கலைகள் உலகில் அழகை வெளிப்படுத்துகின்றன, தற்போதைய சூழ்நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன
11 மே 2020
பஹாய் உலக மையம் – இத்தனித்தன்மைமிக்க நேரங்களில், மனிதவாழ்வின் ஆன்மீக பரிமாணங்களின் மீது பிரதிபலிப்பைத் தூண்டுவதிலும், நம்பிக்கை ஊட்டுவதிலும் கலைகள் குறிப்பான முக்கியத்துவம் வகிக்கின்றன. பஹாய்களும் உலகம் முழுவதுமுள்ள அவர்களின் சக குடிமக்களும், மானிடத்தின் இடைத்தொடர்புடமை போன்ற, பொது விழிப்புணர்வைக் கவ்வும் கருப்பொருள்களை மக்களிடையே வெளிச்சத்திற்குக் கொண்டுவர கலைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
“மக்கள் தங்களின் நண்பர்களைச் சென்றடையவும், அவர்களின் சஞ்சலங்களைப் போக்கிக் கொள்ளவும் ஆக்ககரமான முன்முனைவுகள் வழிகளை வழங்குகின்றன. கலைத்துவ வேலைப்பாடுகள் ஆர்வநம்பிக்கை, அகப்பிணைவு, மற்றும் சமுதாயத்தில் ஒற்றுமை குறித்த உணர்வுகளை அதிகரித்திட முடியும்,” என ருமேனியா நாட்டின் ஸ்கெட்ச் கலைஞரான சிமினா கூறுகிறார்.
எல்லா வயதினரும், குறிப்பாக இளைஞர்கள், இசை, பொட்காஸ்ட்கள், ஓவியங்கள் மற்றும் வரைபடங்கள், தியேட்டர், கைப்பாவை நிகழ்ச்சிகள், கவிதை மற்றும் டிஜிட்டல் வடிவமைப்புகள் மூலம் சக குடிமக்களின் ஆவிகளை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிந்துள்ளனர். இத்தகைய படைப்புகள் உலகில் இருக்கும் அழகை வெளிப்படுத்துவதிலும், தற்போதைய சூழ்நிலைகளில் புதிய கண்ணோட்டங்களை வெளிப்படுத்துவதிலும் கவனம் செலுத்தியுள்ளன.
ஆக்ககரமான யோசனைகளை வெளிப்படுத்துவதற்கு கலைகளின் பயன்பாடு குறித்து பிரதிபலிக்கின்ற ஓர் இளம் இசை கலைஞரான நாடிவ் கூறுவது: “இந்த தொற்றுநோயின் போது இசையின் மூலம், பொதுநலம் குறித்த பிரச்சினைகளைப் பற்றி கவனம் செலுத்துவதற்கும் ஒருமைப்பாடு குறித்த கூட்டு வெளிப்பாடுகளில் பங்கேற்க மக்களைத் திரட்டவும் எங்களால் முடிந்துள்ளது. உண்மையில் கலைகள் குரலற்றோரின் குரலாக இருந்துள்ளன. ஒரு விஷயத்தை நேரடியாகக் கூறமுடியாவிட்டால், அதை படைப்புத்திற வழிகளின் மூலம் வெளிப்படுத்தலாம்.”
அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிபவர்களுக்கு பாராட்டுக்களைக் காண்பிப்பதற்கும், சுகாதார நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சமூகங்களுக்கு வழங்குவதற்கும் கலைகள் பலரால் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் ஓவியரான மெடோவ் கூறுகிறார்: “எங்கள் கைகளையும் கரங்களையும் பயன்படுத்தி மற்றவர்கள் மனமகிழ்ச்சியடைய அழகானதும் உத்வேகமூட்டக் கூடியதுமான ஏதாவது ஒன்றை எவ்வாறு எல்லாருமே உருவாக்கலாம் என்பதை நாம் பார்த்திருக்கின்றோம். படைப்பாற்றலானது, நமது உணர்வாற்றலை அதிகரித்தும் நம்மைச் சுற்றியுள்ளோருக்கு உதவி உத்வேகம் வழிந்தோடுவதற்கு வகை செய்கின்றது.
பஹாய் போதனைகளால் தூண்டப்பட்டு, இக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட பல கலைத்துவ படைப்புகளின் ஒரு சிறு தொப்பு இங்கு வழங்கப்படுகின்றது.