
பிரார்த்தனை ஒருமைப்பாட்டு உணர்வைத் தூண்டுகிறது கூட்டு வாழ்க்கையை வளப்படுத்துகிறது
15 மே 2020
புக்காரெஸ்ட், ருமேனியா – சில மாத காலத்திற்குள், கொரோனா தொற்று தொடர்ந்து சமுதாயங்களைச் சீர்குலைத்து பெரும் துன்பத்தை ஏற்படுத்தும் அதே வேளை, மானிடத்தின் கூட்டு வாழ்க்கையில் வழிபாடும் பரோபகாரமும் அதிக கவனத்திற்குள்ளாகியுள்ளன.

“மகிழ்ச்சி அல்லது சிரமம் மிக்க காலங்களில் தனது சிருஷ்டிகர்த்தாவின்பால் திரும்புவதே ஆன்மாவுக்கு இயல்பான உந்துதலாக இருக்கும். ஆனால் தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளில் அது அடிக்கடி அமைதியாக்கப்பட்டு மறக்கப்படுகின்றது,” என்கிறார் ருமேனிய பஹாய்களின் தேசிய ஆன்மீக சபை உறுப்பினரான இவோன் மார்லன் ஸ்கார்லட்டெஸ்கு. “ஆனால், இந்த நெருக்கடியினால், மக்கள் நம்மை ஒற்றுமைப்படுத்தும் தங்கள் ஆன்மீக இயற்கையின்பால் திசைதிருப்பப்பட்டு பிரார்த்தனையின் முக்கியத்துவத்தை உணர்கின்றனர்.
ருமேனிய பஹாய்கள், தங்கள் நாட்டில் பிரார்த்தனையின்பால் ஆர்வம் அதிகரித்து வருவதற்கு மறுமொழியாக, பிரார்த்தனை கூட்டங்களில் சேர விரும்பும் அனைவருக்கும் இணையத்தள வழிபாட்டுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். “மக்கள் தினமும் ஒன்றாக பிரார்த்திக்க வருவதால் அதிக உரையாடலுக்கான தொர்புகள் ஏற்படுகின்றன” என்று திருமதி ஸ்கார்லெடெஸ்கு கூறுகிறார். “மக்களின் இதயங்கள் ஒன்றாகத் துடிக்கத் தொடங்குகின்றன. பிரார்த்தனை, ஒற்றுமை மற்றும் ஒருவர் மற்றவரை கவனித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய நட்புறவை நாங்கள் காண்கிறோம். “

இந்த கருத்துக்கள் உலகம் முழுவதும் பலர் வெளிப்படுத்திய உணர்வுகளை எதிரொலிக்கின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு போர்னியோவில், நண்பர்கள் குழுமம் ஒன்று தங்கள் நாட்டின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்ய இணையத்தளத்தில் ஒன்றுகூடத் தொடங்கியபோது, அவர்கள் உடனடி சுற்றுப்புறங்களில் மற்றவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதைப் பற்றி சிந்திப்பது இயல்பான ஒன்றாக இருந்தது. அவர்களின் உரையாடல்கள் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு முகமூடிகளை உருவாக்கி விநியோகிப்பதற்கான ஒரு முன்முயற்சிக்கு வழிவகுத்தன.
இந்தோனேசியாவில் ஒரு குடும்பம் ஒன்றாக பிரார்த்திக்கிறது. “ஒரு சிலர் பிரார்த்தனை செய்ய ஒன்றுகூடி, அவர்கள் சொல்லும் புனித வார்த்தைகளின் அர்த்தத்தைப் பற்றி ஆழமாக சிந்திக்கும்போது, அவர்கள் முக்கியத்துவங்களைப் பற்றிய தெளிவான பார்வையைப் பெறுகிறார்கள், மேலும் ஒற்றுமை உணர்வைப் பெறுகிறார்கள். இந்தோனேசியாவின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் ரீனா ட்ஜுவா லீனா கூறுகையில், “அவர்கள் முடிவுகள் எடுக்க முடிகின்றது, அவர்களைச் சுற்றிலும் காணப்படும் தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க முடிகிறது.

ஒருமுறை கண்ணுக்குத் தெரியாமல் அல்லது கவனிக்கப்படாமல் இருப்பதாக உணர்ந்த மக்கள்-தங்களின் அண்டையர்களுக்குக் கூட—கூட கூட்டுப் பிரார்த்தனையானது அந்நியர்களை நண்பர்களாக்கிடும் சக்தி இருப்பதை உணர்கிறார்கள். பஹாய் வழிபாட்டு இல்லங்கள் இருக்கும் இடங்களில், வழிபாட்டு நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்புகள் மற்றும் கூட்டு பிரார்த்தனைக்கான இணையதள கூட்டங்கள் பலரை ஒன்றிணைத்து, கவலைகளைக் கலைந்து, ஆர்வநம்பிக்கையைத் தூண்டுகின்றன.
சில்லி நாட்டின் சாந்தியாகோவில், இத்தகைய வழிபாட்டுக் கூட்டங்களின் பங்கேற்பாளர் ஒருவர் பிரார்த்திப்பதற்காக ஒன்றுகூடுவது அதற்கு முன்பு அறிமுகமற்ற மக்களிடையே நட்பின் பந்தங்களை உருவாக்கியுள்ளது.
“அண்டையர்கள் தங்களால் முடிந்த போதெல்லாம் தொடர்ந்து ஆதரவை வழங்குகிறார்கள். யாராவது பல்பொருள் அங்காடி அல்லது மருந்தகத்திற்குச் செல்லும் போது, சுற்றிலுமுள்ள மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களுக்கும் ஏதாவது தேவையா என கேட்பார்கள்.”
ஆனால் ஒருவருடன் ஒருவருடனான இடைத்தொடர்பு உணர்வு இணைய அணுகலைப் பொறுத்தது அல்ல. உலகின் பல பகுதிகளிலும், மக்கள் ஒருவருக்கொருவர் பிரார்த்தனையில் சேர்ந்துகொள்ள தொலைபேசி அழைப்புகளின் வலையமைப்புகளை நிறுவியுள்ளனர் அல்லது தங்கள் வட்டாரங்களுக்கான வழிபாட்டு நிகழ்ச்சிகளின் வானொலி ஒளிபரப்புகளைத் தயாரித்துள்ளனர்.

உகாண்டாவின் கமுலியில், பக்தி சார்ந்த வாழ்க்கையின் முக்கியத்துவம் குறித்து பஹாய்கள் தினசரி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகின்றனர், அப்பகுதியில் வசிக்கும் டேவிட் வைஸ்வா கூறுகிறார்: “இந்த தினசரி பிரார்த்தனை நேரம் ஒரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஆழ்ந்த கேள்விகளைப்பற்றி ஒன்றாக சிந்திக்கக்கூடிய நேரமாவதோடு, குடும்ப விஷயங்களைப் பற்றி கலந்தாலோசிக்கவும் முடிகிறது.
“பிரார்த்தனை மூலம் உருவாக்கப்பட்ட அன்பு, ஒற்றுமை மற்றும் புரிதல் ஆகியவற்றின் சூழலில், குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் அதிக சிந்தனையுடன் இருப்பதோடு மட்டுமின்றி, அவர்களைச் சுற்றியுள்ள சமூகத்தின் தேவைகளைப் பற்றியும் அதிக விழிப்புடன் இருக்கிறார்கள்.”

ஜோர்டானைச் சேர்ந்த ஹனன் இஹ்சன் என்ற இளைஞர் தமது சகாக்களுடன் பக்தி தருணங்களைப் பற்றி பிரதிபலிக்கின்றார்: “கடவுளை நோக்கி திரும்பி பிரார்த்தனை செய்வதே இந்த கடினமான காலத்தைக் கடந்திட எங்களுக்கு உதவி வருகிறது. இந்த தொற்றுநோய் நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது, இந்த கடினமான நேரத்தை கடந்து செல்ல ஒருவருக்கொருவர் எவ்வாறு உதவலாம், இந்த நெருக்கடிக்கு அப்பால் நமது சமூகம் எவ்வாறு முன்னேற முடியும் என்பதைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு. ”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1427/