
ஐக்கிய அமெரிக்கா முழுவதும் அடித்தட்டு பதில்விணையில் இளைஞர்கள் முன்நிலைக்கு நகர்கின்றனர்
15 ஏப்ரல் 2020
சிக்காகோ — ஐக்கிய அமெரிக்கா முழுவதும் பஹாய் சமூக நிர்மாணி்பபு முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ள இளைஞர்கள் கொரோனாவைரஸ் வியாதி (COVID-19) பரவலினால் விளைந்துள்ள பல தேவைகளுக்கு விரைவாக பதில்விணையாற்றுகின்றனர்.

“சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிக்க பல மாதங்களாக அல்லது பல ஆண்டுகளாக ஒன்றிணைந்து செயல்படும் மக்களிடையே ஆழமான நட்புறவு உள்ளது” என்று நாட்டின் பஹாய் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளைப் பின்பற்றும் கேண்டஸ் வான்ஸ் கூறுகிறார். “இதன் காரணமாகவும், தங்கள் சமூகங்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பின் காரணமாகவும், பல இளைஞர்கள் இந்த நெருக்கடியை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்பதை உணர்கின்றனர்; அவர்கள் தேவைப்படுவோருக்கு உதவிட தங்களின் பஹாய் கல்வியல் நிரல்களில் பங்கெடுத்ததன் மூலம் உருவாக்கிக்கொண்டுள்ள திறமைகளையும் திறனாற்றல்களையும் பயன்படுத்துகின்றனர்.”

சிக்காகோவில் உள்ள ஓர் இளைஞர், தமது குழும முயற்சிகளின் இயல்பை வர்ணிக்கின்றார். எங்கள் அண்டைப்புறத்தில் தொண்டுசெய்வோரையும் பல்வேறு வளங்களையும் கண்டறிவதற்கான கருவிகளை நாங்கள் காலப்போக்கில் உருவாக்கியுள்ளோம்; இப்பொழுது, கிருமிநாசினி துடைப்பான்களை சேகரிப்பது மற்றும் விநியோகிப்பது போன்ற பல்வேறு தேவைகளின்பால் மக்களை விரைவாக எங்கள் இணைத்திட முடிகின்றது.”
அந்த இடத்திலுள்ள மற்ற இளைஞர்கள், சமூகத்தில் பொதுவாகப் பேசப்படக்கூடிய மொழிகளில் சுகாதார நடவடிக்கைகள் குறித்த தகவலளிக்கும் காணொளிகளை உருவாக்கி வருகின்றனர். மொழிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் குடும்பங்கள் அரசாங்க சேவைகளின் பயனைப் பெறுவதற்கும் அவர்கள் உதவிவருகின்றனர்.

பிரின்ஸ் வில்லியம் மாவட்டம் போன்ற பிற இடங்களில், மொழிபெயர்ப்பு வசதியற்ற பல பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கான பள்ளி நிரல்களை போதுமான வகையில் அணுக இயலாது இருப்பது போன்ற பல தடைகள் உள்ளன.
பஹாய் கல்வித் திட்டங்களில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறுகையில், “வகுப்புகளை தவறவிடும் பிள்ளைகள் இணையத்துடன் தொடர்புடையவர்கள் என்று நாங்கள் முதலில் நினைத்தோம், ஆனால் அது தவறு என்பதையும், உண்மையில் பெற்றோர்களுக்கு பள்ளி ஏற்பாடுகள் என்ன என்பது பற்றி பெற்றோருக்கு தெரியாததே என்பதே அதன் காரணம் என்பதையும் உணர்ந்தோம்.”
கூடுதல் உதவி தேவைப்படும் குடும்பங்களை அடையாளங் கண்ட இந்த இளைஞர்கள், பல்வேறு மொழிகளில் நிர்வாகத் தகவல்களை பரப்பிடவும், தங்கள் சக மாணவர்கள் பாடங்களைச் செய்வதற்கு உதவிடவும் இணைய அமர்வுகளை வாடிக்கையாக மேற்கொண்டு வருகின்றனர்.
வட கேரோலினாவின் முக்கோன பகுதியில், சுமார் ஆறு மொழிகளாவது பொதுவில் பேசப்படும் தங்களின் அண்டைப்புறங்களில் உணவு விநியோகம், பொருளாதார உதவி, பள்ளிப்பாட போதனை ஆகியவற்றில் உதவிட பதில்விணை அணிகளை உருவாக்கியுள்ளனர்.

அண்டையர்களுக்கான பராமரிப்புப் பொதிகளைத் தயாரித்த கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள குழந்தைகள் முதல், தங்கள் சமூகத்தில் வயதானவர்களுக்கு ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வதற்கு ஒரு டுடோரியலைத் தயாரித்த டெலாவேரில் உள்ள இளைஞர்கள் வரை, எல்லா வயதுடைய மற்றும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பஹாய்கள் அவர்கள் வாழும் சமூகங்களின் தனித்துவமான தேவைகளை கருத்தில் கொண்டு, நட்பை வளர்ப்பதற்கும் அவர்களின் சமூகத்திற்கு சேவையாற்றுவதற்கும் முயல்கின்றனர்.
திருமதி வான்ஸ் கூறுகிறார்: “இப்போது முன்னெப்போதையும் விட, நாடு முழுவதும் தாராள மனப்பான்மை மற்றும் படைப்பாற்றலின் நம்பமுடியாத வெளிப்பாடுகளை நாங்கள் காண்கிறோம். எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் ஒருவருக்கொருவர் உதவ, அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு மனிதனின் ஆன்மீக யதார்த்தத்தை நாம் பிரதிபலிக்கும்போது நாங்கள் நடவடிக்கையில் ஈடுபட உந்தப்படுகிறோம், இது மற்றவர்களுக்கு தாராளமாகக் கொடுப்பதையும் ஒற்றுமையுடன் செயல்படுவதையும் குறிக்கின்றது.”