
ஆங்கிலம் பயில்வோர் சமூகம் சுகாதார நெருக்கடியின் போது ஒருவர் மற்றவருக்கு ஆதரவு நல்குகின்றனர்.
22 ஏப்ரல் 2020
வான்கூவர், கேனடா – கடந்த 15 வருட காலமாக, வான்கூவர் நகரில் ஆங்கிலம் கற்போருக்கான ஒரு பஹாய்-உத்வேக திட்டம், சமுதாய முக்கியத்துவம் சார்ந்த தலைப்புகள் மீதான உரையாடல்களின் சூழலில் மொழித்திறனை பயிற்சி செய்திட ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுதிரட்டியுள்ளது. இப்பொழுது உருவாக்கப்பட்டுள்ள ஆழ்ந்த நட்பின் பந்தங்கள், இந்த சவால் மிக்க காலத்தில் வலிமை மற்றும் மீள்திறத்திற்கான மூலாதாரமாக இருந்திட காணப்படுகின்றன.

“கோலிப்ரி கற்றல் அறக்கட்டளையின் இயக்குனர் சைமன் கிராண்டி கூறுகையில், “வலுவான நட்பும் கூட்டு முயற்சி உணர்வும் ஆங்கில கார்னர் திட்டத்தில் உணர்வுபூர்வமாக வளர்க்கப்பட்டுள்ளன. ” இந்த கடினமான நேரங்களைக் கடப்பதற்கு மட்டுமின்றி, சமுதாயத்திற்கான சேவையில் பஹாய் போதனைகளிலிருந்து ஆழ்ந்த கருத்துக்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி உரையாடலைத் தொடர்வதிலும் கடந்த கால மற்றும் தற்போதைய பங்கேற்பாளர்கள் ஒருவர் மற்றவரிடமிருந்து பயன்பெற முடியும் என்பதைக் கண்டுவருகின்றனர்.”
ஆங்கில கார்னர் குழுக்கள் ஒன்றுகூடும்போது, பங்கேற்பாளர்கள் மொழி திறன்களுக்கும் அதிகமாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும், நட்பு, ஒற்றுமை மற்றும் அனைவரையும் கவனித்துக்கொள்வதற்கான சமூகங்களின் பொறுப்பு போன்ற கருப்பொருள்களை அவர்கள் ஆராய்வார்கள். ஒவ்வொரு தலைப்பும் தனிநபர்கள் எனும் முறையில் அவர்களை எவ்வாறு பாதிக்கிறது, அது சமூகத்தை எவ்வாறு பாதிக்கிறது, விவாதிக்கப்பட்ட யோசனைகளை செயல்படுத்துவதற்கு அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியும் அவர்கள் பிரதிபலிக்கின்றனர்.
வான்கூவர் நகர் முடக்க நடவடிக்கைகளுக்கு உட்பட்டிருப்பதால், பயிற்சி அமர்வுகள் இணையதளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
“இந்த மனவழுத்தமிக்க நாட்களில் ஒரு சமூகமாக எங்களிடையே தொடர்பில் இருப்பது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்,” என்று பங்கேற்பாளர்களில் ஒருவரான ஐஸ்லின் கூறுகிறார். “நான் அதிக சாந்தமாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறேன், ஏனென்றால் நான் இன்னும் தொடர்பில் இருப்பதோடு, மற்றவர்களுடன் கற்கிறேன்.”

சமீபத்தில், இந்த திட்டத்தின் ஒரு வழிநடத்துனர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டத்தில் பங்கேற்றும் பின்னர் இத்தாலிக்குத் திரும்பியுமிருந்த ஒருவரிடமிருந்து எதிர்பாராத தொலைபேசி அழைப்பைப் பெற்றார். அந்த நாட்டில் பொது சுகாதார நடவடிக்கைகள் காரணமாக தனது வீட்டில் முடக்கி வைக்கப்பட்டிருந்தபோது, இந்த நபர் தனது குழுவுடன் பகிர்ந்து கொண்ட பரஸ்பர தொடர்புகளின் கனிவை நினைவு கூர்ந்தார், “இங்கே மிகவும் தனிமையாக இருக்கின்றது, மற்றும் நாங்கள் பயன்படுத்திய அர்த்தமுள்ள உரையாடல்களை நினைவுகூர்ந்து, ஆங்கில கார்னருடன் தொடர்புகொள்ள விரும்பினேன்.”
“சில நேரங்களில் மனம்விட்டு உரையாடுதல் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர்வதில்லை,” என்கிறார் சைமன்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொருவர் விளக்குகிறார், “நெருக்கடியின் போது, ஆங்கில கார்னர் உண்மையிலேயே மிகவும் உதவியாக இருந்தது. … நாம் ஒருவர் மற்றவரின்பால் பச்சாத்தாபத்தை உணர முடிகின்றது, ஏனென்றால் இந்த சூழ்நிலை குறித்து எல்லோரும் கவலையடைவதை நாங்கள் அறிவோம். நம் உலகம் பெரியதாயினும், நாம் அனைவரும் நட்பில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்கிறோம்.”