கலைகள் உலகில் அழகை வெளிப்படுத்துகின்றன, தற்போதைய சூழ்நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன


டார் எஸ் சலாம், தான்ஸானியாவில் உள்ள ஓர் இளைஞர், சமூக தனிமைப் படுத்தல் போன்ற சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குக் கீழ்ப்படிதலை ஊக்குவிப்பதற்கு இலக்க கலைப்படைப்புகளைப் பயன்படுத்துகிறார். சமூகத்தின் யதார்த்த நிலைகளைப் பற்றி விளக்கமளிக்கவும் சில சுகாதார குறிப்புகளை பகிர்ந்துகொள்ளவும் நான் ஊக்குவிக்கப்பட்டேன்,” என அந்த கலைஞர் கூறுகிறார். “மக்கள் இந்த தொற்றுநோயை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டுகள் மூலம் காண்பிக்க விரும்பினேன்.”

கலைகள் உலகில் அழகை வெளிப்படுத்துகின்றன, தற்போதைய சூழ்நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன


11 மே 2020


பஹாய் உலக மையம் – இத்தனித்தன்மைமிக்க நேரங்களில், மனிதவாழ்வின் ஆன்மீக பரிமாணங்களின் மீது பிரதிபலிப்பைத் தூண்டுவதிலும், நம்பிக்கை ஊட்டுவதிலும் கலைகள் குறிப்பான முக்கியத்துவம் வகிக்கின்றன. பஹாய்களும் உலகம் முழுவதுமுள்ள அவர்களின் சக குடிமக்களும், மானிடத்தின் இடைத்தொடர்புடமை போன்ற, பொது விழிப்புணர்வைக் கவ்வும் கருப்பொருள்களை மக்களிடையே வெளிச்சத்திற்குக் கொண்டுவர கலைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

“மக்கள் தங்களின் நண்பர்களைச் சென்றடையவும், அவர்களின் சஞ்சலங்களைப் போக்கிக் கொள்ளவும் ஆக்ககரமான முன்முனைவுகள் வழிகளை வழங்குகின்றன. கலைத்துவ வேலைப்பாடுகள் ஆர்வநம்பிக்கை, அகப்பிணைவு, மற்றும் சமுதாயத்தில் ஒற்றுமை குறித்த உணர்வுகளை அதிகரித்திட முடியும்,” என ருமேனியா நாட்டின் ஸ்கெட்ச் கலைஞரான சிமினா கூறுகிறார்.

எல்லா வயதினரும், குறிப்பாக இளைஞர்கள், இசை, பொட்காஸ்ட்கள், ஓவியங்கள் மற்றும் வரைபடங்கள், தியேட்டர், கைப்பாவை நிகழ்ச்சிகள், கவிதை மற்றும் டிஜிட்டல் வடிவமைப்புகள் மூலம் சக குடிமக்களின் ஆவிகளை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிந்துள்ளனர்.  இத்தகைய படைப்புகள் உலகில் இருக்கும் அழகை வெளிப்படுத்துவதிலும், தற்போதைய சூழ்நிலைகளில் புதிய கண்ணோட்டங்களை வெளிப்படுத்துவதிலும் கவனம் செலுத்தியுள்ளன.

ஆக்ககரமான யோசனைகளை வெளிப்படுத்துவதற்கு கலைகளின் பயன்பாடு குறித்து பிரதிபலிக்கின்ற ஓர் இளம் இசை கலைஞரான நாடிவ் கூறுவது: “இந்த தொற்றுநோயின் போது இசையின் மூலம், பொதுநலம் குறித்த பிரச்சினைகளைப் பற்றி கவனம் செலுத்துவதற்கும் ஒருமைப்பாடு குறித்த கூட்டு வெளிப்பாடுகளில் பங்கேற்க மக்களைத் திரட்டவும் எங்களால் முடிந்துள்ளது. உண்மையில் கலைகள் குரலற்றோரின் குரலாக இருந்துள்ளன. ஒரு விஷயத்தை நேரடியாகக் கூறமுடியாவிட்டால், அதை படைப்புத்திற வழிகளின் மூலம் வெளிப்படுத்தலாம்.”  

அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிபவர்களுக்கு பாராட்டுக்களைக் காண்பிப்பதற்கும், சுகாதார நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சமூகங்களுக்கு வழங்குவதற்கும் கலைகள் பலரால் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் ஓவியரான மெடோவ் கூறுகிறார்: “எங்கள் கைகளையும் கரங்களையும் பயன்படுத்தி மற்றவர்கள் மனமகிழ்ச்சியடைய அழகானதும் உத்வேகமூட்டக் கூடியதுமான ஏதாவது ஒன்றை எவ்வாறு எல்லாருமே உருவாக்கலாம் என்பதை நாம் பார்த்திருக்கின்றோம். படைப்பாற்றலானது, நமது உணர்வாற்றலை அதிகரித்தும் நம்மைச் சுற்றியுள்ளோருக்கு உதவி உத்வேகம் வழிந்தோடுவதற்கு வகை செய்கின்றது.

பஹாய் போதனைகளால் தூண்டப்பட்டு, இக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட பல கலைத்துவ படைப்புகளின் ஒரு சிறு தொப்பு இங்கு வழங்கப்படுகின்றது.

லத்தீன் அமெரிக்காவிலும் ஸ்பெயினிலும் உள்ள பஹாய்கள் இளைஞர்களுக்கான உற்சாகமளிக்கும் இசை வீடியோக்களைத் தயாரித்து வருகின்றனர். அன்பின் வலிமையைக் குறிக்கும் “லா ஃபுர்ஸா டெல் அமோர்” என்ற இந்த பாடல், இளைஞர்களை நேர்மறையான எண்ணங்களை செயல்வடிவில் வெளிப்படுத்த ஊக்குவிக்கிறது. (பாடல் இங்கே)
இத்தாலியில் சிறுவர்களின் தார்மீக கல்விக்கான வகுப்புகளின் ஆசிரியர்கள், நீதி பற்றிய கருப்பொருளில் ஒரு கைப்பொம்மை நாடகத்தை ஒளிப்பதிவு செய்து அதை “Stelle Splendenti” (Brilliant Stars) எனும் அவர்களின் இணையத்தளத்தில் பகிர்ந்துகொண்டனர். நாட்டின் பஹாய் சமூகத்தின் முன்முனைவுகளுள் பலவற்றுள் ஒன்றான, கொரோனா தொற்றுநோயின் விளைவாக உருவாக்கப்பட்ட இந்த இணையத்தளம், இந்த நேரத்தில் அதிகமாக தேவைப்படும் ஆன்மீகப் பண்புகளை குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆராய்வதற்கு உதவும் பல்லூடக வள ஆதாரங்களை வழங்குகிறது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மூன்று சகோதரிகள், பஹாய் சமயத்தின் வரலாற்றிலிருந்து கதைகளைக் கூறும் பொட்காஸ்ட்’களை உருவாக்கியுள்ளனர்; இக்கதைகள் சவால்களுக்கு எதிரே விடாமுயற்சியுடன் இருப்பதை வெளிப்படுத்துகின்றன.
கெனடா, நானாயிமோ’விலுள்ள பஹாய் சமூகத்தின் கல்வியல் திட்டங்களில் பங்குபெற்ற வரும் இளைஞர்கள், ஓர் இணைய இளைஞர் முகாமை ஏற்பாடுசெய்து இந்த நெருக்கடி மிக்க நேரத்தில் அவர்கள் மற்றவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்பது பற்றி பிரதிபலித்தனர். பணிவு குறித்த கருப்பொருளை ஆராய்வதற்கு இந்தக் காணொளி தயாரிக்கப்பட்டது.
பெலாரஸில் உள்ள மின்ஸ்க் நகரைச் சேர்ந்த இளைஞர்கள் ஒரு காணொளியை உருவாக்கியுள்ளனர்; அதில் மனிதகுலத்தின் அழகையும் நல்ல செயல்களையும் பற்றி அவர்கள் எழுதிய கவிதைகளை வாசித்துக் காட்டுகிறார்கள்.
ஐக்கிய அமெரிக்க ஒவியர் ஒருவர் தமது காரியங்களுக்கு உத்வேகமளித்த ஒவியத்திறனையும் ஆன்மீக கருத்தாக்கங்களையும் பகிர்ந்துகொள்ளும் காணொளியைhttps://news.bahai.org/story/1426/slideshow/6/ தயாரித்துள்ளார்.
“சுவர்க்கத்திற்கு நாடுகடத்தல்” என தலைப்பிடப்பட்ட ஓர் ஓரங்க நாடகம் பஹாய் சமயத்தின் முக்கிய நிகழ்வுகளை ஆராய்கின்றது. வெவ்வேறு பாகங்களில் நடிக்கும் அந்த நடிகரின் பல பதிவுகள் ஒன்றாக ஒரே கதையாக தொகுக்கப்பட்டன.
மானிடத்தின் சாராம்ச ஒருமை குறித்த ஒரு கருப்பொருள்மீதான நேரடி இசைத் தொகுப்பு ஒன்றை ஐக்கிய அரசின் குடும்பம் ஒன்று வழங்கியது. ஆழ்ந்த ஆன்மீக கோட்பாடுகள் மீது பிரதிபலிப்புகளைத் தூண்டுவதற்கு வசிப்பறைகளிலிருந்து உலகம் முழுவதும் இத்தகைய ஒலிபரப்புகள் செய்யப்பட்டுள்ளன.
நியூ சீலாந்து, ஆக்லாந்து நகரின் இசைக் கலைஞர்கள் பலரின் முன்முயற்சியான “உலகை ஒளிரச் செய்தல்” என தலைப்பிடப்பட்ட படைப்பு ஒன்று தங்களின் சமுதாயம் எதிர்நோக்கும் சவால்கள் மீது வெளிச்சம் போட்டுக் காட்டும் இசைப் படைப்புகளை உருவாக்க மக்களை ஒன்றுதிரட்டி வருகின்றது.
பஹாய் கல்வி வகுப்புகளில் பங்கேற்கும் ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகர் சிறுவர்கள், முதியோர் இல்லம் ஒன்றில் உள்ளோருக்கு ஆர்வநம்பிக்கை எனும் கருப்பொருள் மீதான சித்திரங்களை வரைந்துள்ளனர்.
சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றிய ஒரு செய்தி அடங்கிய ஒரு கலகலப்பான பாடலை கொலம்பியா நாட்டின் நோர்ட்டே டெல் கௌக்காவிலுள்ள இசைக்கலைஞர்கள் குழு ஒன்று இயற்றியுள்ளது.
“ஒற்றுமையின் இதயத்தில்” என்று அழைக்கப்படும் இந்த சித்திரம், நம்பிக்கை என்பது ஓர் இதயத்திலிருந்து மற்றோர் இதயத்திற்கு எவ்வாறு பரவுகிறது என்பது பற்றியதாகும். தற்போதைய சூழ்நிலைகளில் தங்கள் சமூகங்களுக்கு எவ்வாறு தொடர்ந்து சேவை செய்ய முடியும் என்பது குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்காக வாரந்தோறும் இணையத்தில் ஒன்றுகூடும் இளைஞர்கள் குழுவின் உரையாடல்களால் இது தூண்டப்பட்டது.

மூலாதாரம்:https://news.bahai.org/story/1426/