தொற்றுநோயைத் தொடர்ந்து அத்தியாவசியக் கொள்கைகளை கெனேடிய போட்காஸ்ட் தொடர்ஆராய்கிறது

8 அக்டோபர் 2021
டொரொன்டோ, கெனடா — கெனேடிய பஹாய் சமூகம், “இன்னல்களுக்கு எதிரில் மீளுந்திறன்” என தலைப்பிடப்பட்ட ஒரு ஒரு புதிய பொட்காஸ்ட் குறுந்தொடர் ஒலிபரப்பை ஆரம்பித்துள்ளது. இத்தொடரின் அத்தியாயங்கள் தற்போதைய பொது சுகாதார நெருக்கடிக்கிடையில் நிலவும் தற்போதைய சவால்கள் மீது சமய அகப்பார்வைகள் எவ்வாறு ஒளிபாய்ச்சக்கூடும் என்பதை ஆராய்கின்றன.

கெனேடிய பஹாய் சமூகம் ஆரம்பித்துள்ளது ஒரு புதிய பொட்காஸ்ட் குறுந்தொடர் ஒலிபரப்பு, தற்போதைய பொது சுகாதார நெருக்கடிக்கிடையில் நிலவும் சவால்கள் மீது சமய அகப்பார்வைகள் எவ்வாறு ஒளிபாய்ச்சக்கூடும் என்பதை ஆராய்கின்றன
“நமது இணைச்சார்புமை, ஒருமைப்பாட்டிற்கான அவசியம், நம் சமூகங்களில் பிரதிபலிக்க வேண்டுமென நாம் விரும்பும் விழுமியங்கள் குறித்து, மேன்மேலும் அதிக மக்கள் சிந்தித்து வருகையில், இந்த நெருக்கடி சமுதாயத்தில் ஒரு புதிய விழிப்புணர்வை எழுப்பி வருகின்றது,” என்கிறார் அந்நாட்டின் பொது விவகாரங்களுக்கான பஹாய் அலுவலகத்தின் ஜெஃப்ரி கேமரன்.
சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் பஹாய் சமூகத்தின் அனுபவம் இக்கருப்பொருள்கள் குறித்து சில அகப்பார்வைகளை வழங்குகின்றன. இந்த பொட்காஸ்ட் நிநிகழ்ச்சியில் நாங்கள் ஊக்குவிக்க முயலும் உரையாடல்களில் மேலும் அதிக மக்கள் இணைந்துகொள்வார்கள் என்பது எங்களின் எதிர்ப்பார்ப்பு
இத்தொடர்கள், கெனேடியர்கள் தொடர்புடைய ஆக்ககரமான சிந்தனை மற்றும் செயலைத் தூண்டுவதில் சமயத்தின் சக்தி மற்றும் சமுதாயத்திற்கான ஒருவர் சேவையின் முக்கியத்துவம் போன்றகேள்விகளை பரிசீலிப்பதற்கு கல்வியலாளர்களையும் சமுதாய நடவடிக்கையாளர்களையும் ஒன்றுதிரட்டுகின்றது.
முதலாவது அத்தியாயத்தில் பொது நெறிகளின் பேராசிரியர் ஒருவரும் முன்னணியில் பணிபுரியும் ஒரு மருத்துவரும் இந்த நெருக்கடிக்கும் அப்பால் பிறருக்கான சேவை எவ்வாறு பொது வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சமமாக இருக்கக்கூடும் என்பதை ஆராய்கின்றனர்.

“மனித இடைத்தொடர்புமையும் ஒருவர் மீது மற்றவர் கொள்ளும் பொறுப்புணர்வும் சமயங்களின் அல்லது பெரும்பாலான சமயங்களின் அடிப்படை கோட்பாடாக இருக்கின்றது,” “பொருளாதார ரீதியில், பூகோள ரீதியில், அரசியல் ரீதியில் பிளவுபட்டுக் கிடக்கும் ஓர் உலகில் நாம் வாழ்கின்றோம்–ஆனால் நாம் அனைவரும் உண்மையிலேயே ஒன்றாக ஈடுபட்டிருக்கும் ஒரு நெருக்கடி இன்று. ஒரு பகிர்ந்துகொள்ளப்பட்ட மானிட உணர்வு இதற்குப் பின்னும் நீடித்து, நம் உலகை வலுப்படுத்திடுமாக.
புதிய முறைகளில் சிந்திப்பதற்கான சமயத்தின் சக்தி பற்றி சென்ற புதன்கிழமை வெளியிடப்பட்ட இரண்டாவது அத்தியாயத்தில், எவ்வாறு தற்போதைய சூழ்நிலைகளில் மானிடத்தின் அடிப்படை ஒருமையை அதிக தெளிவுடனும் திடநம்பிக்கையுடனும் மக்கள் காண ஆரம்பித்துள்ளனர் என்பதை கெனடா பஹாய் சமூகத்தின் எரிக் ஃபார் வர்ணிக்கின்றார். பிற பங்கேற்பாளர்களின் உணர்வுகளை எதிரொலித்த அவர், பொது விழிப்புணர்வில் இந்தக் கோட்பாடு உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டும், சமுதாயத்தின் கட்டமைப்புகளுக்கு அதன் தாத்பர்யங்கள் மீது ஆழ்ந்த பிரதிபலிப்பைத் தூண்டுவதும் குறித்த தமது ஆர்வநம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
கார்டஸ்’சிலிருந்து வரும் சமயம் சார்ந்த சிந்தனையாளர் குழுமம் ஒன்றின் ஹன்னா மராட்ஸி பின்வருமாறு கூறுகின்றார்: “என்னைச் சுற்றியுள்ள மக்கள் மனிதம் என்றால் என்னவென்பதை மறுபரிசீலனை செய்வதை நான் கண்ணுறுகின்றேன். என்னைச் சுற்றி பார்க்கையில், நான் தொலைபேசியில் தொடர்பு கொள்வோரை செவிமடுக்கும் போது, நான் எதில் என் ஆர்வநம்பிக்கையை வைப்பது, என் அண்டையர் மீதான என் கடமை என்ன? ஆழ்ந்த முக்கியத்துவமுடைய விஷயங்களின்பால் என் வாழ்க்கையை நான் எவ்வாறு திசை திருப்புவது என்பன போன்ற மிக முக்கியமான கேள்விகளுக்கு மீண்டும் திரும்புவதைக் காண்கின்றேன்.”

இந்த உரையாடல்களின் மீது பிரதிபலித்த டாக். கேமரன் பின்வருமாறு கூறுகின்றார்: “நாம் பகிர்ந்துகொள்ளும் விழுமியங்கள், சமுதாயத்தில் சமயம் மற்றும் ஆன்மீகத்தின் பங்கு குறித்த பரிணமித்து வரும் உரையாடல்கள் மீது இந்த பொட்காஸ்ட் ஒளிபாய்ச்சிடக் கூடும் என நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம். நாங்கள் முன்னோக்கிப் பார்த்து, வருங்காலத்திற்கான எங்களின் இலட்சியங்களைப் பற்றி பேசி வருகின்றோம்.
“பொது சொல்லாடல்” எனத் தலைப்பிடப்பட்ட புதிய பொட்காஸ்ட்’டின் அத்தியாயங்கள் அடுத்த மாதத்திற்கு பொது விவகார அலுவலகத்தின் இணையதளத்தில் வாரந்தோறும் வெளியிடப்படும்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1429/