
உலகளாவிய சுகாதார நெருக்கடி தொடர்பான கருப்பொருள்களில் “பஹாய் உலகம்” பற்றிய தொடர்வரிசை கவனம் செலுத்திடும்
8 மே 2020
பஹாய் உலக நிலையம் – கொரோனா தொற்றோடு உலகம் மல்லாடி வருகையில் மானிடத்தின் வருங்காலம் குறித்த கேள்விகள் எழுகின்றன. இதன் சூழலில், இணைய பிரசுரமான ‘பஹாய் உலகம்’ சமுதாயங்கள் முன்னோக்கிப் பார்க்கும் போது அவை எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் கட்டுரைத் தொடர்களை அது ஆரம்பிக்கவிருக்கின்றது.

“தற்போதைய உலகளாவிய தொற்றுநோய் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை அவசியமாக்கியுள்ளது,” என அதன் ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். “இந்த நெருக்கடியிலிருந்து மானிடம் எவ்வாறு வெளிப்படப் போகின்றது என்பது குறித்த ஆழ்ந்த பிரதிபலிப்புக்கான அவசியத்தையும் இது தெளிவாக்கியுள்ளது. நாம் ஒரு நீதிநிறைந்த மற்றும் அமைதியான உலகை நோக்கி நகரவிருக்கின்றோமா?”
இன்று இந்த வரிசையில் பிரசுரிக்கப்பட்ட முதல் கட்டுரை, சமுதாய பொதுநலன் குறித்த அரசாங்கத்தின் பங்கைப் பற்றிய கேள்விகளைப் பரிசீலிக்கின்றது. இனிவரும் கட்டுரைகள், பொருளாதாரம், குடிபெயர்வு, விவசாயம், உணவுப் பாதுகாப்பு போன்ற தலைப்புகளின் ஒரு நெடுக்கத்தை ஆராயவிருக்கின்றன. இப்புதிய தொடர்வரிசை ஏற்கனவே உள்ள அமைதி, தொழில்நுட்பம், கிராமப்புற அபிவிருத்தி, மற்றும் மனிதாபிமான நிவாரணம் போன்ற கட்டுரைகளுடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

இந்த இணையத்தளம், பாப் பெருமானார் மற்றும் அவரது சமயத்துடன் அணுக்கமாகத் தொடர்புகொண்ட சூழல்களை விளக்கிடும் புதிய சித்திரக் கட்டுரைகள் அதில் இடம்பெறும்.
‘பஹாய் உலகம்’ ஷோகி எஃபென்டியின் வழிகாட்டலின் கீழ் 1926’ஆம் ஆண்டு அச்சுவடிவத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதத்தில், சமகால கருப்பொருள்கள் பற்றிய பஹாய் முன்னோக்குகளைக் கையாளும் புதிய கட்டுரைகளை வெளியிடுவதற்காக வலைத்தளம் தொடங்கப்பட்டது. ஒரு மின்னஞ்சல் சந்தா சேவை நடப்பில் உள்ளது, அது புதிய கட்டுரைகள் பிரசுரிக்கப்படும் போது சந்தாதாரர்களுக்கு அறிவிக்கப்படுவதற்கு அது வகை செய்கிறது.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1425/