தாமரையின் நிழலில், அமைதியும் சாந்தமும் நிலவுகின்றன


ஒவ்வொரு வருடமும் சுமார் 4 மில்லியன் வருகையாளர்களைக் கொண்டிருக்கும் புது டில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லம், உலகிலேயே மிக அதிகமான வருகையாளர்களைப் பெற்றிருக்கும் பஹாய் தலமாகும்.


19 மார்ச் 2008


புது டில்லி, இந்தியா — அனுதினமும் மக்கள் வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர். சில நேரங்களில் மானிடத்தின் நிலையான வழிந்தோடல். ஒரு நாளைக்கு சுமார் எண்ணாயிரம் பேர், அல்லது 10,000, சில நேரங்களில் 15,000. விடுமுறை நாள்களில் 30,000, அல்லது 50,000. ஒரு முறை 150,000.

இருப்பினும் எல்லோரும் அமைதியாகவும், ஒழுங்காகவும், சில சமயங்களில் மறைவாயுள்ள அறையில் காலணிகளை விட்டுவிட்டு, தாமரை கோயில் என்று அழைக்கப்படும் கட்டிடத்திற்கு படிக்கட்டுகளில் ஏற வரிசையில் காத்திருக்கிறார்கள். உள்ளே, அமைதியான மனநிலை நிலவுகிறது. அவ்விடத்தைச் சுற்றி வரும் ஏராளமான மக்களைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் அங்கு நிலவும் அமைதி ஆச்சரியமாக இருக்கலாம்.

“இங்கு நிலவும் கட்டுப்பாடு எங்களை மிகவும் கவர்ந்துள்ளது” என தமது மனைவியுடனும் மகனுடனும் தென்னிந்தியாவின் ஹைதராப்பாத்தில் இருந்து தலைநகர் புது டில்லியில் அமைந்துள்ள கோவிலுக்கு முதல் முறையாக வந்திருந்த ரமேஷ் செருக்கு கூறினார்.

சென்ற வருடம் சுமார் நான்கு மில்லியன் வருகையாளர்களைக் கொண்டிருந்த கோவில், ரோம் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்திற்கு இணையாகவும் பாரீஸ் நகரின் எய்ஃபெல் கோபுரத்திற்கு அணுக்கமாகவும், உலகின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.

வருகையாளர்களுள் பலர் இந்தியாவைச் சார்ந்தவர்கள், ஆனால் உலகம் முழுவதுமிருந்து மக்கள் அங்கு வருகையளிக்கின்றனர்–ஹிந்துக்கள், கிருஸ்துவர்கள், நாஸ்திகர்கள், இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் பஹாய்கள். அங்கு குடும்பங்களாக, தம்பதிகளாக, தனிநபர்களாக, பள்ளிச் சிறுவர்களாக, சுற்றுப்பயண குழுக்களாக வருகையளிக்கின்றனர்.

பலர், உண்மையிலேயே ஓர் அசத்தலூட்டுவதாக இருக்கும் ஒரு கட்டிடத்தைக் காண வருகின்றனர். ஆனால் அவர்களின் போக்கு வேறு ஏதோ ஒன்றை குறிக்கின்றது.

வெளிப்பார்வைக்கு தாமரைப் பூவைப் போன்றிருக்கும், கோவில் வழி முதன் முதலாக நடந்துவந்த ரீத்தா சிங்கா, எவ்வாறு இருந்தது என வினவிய போது “மன அமைதி என முனுமுனுத்தார். கோவிலுக்கு 27 இதழ்கள் உள்ளன, உலகிலுள்ள மற்ற பஹாய் வழிபாட்டு இல்லங்களைப் போன்று, ஒன்பது பக்கங்களாக அமைந்திட அவை மூன்று அடுக்குகளாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் கோயிலுக்குள் சில நிமிடங்கள் மட்டுமே உள்ள பார்வையாளர்களை எது ஈர்க்கின்றது என்ற கேள்வியைப் பற்றி மக்கள் தொடர்பு இயக்குனர் சத்ருகன் ஜீவ்னானி சிந்தித்துப் பார்த்தபோது இந்த அமைதி உணர்வைத்தான் அவர் குறிப்பிட்டார். குறிப்பிட்டார்.

உலகம் முழுவதுமிருந்து வழிபாட்டு இல்லத்தில் வழிகாட்டிகளாக சேவையாற்ற பல இளைஞர்கள் வருகின்றனர்.

“அவர்கள் திடீரென நிசப்தமான ஓரிடத்தில் தாங்கள் இருந்திடக் காண்கின்றனர்,” என்றார். சற்று நிதானித்து, “ஒரு வேளை சில நிமிடங்கள் அவர்கள் தங்கள் அகநிலையைப் பற்றி சிந்திக்கலாம்.”

தற்போது ஐக்கிய அமெரிக்காவில் வாழும் இந்தியரான சாராங் ஜோஷி, “உங்கள் சிந்தனைகளை உங்களால் செவிமடுக்க முடிவது போன்றிருக்கின்றது,” என ஒப்புக்கொள்கின்றார். அந்த இடத்தின் ஆன்மீக இயல்பினால் மிகவும் மனம் கவரப்பட்டிருந்தார்.

“அவ்விடத்தின் கட்டிடக்கலையினால் அது எவ்வாறு கிரகிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையிலேயே சுவாரஸ்யமான ஒன்று,” என்றார்.

பெரும்பாலான மக்கள், கட்டிடத்தினுள் சில நிமிடங்களே இருக்கின்றனர், ஆனால் அதுவும் கூட அர்த்தமுள்ளதாக இருந்திடக்கூடும் என இதிரு ஜிவானி கூறினார்.

அங்கு பலர் அடிக்கடி வருவது கண்டு, “ஒருவரின் வீட்டின் இரண்டு மணி நேர அமைதி அர்த்தமற்றதாக இருக்கலாம், ஆனால் கோவிலுக்குள் இரண்டு நிமிடம் இருப்பது உங்கள் மனதைத் தொடுவதாக இருந்திடக்கூடும்,” என்றார்.

“இங்கு எவ்வித பிரசங்கமோ, உரைகளோ இல்லாதிருப்பதை மக்கள் விரும்புகின்றனர். அவர்கள் தங்களின் சொந்த சமய நம்பிக்கையை அங்கு கொண்டு வந்து அமர்ந்து பிரார்த்திக்கின்றனர் அல்லது தியானிக்கின்றனர்.”

சுமார் 110 கோடி மக்களைக் கொண்டு, உலக மக்கள் தொகையில் இரண்டாவது நிலை வகிக்கும் இந்தியா, செழுமையான சமய மரபுகளைக் கொண்டுள்ளது. அங்கு 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் ஹிந்துக்கள், மற்றும் இஸ்லாம், கிருஸ்துவ, சீக்கிய, ஜைன, பஹாய், பௌத்த, யூத மற்றும் பிற சமயத்தவர்களும் உள்ளனர்.

ஒரு தெய்வீக மெய்நிலையின் மடிப்பவிழ்ந்து வரும் அத்தியாயங்களைப் பிரதிபலிக்கின்ற,  எல்லா சமயங்களும் கடவுளிடமிருந்தே வருகின்றன  எனும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் பஹாய் வழிபாட்டு இல்லங்கள் அனைத்தும் எல்லா சமயத்தவர்களும் கடவுளை வழிபடுவதற்காக கட்டப்படுகின்றன.

எதிர்காலத்தில், மருத்துவமனைகள், கல்வியல் மற்றும் அறிவியல் ஸ்தாபனங்கள் உட்பட முதியோர் இல்லம் ஆகிய வசதிகளின் மையத்தில் இத்தகைய பஹாய் கோவில்கள் கட்டப்படவிருக்கின்றன. (வருகையாளர்களுள் சிலர் இதைப் பற்றி கேள்விப்பட்டு அத்தகைய ஓர் இல்லத்திற்கான பட்டியலில் தங்களையும் சேர்த்துக்கொள்ள இயலுமா என வினவுகின்றனர். வழிபாட்டு இல்லத்தின் பொது நிர்வாகியான ஷாஹீன் ஜாவிட், அது வருங்கால திட்டங்கள் குறித்த ஒரு தொலைநோக்கு எனவும் தற்போது அத்தகைய துணை ஸ்தாபனங்களுக்கான திட்டங்கள் ஏதும் கிடையாது என அவர்களிடம் கூறவேண்டும் என்றார்.

கோவிலின் உட்புறம்

புது டில்லி பஹாய் வழிபாட்டு இல்லத்தின் உட்புறத்தில், அதன் பிரதான தளம் பிரார்த்தனை மண்டபம் என அழைக்கப்படுகின்றது, அதில் 1300 பேர் அமரலாம். சாதாரண நாள்களில், பஹாய், இஸ்லாம், ஹிந்து, பௌத்த மற்றும் கிருஸ்துவ புனித வாசகங்களிலிருந்து ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு முறை சுமார் ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்கு வாசிப்புகள் நடைபெறும்.

வருகையாளர்கள் உள்ளே பிரவேசிப்பதற்கு முன், அவர்கள் பார்க்க முடியாதவை பற்றி விளக்கமளிக்கப்படுவார்கள். அங்கு சிலைகள் கிடையாது, முக்கிய பஹாய் உருவப்படங்கள் கிடையாது, பூஜை மாடம் கிடையாது, ஹிந்து தெய்வங்கள், புத்தரின், அல்லது இயேசுவின் பிரதிநிதித்துவங்கள் கிடையாது,

இந்த விஷயம் சில வருகையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கின்றது. ஐக்கிய அமெரிக்காவிலிருந்து விடுமுறைக்காக வந்திருந்த ஏழு வயது அகில் ரேகுலபெல்லி சற்று குழப்பமுற்றான். “நான் கூட உள்ளே தெய்வங்களெல்லாம் இருக்குமென நினைத்தேன்,” என்றான்.

வளைவுகளின் அழகிய கோடுகள், பயன்படுத்தப்படும் பொருள்களின் தன்மை, வடிவமைப்பு, குவிமாடத்தின் உயரம் ஆகியவை உயர்த்திக்காட்டும் உட்புறத்தின் எளிமை மனதைக் கவர்கின்றது. மில்லியன் கணக்கிலான வருகையாளர்கள் 21 வருடங்களுக்கு முன் திறக்கப்பட்ட அக்கட்டிடத்தின் வழி நடந்து சென்றுள்ளனர், ஆனால் கோவில் இன்னமும் பசுமையுடன், மாசுபடாமல் இருக்கின்றது. உத்வேகமூட்டுவதாகவும், ஆன்மீகத் தன்மையுடையதாகவும் இருக்கின்றதென சிலர் கூறுவர்.

விளிப்பைச் சுற்றி, வாழ்க்கையின் இயல்பு மற்றும் சமயத்தைப் பற்றி பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லாவின் திருவாக்குகளிலிருந்து ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எளிமையான எழுத்துகளில் மேற்கோள்கள் உள்ளன.

“எல்லையிலா பரவெளியினில் விரைந்து சென்று, விண்μலகின் பரப்பினையே கடந்திடினும், எமது கட்டளைகளுக்கு அடிபணிதலிலும், எமது வதனத்தின் முன்னால் பணிவிலுமல்லாது வேறெதனிலும் நீ அமைதி காண இயலாது,” என்கிறது ஒன்று, மற்றது, இவ்வுலகக் காரியங்களிலேயே ஈடுபட்டிராதே; ஏனெனில் யாம் தீயைக் கொண்டு தங்கத்தைச் சோதிப்போம், தங்கத்தைக் கொண்டு எமது ஊழியர்களைச் சோதிப்போம்” என மற்றொன்று கூறுகிறது.

மானிடத்திற்கான கடவுளின் மடிப்பவிழ்ந்து வரும் திட்டத்தைப் போதிப்பதற்காக வரும் கிருஷ்னர், ஸோரோவேஸ்டர், புத்தர், மோசஸ், இயேசு, முகம்மது, பாப் பெருமானார் போன்றோர் உள்ளிட்ட அவதாரங்களின் வரிசையில் பஹாவுல்லா ஆகக்கடைசியாக வந்தவர் என்பது பஹாய்களின் நம்பிக்கையாகும்.

பஹாவுல்லாவின் போதனைகளின் மையத்தில் வீற்றிருக்கும் நம்பிக்கைகளான, கடவுளின் ஒருமை, மானிடத்தின் ஒருமை, சமயங்களின் ஒருமை ஆகியவற்றிற்கு பஹாய் வழிபாட்டு இல்லம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என் வருகையாளர்களுக்க தெரிவிக்கப்படுகின்றது.

நாம் ஒரே உண்மை கடவுளால் படைக்கப்பட்ட ஒரே மனிதக் குடும்பம் என்பதை மக்களுக்கு உணர்த்துவதே பஹாய் வழிபாட்டு இல்லத்தின் நோக்கமாகும்—ஆதலால் நாம் இங்கு வந்து நமது வேறுபாடுகள் அனைத்தையும் மறந்துவிட வேண்டும்,” என்றார் திரு ஜிவானி.

தாமரை

பெரும்பாலான மக்கள் அந்த இடத்தின் உணர்வு மற்றும் அதன் நோக்கத்துடனேயே அவ்விடத்தை விட்டுச் செல்கின்றனர் என திரு ஜிவ்னானி நினைக்கின்றார்.

“அங்கு வரும் பெரும்பாலானோர் அதற்காக வருவதில்லை எனினும் அவ்விடம் ஓர் ஆன்மீக அனுபவமாக ஆகிகின்றது,” என்றார். “வழிபாட்டு இல்லம் எல்லா சமயங்களுக்கும் மதிப்பளிக்கின்றது என்பதை மக்கள் புரிந்துகொள்கின்றனர்.”

கோவில் ஒரு தாமரைப் பூவின் வடிவத்தில் இருப்பது இந்தியாவை பொறுத்த வரை முக்கியத்துவம் மிக்க ஒன்றாகும், என அவர் குறிப்பிட்டு, ஆசிய சமயங்களான ஹிந்து, புத்த, ஸோராஸ்த்திரிய சமயங்கள் அனைத்தும் தாமரைப் பூவுடன் ஒரு விசேஷ தொடர்பைக் கொண்டுள்ளன.

தாமரைப் பூ தூய்மையைப் பிரதிநிதிக்கின்றது. அந்த மலர் பெரும்பாலும் தேங்கி நிற்கும் சேற்று நீரில் காணப்படுகின்றது. இது மனித இனம் மாசுகளிலிருந்து தனது உண்மையான ஸ்தானத்திற்கு உயர்வது எனும் அடையாளக்குறி குறிப்பாக அர்த்தமுள்ளதாகின்றது என்றார் திரு ஜிவ்னானி.

“வழிபாட்டு எந்தவொரு பாரம்பரிய சமய ரீதியான கட்டிடக்கலையின் வடிவத்தில் வடிவமைக்கப்படவில்லை. அதற்கு ஒரு சர்வலோக வடிவம் உள்ளது, ஆதலால் அனைவரும் அங்கு வரவேற்கப்படுவதாக உணர்கின்றனர்.”

கோவிலின் கட்டிடக்கலைஞரான கெனடாவைச் சார்ந்த ஃபாரிபொஸ் சப்ஹா, தாமரைப் பூவின் பன்மடங்கான ஆன்மீக உட்பொருள்களின் காரணமாக அவ்வடிவத்தைத் தாம் குறிப்பாகத் தேர்ந்தெடுத்ததாக கூறினார்.

தாமரை கடவுளின் அவதாரங்களைப் பிரதிநிதிக்கின்றது, மற்றும் அது தூய்மை, மென்மை ஆகியவற்றிற்கான அடையாளக்குறியாகவும் இருக்கின்றது என பிரசுரிக்கப்பட்ட விமர்சனங்களில் கூறியுள்ளார். “அதன் முக்கியத்துவம் இந்தியர்களின் மனங்கள் மற்றும் இதயங்களில் ஆழமாக வேரூனிறியுள்ளது.”

மக்கள் சில வேளைகளில் புது டில்லியில் உள்ள தாமரை கோவில் மற்றும் சிட்னி, ஆஸ்திரேலியாவில் உள்ள, பஹாய் கோவிலுக்கும் முன்பு சுமார் 14 வருடங்களுக்கு முன் 1973’இல் திறக்கப்பட்ட ஓப்ரா ஹௌவுஸ் (Opera House) இரண்டிற்கும் இடையிலான ஒற்றுமை குறித்து வினவுகின்றனர்.

அக்கட்டிடங்கள் ஒவ்வொன்றிற்கான கருத்தாக்கமும் வெவ்வேறானது என்றார்: பஹாய் கோவில் தாமரை வடிவத்தின் உத்வேகம் பெற்றதாகும், அது வட்டமானது. (சிட்னி நகரிலுள்ள) ஒப்ரா ஹவுஸ் ஒரு பாய்மரக்கப்பலை சார்ந்துள்ளது, அது ஒரே திசையை நோக்கிப் பாய்கின்றது. கட்டுமான செய்முறைகளும் வேறானவை, என திரு ஜிவ்னானி குறிப்பிட்டார்.

கோவிலும் பஹாய்களும்

இந்தியாவில் ஒரு மில்லியன் பஹாய்களுக்கும் மேல் உள்ளனர். இது எந்த நாட்டையும் விட மிக அதிகமானதாகும், ஆனால் கோவில் பஹாய் சமயத்தைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை, என்றார் இந்திய பஹாய்களின் தேசிய ஆன்மீக சபையின் ஒன்பது உறுப்பினர்களுள் ஒருவரான திரு அலி மேர்ச்சன்ட்.

“கோவில் எங்களுக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்துள்ளது, என்றார். “இப்பொழுது அக்கட்டிடத்திற்குப் பின்னால் உள்ள உணர்வை மக்களுக்குப போதிக்க வேண்டும்.”

https://news.bahai.org/story/611/