
நிக்கராகுவா நாட்டில் சமூக வங்கிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன
1 May 2020
மானாகுவா, நிக்கராகுவா — கொரோனா வைரஸின் உலகளாவிய பரவல் குறித்த கவலைகள் பொது மக்களுள் ஏற்படுவதற்கு முன்பே, நிக்கராகுவாவிலுள்ள ஒரு பஹாய் உத்வேக சமூக வங்கித் திட்டம் பணத்தை கையாளுவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுலாக்குவதற்கு முன்முயற்சிகள் மேற்கொண்டு, பண பட்டுவாடாக்களை இணையம் அல்லது தொலைபேசி மூலம் செய்யப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்தது.

இந்த வங்கிகள் சேவை குறித்த பஹாய் கோட்பாடுகளின் அடித்தலத்தில் ஸ்தாபிக்கப்பட்டும், எல்லார் பொதுநலத்தின் மீதும் அக்கறை செலுத்துகின்றது,” என்கிறார் திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர்.“ ஆதலால், பொருளாதார சவால் மற்றும் பரிணமித்து வரும் சுகாதார நெருக்கடியோடு, சமூகத்தின் பொருளாதார வாழ்விற்கு தொடர்ந்து ஆதரவு நல்குவது குறித்து நாங்கள் விழிப்புடன் இருந்தது மட்டுமல்ல, அதோடு எங்கள் நடவடிக்கைகள் மக்களுக்கு ஆபத்து விளைவிக்காமல் இருப்பது குறித்தும் நாங்கள் கவனமாக இருக்கின்றோம்.”
இத்திட்டம் சுமார் 10 முதல் 30 பேரைக் கொண்ட குழுமங்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் செயல்படுகின்றது, பிறகு பயிற்சிபெற்றோர் சிறிய அளவில் பணத்தை சேமிக்க ஆரம்பித்து, வங்கி உறுப்பினர்களுக்கு நியாயமான விகிதத்தில் மிதமான கடன்கள் கிடைக்க வகை செய்கின்றனர்.வங்கிகள் அதன் உறுப்பினர்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றது மற்றும் கிடைக்கும் வட்டி ஒவ்வொரு உறுப்பினரும் தமது சேமிப்பில் வைத்திருக்கும் தொகைக்கு ஏற்ப விகிதாச்சாரமாக பிரிக்கப்படுகின்றது.ஒரு வங்கி வளரும் போது, சமூகத்தின் சமுதாய பொருளாதார அபிவிருத்தி முன்முனவுகளுக்கும் பொருளாதார ஆதரவு நல்கிட முடிகிறது.

கடந்த 15 வருடங்களாக, திட்டம் பல உள்ளூர்களுக்கு சேவையாற்றிடும் அளவிற்கு வளர்ச்சியடைந்தும், அதன் தனித்துவமான அணுகுமுறைக்காக நாட்டில் கண்டுணரப்பட்டுள்ளது.
“வங்கியின் அனுபவமும் அதன் அடித்தலமான கோட்பாடுகளும் உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு அதன் மறுமொழியை அறிவித்துள்ளன,” என்கிறார் தேசிய ஒருங்கிணைப்பாளர்.“நாங்கள் எங்களின் சொந்த விவகாரங்களை மட்டுமே கவனித்துக்கொள்ளும் வணிகங்களாக மட்டுமே செயல்படவில்லை என்பதை நாங்கள் கண்டுணர்கின்றோம், மாறாக பொதுநலனுக்குப் பணிபுரியவே நாங்கள் இங்கிருக்கின்றோம். இந்த நேரத்தில், உறுதியான மற்றும் பாதுகாப்பான வணிக நடைமுறைகளுக்கான ஒரு நல்ல உதாரணமாக இருப்பதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளோம்.