இராக் நாட்டின் குர்திஸ்தான் பகுதியில் தற்போதைய சுகாதார நெருக்கடிக்கும் அப்பால் ஆலோசிப்பது


இராக் நாட்டின் குர்திஸ்தான் பகுதியில் தற்போதைய சுகாதார நெருக்கடிக்கும் அப்பால் ஆலோசிப்பது


8 அக்டோபர் 2021


எர்பில், இராக் – இன்று பல இடங்களில் இணைய கருத்தரங்குகள் வாழ்க்கையின் ஒரு பொது அம்சமாகியுள்ளன; இராக் நாட்டின் குர்திஸ்தான் மண்டலத்தில் அவை நம்பிக்கையளிக்கும் உரையாடல்களுக்கான தளமாகி, கல்வியாளர்கள், சமுதாய நடவடிக்கையாளர்கள், சமயத் தலைவர்கள், மற்றும் அரசாங்க அதிகாரிகள் இந்த நெருக்கடி நேரத்தில் மக்களை ஒன்றுகூட்டிவரும் ஆன்மீக கோட்பாடுகளை ஆராய்ந்து, வருங்காலத்தில் இக்கோட்பாடுகள் பொதுவாழ்க்கையை வடிவமைக்க எவ்வாறு உதவிடக்கூடும் என்பதை புத்தாய்வு செய்வதற்கான வாராந்திர கருத்தரங்குகளை அந்த மண்டலத்தின் பஹாய்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

கல்வியாளர்கள், சமுதாய நடவடிக்கையாளர்கள், சமயத் தலைவர்கள், மற்றும் அரசாங்க அதிகாரிகள் இந்த நெருக்கடி நேரத்தில் மக்களை ஒன்றுகூட்டிவரும் ஆன்மீக கோட்பாடுகளை ஆராய்ந்து, வருங்காலத்தில் இக்கோட்பாடுகள் பொதுவாழ்க்கையை வடிவமைக்க எவ்வாறு உதவிடக்கூடும் என்பதை புத்தாய்வு செய்வதற்கான வாராந்திர கருத்தரங்குகளை அந்த மண்டலத்தின் பஹாய்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

மனிதகுல ஒருமையும், எந்தவொரு தரப்பினரும் மற்றவர் நலனைக் கருதாமல் தனது சொந்த நலனை மட்டுமே கருதும்போது, சமுதாயம் எவ்வாறு துன்பத்திற்கு ஆளாகின்றது என்பதே தொடரும் கருப்பொருளாக இருக்கின்றது.

“இந்த உரையாடல்கள் ஒருவருக்கொருவரிடமிருந்து நேர்மையாகவும் உண்மையாகவும் கற்றுக்கொள்வதை ஏதுவாக்குகின்றன,” என்கிறார் குர்திஸ்தான் மண்டல பஹாய் பிரதிநியான தாஹிரி அபாய்ச்சி. “நம்மில் யாரிடமும் இதற்கான பதில் கிடையாது. எல்லாருடைய நலனையும் கருத்தில் கொண்டு ஒரு புதிய கண்ணோட்டத்துடன் ஒருவருக்கொருவரை பார்க்கின்றோம்.”

தற்போது பரவலாக இருக்கும் சிந்தனா முறைகளை அடித்தலமாகக் கொண்ட அனுமானங்களை சவாலுக்கு உட்படுத்துவதற்கு புதிய முன்னோக்குகள் வழிவகுத்து, சுயநல எண்ணங்களே வளமையைத் தூண்டுகின்றன, மற்றும் அபிவிருத்தி என்பது கட்டற்ற போட்டியின் மூலமான வெளிப்பாட்டைச் சார்ந்துள்ளது எனும் யோசனைகளை கேள்விகளுக்கு உட்படுத்துகின்றது.

மனிதகுல ஒருமையும், எந்தவொரு தரப்பினரும் மற்றவர் நலனைக் கருதாமல் தனது சொந்த நலனை மட்டுமே கருதும்போது, சமுதாயம் எவ்வாறு துன்பத்திற்கு ஆளாகின்றது என்பதே தொடரும் கருப்பொருளாக இருக்கின்றது.

பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டது போன்று, தற்போதைய சூழ்நிலைகள், இதற்கு நேர்மாறானதை, அதாவது வேறுபாடுகளை மீறும் தாராள மனப்பான்மை அனைவரின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்கிறது என்பதைக் காட்டுகின்றன. நல்லெண்ணத்தின் இத்தகைய வெளிப்பாடுகள், மக்கள் ஒருவருக்கொருவர் அறிமுகங்கொள்ள, ஒருவர் மற்றவரின் தேவைகளைப் புரிந்து கொள்ள மற்றும் சக குடிமக்களின் நலனுக்காக நடவடிக்கை எடுத்திடக்கூடிய சிறிய புவியியல் பகுதிகளில் மக்கள் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என சில பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டனர்.

“மகிழ்ச்சி என்றால் என்ன? (வாழ்க்கைத்) தேவைகள் என்றால் என்ன? செழிப்பு என்றால் என்ன? இந்த சொற்கூறுகளை இப்போது மறுவரையறை செய்யலாம், ”என்று மற்றொரு பங்கேற்பாளர் கூறினார். “நுகர்வு கலாச்சாரம், நம்முடைய மதிப்பு நாம் எவ்வளவு நுகரலாம் மற்றும் எவ்வளவு குவிக்க முடியும் என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு விழுமியத்தை ஊக்குவிக்கின்றது. ஆனால் தன்னலமின்றி கொடுப்பது ஒரு ஒழுங்கமைக்கும் கொள்கையாக இருக்க வேண்டும் என்பதை இப்போது நாம் உணர்கின்றோம்.”

சமுதாய விழுமியங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதில் இந்த விவாதங்கள் உதவியாக இருக்கும் என்று அமைச்சகத்தின் சகவாழ்வுத் துறையின் இயக்குநர் உட்பட மத விவகார அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்த நெருக்கடியிலிருந்து மீள்திறத்துடனும் தேவைகளின்பால் மேலும் அக்கறையுடனும் வெளிவருவதற்கு நமது சமுதாயத்திற்கு உதவக்கூடிய கோட்பாடுகளை அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. இந்த உரையாடல்கள் அந்த செயல்முறைக்கு உதவிடும்,”என்று அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

இன்றுவரை நடந்த கலந்துரையாடல்களைப் பற்றி பிரதிபலித்த திருமதி அபாய்ச்சி கூறுகிறார்: “இவ்வளவு காலமாக சிந்தனையின் விளிம்பில் இருந்த அல்லது இலட்சியவாதமாகக் கருதப்படும் கொள்கைகளை பொது உணர்வு மற்றும் கொள்கை வகுத்தலின் மையத்திற்கு கொண்டு வரப்படுவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது?

“இதற்கு நமது அத்தியாவசிய ஒற்றுமையும் உண்மையான மற்றும் தன்னலமற்ற தாராள மனப்பான்மையினால் வெளிப்படும் பல செயல்களும் அங்கீகரிக்கப்பட வேண்டும் – அதாவது வலது கை என்ன கொடுத்துள்ளது என்பது இடது கைக்கு தெரியாது.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1423/

One thought on “இராக் நாட்டின் குர்திஸ்தான் பகுதியில் தற்போதைய சுகாதார நெருக்கடிக்கும் அப்பால் ஆலோசிப்பது”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: