நேப்பாள கிராமம் நீண்டகால உக்தியாக விவசாய திறனாற்றலை மேம்படுத்துகின்றது


நேப்பாள கிராமம் நீண்டகால உக்தியாக விவசாய திறனாற்றலை மேம்படுத்துகின்றது


8 அக்டோபர் 2021


மோதிபாஸ்தி, நேப்பாளம் – பலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தொற்றுநோய்க்கிடையே இல்லம் திரும்புவதால், நேப்பாளத்தின் மோதிபாஸ்தி பஹாய் உள்ளூர் ஆன்மீக சபை, சமூகம் தனது சொந்த உணவை உற்பத்தி செய்வதற்கான திறனாற்றலை மேம்படுத்துவதற்கு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி எண்ணி வருகின்றது.

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன்பாக எடுக்கப்பட்ட படம்.நேப்பாளத்தின் மோதிபாஸ்தி பஹாய் உள்ளூர் ஆன்மீக சபை, சமூகம் தனது சொந்த உணவை உற்பத்தி செய்வதற்கான திறனாற்றலை மேம்படுத்துவதற்கு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி எண்ணி வருகின்றது.

“இப்போது பல அரசாங்க சார்பற்ற அமைப்புகளும் முகவான்மைகளும் மக்களின் உடனடி தேவைகளுக்கு உதவிவருகின்றன” என்று உள்ளூர் ஆன்மீக சபை உறுப்பினர் ஹேமந்த் பிரகாஷ் புதா கூறினார். “ஆனால் சபை நீண்டகால தீர்வுகளைப் பற்றி சிந்திக்க இயலும் என்பதை உணர்கிறது. இந்த கிராமத்தில் உணவு உற்பத்தி செய்வதற்கான நிலமும் திறமையும் உள்ளது. எங்கள் விவசாய முயற்சிகளை ஒரு சமூகமாக ஒழுங்கமைக்காவிட்டால் நாங்கள் எவ்வாறு சமாளிக்க முடியும்?”

தொற்றுநோய் ஆரம்பத்திலிருந்தே சமூகத்தின் தேவைகளை அடையாளங் கண்டு ஈடுசெய்வதற்கு உதவியாக உள்ளூர் ஆன்மீக சபை வாரந்தோறும் கலந்தாலோசனை செய்து வருகின்றது. சமீபமாக, அப்பகுதிவாசிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத நிலங்களில் விவசாயம் செய்வதற்கான வாய்ப்புகளுடன் கிராமத்திற்கு திரும்பி வருகின்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் தொடர்புப் படுத்தி வருகின்றது.

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன்பாக எடுக்கப்பட்ட படம். நேப்பாளத்தின் காஞ்சன்பூர் மாவட்டத்தின் மக்கள், சமுதாய சேவைக்கு திறனாற்றலை உருவாக்கும் பஹாய் சமூகத்தின் கல்வியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

“எங்களின் அணுகுமுறை, மற்றவர்களைச் சார்ந்திருக்கும்,  சிலர் எல்லாம் பெற்றிருந்தும் மற்றவர் இல்லாதிருப்பதுமான அணுகுமுறையல்ல,” என மோதிபாஸ்டியில் வசிக்கும் பிரசாத் ஆச்சார்யா கூறுகிறார். “சமூகத்திற்கு எல்லாருமே எவ்வாறு பங்களிக்க இயலும் என்பதை நாங்கள் பார்க்கின்றோம். இது, எல்லாருமே ஒரே குடும்பம் மற்றும் எல்லாருமே மற்றவரின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மனிதகுல ஒருமை குறித்த பஹாய் கோட்பாட்டின் ஓர் அம்சமாகும்.

உள்ளூர் சார்ந்த அறிவு மற்றும் வல்லுனர் ஆலோசனையின் பயனைப் பெற்று, கிராமத்திற்கு சிறந்த ஊட்டத்திற்கான மூலாதாரத்தை வழங்கிடக்கூடிய பயிர் மற்றும் கால்நடைகளைத் தீர்மானிப்பதற்கு சபை குடும்பங்களுக்கு உதவிவருகின்றது.

நேப்பாள, மோதிபாஸ்தி பஹாய் உள்ளூர் ஆன்மீக சபையின் உறுப்பினர் ஒருவர், சில கிராமவாசிகளால் எதிர்நோக்கப்படும் நீர்பாசன பிரச்சினையை வர்ணிக்கும் ஒரு கடிடதத்தை வழங்க மேயரை சந்திக்கின்றார்.

தடைகளை சமாளிக்க சமூகத்திற்கு உதவுவதில் சபை வளத்துடன் இருக்கின்றது. உதாரணமாக, கிராமத்தின் ஒரு பகுதி, பாசனத்திற்கு தண்ணீர் இல்லாததைக் கண்டறிந்தபோது, கிணறு தோண்டுவதற்கு ஏற்பாடு செய்த உள்ளூர் மற்றும் மண்டல அதிகாரிகளிடம் சபை உதவி கோரியது.

இந்த அனுபவங்களைப் பிரதிபலிக்கும் திரு. பிரகாஷ் புதா இவ்வாறு கூறுகிறார்: “ஓர் உணவு நெருக்கடிக்கான சாத்தியத்தின் எதிரில், பொருட்களின் விலை அதிகரித்து வருவது மற்றும் குழந்தைகளின் கல்வி போன்ற பிற பிரச்சினைகள் குறித்து சமூகம் அக்கறை கொண்டுள்ளது. மக்கள் ஆன்மீக வழியில்–அன்பாகவும், கனிவாகவும்–கலந்தாலோசிக்கும்போது, அவர்களுக்கு முன் இருக்கும் வாய்ப்புகள் மற்றும் அவர்கள் எவ்வாறு முன்னேற முடியும் என்பதை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள். கலந்தாலோசனையானது, நாம் நடவடிக்கை எடுத்து விஷயங்களை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது.”

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன்பாக எடுக்கப்பட்ட படம். மோதிபாஸ்தியில் ஒரு படிப்பு வட்டம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1437/

மக்கள் கடவுளின் அன்மையை உணர்கின்றனர்


பஹாவுல்லாவின் நல்லடக்கத்தலமும் அதைச் சுற்றிலும் உள்ள இடமும் உலக மரபுடைமை தலங்கள் பட்டியலிலுக்கு பெயரிடப்பட்டுள்ள. வட இஸ்ரேலில் அக்காநகருக்கு அருகே உள்ள நினைவாலயம்.

மக்கள் கடவுளின் அன்மையை உணர்கின்றனர்


8 அக்டோபர் 2021


இஸ்லாமியர்களுக்கு மெக்கா, யூதர்களுக்கு ஜெருசலம், கிருத்தவர்களுக்கு பெத்லெஹெம், பௌத்தர்களுக்கு லும்பினி — பஹாய்களுக்கு இஸ்ரேல் நாட்டின் ஆக்கோ நகர் புனித நிலங்களாகும்.

பஹாவுல்லா மற்றும் பாப் அவர்கள், பஹாய் சமயத்தின் ஸ்தாபகர்களாவர் மற்றும் கடவுளின் அவதாரபுருஷர்களாகக் கருதப்படுகின்றனர். பஹாய்களின் மிகப் புனிதமான இடங்களாக இவ்விருவரின் நினைவாலயங்களும் விளங்குகின்றன. மற்றும் இவ்விரு இடங்களும் ஆயிரக்கணக்கான புனிதப்பயணிகளை ஈர்க்கின்றன.

வட இஸ்ரேலில் உள்ள இத்தலங்களும், அவற்றின் “அனைத்துலக தனிச்சிறப்புமிக்க மதிப்பின்” காரணமாக ஐக்கிய நாட்டுச் சபையின் யுனெஸ்கோவின் உலக மரபுடைமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

முறையான பூங்காக்கள் மற்றும் படித்தளங்களால் கட்டமிடப்பட்ட இஸ்ரேல் நாட்டின் ஹைஃபா நகரிலுள்ள பாப் பெருமானரின் நினைவாலயம். இது உலக மரபுடைமை தலமாகப் பெயரிடப்பட்டுள்ள இரண்டு முக்கி பஹாய் சொத்துகளில் ஒன்றாகும்.

எவ்வகையில் மதிப்பிட்டாலும், இவ்விடங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இருக்கின்றன. ஹைஃபா நகரின் வடக்கில் கிராமப்புறத்தில் உள்ள பஹாவுல்லா அவர்களின் நினைவாலயம், மற்றும் ஹாஃபா நகரின் மையத்திலேயே உள்ள கார்மல் மலையின் சரிவில் கட்டப்பட்டுள்ள, பொண்நிற கோபுரத்தைக் கொண்ட கட்டடமான பாப் அவர்களின் நினைவாலயம் இரண்டையும் சுற்றிலும் ஸ்தம்பிக்க வைக்கும் அழகுடைய பூந்தோட்டங்கள் உள்ளன.

அந்த இடங்களின் வெளி அழது என்பது ஓர் அடையாளக்குறியே ஆகும் மற்றும் அவை அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள கடவுளின் அவதாரப்புருஷர்ளுக்கான அன்பின் வெளிப்பாடும் மனிதகுலத்தின் வருங்காலத்திற்கான தீப ஒளியும் ஆகும்.

மிச்சிகன், ஐக்கிய அமெரிக்காவிலிருந்து புனிதப்பயணியாக வந்திருக்கும் கேரி மார்க்ஸ், “வார்த்தைகளில் கூறுவது கடினம்,” என்கிறார். “சில விஷயங்களை நாம் பௌதீக ரீதியில் விவரிக்கலாம், ஆனால் இது அதைப் பற்றிய விஷயம் அல்ல. புனிதப்பயணம் என்பது மனிதகுலத்தின் வைகறை வரை பின்னோக்கிச் செல்லும் ஓர் அனுபவமாகும். அது ஆன்மீக மெய்ம்மையோடு அணுக்கம் பெறவும் ஒருவர் தமது ஆன்மாவோடு தொடர்புகொள்ளவும் துடிக்கும் ஒரு பேராவலாகும்.

அவ்விரு நினைவாலயங்களும் பஹாய்களுக்கென பிரத்தியேக உள் அர்த்தம் கொண்டிருந்தாலும், அவற்றின் ஆன்மீக இயல்பு மற்றவர்களையும் கவர்கின்றது.

பஹாய்கள் அல்லாதவர்கள் அங்கு வந்து அவ்விடம் வானந்திலிருந்து பூமியில் வீழ்ந்த சுவர்கத்தின் ஒரு பகுதியென கூறுவர் என பஹாய் புனித இடங்களுக்கான புனிதப்பயணிகள் வழிகாட்டி யாக கடந்த 10 ஆண்டுகளாக சேவை செய்து வந்துள்ள தாரானி ரஃபாட்டி கூறுகிறார்.

ஒருவர் இஸ்லாமியர், யூதர், கிருத்துவர்அல்லது பௌத்தர் என்ற போதிலும் அவரவர் புனித நூல்களில் சுவர்க்கத்தின் வர்ணனையுண்டு. அங்கு நிலவும் அமைதி, அழகு ஆகியவற்றைக் குறிப்பிட்டு “அது இதுதான்,” என்கிறார் அவர். “நீங்கள் இங்கு வந்து உங்கள் தேவரோடு அணுக்க உணர்வு பெறுகிறீர்கள். இதற்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை, இதை எவருமே அனுபவிக்கலாம்.

சுற்றுப்பயணிகள், வருகையாளர்கள், மற்றும் புனிதப்பயணிகள்

கடந்த வருடம் சுமார் 5 லட்சம் மக்கள் நினைவாலயங்கள் சார்ந்த இடங்களுக்கு வருகை தந்தனர். இவர்களுள் பல சுற்றுப்பயணிகள் ஹைஃபா நகரையும் ஹைஃபா வலைகுடாவையும், அதற்கும் அப்பால் மத்திய தரைக் கடைலையும் கார்மல் மலையின் மீதிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் பாப் அவர்களின் நினைவாலயத்தை அருகில் இருந்து காணும் ஆவலில் வருகை தந்தவர்கள் ஆவர்.

இவர்களுள் 80,000 பேர்கள் பாப் அவர்களின் நினைவாலயத்தினுள் பிரவேசித்தும் அப்படி நுழைவதற்கு முன்பாக அவர்கள் தங்கள் காலனிகளைக் கழற்றிவிட்டு பாப் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் அறைக்கு அடுத்த அறைக்குள் அமைதியாக நுழைந்தனர். சிலர் அங்கு என்னதான் இருக்கின்றது எனப் பார்ப்பதற்கும் மற்றவர்கள் அங்கு சற்று தாமதித்து அங்கு சுவர்களை அலங்கரித்துக் கொண்டிருக்கும் பஹாவுல்லா அவர்களின் பிரார்த்தனைகளை வாசிக்கவும், அல்லது தியானத்திலும் தங்கள் சொந்த பிரார்த்தனைகளில் மூழ்கவும் செய்தனர். சிலர் வெளிப்படையாக உணர்ச்சிவசப்படவும் செய்தனர்.

“கத்தோலிக்கக் குழு ஒன்று நினைவாலயத்தினுள் நுழைந்ததும் மண்டியிட்டனர்,” என வழிகாட்டி ஒருவர் நினைவுகூர்ந்தார்.

பஹாய் புனிதப்பயணிகள் இரு நினைவாலயங்களையும் உள்ளடக்கிய ஒரு விசேஷ 9 நாள் நிகழ்ச்சியில் பங்குபெறுவர். அங்கு வரும் வெவ்வேறு மக்கள் வெவ்வேறான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர் என வழிகாட்டிகள் தெரிவித்தனர்.

கடந்த 5 ஆண்டுகளாக பயணிகளின் வழிகாட்டியாகச் சேவை புரிந்து வரும் மார்சியா லேம்ப்பில், “இங்கு எத்தனை வகை மக்கள் வருகின்றனரோ அத்தனை வகை உணர்வுகளையும் காணலாம்,” என்கிறார்.

சிலர் இங்கு வந்தவுடன் உடனடியாக நினைவாலயத்தினுள் செல்ல முடிவதில்லை. “அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் அல்லர் எனும் உணர்வே அதற்குக் காரணம்,” என அவர் விளக்கினார். மற்றவர்களுக்கு அந்த நினைவாலயம் காந்தத்தைப் போன்று அவர்களை ஈர்க்கின்றது.

“சிலர் மணிக்கணக்கில் நினைவாலயத்தினுள் உட்கார்ந்திருப்பார்கள். சிலர் சில நிமிடங்களே இருப்பார்கள். எவ்வளவு நேரம் என்பது முக்கியமல்ல, அவரவர் தேவைக்கு ஏற்ப அங்கே இருப்பார்கள்.

பஹாவுல்லாவின் நினைவாலயம்

பஹாவுல்லா அவர்களின் நினைவாலயம் பஹாய்களுக்கு உலகிலேயே அதி புனிதமான இடமாகும் — இது இருக்கும் திசையை நோக்கித்தான் அவர்கள் அன்றாடமும் பிரார்த்தனைக்காக திரும்புகிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்துப் புனிதப்பயணியாக வந்திருந்த பாஃர்சின் ரசூலி-செய்சான், “உட்புறம் அற்புதம் மிக்கதாய் இருக்கின்றது,” என்றார். உள்ளே சென்றால், அங்கு ஒரு சிறு தோட்டம் உள்ளது, அங்கு பூக்களும் இரு மரங்களும் உள்ளன. எல்லாம் கூரையிலிருந்து வரும் வெளிச்சத்தின் கீழ் உள்ளன. இதனுள் பல அறைகள் உள்ளன, அதில் ஒன்று பஹாவுல்லா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள அறை. அதனுள் செல்லமுடியாது, ஆனால் அதன் வாசல்படியில் நாம் நெற்றியால் தொட்டு பிரார்திக்கலாம்.”

திருமதி ரஃபாட்டி, “நாம் இங்கு வஸ்துவையோ ஒரு சுவற்றையோ வணங்கவில்லை — இந்த இடம் நமது அன்பரோடு தொடர்பு கொண்டுள்ள இடமாகும். நாம் இதனுள் உள்ள பூக்களை பூஜிக்கவில்லை. இங்கு நாம் நமது இதயத்தில் உள்ளவற்றை இறக்கி வைத்திட செல்கின்றோம்.”

இந்த நினைவாலயத்தின் மற்றொரு விசேஷம் யாதெனில் அது பஹாவுல்லா தமது வாழ்வின் இறுதிப்பகுதியைக் கழித்த வீட்டிற்கு பக்கத்தில் உள்ளதுவே. பயணிகள் அங்கு சென்று அவர் வாழ்ந்த அறைக்குள் செல்லலாம். அந்த அறையில்தான் அவர் 1892ல் விண்ணேற்றமடைந்தார். இப்போது அந்த அறை அவரது வாழ்நாளில் எப்படியிருந்ததோ அதே போன்று இன்று மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய சில பொருட்களையும் அந்த அறையில் காணலாம்.

தமது தாய்நாடான இரான் நாட்டிலிருந்து அவர் நாடுகடத்தப்பட்டார். பிறகு அரசாங்கம் பஹவுல்லாவின் பல வருடகால ஆக்கோ நகர சிறைவாசம் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு பாஹ்ஜி எனப்படும் இந்த இடத்தில் பஹாவுல்ல தமது இறுதி வாழ்நாட்களைக் கழித்தார்.

ஹைஃபா நகரின் பொன்நிற குவிமாடம்.

பஹாவுல்லா அவர்கள் விண்ணேற்றம் அடைவதற்கு முன்பாகப் பல முறை ஹைஃபா சென்று வந்துள்ளார். அங்கு கார்மல் மலையின் மீது பாப் அவர்களின் நினைவாலயத்தை எழுப்புவதற்கு வெளிப்படையான கட்டளைகளை பிறப்பித்தார்.

1844ல் இரான் நாட்டில் தாம் கடவுளின் அவதாரப்புருஷர் எனவும், தாம் தமக்குப் பின் வரவிருக்கும் தம்மைவிட அதி உயர்ந்த மற்றொரு அவதாரப்புருஷரான, பஹவுல்லா அவர்களைப் பற்றி அறிவிப்பதே தமது நோக்கம் என பாப் அவர்கள் அறிவித்தார். இவர் 1850ல் இரான் நாட்டின் தப்ரிஸ் என்படும் ஊரின் பொது சதுக்கத்தில் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அவருடைய விசுவாசிகள் அவருடைய திருவுடலை, தகுந்த முறையில் அடக்கம் செய்யக்கூடிய வரை பல வருடகாலம் ஒளித்து வைத்திருந்தனர்.

சுமார் அரை நூற்றாண்டுக்குப் பிறகு அவரது உடல் ஹைஃபா நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு, பைபிளில் “கடவுளின் மலை” என வர்ணிக்கப்படும் கார்மல் மலைமீது இறுதியாக அடக்கம் செய்யப்பட்டது.

பாப் அவர்களின் நினைவாலயத்தை அலங்கரிக்கும் பொன் நிற குவிமாடம் 1953ல் கட்டிமுடிக்கப்பட்டது. அதோடு அதைச் சுற்றியிருந்த தோட்டங்களும் அகலமாக்கப்பட்டன. 2001ல், இங்கு நினைவாலயத்திற்கு மேலும் கீழும் பூந்தோட்ட படித்தள வரிசைகள் அமைக்கப்பட்டன. கார்மல் மலையின் சரிவில் இப்படிகள் கீழிருந்து மேல் வரை ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமாக நீண்டிருக்கின்றன.

புனிதப்பயனிகளின் அனுபவங்கள்

“இங்கு வருவதற்காக பஹாய்கள் திட்டமிட்டுப் பலவருடங்களாக பணம் சேமித்து ஹைஃபா நகருக்கும் ஆக்கோ நகருக்கும் வருகின்றனர்,” என்றார் திருமதி லேம்ப்பிள்

“தங்கள் சமய ஸ்தாபகர் நடக்கவும், கடவுளின் வார்த்தைகளை வெளிப்படுத்தவும், அவர்களுக்காகவும் உலக ஒற்றுமைக்காகவும் கொடுங்கோன்மைகளை அனுபவித்த அதே இடத்தில் விசுவாசிகள் பிரார்த்தனை செய்திட ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. மற்றும் அவர்கள் பெரும்பாலும் தங்களின் சமயத்தின் முப்பெரும் திருத்தகைகளான பாப் அவர்கள், பஹாவுல்லா அவர்கள் மற்றும் அப்து’ல்-பஹா அவர்களின் திருவுடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் பிரார்த்தனை செய்திட வருகின்றனர்.” என அவர் மேலும் கூறினார்.

ஐக்கிய அமெரிக்காவின் வட கேரொலினா நகரில் வாழும் ரோஜர் மற்றும் கேத்தி ஹார்மிக் தங்களின் முதல் புனிதப்பயணத்தை 2008ம் வருடம் ஜூன் மாதம் மேற்கொண்டனர்.

“நாங்கள் 30 வருடங்களுக்கும் அதிகமாக தம்பதிகளாக இருக்கின்றோம். அப்போதிருந்தே வரவேண்டும் என விரும்பியதுண்டு. நினைவாலயங்களுக்கு வருவது ஆன்மீக வாழ்க்கைப்பயணத்தின் உச்சக்கட்டமாகும். புனிதவாசற்படியில் நமது நெற்றியால் தொட்டு வணங்குவதற்கு வேறு எதுவும் ஈடாகுமா?” என திருமதி ஹார்மிக் கேட்டார்.

“புனிதப்பயணம் பஹாய்கள் தங்கள் சமயநம்பிக்கையை நடைமுறையில் காண உதவுகின்றது,” என திரு ஹார்மிக் கூறினார். பஹாய் சமயத்தின் முக்கிய கோட்பாடு ஒரே கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் உலக ஒற்றுமையை உண்டாக்குவதாகும், மற்றும் இங்கு வரும் விசுவாசிகள் உலகம் முழுவதுமிருந்தும் வரும் மற்ற பஹாய்களை இப்புனித பூமியில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

“மனிதகுலத்தின் ஒருமைத்தன்மையை நேரில் அனுபவிப்பது பெரும் களிப்பூட்டுவதாக இருக்கின்றது. நான் இதுவரை செய்தது எதுவுமே அதற்கு ஈடாகாது,” என்றார் அவர்.

புனிதப்பயணிகள் உலகம் முழுவதும் நடைபெறும் பஹாய் சமய மேம்பாடு குறித்த சொற்பொழிவுகளிலும் நிகழ்வுகளிலும் பங்கெடுத்துக்கொள்கின்றனர். இது அவர்களின் சொந்த சமூகங்கள் இப்பெருங்கண்ணோட்டத்திற்குள் எவ்வாறு பொருந்துகின்றன என்பது குறித்த அகக்காட்சியை வழங்கிட உதவுகின்றது என்றார் திருமதி லேம்ப்பிள்.

இருந்தபோதும், புனிதப்பயனத்தின் முக்கிய நோக்கம் நினைவாலயங்களி்ல் பிரார்த்தனை மற்றும் தியானம் செய்வதுமே ஆகும், மற்றும் அது எப்போதுமே ஒரு விசேஷ அனுபவமாகவே இருக்கும்.

“இந்த இடங்களில் ஒரு விசேஷ ஆன்மீகஆற்றல் சூழ்ந்துள்ளது. அது உணரக்கூடியது. மக்கள் இங்கு கடவுளின் அருகாமையை உணருகின்றனர்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/643/

ஐக்கிய அமெரிக்காவில் இன தப்பெண்ணம் குறித்த பொது அறிக்கை முக்கிய உரையாடலைத் தூண்டியுள்ளது


ஐக்கிய அமெரிக்காவில் இன தப்பெண்ணம் குறித்த பொது அறிக்கை முக்கிய உரையாடலைத் தூண்டியுள்ளது


8 அக்டோபர் 2021


சிக்காகோ – இன தப்பெண்ணம் மற்றும் அமைதியை நோக்கிய மேம்பாட்டுக்கு இன்றியமையாத ஆன்மீக கோட்பாடுகள் பற்றிய, சில நாள்களுக்கும் முன் வெளியிடப்பட்ட ஐக்கிய அமெரிக்க பஹாய்கள் தேசிய ஆன்மீக சபையின் பொது அறிக்கை ஒன்று நாடு முழுவதும் திறனாய்வு பிரதிபலிப்பைப் தூண்டிவிட்டுள்ளது.

இன தப்பெண்ணம் மற்றும் அமைதியை நோக்கிய மேம்பாட்டுக்கு இன்றியமையாத ஆன்மீக கோட்பாடுகள் பற்றிய, சில நாள்களுக்கும் முன் வெளியிடப்பட்ட ஐக்கிய அமெரிக்க பஹாய்கள் தேசிய ஆன்மீக சபையின் பொது அறிக்கை ஒன்று நாடு முழுவதும் திறனாய்வு பிரதிபலிப்பைப் தூண்டிவிட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும், சமீபமான துயரநிகழ்வுகளும் நீண்ட சரித்திரமும் ஒன்றிணைந்து கருப்பினவாத எதிர்ப்பையும் தப்பெண்ணத்தின் பிற வடிவங்களையும் பொது மக்கள் விழிப்புணர்வுக்குக் கொண்டுவந்துள்ளன.

அவ்வறிக்கையின் ஒரு பகுதி பின்வருமாறு: “ஒரு நியாயமான சமுதாயத்தை உருவாக்குதல் மானிடம் ஒன்றே எனும் அஸ்திவார உண்மையைக் கண்டுணர்வதுடன் ஆரம்பிக்கின்றது. ஆனால், இவ்வுண்மையை நமது இதயங்களில் நம்புவது மட்டும் போதாது. செயல்படுவதற்கும், நமது தனிநபர், சமுதாய, ஸ்தாபன வாழ்க்கைகளின் எல்லா அம்சங்களையும் நீதி எனும் காண்ணாடியின் மூலம் காண்பதற்குமான தார்மீக கட்டாயத்தை உருவாக்குகின்றது.  நாம் இதுவரை அடைந்திராதைவிட அதிக ஆழ்ந்த சமுதாய ஒழுங்கமைப்பை அது உட்குறிக்கின்றது. அதற்கு எல்லா இனத்தையும் பின்னணியையும் சேர்ந்த அமெரிக்கர்களின் பங்களிப்பு தேவைப்படுகின்றது, ஏனெனில் அத்தகைய உள்ளடக்கிய பங்கேற்பின் மூலமாக மட்டுமே புதிய தார்மீக மற்றும் சமுதாய திசைகாட்டிகள் வெளிப்பட இயலும்.”

ஐக்கிய அமெரிக்காவில் அடிமைத்தனத்தின் முடிவை நினைவுகூர்வதற்கு பாரம்பரியமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தேதியான 19 ஜூன் அன்று இவ்வறிக்கை வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில் சிக்காகோ டிரிப்யூனில் பிரசுரிக்கப்பட்ட இவ்வறிக்கை, தொடர்ந்து ஒரு பரந்த நெடுக்கங் கொண்ட மக்களைச் சென்றடையும் வகையில் பன்மடங்கான வேறு பல பிரசுரங்களிலும் பிரசுரிக்கப்பட்டது.

நாடு முழுவதுமுள்ள இளைஞர்கள், சக குடிமக்களிடையே அதிக இணக்கம் மற்றும் புரிந்துணர்வுக்குப் பங்களிக்கும் தங்களின் முயற்சிகளில் இவ்வறிக்கை எவ்வாறு உதவிட முடியும் என்பதை ஆராய்ந்த வருகின்றனர். சமீபமான இன ஒற்றுமை குறித்த தேசிய கருத்தரங்கு ஒன்றின் பங்கேற்பாளர்கள், தங்களின் கலந்துரையாடல்களுக்கு ஒளியூட்டும் யோசனைகளை இந்த அறிக்கையிலிருந்து பெற்றனர்.

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன்னராக எடுக்கப்பட்ட படம். ஐக்கிய அமெரிக்க மக்களுக்கு பஹாய் தேசிய ஆன்மீக சபையினால் எழுதப்பட்ட ஓர் அறிக்கை, பல தளங்களில் பஹாய் சமூகம் ஈடுபட்டு வந்த இன தப்பெண்ணத்தை அகற்றுவது மீதான உரையாடல்களைத் தூண்டியுள்ளது.  

தேசிய சபையினால் வெளியிடப்பட்ட இந்த செய்தி ஆர்வநம்பிக்கையூட்டுகின்றது; இனவாதத்தின் மூல காரணங்களின் மீது கவனம் செலுத்துவதற்குத் தேவைப்படுவன குறித்து உரைக்கின்றது: மனித குடும்பம் ஒன்றே எனும் அடிப்படை உண்மையினை கண்டுணர்வதால் வழிகாட்டப்படும் தொடர்ச்சியான மற்றும் உன்னிப்பான முயற்சி.

இந்தக் கருத்து ஒரு தேசிய பஹாய் சமூகத்தின் அனுபவத்தால் ஒளியூட்டப்படுகிறது; இதில் 20’ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்த மக்களும், இறுதியில் அனைத்து பின்னணியினைச் சார்ந்தோரும் இனரீதியான தப்பெண்ணத்தை ஒழிப்பதற்கு ஒன்றுசேர்ந்து முயன்று வந்துள்ளனர்.

நாட்டின் பேது விவகாரங்களுக்கான பஹாய் அலுவலகத்தின் மே லேம்ப்பிள், இந்த செய்தி மக்கள் எழுப்பி வரும் ஆழ்ந்த கேள்விகளின் மீது கவனம் செலுத்துகிறது என்கிறார். “ஒரு சமுதாயம் எனும் முறையில் நாம் யார் என அமெரிக்கர்கள் வினைவுகின்றனர். நமது நம்பிக்கை என்ன, மற்றும் நாம் எதை சகித்துக்கொள்வோம்? வாஸ்தவமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முயலும் முன்பாக எவ்வளவு காலத்திற்கு துன்பத்தின் தொடர்ச்சியை அனுமதிக்கப் போகின்றோம்.”

அலுவலகத்தின் P. J. ஆண்ட்ரூஸ் கூறுகிறார்: “நாம் ஆழ்ந்துள்ள ‘பிற’வாத கலாச்சாரத்தில்,  பல்வகைத்தன்மை பலவீனத்தின் மூலாதாரமாக காணப்படக்கூடும். ஆனால், உண்மையில் பல்வகைமை செல்வத்திற்கான மூலாதாரமாகும். பல்வகைமையில் ஒற்றுமையானது ஒரு சமுதாயம் எனும் முறையில் நம்மை ஆன்மீக ரீதியில் வலுப்படுத்துகின்றது.”

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன்பாக எடுக்கப்பட்ட படம். ஐக்கிய அமெரிக்காவின் பொது விவகாரங்களின் பஹாய் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சமயம் மற்றும் இனம் மீதான உரையாடலின் பங்கேற்பாளர்கள்

தற்போதைய சூழ்நிலைகள் குறித்து பேசிய, பொது விவகாரங்கள் அலுவலகத்தின் நிர்வாகியான அந்தோனி வான்ஸ்: சில வாரங்களில் மட்டுமே, இன நீதிக்கான கோரிக்கைகள் வலுவாக புதுப்பிக்கப்பட்டது மட்டுமின்றி, மாறாக ஐக்கிய அமெரிக்க மக்களிடையே மிகப் பரந்த ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். எங்கும் நிகழ்ச்சிகளை பதிவு செய்வதற்குறிய திறன்பேசிகளுடன், பல தலைமுறைகளாக கருப்பின சமூகம் பேசி வந்த அநீதிகள் இப்பொழுது மறுக்கவியலாத பொருண்மைகள் ஆகிவிட்டன. செயல்படாமையை பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு, இந்த மெய்நிலைமை குறித்து சமுதாயத்தின் பெரும் பகுதியினர் விழிப்புணர்வை அடைந்துள்ளனர்.  செயல்படுவதற்கு இந்த வாய்ப்பைப் பற்றிக்கொள்வதில், நடவடிக்கைகளை விரிவாக்குதல், கற்றல், முறைமையுடன் சிந்தித்தல், மற்றும் மிக முக்கியமாக, நீதி மற்றும் ஐக்கியத்தை நோக்கி நீடித்த மேம்பாட்டை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பஹாய்கள் முயல்கின்றனர்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1436/

தேசிய ஆன்மீக சபையின் தேர்வோடு வியட்நாமிய பஹாய்கள் ஒரு திருப்புமுனையை அடைந்துவிட்டனர்.


தேசிய ஆன்மீக சபையின் தேர்வோடு வியட்நாமிய பஹாய்கள் ஒரு திருப்புமுனையை அடைந்துவிட்டனர்.


8 அக்டோபர் 2021


தேசிய ஆன்மீக சபையின் தேர்வோடு வியட்நாமிய பஹாய்கள் ஒரு திருப்புமுனையை அடைந்துவிட்டனர்.

ஹோ சி மின் நகர், வியட்நாம்

பல ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக அந்த நாட்டில் ஒரு தேசிய பஹாய் நிர்வாக அமைப்பை தேர்ந்தெடுத்ததன் வாயிலாக வியட்நாமிய பஹாய்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தினுள் அடியெடுத்து வைத்துள்ளனர்.

தேசிய ஆன்மீக சபையின் தேர்தலோடு வியட்நாமிய பஹாய்கள் ஒரு திருப்புமுனையை அடந்துவிட்டனர். உலக நீதிமன்றத்தின் ஒரு பிரதிநிதியான திருமதி ஜோன் லிங்கன், ஹோ சீ மின் நகர அரசாங்க இருக்கையில் மக்கள் செயற்குழுவின் துணைத் தலைவருக்கு மரியாதை வருகையளித்தார்.

உலகின் அனைத்து நாடுகளிலும் பஹாய் சமயம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் பெரும்பாலான நாடுகளில் வருடந்தோரும் பஹாய்கள் ஒரு தேசிய ஆன்மீகச் சபையைத் தேர்வு செய்கின்றனர். இச் சபைகள் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டும் பஹாய் சமூகங்களை இவை வழிநடத்தவும் செய்கின்றன.

வியட்நாமைப் பொருத்தவரையில், வட மற்றும் தென் வியட்நாம்கள் ஒன்றினைந்த பிறகு முதன் முறையாக மார்ச் 20 – 21ல் இப் பேராளர் மாநாடும் தேர்தலும் நடைபெறுகின்றன.

“33 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக அரசாங்கம் இத்தகைய ஒன்றுகூடல் நடைபெறுவதற்கு அனுமதி வழங்கியிருப்பதனானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்,” என பஹாய் சமயத்தின் அனைத்துலக நிர்வாக அமைப்பான, உலக நீதி மன்றத்தின் விசேஷப் பிரதிநிதியான ஜோன் லிங்கன் கூறினார். திருமதி லிங்கன் இந்நிகழ்ச்சிக்காக ஹைப்ஃபாவில் உள்ள பஹாய் உலக மையத்திலிருந்து ஹோ சி மின் நகருக்குப் பயணம் செய்தார்.

“அத் தேர்தல் நிகழ்ச்சி மிகவும் மனதைத் தொடும் ஒரு நிகழ்ச்சியாகும் என திருமதி ஜோன் வருணித்தார். பல வருடங்களாகப் பல பஹாய்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க இயலாமல் இருந்தனர் என எனக்கு அறிவிக்கப்பட்டது,” என அவர் மேலும் கூறினார்.

வியட்நாமின் நிர்வாக அமைப்புமுறை சாசனத்தை உருவாக்குதல் உட்பட இத்தேர்தலுக்கான ஆயத்தங்கள், அரசாங்கத்துடனான கலந்தாலோசனையின் வாயிலாகவே செயல்படுத்தப்பட்டன. இதற்கு வியட்நாம் அரசாங்கம் தனது சார்பிற்கு மூன்று பிரதிநிதிகளை அனுப்பிவைத்திருந்தது.

தேர்தல் ஹோ சி மின் நகர் பஹாய் மையத்தில் மாநாட்டின் முதல் நாளன்றே நடைபெற்றது. இரண்டாவது நாளன்று கலந்தாலோசனை அரங்கம் முதல் நாளைவிட பெரிதும் அகன்ற மண்டபத்தில் நடந்தது. இந்த மண்டபம் அரசாங்க மற்றும் காவல்துறையினால் அனுப்பிவைக்கப்பட்ட பூக்செண்டுகளோடு கூடிய வாழ்த்துச்செய்திகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மத்திய, மாநில மற்றும் வட்டாரங்கள் சார்ந்த அரசாங்க அதிகாரிகள் அந்நிகழ்ச்சியில் பெங்கெடுத்துக்கொண்டனர். இதன்போது பஹாய்கள் புதிய அமைப்புச்சாசனத்திற்கு ஒப்புதல் அளித்து ஏற்றுக்கொண்டனர்.

வியட்நாமில் பஹாய் சமயத்தின் அதிகாரபூர்வ அங்கீகாரம் குறித்த அடுத்தக் கட்ட நடவடிக்கையாக அரசாங்கத்திற்கு மேற்கொண்டு ஆவணங்கள் வழங்கப்படும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/617/

மனித கடமைகளும் உரிமைகளும் பற்றிய பஹாய் பிரகடனம்


மனித கடமைகளும் உரிமைகளும் பற்றிய பஹாய் பிரகடனம்

(மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் கமிஷனின் முதல் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

லேக் சக்சஸ், நியு யார்க், ஐக்கிய அமெரிக்கா பிப்ரவரி 1947

I

இறைவன், மனுக்குலத்தின்பால் ஆண் பெண், இனம், சமயம் அல்லது தேச பாகுபாடின்றி நற்பண்புகள், நன்னெறிகள், ஆற்றல்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். மனித உரிமைகளின் தோற்றுவாயான இத் தெய்வீகக் கொடைகளின் சாத்தியங்களை நிறைவேற்றுவதே மனிதத் தோற்றத்தின் நோக்கமாகும்.

சமூகத்தின் உறுப்பினர்கள், மனிதவாழ்வு மற்றும் சுயநினைவு எனும் பரிசுகள் கடவுள், சமூகம் மற்றும் தனக்குத்தானே நிறைவேற்ற வேண்டிய கடமைகளை வலியுறுத்துகின்றன என்பதை உணரவேண்டும். அவ்வாறு உணரும்போது சமூகநிலைகளின் ரீதியில் மனித உரிமைகள் ஸ்தாபிக்கப்படலாம். சமூகத்தின் உறுப்பினர்கள் தங்கள் வாழ்வு, ஒன்றான, பிரபஞ்சத்தின் அதே தோற்றுவாயிடமிருந்துதான் பிறந்துள்ளன எனும் உண்மையை பரஸ்பரம் புரிந்துகொள்ளவேண்டும். அவ்வாறான புரிந்துகொள்ளல் ஒரு பொது சமுதாய அமைப்பினுள் முறையான தொடர்புகளை பேணிட வழிவகுக்கின்றது.

இந்த சமூதாய அமைப்பு அடிப்படை மனித உரிமைகளை உருவாக்குவதில்லை. உறுப்பினர்களின் ஒழுக்கமுறையான சாதனைகளை மனிதர்களுக்கிடையிலான தொடர்புகள் பிரதிநிதிக்கின்றன. இத்தொடர்புகளை பாதுகாப்பது மற்றும் உறுப்பினர்களின் பரஸ்பர கடமையான ஆன்மீக ஐக்கியத்தை ஆதரிக்கவும் பாதுகாக்கவும் சமுதாயத்தின் சார்பில் அறங்காவலாக செயல்படுவதே இச்சமுதாய அமைப்பின் பணித்துறையாகும்.

எந்த உருவிலான சமுதாய அமைப்பும் தங்கள் தார்மீக கடமைகளை புறக்கணித்த, மனிதனை மிருகங்களிடமிருந்து பிரித்துக்காட்டும் தெய்வீக இயற்திறனை கைவிட்ட மனிதர்களுக்கான இன்றியமையாத மனித உரிமைகளை நிலைப்படுத்தும் ஆற்றலை பெற்றிருக்கவில்லை. ஒழுக்கமதிப்பும் செல்வாக்கும் இல்லாத அரசியல் பொருளாதார நிலைகளுக்கான பொது வரையறைகள், இன்றியமையாத மனித உரிமைகளுக்கு சமமானவை அல்ல. மாறாக, அவை கட்சிசார்ந்த கொள்கையை வெளிப்படுத்துபவையாகும். ஒழுங்குமுறையான சமுதாயம் ஒழுக்கம் நிறைந்த மனிதர்களால் மட்டுமே பேணப்பட முடியும்.

II

மனிதனின் தெய்வீக இயற்திறன்கள் தனிமனிதனை மலர்ச்சியுறும் மற்றும் முதிர்வடையும் ஒரு மனிதவர்க்கத்தோடு பிணைக்கின்றன. மனித விருப்ப ஆற்றலுக்கு அப்பாற்பட்ட நிலையில் செயல்படும், படிப்படியான மேம்பாடு சார்ந்த கோட்பாடு ஒன்றுக்கு, மனித இனம் கட்டுப்பட்டுள்ளது. ஒரு காலகட்டம் அதற்கு முற்பட்ட காலகட்டத்தின் நிலைகளை மீண்டும் வெளிப்படுத்துவதில்லை.

மனிதப்பண்பாட்டில் காணப்படும் பரிணாம வளர்ச்சி மனுக்குலத்தின் வழி செயல்படும் ஆன்மீக பரிணாம வளர்ச்சியின் பின்விளைவாகும். புதிய பண்புக்கூறுகள் வெளிப்படும்போது மேலும் பரவலான வகையில், சமூக கட்டமைப்பில் மாறுபாடுகளைக் கோரும் பொது உறவுமுறைகள் ஸ்தாபிக்கப்படக் கூடும்.

பல்வகைப்பட்ட இனங்களையும் மக்களையும் ஐக்கியப்படுத்துவதற்காக நவீன தேசியநாடுகள் தோன்றின. முன்பு தனிப்பட்டும், சுதந்திரமாகவும், பகைமை பாராட்டியும் வந்த சமூகங்கள் அனுசரிக்கும் அல்லது அவர்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள ஒரு சமூக உடன்பாடாக தேசியநாடுகள் உள்ளன. வரலாற்று ரீதியாக தேசங்களின் தோற்றம் மனித மேம்பாட்டில் ஒரு மாபெறும் நெறிமுறை சார்ந்த வெற்றியாகும்; உறுதியானதும் முக்கியமானதுமான ஒரு கட்டமும் ஆகும். மக்கள் கூட்டங்களின் நிலைகளை அது உயர்த்தியுள்ளது, அரசியல் சட்டங்களின் வாயிலாக இனக்கூட்டங்களின் தன்னிச்சையான அதிகாரத்தை மாற்றீடு செய்துள்ளது, கல்வி, அறிவு ஆகியவற்றுக்கான வாய்ப்புக்களை விஸ்தரித்துள்ளது, சமயப்பிழவு சார்ந்த சண்டைகளின் விளைவுகளை தணியச்செய்துள்ளது, மற்றும் சராசரி மனிதனின் சமூகவாழ்வு சார்ந்த உலகை விஸ்தாரமாக்கியுள்ளது. இயல் விஞ்ஞானம் மேம்பாடு காணக்கூடியதும், கண்டுபிடிப்புகள் செயல்படுத்தப்படக்கூடியதுமான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது, மற்றும் தொழில்மயத்தினால் மனிதன் இயற்கையையே வெல்லும் ஆற்றலும் பெற்றுள்ளான்.

தேச அமைப்பினால் வாய்த்த புதிய ஆற்றல்களும் வள ஆதாரங்களும் தேசிய எல்லைகளுக்குள் அடங்கியிருக்கவில்லை. மாறாக, சமூக உறவுகளில் எந்த தேசமுமே கட்டுப்படுத்தமுடியாத அனைத்துலக நிலையிலான “மூலகாரணம் மற்றும் பின்விளைவு” சூழ்நிலையை அவை உருவாக்கியுள்ளன. தேசம், சுதந்திரமாக, தானே வழிநடத்தும் ஒரு சமூக அமைப்பாக அடையக்கூடிய தனது மேம்பாட்டின் எல்லையை நெருங்கிவிட்டது. ஆன்மீக பரிணாம வளர்ச்சி குறித்த ஒரு புதிய சர்வலோக இயக்கத்தின் அலைகளில் சவாரி செய்யும் உலக ரீதியான அறிவியல், பொருளாதாரம் மற்றும் உணர்வுகள், ஒரு புதிய உலக அமைப்பிற்கான அஸ்திவாரத்தை இடுகின்றன. தேசியநாடே இறுதி முடிவு என எண்ணப்பட்டு வந்துள்ளது. ஆனால், மனுக்குல ஒற்றுமையை மறுப்பதாக அத்தேச உணர்வு அமைந்துவிட்டது. இந்த மறுப்பே தேச மக்களின் உண்மையான தேவைகளுக்கு எதிராக இயங்கும் பொது அமைதியின்மையின் தோற்றுவாயாக இருக்கின்றது. மனிதனின் தெய்வீக கொடைகளின் ஆழத்தில் இருந்து இந்த ஒற்றுமையின் வலியுறுத்தலின்பாலான மறுமொழி எழுகின்றது. இந்த உணர்வே இக்காலத்திற்கு அதன் மைய உந்துசக்தியை வழங்குகின்றது மற்றும் திசைகாட்டியாகவும் இருக்கின்றது. முழுமையான மனித உறவுகளின் அடிப்படையில் ஒரு புதிய முறையை ஏற்படுத்திட, சமுதாயம் தன்மைமாற்றம் கண்டுவருகிறது

III

மாறுபட்ட மக்கள்களினால் வேறுபட்ட சமூக நிலைமைகளில் தொடக்கநிலை மனித உரிமை கருத்துப்படிவங்கள் மேற்கொள்ளப்பட்டன: குடியுரிமை, அரசகுலத்துக்கு மாறாக மக்களே தேசம் எனும் நிலை, சட்டமுறை ஒன்றை பெறும் உரிமை, மரபு சம்பிரதாயம் ஆகியவற்றின் இடத்தில் எழுத்து வடிவமான அரசியல் சட்டம் இடம்பெற்றது, மக்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு குறித்த உரிமை, போரிடும் குழுக்களின் மீது அமைதியை வலியுறுத்துவது; பண்ணைகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டோர் தொழில் மற்றும் இருப்பிடத்தை தேர்வு செய்யும் உரிமை. நிலையான சமுதாயத்தை அமைப்பதற்கான முடிவற்ற போராட்டத்தில் ஒர் இனம் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க நெறிமுறைசார்ந்த வெற்றிகளை உரிமை குறித்த வரலாறு பதிவு செய்திருக்கும்.

ஓர் உரிமை என்பது ஒரு சுதந்திர அரசினால் நிலைநிறுத்தப்படும் போது மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் பயன்விளைவு அளிக்கும். பாரம்பரியமாக நாம் பெற்ற உரிமைமுறை தேசியநாடே உண்மையான அதிகாரத்தை இழந்ததன் வாயிலாக அபாயத்திற்குள்ளாகியுள்ளது. கடந்த காலத்தின் தொடக்கநிலை உரிமைகளை மறுமதிப்பீடு செய்யவும், நமது காலமான இக்காலத்தோடு ஒத்துப்போகக்கூடிய இன்றியமையாத புதிய உரிமைகளை ஸ்தாபிப்பதற்கும், ஓர் உலகளாவிய அரசு தேவைப்படுகிறது. உரிமை என்பதின் உட்கருத்து மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. ஓர் உரிமை என்பது முற்காலத்தில் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பாக இருந்தது; ஆனால் இன்றோ உரிமை என்பது மனிதர்கள் சமூக அந்தஸ்தை பகிர்ந்துகொள்வதாக இருக்கின்றது. மனுக்குலம் முழுவதுமாக ஒரே நீதிக்கு அடிபனியும் போது மனித அனுபவத்தில் முதன்முறையாக நெறிமுறையும் சமூக சட்டங்களும் ஒன்றுகலந்து ஐக்கியப்டும் வாய்ப்பேற்பட்டுள்ளது. சர்வலோக ரீதியான அனைத்துமே தெய்வீக உண்மைகளாகும்; வரம்புக்குட்பட்ட ஒருதலைச்சார்புடைய அனைத்துமே மனித கருத்துக்களாகும்.

நெறிமுறையான ஒரு சமுதாயத்தில் வாழ்வதற்கான கடமைப்பொறுப்பும் உரிமையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும், மற்றும், தொடர்ந்து வாழ்வதற்கான விருப்ப ஆற்றலுக்கு அது சோதனையாகவும் உள்ளது. தேசங்களை தனது கருவிகளாக பயன்படு்த்தும் தற்கால போராட்டம் மக்கள் தொடர்பான ஒரு போரும் அல்ல அல்லது அரசபரம்பரைகள் சார்ந்ததும் அல்ல: அது கோட்பாடுகள் சார்ந்த போராட்டமாகும். கோட்பாடுகள் சார்ந்த போராட்டம் இருவகையான மனிதர்களிடையே நடக்கும் போராட்டமென தெளிவாக வெளிப்படுகின்றது; ஒரு சாரார் பொதுவான மனுக்குலமாகவும் பொதுவான சமுதாய அமைப்பாகவும் கண்டிப்பாக ஒற்றுமைப்படப் போகின்றவர்கள்; மற்றவர், பிரிந்தும், வேறுபட்டும், சுயாட்சியிலும் பிரிந்தே இருக்கப்போகின்றவர்கள். தேசியநாடு, தனிமனிதர்களின் சுயநினைவுடனான மனப்பான்மையை அடிப்படையாக உள்ளடக்கிய ஒரு போராட்டத்தில் இரண்டுபட்டும், பிரிவுபட்டும் கிடக்கின்றது. ஆனால், தேசியநாடு எந்த அளவுக்கு ஒரு ஐக்கியப்பட்ட அமைப்பாக செயல்பட முடிகின்றதோ, அது அந்த அளவுக்கு தீர்மானம் செய்வதில் பங்கேற்பதை தவிர்க்க இயலால் உள்ளது. எந்த மனிதனும் எந்த சமுதாய அமைப்பும் விதிக்கப்பட்டதிலிருந்து விலக்கு பெற முடியாது.

உள்ளூர் சுயாட்சியிலிருந்து உலக ஐக்கியத்திற்கான ஒரு பாலத்தை அமைப்பதே தேசியநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள உண்மையான குறியிலக்காகும். ஓர் உலக அரசை நிலைநிறுத்த செயலாற்றும் போது மட்டுமே அது தனது நெறிமுறை மரபுச்செல்வத்தையும் செய்கடமையையும் தக்க வைத்துக்கொள்ளமுடிகின்றது. ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட சமுதாயத்தில் முழுமையானதும் இறுதியானதுமான மனித உறவுகளின் புறவெளிப்பாட்டை பிரதிபலிக்கும் புதிய ஸ்தாபனங்களுக்கு ஆதரவு நல்கும் வலுமிக்கத் தூண்களாக கடமையாற்ற தேசம் மக்கள் ஆகிய இரண்டுமே அவசியமாகின்றது. ஐக்கியப்பட வேண்டும் என மக்களுக்கும் தேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள சரித்திரம் வாய்ந்த உரிமைக் கட்டளையின் நிறைவேற்றத்தை தாமதப்படுத்தும்போது, குழப்பத்தை தனது ஆயுதமாகவும் நிலைகுலைவை தனது நோக்கமாகவும் கொண்டுள்ள நிலைகவிழ்க்கும் சக்திகளுக்கு வாய்ப்பும் உற்சாகமும் நாம் வழங்குகின்றோம்.

IV

விரும்பத்தக்க ஒவ்வொரு மனித உரிமையையும் பட்டியலிடுவது இந்த அறிக்கையின் நோக்கமல்ல மாறாக, இன்றியமையாத உரிமைகளின் இயல்பை உறுதிசெய்யக்கக்கூடிய ஓர் அனுகுமுறைக்கான கருத்தை தெரிவிப்பதே அதன் நோக்கமாகும். இங்கு குறித்துக்காட்டியுள்ளவாறு, ஒரு நெறிமுறைசார்ந்த மற்றும் தலையாய அமைப்பு ஒன்றினால் சமுதாய அந்தஸ்து வழங்கப்படும் மனிதனின் தெய்வீக ஆற்றல்களின் புறவெளிப்பாடே ஒரு மனித உரிமை என்பதாகும். சமூகத்தின் உறுப்பினர்களால் மனித உறவுகள் குறித்த அவசியமான ஒரு சிறப்புப்பன்பாக வற்புறுத்தவும் தொடர்ந்து ஆதரவு நல்கப்படும் போது மட்டுமே ஓர் உரிமை சமூக அந்தஸ்து பெறுகிறது.

புது உலக யுகத்தை தனிச்சிறப்புப்படுத்தி காண்பிக்கும் இன்றியமையாத மனித உரிமைகளுள்: (1) தனிமனிதன்; (2) குடும்பம்; (3) இனம்; (4) தொழில் மற்றும் செல்வம்; (5) கல்வி; (6) வழிபாடு; (7) சமூக ஒழுங்குமுறை ஆகியன குறித்தவை உள்ளன.

மனித நிலையுடையவன் ஆன்மீகமானவனும் சமுதாயத்தின் ஒர் உறுப்பினனும் ஆவான். சமூகத்தின் எல்லா நிலைகளிலும் ஆதரிக்கப்படும் நெறிமுறைசார்ந்த மனித உறவுகளில் அவனது ஆன்மீக இயல்பு வெளிப்பாடு பெறுகிறது, மற்றும் தனக்குள், குடும்பத்திற்குள், இனத்திற்குள், அல்லது வகுப்பினருக்குள் பின்வாங்கும் மற்றும் தனிப்படுத்திக்கொள்ளும் பொழுதினில் அது வாடிவிடுகின்றது. தொடர்ந்து மேம்பாடு காணும் ஒரு சமுதாயத்தின் தேவைகளுக்காக சேவையாற்றுவதே தனிமனிதனின் கடமையாகும். தனிமனிதன், நடப்பலிருக்கும் நெறிமுறைகளுக்கு மாறான ஒரு சூழ்நிலைக்கு சமுதாயத்தினால் உட்படுத்தப்படும் போது, அல்லது, அவ்வித சூழ்நிலைக்கு தனியார் நிறுவனங்களின் உட்படுத்துதலுக்கு ஆளாகும் போது, சமூகம் தகர்வடையும் அபாயத்திற்கு உள்ளாகின்றது; ஏனெனில், நெறிமுறை நீதி என்பது ஸ்தாபனங்களிலும், பெரியதும் சிறியதுமான சமூகங்களிலும் பயன்பாடு உள்ளதாகும்.

சமநிலையான மனித உரிமைமுறை ஒன்று நிலைநிறுத்தப்பட வேண்டும், மற்றும் தனிநபர்கள் சமமான வாய்ப்புக்களும் பெறவேண்டும். சீர்நிலை இன்றி பல்வகையே ஓர் உயிர்ப்பொருளான சமுதாயத்தின் கோட்பாடாக உள்ளது. வாய்ப்பற்ற நிலை, அடக்கு முறை, இழிவு நிலை ஆகியவை மக்கள் கூட்டங்களை குடியுரிமை குறித்த கடமைகளை நிறைவேற்ற இயலாமல் செய்துள்ளன. இவ்வித மனிதர்கள் மற்றவர்களின் மனசாட்சியின் மீது வைக்கப்பட்ட நெறிமுறை பொறுப்பாகும். அறியாதார் கல்வியளிக்கப்படவும், முதிர்ச்சியடையாதார் பயிற்சியளிக்கப்படவும், நோயுற்றோர் குணப்படுத்தப்படவுமான பொறுப்பாகும் அது.

மனிதநிலையுடையவன் மனுக்குலத்தின் ஆன்மீகப்பொருளாவான், ஆனால் குடும்பம் என்பது சீரழிக்கமுடியாததும் தெய்வீகமாக படைக்கப்பட்டதுமான ஒரு சமுதாயப்பொருளாகும். உடல், உள்ளம், ஆவி ஆகியவற்றுக்கு சாதகமான சூழ்நிலைகளின் கீழ் தன்னை காப்பாற்றிக்கொள்ளும் குடும்பத்தின் உரிமையோடு தனிமனித வாழ்வுரிமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. முதிர்வடைந்த தனிமனிதன் அரசியல் தனிமம் எனும்போது, குடும்பம் பொருளாதார தனிமத்தை உள்ளடக்கியுள்ளது, மற்றும் குடும்ப வாழ்வு மற்றும் பொதுநலத்தின் அடிப்படையில் வருமானம் செயல்படுகிறது.

நவீன சமுதாயத்தில் வளர்ச்சிக்கு செயல்படும் ஒழுக்கமுறையான பரிணாமசக்திகளோடு புதியதும் அதிக ஆற்றல்மிக்கதுமான ஒரு தொடர்பை ஆண்பெண் சமத்துவம் குடும்பத்திற்கு வழங்குகிறது.

பல நாடுகளில் தேசியசமுதாயத்தின் உறுப்பினர்நிலை மேம்பாட்டின் பல்வேறு கட்டங்களில் உள்ள இன வகுப்புக்களை கலவையாக கொண்டுள்ளது. கடந்த காலங்களில் தனிப்பட்ட இன ஐக்கியத்திற்கும் சிறப்புப் பண்புகளுக்கும் சாதகமாக விளங்கிய சூழ்நிலைகள் வலுவிழந்து வருகின்றன. நிகழ்கால சமுதாயத்தின் உரிமைகளும் தேவைகளும் இனரீதியான உரிமைகளைவிட முக்கியத்துவம் மிகுந்தவை. தனிப்பட்ட உரிமைகள், இன சமத்துவத்திற்கான பரிமாற்றத்தின்போது மட்டுமே தியாகம் செய்யப்படலாம். இந்தப் பரிமாற்றம் ஒரு பல்லின சமுதாயம் பெற்றுள்ள உரிமைகளிலும் சலுகைகளிலும் பங்கேற்பதன் வாயிலாக பரிமாற்றப்படலாம்.

வணிகம், கைத்திறத்தொழில், கலை அல்லது வாழ்க்கைத்தொழில் ஆகியவற்றிற்காக தனிமனிதன் உழைப்பது வெறுமனே அவனுடைய வாழ்க்கை ஆதாரத்துக்காக மட்டுமல்ல, அவை அவனுடைய வாழ்க்கைக்கே ஜீவனாகும். இன்று, சேவை உணர்வில் ஆற்றப்படும் தொழில் பக்திசார்ந்த ஒரு செயலாக கணக்கிடப்படலாம். தொழில் செய்யவேண்டிய கடமை அடிப்படையில் நெறி சார்ந்த ஒரு கடமையாகும், செல்வம் படைத்ததினால் மட்டும் நிறைவேறும் ஒன்றல்ல. தொழில் செய்ய முடிந்தும் அவ்வாறு செய்ய மறுப்போருக்கு சமுதாயம் கடமைப்பட்டதல்ல.

வாழ்வாதாரம் உழைப்பின் வாயிலாக நிலைநிறுத்தப்படுகின்றது. மேலும், தொழில் முயல்வுகளில் கிடைக்கும் இலாபத்தில் தொழிலாருக்கும் பங்குரிமை உண்டு.

உபகரணங்கள் மற்றும் தளவாடங்களின் மீது செலுத்தப்படும் பல்வகைப்பட்ட முயல்வுகளின் ஒருங்கிணப்பில் செல்வம் பிறக்கின்றது. ஒரு செம்மையான பொருளாதாரம் பல்வகையான மனிதத்தொடர்புகளைக் கொண்ட அந்த முழு செயல்பாட்டையும் உள்ளடக்கியுள்ளது, மற்றும், உடைமையுரிமை, குறியிலக்கு, தொழில்நுட்ப அறிவு, கைத்திறன் அல்லது பயன்பாடு போன்ற எந்த ஒரு குழும அனுகூலத்தையும் குறியாக வைத்து அது அந்த செயல்பாட்டை மையப்படுத்துவதில்லை. செல்வம், ஒரு பகுதி தனிமனிதனின் உரிமை, வேறொரு பகுதி சமுதாயத்தின் உரிமை. அனைத்துலக போட்டி நிலைகளில், தனியார் மற்றும் பொது பொருள்வளங்களுக்கிடையே நியாயமான வேற்றுமைகள் காணப்படாத வரை கடுமையான நெருக்கடிநிலைகள் உருவாகவே செய்யும். உலகஸ்தாபனங்களின் உருவாக்கம், உலககண்ணோட்டத்தின் மேலாதிக்கம் ஆகியவற்றுக்காக உண்மைநீதியும் சமுதாய சித்தாந்தமும் காத்திருக்கின்றன.

போர் தொடுப்பதற்கான தேசிய உரிமை மற்றும் சக்தியை தள்ளுபடி செய்வது, பரஸ்பர பொருள்வளம் உறுதியான பொருளாதாரம் ஆகியவற்றை நோக்கி எடுத்துவைக்கப்படும் முதல் அடியை குறிக்கின்றது. உலகப் பொருளாதாரம் தவிர்த்து நாகரிகத்தின் பலன்களை வேரறெதனாலும் மனுக்குலம் அடையமுடியாது.

கல்வியின் வேர்கள் மனிதனின் தெய்வீகத்திறன்களில் அடங்கியுள்ளன, மற்றும் கடவுளின் அவதாரங்களே மனுக்குலத்தில் எல்லாம் தழுவிய ஆசிரியர்களாக இருந்துள்ளனர்.

தனிமனிதன் தன்னைத்தானே வெற்றி கொள்ள வாய்ப்பளிப்பது, சமுதாயத்தோடு ஒரு படைப்புத்திறன் மிக்க தொடர்புகொள்வது, பிரபஞ்சத்தில் தனது இடமெது என்பதை புரிந்துகொள்வது ஆகியவையே கல்வியின் நோக்கமாகும். கல்வி முழு மனிதன் மீதும் செயல்படுகிறது; அவன் மனம், அவன் உணர்வுகள், அவன் விருப்பாற்றல் ஆகியவற்றின் மீது செயல்படுகிறது. தற்போது கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், குடிமக்கள் கல்வி மற்றும் நம்பிக்கை சார்ந்த கல்விகளுக்கிடையே நிலவும் தனித்தன்மைகள், முழுமையும் சரிசமமும் அற்ற தனிமனிதநிலைகளையே உருவாக்குகின்றன. ஒருதலைச்சார்புடைய அனுகுமுறையை நியாயப்படுத்தும் வெவ்வேறு தனிமங்களால் ஆன முக்கிய சமூக பிரச்சனைகள் ஒவ்வொன்றையும் தவறான கல்வி புகட்டப்பட்ட மனிதர்கள் அனுபவிக்க நேருகின்றது.

கல்வி வாழ்க்கையோடு தொடர்ந்து வருவதாகும். முதியவர்கள் எதிர்நோக்கும் விஷயங்கள் பற்றிய அறியாமை, குழந்தகைளின் அறியாமையைக்காட்டிலும் அதிகம் உணரப்படாவிடினும், அவை அவற்றைவிட அதிகம் தீங்கு விளைவிக்கக்கூடியவையாகும். கல்விக்கான மனிதஉரிமை என்பது விரிவான நகரிகம் குறித்த மலர்ச்சிசெயற்பாட்டில் பங்கெடுப்பதற்கான உரிமையாகும். நெகிழ்வுக்குட்படாத மனப்பாங்குகளையும் உணர்வு நிலைநிறுத்தங்களையும் உருவாக்கும் முறைகள் இனிமேலும் தங்களை கல்விமுறைகள் என அழைத்துக்கொள்ள முடியாது.

இறைவழிபாட்டுக்கான தன்னுரிமை அல்லது மனச்சான்று பற்றிய சுதந்திரத்தை குறிக்கும் மனித உரிமை பல்வகையான சமயங்களைச் சார்ந்த சமூகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சட்டத்துறை சார்ந்த அனுமதியாகவே உள்ளது. மனமுதிர்வு, தன்னிச்சை ஆகியவற்றால் ஆன, சமயநம்பிக்கை குறித்த, சொந்த முடிவுக்கு வரும் வரை தங்களின் விசேஷ நம்பிக்கைமுறைகளை பின்பற்றவும் பிரகடணம் செய்யவும் வழங்கப்பட்டுள்ள உரிமை இது.

வழிபடவேண்டும் எனும் உள்ளுணர்வு சர்வவியாபகமானது என்பது எடுத்துக்காட்டப்பட்டும், எண்ணிலடங்கா, ஏறத்தாழ தற்காலிக வழிபாட்டுமுறைகள், நெறிமுறைகள், சமூக அமைப்பு ஆகியவற்றோடு அது தொடர்புபடுத்தப்பட்டும் உள்ளது. ஆகவே, இந்த உள்ளுணர்வு, மனுக்குலத்தின்பால் விசுவாசம், உலக ஐக்கியமெனும் புனித நோக்கத்தின் எல்லா நிலைகளின்பாலும் பக்தி எனும் உணர்வாக மறு உறுதிப்படுத்தப்படக் கூடாததற்கான உள்ளார்ந்த காரணமேதும் இல்லை. மனுக்குலத்தின் கடவுள், இனச்சார்புடைய ஆதிக்கப்பொருளாகவோ, எப்படியாவது உயிர்வாழவேண்டும் எனும் ஒரு தேசத்தின் விருப்பாற்றலாகவோ, ஒரு சமயப்பிரிவின் தனிமனிதநிலை மோட்சபேறு குறித்த வெகுமதியாகவோ இனிமேலும் வெளிப்படுத்தப்பட முடியாது. இறைவனின் தூய வெளிப்பாடு அவரது தீர்க்கதரிசிகள் மற்றும் அவதாரங்களின் வாயிலாக காலத்திற்குக் காலம் மனுக்குலத்திற்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. சமயம் குறித்த இரண்டாந்தர மற்றும் வறையரைக்குட்பட்ட சமய வழிமுறைகள் ஓர் உலக சகாப்தத்திற்கான உறுதிமொழியின்பால் தனிமனிதர்களின் கண்களை மறைக்கும் நெறிமுறைநெருக்கடியை மேலும் நீட்டிக்கவே செய்கின்றன.

உலக அமைப்புமுறை என்பது சகோதரத்துவத்தின் நிர்வாக அம்சமே இன்றி வேறில்லை மற்றும், சமுதாய அமைப்புமுறைக்கான மனிதனின் உரிமை ஓர் உலக சமயத்திற்கான அவனது உரிமையிலிருந்து பிரிக்கப்பட முடியாது.

ஒவ்வொரு காலகட்டமும் அதற்கென தனிப்பட்ட குறிக்கோளைக் கொண்டுள்ளது. இன்று, உலக அமைப்புமுறையின் உருவாக்கம் மனிதத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள ஒரு கடமையாகும்.

உலக அமைப்புமுறை, சட்டரீதியாக சாத்தியமானதாகவும், சமூகரீதியாக தவிர்க்க இயலாததாகவும், தெய்வீகரீதியாக விதிக்கப்பட்டதாகவும் இருக்கின்றது. முன்பு இனத்தால், மொழியால், சமயத்தால், மற்றும் மக்கட்தொகையால் பல்வகைப்பட்டிருந்த சுதந்திரமான சமூகங்கள் கூட்டரசு கோட்பாட்டின் கீழ் ஏற்கனவே ஒற்றுமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்தேசங்கள், தங்களுடைய சட்டபூர்வ உரிமைகள், தேவைகள் ஆகியவற்றுக்கான நியாயக் குரலை ஓர் பேராட்சியமைப்பில் விகிதமுறையான பிரதிநிதித்துவத்தின் வாயிலாக பெறுகின்றனர். உலகக் குடியுரிமை ஒரு சமுதாய அந்தஸ்தாக உறுதிப்படுத்தப்படாத வரைக்கும், கடந்தகாலத்தில் மேம்படுத்தப்பட்ட மனித உரிமைகளும், சலுகைகளும் தற்கால சமுதாயத்தின் சீரழிவினால் கீழறுக்கப்படவே செய்கின்றன.

ஒரு பேராட்சி அமைப்புமுறை உருவாக்கப்படும் வரை, கடவுள் மற்றும் அவர்தம் அவதாரங்கள் குறித்த தனிநபர் சமயநம்பிக்கையில் தலையிடுவதற்குக் குறைய, அரசாங்க நடவடிக்கை மற்றும் தீர்மானம் சார்ந்த விஷயங்களில் தங்கள் குடிகளின் விசுவாசம் மற்றும் பணிவைப் பெறும் உரிமை இப்போது இருக்கும் அரசாங்கங்களுக்கு உண்டு.

இதனுள் உடன்பட்டுள்ள அமைப்புமுறை, அனைத்து தேசங்கள், இனங்கள், சமயநம்பிக்கைகள், வகுப்பினங்கள் ஆகியவற்றை ஐக்கியப்படுத்தி, அதன் மாநில உறுப்பினர்களின் சுயாட்சி உரிமை, அவற்றின் அமைப்புக்கூறுகளான தனிநபர்களின் சுதந்திரம் மற்றும் தன்முனைப்பு ஆகியவற்றை பாதுகாக்கவும் செய்யும் ஓர் உலக காமன்வெல்த் ஸ்தாபிக்கப்படுவதை குறித்துக்காட்டுகிறது. மனுக்குலம் முழுமைக்கும் அறங்காவலாகவும், எல்லா இனங்கள் மக்கள் ஆகியோரின் வாழ்வை முறைப்படுத்தவும், தேவைகளை ஈடு செய்யவும், உறவுகளை சரிப்படுத்தவும் சட்டமியற்றும், ஓர் உலக சட்டமன்றத்தை இந்த காமன்வெல்த் உள்ளடக்கியிருக்கும். அதன் உலக செயலதிகாரம், ஓர் அனைத்துலக காவல்படையின் ஆதரவோடு, அந்த உலக சட்டமன்றம் ஆணையிடும் சட்டங்களையும் முடிவுகளையும் செயல்படுத்தி, முழு காமன்வெல்த்தின் ஜீவ ஐக்கியத்தை பாதுகாக்கவும் செய்யும். அதன் உலக நியாயமன்றம் நீதிமன்றமாக செயல்பட்டு, சர்வலோக முறையின் பல கூறுகளுக்கிடையில் எழும் பிரச்சனைகள் அனைத்திற்கும் இறுதியானதும், கண்டிப்பானதுமான தீர்ப்பை வழங்கும்.

“உலகம் ஒரே நாடு, மனிதர்கள் அதன் பிரஜைகள்.” — பஹாவுல்லா

மூலாதாரம்: bic.org

பஹாய் சேதிமங்கள் உலக மரபுடைமைத் தலங்களாகத் தேர்வு


பஹாய் சேதிமங்கள் உலக மரபுடைமைத் தலங்களாகத் தேர்வு


8 அக்டோபர் 2021


குவெபெக் நகரம் — இந்த நகரத்தில் கூடிய ஐக்கிய நாட்டு செயற்குழு ஒன்று இஸ்ரேலில் உள்ள இரு பஹாய் நிறைவாலயங்கள் “தனிச்சிறப்புமிக்க சர்வதேச மதிப்பினைப்” பெற்றிருப்பதால் மனிதகுலத்தின் கலாச்சார மரபுடைமைகளின் ஒரு பகுதியாக கருதப்பட வேண்டும் எனத் தீர்மானித்துள்ளது.

இஸ்ரேலின் ஹைஃபாவில் உள்ள கார்மல் மலையின் வடக்கு சரிவில் உள்ள பாப் பெருமானாரின் ஆலயம் உலக மரபுச்செல்வ பட்டியலில் பெயரிடப்பட்ட பஹாய் தளங்களுள் ஒன்றாகும். ஹைஃபாவில் ஒரு பிரபல தலமான இது, ஆண்டுக்கு அரை மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது.

யுனெஸ்கோவின் உலக மரபுடைமை செயற்குழுவின் இந்தத் தீர்மானத்தினால் பஹாய்களின் இரு அதி முக்கிய இடங்களான – தங்கள் சமயத்தின் ஸ்தாபகர்களின் நினைவாலயங்கள் – சீனப் பெருஞ் சுவர், பிரமிட்கள், தாஜ் மஹால், மற்றும் ஸ்டோன்ஹெஞ் போன்ற அனைத்துலக ரீதியில் முக்கியமானவை என அடையாளங்காணப்பட்டுள்ள இடங்களின் வரிசையில் இடம் பெருகின்றன.

இந்த உலக மரபுடைமை வரிசையில் உலகளாவிய சமய முக்கியத்துவம் பெற்ற இடங்களான வட்டிக்கன், ஜெருசல நகரின் பழைய பகுதி, ஆஃப்கானிஸ்தானில் உள்ள, சமீபத்தில் வெடி வைக்கப்பட்ட பாமியன் புத்த சிலைகளும் இடம் பெற்றுள்ளன.

ஐக்கிய நாட்டின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோவினால் பராமரிக்கப்பட்டுவரும் இந்தப் பட்டியலில், இந்த நவீன காலத்தில் உதித்த சமயமரபுத் தொடர்புள்ள முதல் இரு தலங்களாகும்.

இஸ்ரேலின் வடகறையிலுள்ள பழைய ஆக்கோவுக்கு அருகிலும், ஹைஃபாவிலுள்ள கார்மல் மலையிலும் உள்ள இவ்விரு நினைவாலயங்களும், பஹாவுல்லா, பாப் ஆகியோர்களான பஹாய் சமய ஸ்தாபகர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடங்களாகும்.

பஹாவுல்லா, பாப் ஆகிய இருவரும் கடவுளின் அவதாரபுருஷர்கள் என்பது பஹாய்களின் நம்பிக்கை; அவர்களின் புனிதக்கல்லறைகள் சுமார் 50 லட்ச விசுவாசிகளைக் கொண்ட ஒரு சமயசமூகத்தினரின் புனித யாத்திரைக்கான தலங்களாகும். பஹாவுல்லாவின் நினைவாலயம் உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் தங்கள் பிரார்த்தனையின்போது முகம் திருப்ப வேண்டிய மையமாகும், மற்றும் ஜெருசலத்தில் உள்ள யூதர்களின் மேற்குக்சுவர், மெக்காவிலுள்ள இஸ்லாமியர்களின் காபா போன்றவற்றிற்கு இணையான ஒரு முக்கியத்துவத்துவத்தை இது வழங்குகிறது.

பஹாவுல்லா இரானில் பிறந்து, அன்று ஒட்டமான் சாம்ராஜ்யத்தில் இருந்த ஆக்கோவுக்கு நாடுகடத்தப்பட்டு, 1892ல் அங்கு விண்ணேற்றமடைந்தார். பாப் அவர்கள் 1850ல் மரணதண்டனைக்குள்ளாகி, அவரது உடல் பின்னாளில் ஹைஃபாவுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

ஹைஃபா நகருக்கு வடக்கில் உள்ள பஹாவுல்லாவின் நினைவாலயம் – பஹாய் சமயத்தவர்களுக்கு உலகிலேயே மிகவும் புனிதமான இடம் – இது உலக மரபுச்செல்வ வரிசையில் இடம்பெற்றுள்ளது.

இவ்விரு நினைவாலயங்களும் அவற்றைச் சுற்றியுள்ள தோட்டங்களின் காரணத்தினால் தனிச்சிறப்பு பெற்றுள்ளன. அப்பூந்தோட்டங்கள் பல கலாச்சாரங்களின் வடிவக்கூறுகளை உள்ளடக்கியுள்ளன. பஹாய் புனித யாத்ரீகர்கள் உட்பட அத்தோட்டங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களும் சுற்றுப்பயணிகளும் வருடந்தோரும் வருகை புரிகின்றனர்.

“சுமார் 150 வருடங்களில் மத்திய கிழக்கில் மட்டுமே காணப்பட்ட ஒரு சிறிய சமூகமாக இருந்து இன்று உலகளாவிய நிலையில்  கிட்டத்தட்ட உலகின் ஒவ்வொரு நாட்டிலும் விசுவாசிகளைக் கொண்டுள்ள ஓர் உலக சமூகமாக ளர்ந்துவிட்ட இச்சமூகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் யுனெஸ்கோவின் இந்த அங்கீகாரத்தை நாங்கள் வரவேற்கின்றோம்,” என பஹாய் அனைத்துலக சமூகத்தின் பொதுச் செயலாளரான திரு அல்பர்ட் லிங்கன் கூறினார்.

“இதற்கான நியமனத்தை முன்னுரைத்த இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு நாங்கள் பெரிதும் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்,” என அவர் மேலும் கூறினார்.

உலக மரபுடைமைப் பட்டியல் 1972ல் யுனெஸ்கோவினால், “கலாச்சார மற்றும் இயற்கை சார்ந்த தனிச்சிறந்த அனைத்துலக மதிப்புடைய மரபுடைமைகளை” அடையாளங்காணவும், பாதுகாக்கவும் மற்றும் பராமரிக்கவும் நிறுவப்பட்டது. இதுவரை, 184 நாடுகள் இந்த உலக மரபுடைமை உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. இந்த உடன்படிக்கை இந்தப் பட்டியலுக்குத் தேர்வுறுவதற்கான பொதுவான அளவுமுறைகளை வரையறுக்கின்றது, மற்றும் இதுவரை கிழக்கு ஆப்பிரிக்காவுள்ள செரங்கெட்டி மற்றும் ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப்பை உள்ளடக்கிய 850க்கும் அதிகமான இடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள.

உலக மரபுடைமை செயற்குழு உலக மரபுடைமை உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ள 21 நாடுகளை உள்ளடக்கியுள்ளது. இக் குழு அதன் குழுத்தலைவரின் நாட்டில் ஆண்டுதோரும் ஒன்றுகூடுகிறது. இவ்வருடத் தலைவராக கனடா நாட்டின் டாக். கிருஸ்டினா கேமரனாவார் மற்றும், தானே உலக மரபுடைமை தலங்களில் ஒன்றான குவெபெக்கில் கூடிய கூட்டம், அந்த நகரத்தின் 400வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தோடு ஒன்றுசேர்ந்திருந்தது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/642/

நெருக்கடி காலங்களின் போது ஆசிரியர்களின் தனிச்சிறப்பான பங்கு வெளிப்படுகின்றது


நெருக்கடி காலங்களின் போது ஆசிரியர்களின் தனிச்சிறப்பான பங்கு வெளிப்படுகின்றது


8 அக்டோபர் 2021


பாங்குவி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு – உலகின் சில பாகங்களில் தொற்றுநோயின் போது, சில கல்வியாளர்கள் முறையான கல்வியைத் தொடர்வதை குறைவான இணைய வசதிகள் தடுத்திடவில்லை. இத்தகைய இடங்களில் உள்ள பஹாய் உத்வேக சமூகப் பள்ளிகள் தங்கள் மாணவர்களின் கல்வியல் தேவைகளை ஈடு செய்திட தற்போதைய சூழ்நிலைகளுக்குப் பொருந்தும் ஆக்ககர வழிகளைக் காண்கின்றனர்.

https://news.bahai.org/story/1435/slideshow/1/“பிள்ளைகளுக்கு ஓர் உயர்தர கல்வியை வழங்கவும், கல்வியல் மற்றும் ஆன்மீக அம்சங்களை ஒன்றிணைத்து, அவர்கள் தங்கள் சமுதாயத்தின் மேம்பாட்டிற்குப் பங்களித்திட ஆயத்தமாக்கவும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை உள்ளடக்கிய உள்ளூர் மக்களின் ஆவல்களிலிருந்து இப்பள்ளிகள் தோன்றியுள்ளன,” என்கிறார் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் சமூகப் பள்ளிகளுக்கு ஆதரவளிக்கும், Fondation Nahid et Hushang Ahdieh எனப்படும் ஓர் அறவாரியத்தின் ஜூடிகேய்ல் மொக்கோலே.

“பிள்ளைகளுக்கு ஓர் உயர்தர கல்வியை வழங்கவும், கல்வியல் மற்றும் ஆன்மீக அம்சங்களை ஒன்றிணைத்து, அவர்கள் தங்கள் சமுதாயத்தின் மேம்பாட்டிற்குப் பங்களித்திட ஆயத்தமாக்கவும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை உள்ளடக்கிய உள்ளூர் மக்களின் ஆவல்களிலிருந்து இப்பள்ளிகள் தோன்றியுள்ளன,” என்கிறார் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் சமூகப் பள்ளிகளுக்கு ஆதரவளிக்கும், Fondation Nahid et Hushang Ahdieh எனப்படும் ஓர் அறவாரியத்தின் ஜூடிகேய்ல் மொக்கோலே. அவை சமூகத்தின் வாழ்வோடு அணுக்கமாக இணைக்கப்பட்டும், இப்போதைய சூழ்நிலைகளின் வழி மக்களுக்கு உதவுவதற்கான முக்கிய ஸ்தாபனங்களாக இருந்து வருகின்றன.

அந்த பஹாய் உத்வேக அமைப்பின் இயக்குனரான கிலிமென்ட் ஃபெய்ஸூரே, “சமூகம் அப்பள்ளி அவர்களுக்குச் சொந்தமானது என உணர்கின்றனர். போதிப்பதற்கும் நிர்வகிப்பதற்குமான திறனாற்றலை வளர்ப்பதற்கு எங்கள் அமைப்பு உதவுகின்றது, ஆனால் பள்ளியின் நிர்வாகம், பொருள்வளம், மற்றும் கல்வியல் திட்டங்களுக்கு சமூகத்தினரே உடைமையாளர்கள் ஆவர். இந்த சீர்குலைவு மிக்க காலத்திலும் அவர்கள் இக்கடமையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

பாங்குயி, மத்திய ஆப்பிரிக்க குடியரசின் ஒரு சமூகப் பள்ளியின் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்கின்றனர். “பன்முகப்படுத்தப்பட்ட பள்ளிகள் குறித்த அணுகுமுறை எதிர்ப்பாராத வாய்ப்புகளை உருவாக்குகின்றது,” என்கிறார் திரு மொக்கோலே.  Mokolé.  “கல்வியல் கோட்பாடுகள் மற்றும் திறன்கள் குறித்து அவர்களின் புரிதலை அதிகரித்துக்கொள்ள பெற்றோர்களுக்கு உதவுவதற்கான ஒரு வாய்ப்பை இது வழங்கியுள்ளது. இது மிகவும் மதிப்புவாய்ந்த ஒன்றாகும் ஏனெனில் ஓர் இல்லமே பிள்ளைகளின் கல்விக்கான ஒரு பிரதான நிகழ்விடமாகும்.”

நாட்டின் தற்போதைய சுகாதார நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் இல்லங்களிலேயே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் எழுதுதல், படித்தல், கணித நடவடிக்கைகள், மற்றும் ஆன்மீக கருப்பொருள்களில் மாணவர்களுக்கு உதவக்கூடிய ஒருவர் ஒவ்வொரு சிறிய குடும்பக் குழுமங்களுக்கும் இருப்பதை உறுதிசெய்திட கூடுதல் தொண்டாசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றனர்.   

பாங்குயி, மத்திய ஆப்பிரிக்க குடியரசின் ஒரு சமூகப் பள்ளியின் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்கின்றனர். “பன்முகப்படுத்தப்பட்ட பள்ளிகள் குறித்த அணுகுமுறை எதிர்ப்பாராத வாய்ப்புகளை உருவாக்குகின்றது,” என்கிறார் திரு மொக்கோலே.  Mokolé.  “கல்வியல் கோட்பாடுகள் மற்றும் திறன்கள் குறித்து அவர்களின் புரிதலை அதிகரித்துக்கொள்ள பெற்றோர்களுக்கு உதவுவதற்கான ஒரு வாய்ப்பை இது வழங்கியுள்ளது. இது மிகவும் மதிப்புவாய்ந்த ஒன்றாகும் ஏனெனில் ஓர் இல்லமே பிள்ளைகளின் கல்விக்கான ஒரு பிரதான நிகழ்விடமாகும்.”

இந்தோனேசியாவின் வடக்கு சுமாத்ரா மண்டலத்தில் உள்ள பஹாய் உத்வேக சமூகப் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர். அங்கு தனிப்பட்ட பாடங்கள் இடைநிறுத்தப்பட வேண்டியுள்ளது. நாட்டில் உள்ள சமூகப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று வீட்டுப்பாட வேலைகளைக் கொடுத்தல் மற்றும் எடுத்தல் பணிகளை செய்துவருகின்றனர்.

உள்ளூர் சமூகங்கள் தங்கள் பிள்ளைகளில் கல்வியில் முதன்மையாளர்களாக இருக்கலாம் என்பது இப்பள்ளிகளின் அடித்தலமாகவுள்ள பஹாய் கோட்பாடாகும். இத்தகைய உடைமை உணர்வோடு, தங்களின் அரசாங்கங்கள் ஏற்படுத்தியுள்ள பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்கும் அதே வேளை தொற்றுநோயின் போது கல்வியல் திட்டங்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு சமூகங்கள் முடிவெடுத்தன. இந்தோனேசியாவின் தனிப்பட்ட பாடங்கள் இடைநிறுத்தப்பட வேண்டியிருந்த போது, நாட்டில் உள்ள சமூகப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று வீட்டுப்பாட வேலைகளைக் கொடுத்தல் மற்றும் எடுத்தல் பணிகளை செய்துவருகின்றனர்.

மற்றவிடங்களில், இந்த பொருளாதார சிரமங்களின் போது சமூகப் பள்ளிகள் தொடர்ந்து நடத்தப்படுவதற்கு ஏதுவாக, ஆசிரியர்களுக்கு உதவுவதற்கு குடும்பங்கள் தங்களின் பொருள்வளங்களை ஒன்றுதிரட்டியுள்ளன உதாரணத்திற்கு, மலாவி நாட்டில், பெற்றோர் தங்கள் நிலங்களில் விளையும் பொருள்களை ஆசிரியர்களுக்கு வழங்கி வருகின்றனர். ஆசிரியர்கள் தங்கள் வகுப்புகளில் ஈடுபட்டிருந்த போது, சில பெற்றோர்கள் அந்த ஆசிரியர்களின் நிலங்களில் வேலை செய்தனர்.   

“தங்கள் பிள்ளைகளின் ஆசிரியர்களாக இருக்கக்கூடிய தனிநபர்களை பெற்றோரே தேர்ந்தெடுத்துள்ளபடியால், ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்கிடையில் நம்பகம் இருந்து வந்துள்ளது,” என்கிறார் மலாவி பாம்பினோ அறவாரியம் சார்ந்த சமூகப்பள்ளிகளின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அன்ட்ரூ ன்ஹலேன். “அதனால்தான் தற்போதைய சூழ்நிலையில், அவர்கள் ஆசிரயர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்திட விரும்புகின்றனர். 

இந்தியாவின் மணிப்பூரில் உள்ள லங்காதேலில் உள்ள ஒரு சமூகப் பள்ளியின் ஆசிரியர்கள், சுகாதார நெருக்கடியின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வீட்டிலேயே மேற்கொள்ள பள்ளிப் பாடங்களை விநியோகிக்கின்றனர்.

இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கால்ச்சினி’யில் இத்தகைய பள்ளிகளின் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள உறவுகள் வகுப்பறை நடவடிக்கைகளுக்கும் அப்பால் நீட்டிக்கப்படுகின்றன. கிராமத்தில் ஓர் உணவு விநியோகத்திற்காக ஓர் அமைப்பு தொண்டர்களைத் தேடும் போது, அதற்கு சமூகப் பள்ளியின் ஆசிரியர்கள் உதவுமாறு கிராமவாசிகள் கேட்டுக்கொண்டனர், ஏனெனில் அந்த உணவு விநியோகத்தை அவர்களால் பாரபட்சமின்றி மேற்கொள்ள முடியும் என்றனர்.   

நாட்டின் மற்றொரு மண்டலத்தில், மணிப்பூரின் லங்காத்தெல்’லில் உள்ள ஒரு சமூகப்பள்ளியில் பணிபுரியும் மாச்சாஸனா கோயிஜாம் கூறுகிறார்:

“சிறுவர்களுக்கு கல்வியளிப்பதே நாம் செய்யக்கூடிய சேவைகளுள் மிகவும் உயர்ந்த ஒரு சேவையென பஹாய் போதனைகள் கூறுகின்றன. நன்நடத்தைகளை உருவாக்கிக்கொள்ளவும், உலகிற்கு ஓர் ஒளியாகத் திகழவும், தங்களின் பிள்ளைகளை அறிவியல்களிலும், ஆன்மீக விஷயங்களிலும் அறிவூட்டுவதற்கு ஆசிரியர்கள் செய்திடும் தியாகங்களை–குறிப்பாக இப்பொழுது–பெற்றோர் உணர்கின்றனர்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1435/

சமோவா ஜூப்லி விழாவில் அரச வரவேற்பு


சமோவா ஜூப்லி விழாவில் அரச வரவேற்பு


8 அக்டோபர் 2021


சமோவா தீவின் தேசிய ஆன்மீக சபையின் ஓர் அங்கத்தினராகிய, முலிபோலா அலே அவர்கள் 50வது வருட விழா, கோவில் கட்டப்பட்ட 20வது வருட விழா ஆகியவற்றின் போது உரையாற்றுகிறார் > பெரிய நிழற்படம் > மற்ற படங்கள் அப்பியா, சமோவா, 30 நவம்பர் 2004 (BWNS) — “ஒரு கடலின் அலைகள்” என பெயிரடப்பட்ட மாநாட்டின் போது பங்கேற்பாளர்கள் அரச வரவேற்பைப் பெற்றனர். இந்த மாநாடு சமோவா தீவில் பஹாய் சமயத்தின் 50வது ஆண்டு மற்றும் சமோவா பஹாய் கோவிலின் 20வது வருட விழாவை ஒட்டி நடைபெற்றது.

சமோவா அரசரான, மேன்மை மிகு 2வது சுசுகா மலியதோவா தனுமாபிஃலி அவர்கள் “தெய்வீகத் தந்தையிடம் ஆழ்ந்த வியப்பும் நன்றியுணர்வும்” கொண்ட தமது வாழ்த்துக்களை வருகை தந்தோருக்கு தெரிவிப்பததாக கூறினார். 

பஹாய் சமயத்தின் ஓர் அங்கத்தினராகிய மாட்சிமை தங்கிய அரசர், “பல நண்பர்கள் ஒன்று சேர்ந்து விலைமதிப்பற்ற இச்சமயத்தை அதன் தற்போதைய வளர்ச்சி கட்டத்தை அடைய உதவியுள்ளனர். உலகைச் சுற்றியுள்ள பஹாய்களை சந்திப்பதென்பது எனக்கு எப்போதுமே பெருமகிழ்வுக்கு காரணமாகும்“ என அவ்வேளையில் குறிப்பிட்டார்.

தமது பேருரையில் சமோவாவில் உள்ள பஹாய் கோவிலைப் பற்றி அவர் மேலும் ஒரு சிறப்புரை ஆற்றினார். அது அந்த விழாவை ஒட்டி அவருடைய மகளான சூசுகா தோவா தொஸி மலியதோவா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு விருந்தின்போது ஆற்றப்பட்டது. சூசுகாவும் பஹாய் சமயத்தின் ஓர் அங்கத்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

“இப்போது இங்கு நாம் கொண்டாடும் பல வெற்றிகளுள் ஒரு வெற்றி தனிச்சிறப்பு மிக்கதாக இருக்கின்றது. அது, இங்கு இருபது வருடங்களுக்கு முன்பு அர்ப்பணம் செய்யப்பட்ட பஹாய் கோவில் கட்டப்பட்டதாகும்,”என அவர் மேலும் கூறினார்.

சமோவா கோவில் குவிமாடத்தின் உட்புற காட்சி

22 செப்டம்பர் 2004ல் நடந்த அந்த சிறப்பு விருந்தில், சமோவா தீவின் இடைக்கால பிரதமர் பிஃயாமே மத்தாபாஃ நாவோமி, அமைச்சரவையின் பிற அங்கத்தினர்கள், தலைமை நீதிபதி, வெளிநாட்டுத் தூதர்கள், மற்றும் கிருஸ்தவ தேவாலயங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

கூடியிருந்த 150 பஹாய்களுள் 1954ல் பஹாய் சமயத்தை சமோவா தீவுக்குக் கொண்டு வந்த லில்லியன் விஸ்-அலாயி, கோவிலின் கட்டடக் கலைஞரான ஹோஸ்ஸேன் அமானட் ஆகியோரும் அடங்குவர்.

நிகழ்ச்சி உலக நீதி மன்றத்தின் சிறப்பு செய்தியை வாசிப்பதோடு ஆரம்பிக்கப்பட்டது. அதனை சமோவா தேசிய ஆன்மீக சபையின் செயலாளரான ஸ்டீவன் பெர்சிவல் வாசித்தார்.

“உங்கள் தேசம் என்றும் நிலையான ஓர் சிறப்பை பெற்றுள்ளது. தமது ஆட்சியின் போதே பறாய் சமயத்தை ஏற்றுக்கொண்ட முதல் அரசரான, 2வது சுசுகா மலியதோவா தனுமாபிஃலியைப் பெற்றதன் வாயிலாக உங்கள் நாடு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது” என உலக நீதி மன்றம் தனது செய்தியில் குறிப்பிட்டது.

“சமோவாவின் பஹாய் சமூகம் இவ்வட்டாரத்தின் பிற பகுதிகளிலும் முக்கிய சேவைகள் ஆற்றியுள்ளது. அவர்கள் தங்கள் உத்வேகம், அர்ப்பண உணர்வு, மற்றும் தீவிரம் போன்றவற்றினால் தனிச்சிறப்பு பெற்று விளங்குகின்றனர்,” என உலக நீதி மன்றம் கூறியுள்ளது.

சமோவா அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்பாளர்களை வரவேற்ற சமோவாவின் இடைக்கால பிரதமரான பிஃயாமே மட்டாபாஃ நவோமி அவர்கள், பஹாய் சமயம் சமோவோவிற்கு வழங்கி வந்துள்ள 50 வருட கால சேவைக்கு நன்றி தெரிவித்தார்.

“அமைதியை நிர்மானிப்பது, அடிப்படை மனித உரிமையின் மேம்பாடு, ஆண் பெண் சமத்துவம், கல்வி, சுகாதாரம் மற்றம் தொடர்ந்து தாங்கப்படக்கூடிய மேம்பாடு ஆகியவை உள்ளிட்ட நாகரீகத்திற்கான உண்மையான அஸ்திவாரம் சமயமே என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்;” என அவர் மேலும் கூறினார்.

“இறைவனின் நாமம் உச்சரிக்கப்படும் வாசஸ்தலங்கள், உலக நீதி மன்றம் ஆகியவை ஆசீர்வதிக்கப்படுமாக; நாட்டின் தலைவரான மாட்சிமை தங்கிய அரசரையும் இறைவனின் ஆசிகள் சூழட்டடமாக,” என அவர் மேலும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளர்கள், இசைக் குழுக்கள், மற்றும் நடனக் குழுக்களும் பங்குபெற்றனர்.

அடுத்த நாள் 400க்கும் மேற்பட்டவர்கள் அரசரின் தனி மாளிகையில் விருந்து உபசரிப்பில் கலந்துகொண்டனர். இதில் பல முக்கிய பிரமுகர்கள் பங்குபெற்றனர்.

அதே நாளில் தியாபாபாதாவில் உள்ள பஹாய் கோவிலுக்கு அனைவரும் விஜயம் செய்தனர். பஹாய் சமயம் சமோவாவுக்கு வந்த நாள், கோவிலின் அர்ப்பன நாள் ஆகியவை பாட்டு மற்றும் நடனம் மூலம் நினைவுகூறப்பட்டன.

அந்த நிகழ்வின் போது பல நினைவில் நிற்கும் பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. தொங்கா தீவு பஹாய்கள் திருமதி விஸ்-அலாயிக்கு கண்ட ஆலோசகர் எனும் முறையில் நற்சேவைகள் பல புரிந்த அவரது கனவரின் ஞாபகார்த்தமாக பாரம்பரிய தாபா துனி ஒன்றை வழங்கினர்.

டாக்டர் யுகோ கியாகெரி திரு அலாயி ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அனைவரும் வருகையளித்தனர். பிறகு அங்குள்ள பஹாய் மொன்ட்டிசாரி பள்ளிக்கும், பஹாய் மயானத்திற்கும் அவர்கள் சென்றனர்.

மாநாட்டின் அதிகாரபூர்வ திறப்பு விழாவின்போது தேசிய ஆன்மீக சபை தலைவர் திரு தித்தி நோபோஃவாகாதொதொவா, திருமதி விஸ்-அலாயியை 21 நாடுகளிலிருந்து வருகையளித்திருந்த சுமார் 600 பங்கேற்பாளர்களுக்கும் அறிமுகம் செய்துவைத்தார்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூ ஸீலாந்து தேசிய ஆன்மீக சபையின் அங்கத்தினர்களில் ஒருவராக இருந்த திருமதி விஸ்-அலாயி பஹாய் சமயத்தின் பாதுகாப்பாளாராகிய ஷோகி எபெஃண்டி அவர்கள் 1953ல் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பஹாய்களே இல்லாத நாடுகளுக்கு சமயத்தை கொண்டு செல்லும் முன்னோடிகளுள் ஒருவராக 1954ல் சமோவாவின் அப்பியா வந்து சேர்ந்தார். அவருடைய சகோதரரான பிஃராங்க் கொக்கொஸ் தீவில் பஹாய் சமயத்தை அறிமுகம் செய்தார். இதற்காக இருவரும் “பஹாவுல்லாவின் வீரத்திருத்தகைகள்” என அழைக்கப்பட்டனர்.

தொடர்ந்து சமோவா தீவிலேயே வசித்து வரும் திருமதி விஸ்-அலாயி, உணர்ச்சிபூர்வமான சொற்பொழிவு ஒன்றை ஆற்றினார். அப்போது “பஹாவுல்லாவின் வீரத்திருத்தகைகளுள்” 24 பேரின் பெயர்களை வாசித்தார். பசிபிஃக் தீவுகளுக்கு சமயத்தை கொண்டு சென்ற அவர்களுள் 15 பேர்கள் பெண்களாவர். அவர் மேலும், சமோவா மக்களை பாராட்டிப் பேசி, நடந்த பல சம்பவங்கள் பற்றியும் குறிப்பிட்டார். தெய்வ சமயத் திருக்கரங்களான திரு யுகோ கியாகெரி, அபு‘ல் காசிம் பாஃய்சி, திரு இனோக் ஒலிங்கா ஆகியோரின் வருகைகள் பற்றியும் பேசினார்.

கடந்த 50 வருடங்களில் சிறப்பு பஹாய் விருந்தினர்கள் பலரை சமோவா பஹாய் சமூகம் வரவேற்றுள்ளது. அவர்களுள், தெய்வ சமயத்திருக்கரம் திருமதி ரூஹிய்யா ரப்பானி, திரு கொல்லிஸ் பெஃதர்ஸ்டோன், திரு ரஹ்மத்துல்லா முஹாஜர், ஜோன் ரொபார்ட்ஸ், மற்றும் திரு வில்லியம் சியர்ஸ ஆகியோர் குறிப்பபித் தக்கவர்கள்.

ஒரு காலத்தில் சமோவாவின் ஒரே பஹாயாக இருந்த திருமதி விஸ்-அலாயி இன்று 29 உள்ளூர் ஆன்மீக சபைகளை உள்ளடக்கிய ஒரு பஹாய் சமூகத்தின் அங்கத்தினராவார்.

அடுத்த நாள், ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கு சென்றிருந்த பிரதம மந்திரி, ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அதில், “இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக, கொண்டாட்டங்கள் வெற்றிகரமாக அமையட்டுமாக” என குறிப்பிட்டிருந்தார்.

பங்கேற்பாளர்கள் பஹாய் சரித்திரம் பற்றிய உரைகளை செவிமடுத்தனர். பசிபிஃக் வட்டாரங்களுக்கு சமயத்தை கொண்டுவந்தவர்களுக்காக ஒரு சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சமோவா, அமெரிக்க சமோவா, ஆஸ்திரேலியா, பிஃஜி, நியூ ஸீலாந்து ஆகிய நாடுகளின் பாடற்குழுக்கள் இடம்பெற்றிருந்தன. கோவிலின் கட்டடக் கலைஞரான திரு அமானத் அவர்கள் கோவிலின் கீழ்த்தளத்தில் அமைந்திருக்கும் பொது மண்டபத்தில் ஓர் உரை நிகழ்த்தினார்.

பங்கேற்பாளர்கள் அரச குடும்பத்தினர் ஒருவரின் அழைப்பை ஏற்று சரித்திர மற்றும் புராண சிறப்புடைய ஓர் இடத்திற்கு வருகையளித்தனர். அன்று மாலை சமோவா பஹாய் இளைஞர்கள் 25 வருடங்களாக ஈரான் நாட்டில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கும் பஹாய்களின் நினைவாக நாடக நிகழ்வு ஒன்றை நடத்தினர். 27 செப்டம்பர் அன்று எல்லாரும் உள்ளூர் கடற்கரையில் பிக்னிக் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர்.

கொண்டாட்டங்களும் மாநாடும் தேசிய தொலைக்காட்சி, வானொலி, மற்றும் சமோவா பத்திரிக்கைகளில் விரிவான விளம்பரங்கள் பெற்றிருந்தன. சமோவா பஹாய்கள் சமோவா மக்களுக்கு விரிவான சேவைகள் ஆற்றியுள்ளனர். ஐந்து பாலர் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மனித உரிமை, கல்வி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் அவர்கள் சேவையாற்றிவருகின்றனர்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/337/

அமைதியான புரட்சியாளர்கள்


உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு சமூகப்பள்ளியின் சிறுவர்கள் ஒரு வருகையாளரைப் பார்த்து புன்னகைக்கின்றனர். லக்னௌ’வில் உள்ள FAS ஆசிரியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பாடத்திட்டம் மற்றும் திட்டமிடலுக்கு உதவியாக பயிற்சிகள் வழங்குகிறது.

அமைதியான புரட்சியாளர்கள்


8 அக்டோபர் 2021


டாஸ்டோய், உத்தரப் பிரதேசம், இந்தியா — இந்த இளைஞர்களை முதன் முதலில் பார்க்கும்போது இவர்கள் பள்ளிகள் அமைப்பவர்களாகத் தோன்றாது.

இவர்கள் சிறிதும் தொடர்பே இல்லாத பின்னனியைச் சார்ந்தவர்கள். ஒருவர் உயர்நிலைப் பள்ளியை முடிக்காதவர், மற்றவர் ஒரு மெக்கானிக், மற்றுமொருவரோ கிராம “மருத்துவர்”

அல்லது அவர்கள் நடத்திக்கொண்டிருப்பது பள்ளிகள் என்பதுமுதல் பார்வையிலேயே யூகிக்கு முடிந்த ஒன்றல்ல. உதாரணமாக, மெக்கானிக்கான ராம் விலாஸ் பால், தன் உடன்பிறந்தவருடன் சேர்ந்து ஒரு சிறு நிலத்திற்குச் சொந்தக்காரராக இருக்கின்றார். இந்த நிலத்தில் ஒரு பக்கம் மாட்டுத்தொழுவமும், மற்றொ பக்கம் பள்ளிக்கூடமும் உள்ளன. இந்த எட்டு பேர்களுக்கும் சமூகத் தன்மைமாற்றமே பொதுவான லட்சியம் என்பதும் அத்தகைய லட்சியத்தின் நிறைவேற்றத்திற்கான இடம் பள்ளிக்கூடம் என்பதும் அவர்களின் நம்பிக்கையாகும். எப்போதுமே அடக்கமாகப் பேசும் திரு பால் கூறுவது போல, இந்தியாவில் உள்ள மக்கள் இதையே பள்ளிகளில் எதிர்பார்க்கின்றனர்.

“சமூகமும் குடும்பங்களும் பொறுப்புமிக்கக் குடிகளை உருவாக்கிட பள்ளிகளையே நம்பியுள்ளனர்,” என்கிறார் அவர். “ஒரு குழந்தை தவறு செய்யும்போது, இதைத்தான் உங்கள் பள்ளி ஆசிரியர்கள் சொல்லிக்கொடுகின்றார்களா?” என மக்கள் கேட்பதுண்டு.

இந்த எட்டு பேரில் இருவரைத் தவிர மற்றவர் அனைவரும் 20வயதானவர்கள். பல இளைஞர்கள் வேலை தேடுவதற்காக கரங்களை நோக்கிபடையெடுக்கும் வேளை இவர்கள் மட்டும் கிராமத்திலேயே தங்கி அடுத்த தலைமுறையினரை வார்ப்பதில் உதவுகின்றனர். பெரும் முதலீடு இல்லாமலும் அளவுக்கு மீறிய வாக்குறுதிகள் இன்றியும் இதை செய்கின்றனர்.

லக்னௌ அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நியூ ஐடீல் அகாடமி’யின் கணித வகுப்பு திறந்தவெளியில் கூடுகின்றது, அதே நேரம் மற்றொரு வகுப்பின் மாணவர்கள் கூறைக்குக் கீழ் ஒரு மேஜையைச்சுற்றி அமர்ந்துள்ளனர்.

பெரும்பாலன இளைஞர்கள் கிராமத்தார்களிடம் நிலம் மற்றும் தளவாடங்களைப் பெற்று கிராமத்தார்களின் உதவியோடும் கற்ற ஆனால் வேலையின்றி இருக்கும் கிராம இளைஞர்களை ஆசிரியர்களாக அமர்த்துவதன் மூலமாகவும் இந்த சமூகப் பள்ளிகளை ஆரம்பிக்கின்றனர். இந்த உதவிகளுக்குப் பதிலாக சிறு கட்டணம் ஒன்றை மட்டும வசூலித்து கிராமத்தாரின் குழந்தைகளுக்கு நல்ல பொதுக் கல்வி வழங்குவதாக இவர்கள் வாக்களிக்கின்றனர். (உதாரணமாக, பள்ளிக் கட்டணம் உயர்நிலை மானவர்களுக்கு சுமார் 50 ரூபாயாக இருக்கலாம்.) கிராமத்தார்களுக்கு, இது நல்ல ஏற்பாடகவே இருக்கின்றது. அரசாங்கப் பள்ளிகள் கட்டணங்கள் வசூலிப்பதலில்லையெனினும் அங்கு கல்வி மிகவும் தரக்குறைவாக உள்ளது. ஒரு பெற்றோர் கூறுவது போல, “1லிருந்து 10வரை எண்ண முடியாத எட்டாம் நிலை மாணவர்களை அங்கு காணலாம்.”

இன்று இவ்விதமான எட்டு பள்ளிகள் உத்தரப்பிரதேசத்தின் கக்கோரி, பந்தரா மற்றும் காரக்பூர் பகுதிகளில் உள்ளன. இவை மகானத்தின் தலைநகரமான லக்னெளவுக்கு அருகிலேயே உள்ளன.

இப்பள்ளிகளில் சில மிகவும் நன்றாகவே இயங்குகின்றன. உதாரணமாக 160 மாணவர்களைக் கொண்ட வினோத் குமார் யாதவின் குலோரி பொதுப் பள்ளியைக் குறிப்பிடலாம். 73 மாணவர்களைக் கொண்ட டாஸ்டோயில் உள்ள பாலின் Nine Point பள்ளி போன்ற மற்றவை சற்று சிரமத்துடனேயே இயங்கிவருகின்றன. பிரஜேஷ் குமார் போன்றோரின் கவனன்ட் பொதுப் பள்ளி போன்ற மற்றவை உடனடி உதவியை வேண்டி நிற்கின்றன. (அடுத்த வருடம் திரு குமார் தனது பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற உத்தேசித்துள்ளார்.)

FASன் உதவி

இவர்கள் அனைவரும் தங்கள் இலக்குகளை திட்டமிடவும் தொடர்ந்து செயல்படவும் லக்கனெளவில் உள்ள Foundation for the Advancement of Science (FAS) எனப்படும் அரசாங்க சார்பற்ற ஒரு இயக்கம் உதவுகின்றது. இந்த இயக்கம் சிரமமான நேரங்களில் அவர்களுக்கு வழிகாட்டி, சில வேளைகளில் ஒரிருவருக்கு ஊதியமும் வழங்குகின்றது. மேலும் இந்த இயக்கம் அப்பள்ளிகளில் பயன்படுத்திட ஒரு புதுமுறையான பாடமுறையையும் தயார் செய்கின்றது.

இந்த இயக்கம் தன்னாதாரமான மற்றும் தன்னிறைவான கிராமப்புற கல்வி முயல்வுகளில் பல வருடகால ஆராய்ச்சிக்குப் பிறகு இத்தகைய சமூகப் பள்ளிகளை நிறுவதில் முன்நிற்கின்றது.

“நாங்கள் உத்தரப் பிரதேசத்தில் பல டியூட்டோரியல் பள்ளிகளோடு ஒத்துழைத்துள்ளோம். அவை வெளிப் பொருளாதார ஆதரவை பெற்றிருந்தும் இறுதியில் அம்முயற்சிகள் தோல்வியுறவே செய்தன. இதற்கான தீர்வுகள் தங்கள் சொந்த வளங்களை பயன்படுத்துகின்ற ஒரு கிராமத்தின் உள்ளிருந்தே வரவேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்தோம், என ஒரு FAS அதிகாரி விளக்கினார்.

இத்தகைய சமூகப் பள்ளிகளுக்கு, தக்க செயலூக்கம், தூரநோக்கு, மற்றும் கடுமுயற்சி மற்றும் விடாமுயற்சி செய்திடவும் தயாராக உள்ள தனிநபர்களை FAS முதலில் தேடியது. பஹாய் கோட்பாடுகளின் உற்சாக உணர்வால் இயங்கும் இந்த நிறுவனம், தகுந்த உணர்வுகளுடைய படித்த ஆனால் வேலையற்ற இளைஞர்களை லக்கனெளவின் அக்கம் பக்கத்து கிராமங்களில் விரைவில் கண்டுபிடிக்க சிரமப்படவில்லை.

இயக்கத்தில் சேவையாற்றுவோர் பள்ளிகளை நிறுவதில் இளைஞர்கள் கண்டிப்பாக பிரச்சினைகளை எதிர்நோக்குவர் என உணர்ந்திருந்தனர், ஆனால் முன் அனுபவத்தின் வாயிலாக இத்தகைய பிரச்சினைகள் அவற்றோடு திட்டம் குறித்து சொந்தம்பாராட்டும் உணர்வையும் உருவாக்குகின்றன என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். ஒரு கிராமத்தில் இத்தகைய பள்ளிகளை உருவாக்கும் இச்சிரமம் மிகு காரியத்திற்கு பெரும் முயற்சியும் பொருப்புணர்வும் தேவைப்படுகின்றன. இப்பள்ளிகளுக்காக இந்த இளைஞர்கள் சிரமப்படும்போது, அவர்களுடைய மனவுறுதி மேலும் வலுப்பட்டு அப்பள்ளிகளின்பால் அவர்களுடைய பற்றும் அதிகரிக்கின்றது.

பெற்றோர்களின் கருத்து

சுந்தர்லால் என்பவர் தமது குடிசைக்கு வெளியே உட்கார்ந்திருந்தார். வெளியே சைக்கிள் டயரோடு விளையாடிக்கொண்டிருந்த தம்முடைய மகன்களை பிராஜேஷ் குமாரின் பள்ளிக்கு ஏன் அனுப்புகிறார் என கேட்கப்பட்டார். அதற்கு அவர் உடனே: “ஏனெனில் அவருடைய பள்ளிப் பிள்ளைகள் நல்ல மரியாதையுடைய மாணவர்களாக இருக்கின்றனர்,” என்றார்.

இந்த சமூகப் பள்ளிகள் குறித்து கேள்வி கேட்கப்படும்போது பெற்றோர்களிடையே இந்தப் பதிலே பல்லவியாக இருக்கின்றது.

திரு குமார் இதற்கு விளக்கமளிக்கின்றார்: “இப்பள்ளிகளை நாங்கள் ஆரம்பித்ததற்கான காரணம் வெளியே எங்கும் கிடைக்கும் அதே கல்வியை மிகவும் தரத்தோடு அளிப்பதற்காக அல்ல. மாறாக, புதிதும் மிகவும் இன்றியமையாததுமான ஒன்றை நன்னெறி கல்வியின் வாயிலாக அளிப்பதே எங்கள் நோக்கம்.”

இந்தப் பள்ளிகள் அனைத்தும் பஹாய் அனைத்துலக சமூகத்தினால் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் இளமிளைஞர்களுக்குமான நன்னெறி கல்வி குறித்த பாடமுறையையே பயன்படுத்துகின்றன.

நகரத்தில் நல்ல வேலைக்கு வாய்ப்பளிக்கக்கூடிய கல்விப்பயிற்சியில் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ள திரு குமார்: “குறைந்த முயற்சியில் நல்ல வருமானம் ஈட்டக்கூடிய எத்தனையோ வேலைகளை நான் செய்ய முடியும். ஆனால், இங்கு எனக்கென்று இல்லாமல், இந்த கிராமத்திற்கு, நன்னெறி, சமூகப் பொருளாதார மற்றும் பகுத்தறிவு மாற்றங்களை கொண்டுவர முயலுகிறேன்.”

நாட்டுப்புற இந்தியாவை பாதிக்கும் அதே சமூகப் பிரச்சினைகளை இந்த சமூகப் பள்ளிகளும் எதிர்நோக்குகின்றன. இவற்றில் முதன்மையாக ஜாதிப் பிரச்சினையும் பெண்கள் குறித்த முன்தப்பெண்ணங்களும் உள்ளன. டாஸ்டோய் கிராமத்து பஞ்சாயத்தின் உறுப்பினரான பகவான்தின், ஆம்பத்தில் ஜாதிப் பிரச்சனை தமது மகளை திரு பாலின் பள்ளிக்கு அனுப்புவதில் தடங்கலாக இருந்ததை ஒப்புக்கொள்கின்றார்.

திரு பகவான்தின், பால் வேறு ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தது தமது தயக்கத்திற்கு காரணமாக இருந்தது என்கிறார். ஆனால், அவருடைய மாணவர்கள் நன்றாகப் படிக்கவும் எழுதவும் மற்றும் ஒழுங்கு நிறைந்திருக்கவும் கண்டு, தமது மகளை அருகேயுள்ள வேறு ஒரு கிராமதிற்கு தமது மகளை அனுப்ப வேண்டும் எனும் காரணத்தினாலும் ஜாதி பிரச்சனையை ஒதுக்கி வைத்ததாக கூறுகின்றார். “நான் எடுத்த முடிவு குறித்து வருந்தியதே இல்லை.”

கோட்பாடுகள் கற்றுக்கொடுப்பது

பள்ளிகள் அனைத்திலும், சமத்துவம் குறித்த கல்வி மற்றும் பரஸ்பர மரியாதையின் தேவை பற்றி ஆரம்பத்திலிருந்தே அறிவுறுத்தப்படுகின்றது. இது பாடமுறையில் கலைகளைச் சேர்ப்பதின் வாயிலாகவும் பல்வேறு செய்முறைகளின் வாயிலாகவும் செயல்படுத்தப்படுகிறது.

உதாரணமாக, “குறுநாடகங்கள் மற்றும் பாடல்கள் வாயிலாக இந்த நெறிகளைக் கற்றுக்கொடுப்பது மிகவும் ஆக்கம் மிக்கதாக இருக்கின்றது,” என்றார் திரு யாதவ்.

இந்த இடங்களில் கல்விபெறுவது ஒருபுறம் இருக்க பெண்கள் வீட்டைவிட்டே வெளியேறுவதில்லை என்பதை கருத்தில் கொண்டு பெண் குழந்தைகளை ஒதுக்கும் பழக்கம் மிகவும் முன்செயலாக்கத்தோடு அனுகப்படுகின்றது.

கிராமத்தில் உள்ள பெற்றோர்களை அவர்களின் இல்லங்களிலேயே சென்று சந்தித்து தங்கள் மகன்களை மட்டும் அல்லாது தங்கள் மகள்களையும் பள்ளிக்கு அனுப்புவதன் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக் கூறுவோம். “மிகவும் பொறுமையான கருத்துரைகளுக்குப் பிறகு அவர்கள் புரிந்துகொள்கின்றனர்,” என திரு பால் விளக்குகின்றார்.

இப்போது இந்த இளம் தொழில்முனைவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை அவர்கள் தங்கள் பள்ளிகளை இலாபத்துடன் நடத்துவதே ஆகும். விலைவாசி உயர்வு, தொடர்ந்தாற்போல் பள்ளிக் கட்டணம் கட்டப்படாமை, மற்றும் குழந்தைகள் வயல்வேலைகளுக்கு இழுத்துச்செல்லப்படுவது போன்ற பிரச்சினைகளும் உள்ளடங்கும். பள்ளிகளின் உரிமையாளர்கள் இவற்றுக்கான தீர்வுகளைத் தேடும் அதே வேளை, FAS இந்தப் பள்ளிகள் கிராமங்களில் ஐயத்திற்கிடமில்லாத சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களை கொண்டுவருவதிலும், வெற்றிமிக்க கல்வி நிறுவனங்களாக உருவெடுப்பதற்கான உள்ளாற்றலிலும் உறுதியோடு இருக்கின்றது. பார்க்கப்போனால், உத்தரப்பிரதேசத்தில் FAS மேற்கொண்டு 20 வேலையற்ற இளைஞர்கள் இத்தகைய பள்ளிகளை துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

கட்டுரையும் படங்களும் – அராஷ் வாஃபா பாஃஸ்லி

மூலாதாரம்: https://news.bahai.org/story/639/

ஆப்பிரிக்காவில்: ஒரு கோவில் உருபெறும் போது மற்றொன்றிற்கான எதிர்ப்பார்ப்பு அதிகரிக்கின்றது


மாத்துன்டா, கென்யா — மேம்பாட்டின் வெவ்வேறு கட்டத்தில் இருப்பினும், கென்யாவிலும், கொங்கோ ஜனநாயக குடியரசிலும் பஹாய் வழிபாட்டு இல்லங்களுக்காக குறிக்கப்பட்டுள்ள இடங்கள் ஆர்வநம்பிக்கை, ஐக்கியம் ஆகியவற்றுக்கான ஆரம்ப காட்சிகளை வழங்குகின்றன.

கென்யா மற்றும் கொங்கோவில் பஹாய் கோவில் தளங்களுக்காக குறிக்கப்பட்டுள்ள இடங்களில் நடைபெறும் நடவடிக்கைகள் ஒற்றுமைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த இடங்களிலிருந்து வெளிப்படும் ஆற்றலின் காட்சிகளை வழங்குகின்றன

“வெளிப்பட்டு வரும் கோவில், இங்கு ஒற்றுமைக்கான ஓர் அடையாளக்குறியாகியுள்ளது. இங்கு என்ன நடக்கின்றது என்பதைக் காண மக்கள் வருகின்றனர்,” என மாத்துன்டா, கென்யாவில் கட்டப்பட்டு வரும் உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கான பணித்திட்ட நிர்வாகி ஸ்டீவன் ம்வாங்கி கூறுகின்றார்.

அருகிலுள்ள கிராமங்களிலிருந்து வெவ்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள், கட்டுமானம் ஆரம்பிக்கப்படும் முன்பே கோவில் தளத்தில் கூட்டு வழிபாடுகளுக்காக ஒன்றுகூடி வருகின்றனர். அக்கட்டுமான திட்டத்திற்கு ஓர் உடைமை உணர்வைப் பெற்ற அந்த இடத்தின் அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்கள், அங்குள்ள ஒரு தாவர நர்சரியின் பராமரிப்பு உட்பட பல்வேறு பணிகளுக்கு உதவி வருகின்றனர்.

மாத்துன்டா, கென்யாவில் எழுப்பப்பட்டு வரும் பஹாய் வழிபாட்டு இல்லத்தின் மைய கட்டிடமும் அதன் வளாகமும்

கோவிலுக்கான தளம், சேவைக்கான திறனாற்றல்களை உருவாக்கும் பஹாய் கல்வியல் திட்டங்களில் பங்கேற்கும் இளையோருக்கான ஓர் ஓன்றுகூடும் இடமாகவும் ஆகியுள்ளது. மாத்துன்டாவைச் சேர்ந்த ஓர் இளைஞரான விவியன், “கடவுளை வழிபடுதல் நம்மை உள்ளார்ந்த நிலையில் தன்மைமாற செய்கின்றது–தன்னலமற்ற செயல்களின் மூலம் நமது சமய நம்பிக்கையை நடைமுறைப் படுத்துதல்.”

அவ்விடத்தைச் சேர்ந்த மற்றோர் இளைஞரான வெஸ்லி, “கோவில் தளத்தில் எல்லா சமயத்தைச் சார்ந்தவர்களும் இந்தத் திட்டத்திலும், வழிபாட்டுக்கான ஒன்றுகூடல்களிலும் பங்கேற்பதன் மூலம், எவ்வாறு வழிபாட்டு இல்லம் மனிதகுல ஒருமை, நேர்மறையான செயல்களின் மூலம் சமுதாய மேம்பாடு ஆகியவற்றைப் பிரதிநிதிக்கின்றது என்பதைக் காண்கின்றனர்,” என்றார்.

தற்போதைய உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு முன்னராக எடுக்ப்பட்ட படம். கட்டுமானம் ஆரம்பித்ததிலிருந்து மாத்துன்டா வழிபாட்டு இல்ல தளத்தில் வெவ்வேறு சமயங்களைச் சார்ந்த மக்கள் கூட்டு வழிபாடுகளுக்காக ஒன்றுகூடி வருகின்றனர்

நோய்த் தொற்றினால் உண்டாக்கப்பட்ட சவால்களைக் கருதாமல், கென்யா மற்றும் கொங்கோ ஜனநாயக குடியரசின் பஹாய்கள், விடாமுயற்சியுடன் தங்கள் அரசாங்கங்கள் நிலைப்படுத்தியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே வேளை கோவில் பணித்திட்டத்தைத் தொடர்வதற்கான ஆக்ககர வழிகளையும் கண்டுள்ளனர்.

கென்யாவின் வழிபாட்டு இல்லத்தின் மைய கட்டுமானத்திற்கான அடித்தலங்கள் இடப்பட்டுள்ள வேளை, கோவிலின் ஒன்பது சுவர்களும் ஏற்றப்பட்டுள்ளன, மற்றும் கோவில் வடிவத்தின் நேர்த்திமிகு சாய்ந்த கூறைக்கான ஆதரவு தூண்களும் போடப்பட்டுள்ளன.

மாத்துன்டா, கென்யா உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லத்தைச் சுற்றியுள்ள அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான கிராமவாசிகள் அங்குள்ள ஒரு தாவர நர்சரியின் பராமரிப்பு உட்பட பல்வேறு பணிகளுக்கு உதவி வருகின்றனர்.

கொங்கோ ஜனநாயக குடியரசில், தேசிய பஹாய் வழிபாட்டு இல்ல வடிவத்தின் திரைநீக்கம் குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. தலைநகரான கின்ஷாஷா’வில் அமைந்துள்ள கோவிலுக்கான இடம், கட்டுமானத்திற்காக ஆயத்தமாக்கப்பட்டு வருகின்றது. உள்ளூர் மற்றும் நாடு முழுவதுமிருந்து வரும் தொண்டர்கள் கோவிலுக்கான இடத்தை பராமரிப்பதில் உதவி வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒன்றுகூடி ஒன்றாகப் பிரார்த்திப்பதன் மூலம் ஆரம்பிக்கின்றனர்.

உள்ளூரைச் சார்ந்த வெவ்வேறு மதத்தினரும் நாடு முழுவதுமிருந்து வரும் தொண்டர்களும் கொங்கோவின் தேசிய வழிபாட்டு இல்லத்திற்கான இடத்தை பராமரிப்பதில் உதவி வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒன்றுகூடி ஒன்றாகப் பிரார்த்திப்பதன் மூலம் ஆரம்பிக்கின்றனர்.

கின்ஷாஷாவில் வழிபாட்டு இல்லத்தை நிர்மாணிக்கும் பணித்திட்டத்திற்கான சமூகத் தொடர்பு அதிகாரியான சேம் காத்தொம்பே, கூறுவது:

“வழிபாடானது, ஒரு மரத்தின் வேர்களைப் போலவே, தெய்வீக அன்பெனும் மண்ணிலிருந்து ஊட்டச்சத்தை ஈர்க்கிறது. சேவை என்பது சமூகத்திற்கு உயிரூட்டும் சாறு போன்றது. தங்கள் நாட்டு மக்களுக்கு பக்தி மற்றும் தியானத்திற்கான ஓர் அழகான இடத்தை வழங்க தங்கள் நேரத்தையும் சக்தியையும் அளிப்பவர்கள், அனைவருக்காகவும் ஒற்றுமை மற்றும் அன்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தை உருவாக்குவதில் உதவுகிறார்கள். ”

https://news.bahai.org/story/1434/