
பஹாய் அனைைத்துலக சமூகம், பிரஸ்ஸல்ஸ்: தொடர்பில் இருக்க வழிகளைக் கண்டறிதல்
6 மே 2020
பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம் – யோசனைகள் பரிமாற்றத்திற்கு என்றுமில்லாத வகையில் அதிகமாக இணையத் தொடர்புகள் பயன்படுத்தப்படும் இந்த அசாதாரன காலத்தில், பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரஸ்ஸல்ஸ் அலுவலகம் ஐரோப்பாவில் நிகழ்கால சொல்லாடல்களுக்குப் பங்களிப்பதற்கான அதன் முயற்சிகளிலிருந்து வெளிப்படும் நுண்ணறிவுகளை விரிவாகப் பகிர்ந்துகொள்வதற்கு பஹாய் அனைத்துலக சமூகம் ஒரு செய்தி மடலை ஆரம்பித்துள்ளது.

“பிரஸ்ஸல்ஸ் அலுவலகத்தின் ரேச்சல் பயானி, “வரம்புக்குட்பட்ட சமுதாய தொடர்புகளின் சூழலில் ஒரு செய்திக் கடிதத்தை நிறுவுவது பொருத்தமானதாக இருக்கும்,” என்கிறார். “பரவலாக சொல்லாடல்களில் வெளிப்பட்டு வரும் முக்கிய நுண்ணறிவுகள் மற்றும் கேள்விகளைத் இணைப்படுத்துவதற்கு உதவி, எங்களின் உடனுழைப்பாளர்களுடன் கவனம் செலுத்தப்படும் தலைப்புகளின் பரப்பை தொடர்புப்படுத்துவதற்கு அது நோக்கங் கொண்டுள்ளது. மேலும் அதிக மக்களை உரையாடல்களில் சேர்ந்துக்கொள்வதற்கும் அவர்களுடன் கூட்டுப் புரிதலை உருவாக்கிக் கொள்வதற்கும் இந்த செய்திமடல் ஒரு வழியாகும்.
கடந்த பத்தாண்டு காலமாக, இந்த பிரஸ்ஸல்ஸ் அலுவலகம் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய பேரவை, மற்றும் ஐரோப்பிய அமைப்புகளுடன் செயல்படுவதற்கான பஹாய்களின் முயற்சிகளை ஒருங்கிணைத்து வந்துள்ளது.

அலுவலகத்தின் அணுகுமுறைகளும் பங்களிப்புகளும் பஹாய் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை என திருமதி பயானி விளக்குகின்றார். “எங்கள் அலுவலகம் விவாதங்களுக்குப் பங்களிக்கும் யோசனைகளை தெரிவிப்பது மட்டுமின்றி, முக்கிய கேள்விகள் பற்றிய ஆலோசனைகளில் எங்கள் நிலைப்பாட்டையும் தெரிவிக்கின்றது. உலகளாவிய செழுமை, நீதி, மற்றும் நமது பரஸ்பர சார்புமை குறித்த கருத்தாக்கங்கள் ஐரோப்பிய சூழலில் எவ்வாறு சமுதாய பிரச்சினைகளுக்குப் பயன்படுத்தப்படக் கூடும். என்பதைப் பிறருடன் கூட்டாக ஆராய்கின்றோம்.”
BIC’யின் பிரஸ்ஸல்ஸ் அலுவலகம், வன்முறை சச்சரவுகளில் ஈடுபட்டிருக்கும் சமுதாயங்களில் குடிபெயர்வு, சமுதாய அகப்பிணைவும் பல்வகைத்தன்மையும், மற்றும் அமைதியை-நிர்மாணித்தல் உட்பட பல சொல்லாடல்களில் பங்கேற்று வருகின்றது.
ஐரோப்பிய சமுதாயத்தில் மதத்தின் பங்கு மற்றும் ஐரோப்பாவில் அக்கறை செலுத்தப்படும் பிற பிரச்சினைகள், உள்ளடக்கும் மொழியின் பயன்பாடு மற்றும் செயற்கை நுண்மதியின் அபிவிருத்தி போன்ற பரந்த கருப்பொருள்களிலும் இது தனது சொந்த ஒன்றுகூடல்களை நடத்துகிறது. இந்த சந்திப்புகள், புதிய அணுகுமுறைகள் மற்றும் புதிய சிந்தனைகள் வெளிப்படும் கருத்தரங்குகளாக அதிகரித்த அளவில் குறிப்பிடப்படுகின்றன.

செய்திமடலின் முதல் இதழில், பிரஸ்ஸல்ஸ் அலுவலகம் உலக சுகாதார நெருக்கடி குறித்த ஆரம்ப பிரதிபலிப்புகளை வழங்குகிறது. “சில மாத காலத்திற்குள், எங்கள் உலகளாவிய சமூகமும் அமைப்புமுறைகளும் புதிய மற்றும் ஆழமான வழிகளில் சோதிக்கப்பட்டுள்ளன. நமது கூட்டு வாழ்க்கையின் அடுத்த கட்டம் குறித்து ஒரு பரந்த சொல்லாடல் உருவாகி வருகிறது. … நமது தற்போதைய உலகளாவிய நிர்வாக முறைக்கு வழிகாட்டும் அடிப்படைக் கோட்பாடுகளை மறுபரிசீலனை செய்து மதிப்பீடு செய்வது அவசியம். இதற்கு, தற்போது அதற்கு அடித்தலமாக இருக்கும் மனப்பான்மைகள் மற்றும் அனுமானங்கள் ஓர் ஆழ்ந்த மறு ஆய்வு செய்வது அவசியமாகும்.”
சமய வளர்சியின் முதிர்சியை கான்கிறோம்