூக அபிவிருத்திக்கு அறிவியல் சமயம் இரண்டிலுமிருந்து ஈர்க்கப்பட்ட அறிவை பயன்படுத்துவதற்கான அவர்களின் திறனாற்றலை அதிகரிக்கின்றது.

வானுவாத்துவில் கொரோனா வைரஸ் இதுவரை பரவவில்லை எனினும், அனைத்துலக பயணம் மற்றும் வணிகம் மீதான விளைவுகள் பொருளாதார சிக்கல்களையும் உணவு இறக்குமதி குறைவுக்கும் வழிவகுத்துள்ளன. வியாதியின் பரவலைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மாமூலான PSA நடவடிக்கைகளை நிறுத்தும்படி கோரியிருந்தாலும், பங்கேற்பாளர் குழுமங்கள் தங்கள் சக பிரஜைகளுக்கு உணவு விநியோகத்திற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது மட்டுமின்றி தங்கள் நாட்டிலுள்ள பிறரும் அவ்வாறு செய்திட ஊக்குவித்துள்ளனர்.
பங்கேற்பாளர்கள் பலர், இப்பொழுது சொந்தமான காய்கள் தோட்டங்களை விஸ்தரித்து, எதிர்வரும் நிலையில்லா மாதங்களில் உறுதியான உணவு மூலாதாரங்களை உருவாக்கிட விரைவாக அறுவடை செய்யப்படக்கூடிய பயிர்களை நட்டு வருகின்றனர்.

வானுவாத்துவில் சமீபத்தில் ஏற்பட பேரிடர்கள் தற்போது நிலவும் நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளன.நாட்டின் வடக்குத் தீவுகள் ஓர் அழிவுகரமான புயலினால், ஹேரல்ட் சூறாவளியினால் தாக்கப்பட்ட அதே வேளை, தன்னா எரிமலை சாம்பலினால் பயிர்களின் பாதிப்பைக் கண்டது.இருப்பினும், PSA உட்பட, பஹாய் சமூகத்தின் கல்வியல் நடவடிக்கைகளின் மூலம் பேணப்பட்ட ஒற்றுமையின் அளவும், கூட்டு நடவடிக்கையும் பல மக்கள் விரைவாக பிரதிசெயல்களில் ஈடுபட்டு மறு கட்டுமானம் மற்றும் மறுநடவுகளை ஆரம்பித்திட வழிவகுத்துள்ளது.
ஒரு PSA மாணவரான அனிக்கா நையு, “அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது எங்கள் கடமை என நாங்கள் உணர்கின்றோம். உதாரணத்திற்கு ஒரு சூறாவளி அல்லது கொரோனா வைரஸினால் மனந்தளர்ந்து போவது சுலபம்.நாம் நமது சமூகத்தின் பிற உறுப்பினர்களுக்கு துணிவு மற்றும் ஆர்வநம்பிக்கைக்கான மூலாதாரமாக இருக்க வேண்டும், அதன் மூலம் அவர்கள் இந்த சவால்களில் அதிகம் கவனம் செலுத்தாமல் அதற்கு மாறாக முன்னோக்கிச் செல்ல என்ன செய்யமுடியும் என்பது பற்றி சிந்திக்கலாம். என் சகோதர சகோதரிகளுக்கு சேவை செய்வது எனக்கு அதிகம் மகிழ்ச்சியை அளிக்கின்றது,” என்றார்.”

PSA நிரலின் மூலம் உருவாக்கப்பட்ட திறனாற்றல்கள், அந்த திட்டம் வழங்கப்படும் பிற நாடுகளிலும் இன்றியமையாததாக நிரூபிக்கப்பட்டுள்ளது.உகான்டா நாட்டில் PSA நிரலை அமுல்படுத்தும் கிமான்யா-ங்கேயோ அறவாரியத்தின் ஆதரவுடன், உகான்டாவிலுள்ள ஒரு பங்கேற்பாளர்கள் குழுமம், உணவு உற்பத்தி குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்க உள்ளூர் வானொலியை பயன்படுத்துகின்றது.
இளைஞர்களின் முன்முனைவினால் உத்வேகம் பெற்ற இந்த அமைப்பு, இப்பொழுது தனது வளங்களைப் பயன்படுத்தி உணவு உற்பத்தி தொடர்வதையும் உணவு சேமங்கள் காலப்போக்கில் பராமரிக்கப்படுவதையும், உதாரணத்திற்கு, பயிர் நடவிற்காக தனது சொந்த நிலங்களை வழங்கி விதைகள் வாங்குவதற்கு நிதியிருப்பையும் உறுதிப்படுத்துகின்றது.
வானுவாத்துவில் PSA நிரலை வழங்கும் மற்றொரு அமைப்பான, சமுதாய மேம்பாட்டிற்கான அறவாரியத்தின் பிரதிநிதி ஒருவர், “ஆர்வநம்பிக்கை, பிறருக்கான சேவை உணர்வு, ஆக்கரமான செயல்பாடு ஆகியவற்றுக்கிடையில் ஒரு நேரடியான தொடர்புள்ளது,” என்கிறார். நாம் நம்மிலிருந்து மற்றவர்களின் தேவைகளையே முன்வைக்கும் போது அது நம்பிக்கையை உருவாக்குகின்றது. மற்றும், நாம் நமது ஆன்மீக யதாரத்தத்தை நினைவுகூர்ந்திடும் போது, நமது பௌதீக நிலைக்கும் அப்பால் நமது ஆர்வநம்பிக்கை பலமடைகின்றது.
