
அப்துல்-பஹாவின் நினைவாலயத்திற்கான தளத்தில் பணிகள் தொடர்கின்றன.
23 ஏப்ரல் 2020
பஹாய் உலக மையம் — அப்துல்-பஹாவின் நினைவாலயத்தை எழுப்புவதற்கான முக்கியத்துவம் மிக்க செயல்முறை தடையின்றி மேம்பாடு கண்டுவருகின்றது, அதே வேளை கட்டுமானப் பகுதியில் பணிபுரிவோருக்கான பொது சுகாதார நடவடிக்கைகள், அதிகாரிகளால் கோரப்படும் பொது சுகாதார ஏற்பாடுகளுடன் இணக்கமாக இருக்கின்றன.
ஒரு கோபுர பாரந்தூக்கி இயந்திரம் இப்போது தளத்தின் மீது உயர்ந்து, நினைவாலயத்தின் அஸ்திவாரங்களை அமைக்கும் பணிகளுக்கு உதவுகிறது. கடந்த வியாழக்கிழமை, மேலே அமைக்கப்பட்ட கட்டமைப்பிற்கு ஸ்திரத்தன்மையை வழங்கிட உதவும் தளத்தின் மையத்தில் ஆழமாக இறக்கப்பட்டிருந்த ஆதார பைலிங் வேலைகள் ஓர் அடுக்கு கான்கிரீட்’டினால் மூடப்பட்டன.
மைய கட்டமைப்பை நோக்கிய வடக்கு மற்றும் தெற்கு நுழைவாயில்களுக்கு ஆதரவளிக்கும் அடித்தலங்களும், ஓர் உட்புறமான தோட்டத்தைச் சுற்றிய சுவர்கள் இப்பொழுது உருபெற்று வருகின்றன. இதன் விளைவாக, வடிவமைப்பின் நேர்த்தியான வடிவவியல் உரு இப்போது முதல் முறையாகத் தென்படுகின்றது.

சில நடவடிக்கைகள் மெதுவாக அல்லது நிறுத்தப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளூர் அதிகாரிகளின் அங்கீகாரத்தோடு மேம்பாடு காணப்பட்டு வருகின்றது.
எதிர்கால பணிகளுக்குத் தேவையான விரிவான வடிவமைப்புகள் அவற்றின் இறுதி வடிவத்தை அடைந்து வருகின்றன, அதே நேரத்தில் கட்டுமானத்தின் கூடுதல் கட்டங்களுக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. சிக்கலான பளிங்கு மேலாடையை உருவாக்க குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி மற்றும் மேல்தள சாளரங்களை உருவாக்கத் தேவைப்படும் புதுமையான தொழில்நுட்பங்கள் குறித்து ஆரம்ப சோதனைகள் நடைபெற்று வருகின்றன, அவை மைய கட்டமைப்பிலிருந்து சுற்றியுள்ள தோட்டங்கள் வரை நீட்டிக்கப்படும்.
