சமூக நிர்மாணிப்பில் பஹாய் கவனம்


சமுதாய தன்மைமாற்றம் குறித்த பஹாய் அணுகுமுறை, தற்போது நிலவும் பெரும்பாலான அணுகுமுறைகளிலிருந்து வேறுபடுகின்றது; அது லௌகீக வளங்களில் அதிக கவனம் செலுத்தாமல் சமுதாய மாற்றத்தின் மையத்திலுள்ள—மக்களில், அதிக கவனம் செலுத்துகின்றது.

இது, ஓர் அடித்தட்டு அணுகுமுறையின் மூலம் சமூகத்தின் ஆன்மீக மற்றும் லௌகீக இயல்பை வலுப்படுத்துதல் எனும் அர்த்தங்கொண்ட சமூக நிர்மாணிப்பு செயல்முறையாக நிலைமாறுகின்றது.

இதன் அர்த்தம், பலக்கியத்தின் அதிகரிக்கும் அளவுடன் அண்டையிலுள்ள சமூகங்களுக்கு பரவிச் சென்று செல்வாக்கு செலுத்தும் வரை சமூகத்தின் திறனாற்றல் படிப்படியாக உருவாக்கப்படுகிறது என்பதாகும்.

சமுதாயத்தின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்புகள் சிதைந்து, வெறுப்பையும் விரக்தியையும் அதன் விளைவாக விட்டுச்செல்லும் ஒரு காலகட்டத்தில், சமூகத்தின் ஒவ்வோர் அம்சத்திலும் ஊடுருவக்கூடிய ஆன்மீக விழுமியங்களின் உலகளாவிய அடித்தளத்தை கவனமாக நிர்மாணிப்பது உலகெங்கிலும் உள்ள சமூகங்களுக்கு–நொறுங்கிப்போன சமூகத்தின் எதிர்மறையான விளைவுகளைத் தாங்கக்கூடிய மற்றும் இறுதியில் அவற்றைக் கடந்துசெல்லும் சமூகங்களுக்கு– நம்பிக்கையான எதிர்காலத்தை உறுதி செய்கிறது:

சிறு அளவான உங்கள் எண்ணிக்கையைப் பற்றி அக்கறைப்படாதீர்கள் அல்லது நம்பிக்கையற்ற ஓர் உலகின் ஜனத்திரள்களால் ஒடுக்கப்படாதீர்கள். ஐந்தே கோதுமை மணிகளுக்கு தெய்வீக ஆசிகள் வழங்கப்படும், அதே வேளை ஓராயிரம் டன் களைகள் எவ்வித பயனையோ விளைவுகளையோ ஏற்படுத்தாது. ஒரு கனிகொடுக்கும் மரம் சமுதாயத்தின் வாழ்வுக்கு ஏதுவானதாக இருக்கும். -அப்துல்-பஹா, தெய்வீக திட்டத்தின் நிருபங்கள், பக். 95

பஹாய் போதனைகளில் ஊண்றப்பட்ட, இந்த அடித்தலம், லௌகீக மற்றும் ஆன்மீக ரீதியில் ஒரு சமுதாயத்தை பயனளிப்பதாக்குவது எது என்பதைக் கண்டறியும் உலகின் ஒவ்வொரு பாகத்திலுமுள்ள மக்கள் குழுமங்களின் நீண்டகால ஈடுபாட்டின் மூலம் உருவாக்கப்படுகின்றது.

சில சமயங்களில் “மைய நடவடிக்கைகள்” என அழைக்கப்படும், ஒற்றுமை மற்றும் சமுதாய தன்மைமாற்றத்தை மேம்படுத்துவதற்கு உலகம் முழுவதும் பஹாய் சமூகங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பின்வருமாறு:

படிப்பு வட்டங்கள்

ஒருவரின் சமுதாய அந்தஸ்து, கல்வியின் அளவு, குடும்பப் பின்னணி, அல்லது இனம் எதுவாக இருப்பினும், அவர சமுதாயத்திற்குப் பங்களிப்பதற்கான திறனை கொண்டிக்கவே செய்கிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மக்கள் ஒன்றுகூடி ஆன்மீக விஷயங்களைப் பற்றி பேசுவதற்கும், சமூக நிர்மாணிப்பு யுக்திகளைப் பற்றி கற்றுக்கொள்வதற்கும், ஒரு பகிர்ந்துகொண்ட நோக்கத்துடன் நண்பர்களாவதற்கும் எல்லா பின்னணிகளையும் சார்ந்த மக்களுக்கு வெகு சில தளங்களே உள்ளன. இந்த அவசர தேவையை நிறைவு செய்வதற்கு ஒரு பஹாய் உத்வேக அமைப்பான ரூஹி பயிற்சிக்கழகம், ஒரு பயிற்சி வரிசையை உருவாக்கியுள்ளது.

ஒரு படிப்பு வட்டம்

ரூஹி பயிற்சிக்கழகத்தினால் தயாரிக்கப்பட்ட நூல்களின் வழி, எங்குமுள்ள நண்பர்கள், ஒரு வகுப்பறை இயக்காற்றலுக்கு எதிர்மறையாக இருக்கும் சமத்துவவாத இயல்பைப் பிரதிபலிக்கும் ஒரு பெயரான, பயிலப்படும் நூலில் ஏற்கனவே பயிற்சி பெற்ற ஒரு நண்பரினால் வழிகாட்டப்பட்ட, “படிப்பு வட்டங்களில்” ஒன்றுகூடக்கூடும். இந்த நூல்கள், ஆழமான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் கேள்விகளைக் கேட்க வைக்கும், பஹாய் திருவாக்குகளின் படிப்பாய்வை மக்கள் மேற்கொள்ள செய்திட தூண்டி, அவர்கள் பஹாய் போதனைகளை தங்கள் வாழ்க்கைகளிலும் சமூகத்தின் வாழ்க்கைகளிலும் எவ்வாறு பயன்படுத்தப்படக் கூடும் என்பதை பங்கேற்பாளர்கள் கண்டறிய அனுமதிக்கின்றது.

படிப்பு வட்டம்

இந்த படிப்பு வட்டங்களுக்கு முன்நிபந்தனைகள் எதுவும் கிடையாது. பொருண்மையில், மொழியும் கல்வியின் அளவும் தடைகளாக இருக்கும் சில இடங்களில், ஒலிநூல்கள், அகரவரிசை பயிற்சிகள் ஆகியவற்றின் கலவையை நண்பர்கள் பயன்படுத்தி, எல்லாரும் சமநிலையில் இருப்பதை உறுதி செய்கிறார்கள். இந்த படிப்பு வட்டங்கள் எங்கும் நடைபெறலாம்; கல்லாரிகளில், இல்லங்களில், அண்டைப்புறங்களில் மற்றும் வணிக சூழல்களில்.

கோட்பாடு மற்றும் நடைமுறைக் கூறுகளின் மூலம், ஒரு படிப்பு வட்டத்தின் உறுப்பினர்கள் பகிரப்பட்ட தொலைநோக்கை வளர்த்து, அவர்களைச் சுற்றியுள்ள ஆன்மீக மற்றும் லௌகீக நிலைமைகளை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட யுத்திகளைக் கற்றுக்கொள்கிறார்கள்.

சிறுவர் வகுப்புகள்

நமது குழந்தைச் செல்வங்களே உலகின் வருங்காலம் என அடிக்கடி சொல்லிக்கொள்கின்றோம்.  சிறுவர் கல்விக்கான இயக்கங்கள் எங்கெங்கும் வலுப்படுத்தப்பட்டு வரும்போது, அவர்களின ஆன்மீகக் கல்விக்கு குறைந்த கவனமே செலுத்தப்படுகின்றது.  முதியோரைப் போன்று சிறுவர்களுக்கும் ஆன்மீக போதனைகளைப் புரிந்துகொள்ளும் திறனாற்றல் உள்ளது, மற்றும் சிறுவயதிலேயே அந்த போதனைகளை மிகுந்த விளைவுத்திறத்துடன் பயன்திட அவர்களால் முடியும்.   சிறுவர்கள் பள்ளிகளில் பெறும் லௌகீக கல்வி போன்று சமமான முக்கியத்துவம் உடைய, ஆன்மீக கல்வி பெறுவதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதற்கு சமூகத்தின் பங்கிற்கு ஒரு கடப்பாடு தேவைப்படுகின்றது.

சிறுவர் வகுப்பு

அண்டைப்புறங்களிலுள்ள பஹாய் சிறுவர் வகுப்புகளில் கலை, பாடல்கள், கதைகள், பிரார்த்தனை மற்றும் மனனம் மூலம் உலகெங்கிலும் உள்ள சிறுவர்கள் வாய்மை, தயவு, மன்னிப்பு மற்றும் ஒற்றுமை போன்ற ஆன்மீக நற்பண்புகளை அடையாளம் காண கற்றுக்கொள்கிறார்கள். இந்த நற்பண்புகள், ஒவ்வொரு மதத்திற்கும் தார்மீக போதனைகளுக்கும் பொதுவான, இந்த நற்பண்புகள், சிறுவர்கள் உலகில் வாழவும், அவர்களின் முதிய வாழ்க்கையை உருவாக்கவும் உதவுகின்றன. இந்த கருத்தாக்கங்கள் சிறுவர்களில் ஏற்படுத்தும் ஆழமான விளைவு தெளிவாக இருக்கின்றது: அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான அவர்களின் திறன் மேம்படுத்தப்படுகின்றது, அவர்கள் தங்களின் சொந்த திறனைப் பற்றிய அவர்களின் நம்பிக்கை உயர்த்தப்படுகிறது, மேலும் நல்லது மற்றும் கெட்டதை வேறுபடுத்துவதற்கான அவர்களின் திறன் பலப்படுத்தப்படுகிறது.

நாம் அனைவருமே விலைமதிப்பற்ற வைரங்கள் நிறைந்து ஒரு சுரங்கம் போன்றவர்கள் எனவும், கல்வி ஒன்று மட்டுமே அதை வெளிப்படுத்த முடியும் என பஹாய்கள் நம்புகின்றனர்.

மனிதன், விலைமதிக்க முடியாத மதிப்பினைக் கொண்ட இரத்தினங்களின் செழுமை நிறைந்த ஓர் சுரங்கம் எனக் கருதுங்கள். கல்வி மட்டுமே, அதன் பொக்கிஷங்களை வெளிப்படுத்தச் செய்து அதனால் மனிதகுலம் பயன்பெறச் செய்ய முடியும். – பஹாவுல்லா, பஹாவுல்லாவின் திருவாக்குகளிலிருந்து பொறுக்குமணிகள், பக. 259

ஆன்மீக ரீதியில் தங்களை பலப்படுத்திக்கொள்வதற்கு சிறுவர்களுக்கு ஒரு வாய்ப்பளிப்பது, சமுதாயத்தின் வருங்கால உறுப்பினர்கள் எனும் முறையில் சவால் நிறைந்த, அதில் அவர்களுக்கு ஒரு முக்கிய பங்கிருக்கும் ஓர் உலகிற்கு அவர்களை ஆயத்தமாக்குகின்றது.

இளைய இளைஞர் குழுக்கள்

எந்த ஒரு சமூகத்தின் மிகவும் முக்கியமான இறுதியிலக்காக இருப்பது, குறிப்பாக 12 முதல் 15 வயதுடைய அதன் இளைஞர்களே. அவர்கள் எங்கிருந்து வந்தாலும், அல்லது அவர்களின் வாழ்க்கைச் சூழல் எதுவாக இருப்பினும், வளர்ச்சியுறும் அந்த வளரிளம் பருவத்தினர் குழந்தைப் பருவத்திலிருந்து முதிர்ச்சியை நோக்கிய ஒரு முக்கிய நிலைமாற்றத்தில் இருக்கின்றனர். இந்த நிலைமாற்றம் சாத்தியக்கூறுகள் நிறைந்ததாக இருப்பதோடு, குறிப்பாக லௌகீகவாதம், பயம் மற்றும் தப்பெண்ணங்களின் எதிர்மறை தாக்கங்களின் பாதிப்புக்கு அவர்கள் ஆளாகும் நிலையிலும் அப்பவருவத்தினர் உள்ளனர்.

ஓர் இளைய இளைஞர் குழு

இதற்கு மறுமொழியாக, இளைய இளைஞர் ஆன்மீக சக்தியளிப்பு திட்டத்தை பஹாய் சமூகம் உருவாக்கியுள்ளது. இந்த திட்டம் இளைய இளைஞர்கள் தங்களின் ஆற்றல்களைத் திரட்டி, அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தின் நன்மைக்காக அவர்களின் சக்திகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஓர் இளை இளைஞர் குழு

இளைய இளைஞர் குழுமத்தினரைவிட சில வருடங்கள் மூத்திருக்கும் ஓர் இளைஞர், அக்குழுமத்தின் எனிமேட்டராக செயல்பட்டு, அந்த இளைய இளைஞர்கள் ஆய்வுத்திறத்துடன் சிந்திக்கவும் அவர்களின் சமூகத்தில் மாற்றத்திற்கான முகவர்களா தங்களைக் காணவும் அவர்களுக்கு வழிகாட்டுகின்றார். படிப்பாய்வின் மூலம், தங்களைச் சூழ்ந்துள்ள தாக்கங்களை அடையாளங்காண கற்றும் அதே வேளை தங்களின் ஆன்மீக வலிமைகளையும் மேம்படுத்திக் கொள்கின்றனர். அருகிலுள்ள வீதியை சுத்தம் செய்வதிலிருந்து சிறுவர்களுக்கு முறைமையான வகுப்புகளை ஏற்பாடு செய்வது வரையிலான சேவைச் செயல்கள் மூலம், லௌகீக ரீதியில் மட்டுமின்றி ஆன்மீக ரீதியிலும் தங்களுக்கும் தங்களின் சமூகத்திற்கும் பயனளிக்கும் முடிவுகள் செய்வதற்கு இந்த இளைய இளைஞர்கள் சக்தி பெறுகின்றனர்.

இன்று உலகம் முழுவதும் சுமார் 1,50,000 இளைய இளைஞர்கள் சுமார் 17,000 குழுமங்களில் ஈடுபட்டும், திட்டத்தின் தன்மைமாற்ற சக்தியையும் அது தங்களின் சமூகங்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை மேன்மேலும் அதிக மக்கள் காணும்போது  இந்த எண்ணிக்கை மேலும் சீராக உயர்ந்து வருகின்றது.

வழிபாட்டுக் கூட்டங்கள்

ஆன்மீகத்தைப் பற்றிய உரையாடல்கள் வாடிக்கையாக நடக்கும் ஒரு சமூகத்தில், வழிபாட்டுக்கான ஒன்றுகூடல்கள் ஒரு சமூக நடவடிக்கையாக வெளிப்பட்டு, நண்பர்களும் அண்டையர்களும் பிரார்த்தனைக்காக ஒன்றுகூடக்கூடிய ஒரு மையமாகிடும்.

தனிப்பட்ட பிரார்த்தனை ஒரு தனிநபரை அவரின் சிருஷ்டிகர்த்தாவுடன் இணைத்திடும் அதே வேளை, ஒரு குழும சூழலில் பிரார்த்தனைகளைப் பகிர்ந்துகொள்வது ஒற்றுமையைப் பலப்படுத்தி, மேலும் ஆழமான உரையாடல்களை ஊக்குவித்து, முதியோர், இளைஞர், குழந்தைளுக்கும் கூட, ஆன்மீகமும் ஆன்மாவும் முன்முக்கியத்துவம் பெரும் ஒரு தளத்தை எல்லாருக்கும் ஸ்தாபிக்கின்றது.

வழிபாட்டுக் கூட்டம்

இந்த பொதுவான வழிபாடுகள் வெவ்வேறு வடிவத்தில் இருக்கும். சில கிராமப்புறங்களில், அண்டையர்கள் அதிகாலையில் வயல்வெளிகளுக்குச் செல்லும் முன் ஒன்றாகப் பிரார்த்திப்பதற்கு ஒன்றுகூடுகின்றனர். பெரிய நகரங்களில், ஒரு கட்டிடத்தில் வாழும் குடும்பங்கள், மாலை வேளையில் பணிகளுக்குப் பின் இல்லந்திரும்பி பிரார்த்தனைக்காக ஒன்றுகூடுகின்றனர். சில நேரங்களில் கதைகள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன, வேறு நேரங்களில் அவ்வொன்றுகூடலின் ஆன்மீக இயல்பை மேம்படுத்துவதற்கு இசை ஒரு முக்கிய பங்காற்றுகின்றது. ஒவ்வொரு சமூகத்தின் வழக்கங்கள் மற்றும் நலன்களுக்கு ஏற்ப, வழிபாடுகள் மாறலாம், ஆனால் அதன் நோக்கம் மாறுவதில்லை: பிரார்த்தனையின் சக்தியின் மூலமாக அங்கு கூடியிருக்கும் அனவரின் ஆன்மாக்களை ஒற்றுமைப்படுத்துதல்.

இதுவன்றோ சமயத்தின் நோக்கம்?

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் கொண்டுள்ள இருவித தார்மீக நோக்கத்தைப் பற்றி பஹாய் திருவாக்குகள் குறிப்பிடுகின்றன: தங்களையும் தங்களைச் சுற்றியுள்ள சமுதாயத்தையும் சீர்படுத்துவது. உலகின் எதிர்மறை ஆற்றல்கள் நம்மைச் சுற்றிலும் சூறையாடி வருவதை அனுமதித்துவிட்டு நாம் மட்டும் ஒரு நல்ல மனிதராக இருப்பது போதுமானதல்ல. நமது சொந்த வாழ்க்கையில் தீங்கு விளைவிக்கும் நடத்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் போது சமுதாயத்தை சீர்படுத்துவதற்கு ஆக்ககரமாக செயல்படுவதில் அர்த்தமே இல்லை. ஓர் உண்மையான ஆன்மீக வாழ்க்கை இரண்டையும் இணைவாக செய்கின்றது, ஓர் அம்சம் மற்றதன் அடித்தலத்தில் நிர்மாணிப்பது.   

உலகில் நமது பங்கு குறித்த புதிய புரிதல் பரிணமித்து, பின்வரும் வழிகளில் அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் போது, பஹாய் சமயத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்ந்தாற் போன்று வளர்ச்சியுறுகின்றன என உலக நீதிமன்றம் கூறுகின்றது.

சமயத்தினுள் உள்ளியல்பாக வீற்றிருக்கும் சமுதாய கட்டுமான சக்தியை, அதன் எல்லா முயற்சிகளிலும் வெளிப்படுத்துவதன் மூலம், தெய்வீக நாகரிகத்தின் வருகையை விரைவுபடுத்தி வரும் ஓர் உலகளாவிய சமூகத்தின் விழிப்புணர்வில்; மெய்யாகவே, உள்ளார்ந்த தன்மைமாற்றத்தைப் பேணுவதற்கும், ஒற்றுமை வட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், சேவைக் களத்தில் பிறரோடு உடனுழைப்பதற்கும் மற்றும், ஜனத்திரள்கள் தங்களின் சொந்த ஆன்மீக, சமுதாய, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு உதவுவதுமான, அவர்களின் முயற்சிகள் குறித்த நண்பர்களின் அதிகரித்திடும் விழிப்புணர்விலும் — மற்றும்,  இம்முயற்சிகள் யாவற்றின் வழியாக உலகின் சீர்திருத்தத்தைக் கொண்டுவருதல் ஆகியவையே உண்மையில் சமயத்தின் நோக்கத்தையே வெளிப்படுத்துகின்றன. – உலக நீதிமன்றம் ரித்வான் 2016

உலகளாவிய பஹாய் சமூகம் இந்த நடவடிக்கைகளில் பங்கேற் விரும்பும் எவருக்கும் அந்த நடவடிக்கைகளை திறந்துவிடுகின்றது. இந்த நாகரீக நிர்மாண இயக்கத்தில், எதிர்கால தாத்பர்யங்களின் ஒரு நுண்காட்சியை மட்டுமே நாம் காணமுடியும், ஆனால் நாம் நினைபதற்கும் மாறாக ஓர் ஒற்றுமைப்படுத்தப்பட்ட உலகு வெகு அருகிலேயே உள்ளது என்பதை இந்த ஆன்மீக திட்டங்களின் கனிகள் நிரூபித்து வருகின்றன.   

மூலாதாரம்: https://bahaiteachings.org/bahai-focus-building-community/

One thought on “சமூக நிர்மாணிப்பில் பஹாய் கவனம்”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: