கஸாக்ஸ்தானில் நெருக்கடியின் வழி பணிபுரிதல் அதிக சமுதாய ஒற்றுமையைப் பேணுகின்றது.


கஸாக்ஸ்தானில் நெருக்கடியின் வழி பணிபுரிதல் அதிக சமுதாய ஒற்றுமையைப் பேணுகின்றது.


25 ஏப்ரல் 2020


நூர்-சுல்தான், கஸாக்ஸ்தான் — தற்போதைய உலகளாவிய சுகாதார நெருக்கடி பல மக்கள் தங்கள் சமுதாயத்தின் வருங்காலம் குறித்து ஆழமாகப் பிரதிபலித்திடத் தூண்டுகிறது. கஸாக்ஸ்தானில் கடந்த வாரம், தற்போதைய சூழ்நிலைகளில் தங்களின் உடனுழைத்தல் முயற்சிகள் எவ்வாறு சமுதாய ஒற்றுமையைப் பலப்படுத்துகின்றன என்பதை ஆராய்வதற்கு, கல்வியாளர்கள், அரசாங்க அதிகாரிகள், சமுதாய நபர்கள், சமயப் பிரதிநிதிகள் ஆகியோருடன் பஹாய் சமூகம் ஓர் இணையதள கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது.

“இந்த கடினமான காலங்களில், வரலாறு சார்ந்த ஒற்றுமையின்மை உணர்வுகளை அப்பால் வைத்துவிட்டு, இந்த நெருக்கடியிலிருந்து நாம் வெளிப்படும் போது நம் நாடு பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்திட தற்போதைய சூழ்நிலைக்கும் அப்பால் நாம் கண்ணுற வேண்டியிருந்தது,” என நாட்டின் பொது விவகாரங்களுக்கான பஹாய் அலுவலகத்தின் பிரதிநிதியான தீமோர் செக்பர்பயெவ். (உள்ளூர் ஒவியரின் ஒவியம்)

“இந்த கடினமான காலங்களில், வரலாறு சார்ந்த ஒற்றுமையின்மை உணர்வுகளை அப்பால் வைத்துவிட்டு, இந்த நெருக்கடியிலிருந்து நாம் வெளிப்படும் போது நம் நாடு பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்திட தற்போதைய சூழ்நிலைக்கும் அப்பால் நாம் கண்ணுற வேண்டியிருந்தது,” என நாட்டின் பொது விவகாரங்களுக்கான பஹாய் அலுவலகத்தின் பிரதிநிதியான தீமோர் செக்பர்பயெவ்.

சமுதாய அகப்பிணைவு குறித்த சொல்லாடலுக்குப் பங்களிப்பதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக அலுவலகம் அக்கலந்துரையாடலை நடத்தியது.

“இந்த நெருக்கடிக்கான மறுமொழியாக, நாங்கள் நம்பிக்கையை தளரவிடாமல் அதற்கு மாறாக நாங்கள் இதுவரை கண்டிராத சமுதாய ஒற்றுமைக்கான ஓர் அளவை அடைவதற்கான சாத்தியத்தின்பால் எங்கள் கண்களைத் திருப்புகின்றோம்,” என்றார் பொது விவகாரங்களுக்கான பஹாய் அலுவலக பிரதிநிதியான செரிக் தொக்போலாட்.

அதன் குடிகள், சமூகங்கள், ஸ்தாபனங்கள் ஆகியவை ஒன்றாக செயல்பட்டு எல்லாரின் பொதுநலனுக்காக முடிவுகள் எடுப்பது ஒரு நல்லிணக்கமான சமுதாயத்தின் அடையாளங்களில் ஒன்றாகும் என பங்கேற்பாளர்கள் கருதினர்.

பொது மற்றும் அரசாங்க ஸ்தாபனங்கள் இரண்டுமே, கூட்டு முடிவுகள் எடுப்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய கோட்பாடுகளை ஆராய்வது குறித்த புரிதலில் எவ்வாறு மேலும் ஆழமாக செயல்படவேண்டும்.

கஸாக்ஸ்தானில் கடந்த வாரம், தற்போதைய சூழ்நிலைகளில் தங்களின் உடனுழைத்தல் முயற்சிகள் எவ்வாறு சமுதாய ஒற்றுமையைப் பலப்படுத்துகின்றன என்பதை ஆராய்வதற்கு, கல்வியாளர்கள், அரசாங்க அதிகாரிகள், சமுதாய நபர்கள், சமயப் பிரதிநிதிகள் ஆகியோருடன் பஹாய் சமூகம் ஓர் இணையதள கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது.

“இத்தகைய சூழ்நிலைகளில், பரஸ்பர நம்பிக்கையின் முக்கியத்துவம் தெளிவடைகிறது. நம்பிக்கையை ஊக்குவிப்பது வெளிப்படையான மற்றும் தெளிவான முடிவுகள் எடுப்பதைக் கோருகின்றது. தவறுகள் கண்டுணரப்பட்டு சரிசெய்யப்படுகின்றன என்பதை மக்கள் காணும்போது, நம்பிக்கை பிறக்கின்றது மற்றும், பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்,” என்றார் கஸாக்ஸ்தான் பாராளுமன்ற உறுபினரான அர்மான் கொஸாக்மெத்தொவ்.

ஹிந்து சமுதாயத்திலிருந்து ஒரு கண்ணோட்டத்தை வழங்கிய அக்ஷத் அதில்பயேவ், “மக்கள் அதிகரித்த அளவில் ஆன்மீகத்தைப் பற்றி பேசி பல பதில்களை சமய மறைகளிலிருந்து பதில் காணுகின்றனர்,” என்றார். நம்பகம் என்பது சமயநம்பிக்கையிலிருந்து பிறக்கின்றது. நமது அபிவிருத்தியைப் பேணுகின்ற விழுமிய ஆன்மீக கோட்பாடுகளுடன் நெருக்கமுற நம்முன் ஒரு வாய்ப்பிருக்கின்றது,” என்றார்.

கடந்தகாலமானது வருங்காலத்தை வரையறுக்க வேண்டியதில்லை எனும் உறுதியான உணர்வை எல்லா பங்கேற்பாளர்களும் பகிர்ந்துகொண்டனர்.

“அரசாங்கங்கள், அமைப்புகள், மற்றும் சமூகங்கள் முன்னோக்கிய பாதையை ஒன்றாக நிர்மாணித்து வருகின்றன. முன்பு பகைமையில் பரஸ்பரமாக செயல்பட்டவர்கள் இப்பொழுது ஒருவருக்கு ஒருவர் உதவிக்கரம் நீட்டுகின்றனர்,” என்றார் சமய நல்லிணக்க உரையாடல் அபிவிருத்திக்கான N. நஸர்பயேவ் மையத்தின் கார்லிகாஷ் கலிலகாநோவா. இந்த நிகழ்வைப் பிரதிபலிக்கும் வகையில், கஸாக்ஸ்தான் பஹாய்களின் தேசிய ஆன்மீக சபை உறுப்பினரான லியாஸ்ஸாத் யங்கலியேவா கூறுகிறார், “போட்டி என்பது பொது வாழ்வின் ஒழுங்கமைப்பிற்கு மையமாகவும் அபிவிருத்தியின் இயந்திரமாகவும் கருதப்படும் ஒரு யோசனையாகும். ஆனால் இந்த யோசனை காலாவதியானது என்பது இப்போது பலருக்கு தெளிவாகி வருகிறது. இன்று நாம் எதிர்கொள்ளும் சிரமங்களை சமாளிக்க அதிக அளவு ஒற்றுமையும் அனைவரின் பங்கேற்பும் அவசியம். ”

https://news.bahai.org/story/1420/