
உள்ளூர் கோவிலின் வடிவமைப்பு இந்தியாவில் வெளியிடப்பட்டது

29 ஏப்ரல் 2020
புது டில்லி — பீஹார் ஷாரிஃபில் கட்டப்படவிருக்கும் உள்ளூர் பஹாய் கோவிலுக்கான வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நிலவுகின்ற சூழலில், இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்ச்சியை குறிக்கும் நிகழ்ச்சிக்குப் பதிலாக இது குறித்த செய்தியை இணையத்தின் வழி அறிவித்திட் இந்தியாவின் தேசிய ஆன்மீக சபை முடிவெடுத்துள்ளது.
இது இந்திய நாட்டின் இரண்டாவது பஹாய் கோவிலாக இருந்திடும். நாட்டில் பல தசாப்தங்களாக நம்பிக்கை மற்றும் ஒற்றுமைக்கான சின்னமாக விளங்கி வந்துள்ள புதி டில்லியில் உள்ள வழிபாட்டு இல்லம், எல்லா சமய மற்றும் மரபுகள் சார்ந்த இந்தியர்களுக்கான ஆன்மீக பிரதிபலிப்பு மற்றும் புத்துயிர்ப்பிற்கான அன்புமிகு ஸ்தலமாகியுள்ளது.
தாமரைக் கோவிலின் கட்டிட அமைப்பில் உத்வேகமூட்டக்கூடிய தளசக்தியை நாங்கள் சுயமாக அனுபவித்துள்ளோம், மற்றும் நாங்கள் சிறுவர்களாக இருந்ததிலிருந்தே அக்கோவிலுக்கு விஜயம் செய்து வந்துள்ளோம்,” என அப்புதிய கோவிலை வடிவமைத்துள்ள நிறுவணம் குறிப்பிட்டது. “பீஹார் ஷாரிஃபில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லம், அதன் சூழலில் பணிவுடன் அமர்ந்துள்ள அதே வேளையில், தெய்வீகத்தன்மைக்கான சூழலையும் அது வழங்கிட வேண்டும்.”
“பீஹார் ஒரு வளமான நிலம், அதன் பல கிராமங்கள் இந்திய கிராமப்புற வாழ்வின் காலத்திற்கு அப்பாற்பட்ட காட்சியை வழங்குகின்றன” என கட்டிடக் கலைஞர்களுள் ஒருவரான சுதித்யா சின்ஹா கூறுகின்றார். இந்த வளமான, கிராமப்புற சூழலில் வழிபாட்டு இல்லம் தோன்றவிருக்கின்றது. பாரம்பரிய கட்டிடக்கலை மற்றும் கைவிணைகளினால் தூண்டப்பெற்று, உள்ளூர் மண்ணிலிருந்து செய்யப்படும் செங்கற்களை நாங்கள் பயன்படுத்த முடிவு செய்வோம். இந்த நிலம் உண்மையாகவும், உவமான ரீதியிலும் கோவிலின் வடிவத்தில் வார்க்கப்பட்டள்ளது.”
பீஹார் மாநிலத்தின் மதுபானி மரபுக்கலையில் காணப்படும் வடிவ தோரணிகளிலிருந்தும், அந்த மண்டலத்தின் நீண்டகால கட்டிடக்கலை மரபிலிருந்தும் உத்வேகம் பெற்ற அந்நிறுவணம், மாறி மாறி வரும் வளைவுகளைக் கொண்ட ஒரு வடிவமைப்பை உருவாக்கியது.குவிமாடத்தைக் கொண்ட அக்கட்டிடம் அடித்தலத்தில் அமைந்துள்ள ஒன்பது வளைவுகளிலிருந்து மேலெழுந்து, ஒவ்வொரு பகுதியும் ஒரே ஒற்றை வடிவவியலாகும் வரை பன்மடங்காகி வரும்.குவிமாடத்தின் மையத்திலும், வளைவுகளின் ஒவ்வொரு வளையத்திலும் உள்ள திறப்புகள் கூரையின் எடையைக் குறைக்கும், அதே நேரத்தில் மென்மையான ஒளி உள்வர அனுமதிக்கும்.

“நாம் கடந்துகொண்டிருக்கும் இந்த கடின காலங்களில், முன் எப்போதையும்விட மக்கள் தங்களின் சிருஷ்டிகர்த்தரின்பால் திரும்பிட உந்தப்படுகின்றனர். ஆதலால், பீஹார் ஷாரிஃபில் கோவிலைக் கட்டுவது இப்பொழுது மேலும் அதிக அர்த்தமுடையதாக இருப்பதோடு, அதன் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளோரின் பாதுகாப்பு மற்றும் உடல்நலனை உறுதிப்படுத்தும் அதே வேளை நாங்கள் இந்த செயல்முறையை கண்டிப்பாக தொடரவும் வேண்டுமென உணர்கின்றோம்.”
பீஹார் ஷாரிஃப் பஹாய்களின் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் உள்ள சேவை மற்றும் வழிபாட்டிற்கிடையிலான தொடர்பை புதிய கோவிலும் அதன் சுற்றிடங்களும் மேம்படுத்தும்.எல்லாருக்கும் திறந்துவிடப்படும் அதன் கதவுகளுடன், எல்லா மக்களிடையிலும் உள்ளிணைத்தல் மற்றும் ஒத்துழைப்பு குறித்த ஒரு கலாச்சாரத்தை அக்கோவில் பராமரித்து வரும்.
