
மாத்துன்டா, கென்யா — மேம்பாட்டின் வெவ்வேறு கட்டத்தில் இருப்பினும், கென்யாவிலும், கொங்கோ ஜனநாயக குடியரசிலும் பஹாய் வழிபாட்டு இல்லங்களுக்காக குறிக்கப்பட்டுள்ள இடங்கள் ஆர்வநம்பிக்கை, ஐக்கியம் ஆகியவற்றுக்கான ஆரம்ப காட்சிகளை வழங்குகின்றன.

“வெளிப்பட்டு வரும் கோவில், இங்கு ஒற்றுமைக்கான ஓர் அடையாளக்குறியாகியுள்ளது. இங்கு என்ன நடக்கின்றது என்பதைக் காண மக்கள் வருகின்றனர்,” என மாத்துன்டா, கென்யாவில் கட்டப்பட்டு வரும் உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கான பணித்திட்ட நிர்வாகி ஸ்டீவன் ம்வாங்கி கூறுகின்றார்.
அருகிலுள்ள கிராமங்களிலிருந்து வெவ்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள், கட்டுமானம் ஆரம்பிக்கப்படும் முன்பே கோவில் தளத்தில் கூட்டு வழிபாடுகளுக்காக ஒன்றுகூடி வருகின்றனர். அக்கட்டுமான திட்டத்திற்கு ஓர் உடைமை உணர்வைப் பெற்ற அந்த இடத்தின் அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்கள், அங்குள்ள ஒரு தாவர நர்சரியின் பராமரிப்பு உட்பட பல்வேறு பணிகளுக்கு உதவி வருகின்றனர்.

கோவிலுக்கான தளம், சேவைக்கான திறனாற்றல்களை உருவாக்கும் பஹாய் கல்வியல் திட்டங்களில் பங்கேற்கும் இளையோருக்கான ஓர் ஓன்றுகூடும் இடமாகவும் ஆகியுள்ளது. மாத்துன்டாவைச் சேர்ந்த ஓர் இளைஞரான விவியன், “கடவுளை வழிபடுதல் நம்மை உள்ளார்ந்த நிலையில் தன்மைமாற செய்கின்றது–தன்னலமற்ற செயல்களின் மூலம் நமது சமய நம்பிக்கையை நடைமுறைப் படுத்துதல்.”
அவ்விடத்தைச் சேர்ந்த மற்றோர் இளைஞரான வெஸ்லி, “கோவில் தளத்தில் எல்லா சமயத்தைச் சார்ந்தவர்களும் இந்தத் திட்டத்திலும், வழிபாட்டுக்கான ஒன்றுகூடல்களிலும் பங்கேற்பதன் மூலம், எவ்வாறு வழிபாட்டு இல்லம் மனிதகுல ஒருமை, நேர்மறையான செயல்களின் மூலம் சமுதாய மேம்பாடு ஆகியவற்றைப் பிரதிநிதிக்கின்றது என்பதைக் காண்கின்றனர்,” என்றார்.

நோய்த் தொற்றினால் உண்டாக்கப்பட்ட சவால்களைக் கருதாமல், கென்யா மற்றும் கொங்கோ ஜனநாயக குடியரசின் பஹாய்கள், விடாமுயற்சியுடன் தங்கள் அரசாங்கங்கள் நிலைப்படுத்தியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே வேளை கோவில் பணித்திட்டத்தைத் தொடர்வதற்கான ஆக்ககர வழிகளையும் கண்டுள்ளனர்.
கென்யாவின் வழிபாட்டு இல்லத்தின் மைய கட்டுமானத்திற்கான அடித்தலங்கள் இடப்பட்டுள்ள வேளை, கோவிலின் ஒன்பது சுவர்களும் ஏற்றப்பட்டுள்ளன, மற்றும் கோவில் வடிவத்தின் நேர்த்திமிகு சாய்ந்த கூறைக்கான ஆதரவு தூண்களும் போடப்பட்டுள்ளன.

கொங்கோ ஜனநாயக குடியரசில், தேசிய பஹாய் வழிபாட்டு இல்ல வடிவத்தின் திரைநீக்கம் குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. தலைநகரான கின்ஷாஷா’வில் அமைந்துள்ள கோவிலுக்கான இடம், கட்டுமானத்திற்காக ஆயத்தமாக்கப்பட்டு வருகின்றது. உள்ளூர் மற்றும் நாடு முழுவதுமிருந்து வரும் தொண்டர்கள் கோவிலுக்கான இடத்தை பராமரிப்பதில் உதவி வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒன்றுகூடி ஒன்றாகப் பிரார்த்திப்பதன் மூலம் ஆரம்பிக்கின்றனர்.

கின்ஷாஷாவில் வழிபாட்டு இல்லத்தை நிர்மாணிக்கும் பணித்திட்டத்திற்கான சமூகத் தொடர்பு அதிகாரியான சேம் காத்தொம்பே, கூறுவது:
“வழிபாடானது, ஒரு மரத்தின் வேர்களைப் போலவே, தெய்வீக அன்பெனும் மண்ணிலிருந்து ஊட்டச்சத்தை ஈர்க்கிறது. சேவை என்பது சமூகத்திற்கு உயிரூட்டும் சாறு போன்றது. தங்கள் நாட்டு மக்களுக்கு பக்தி மற்றும் தியானத்திற்கான ஓர் அழகான இடத்தை வழங்க தங்கள் நேரத்தையும் சக்தியையும் அளிப்பவர்கள், அனைவருக்காகவும் ஒற்றுமை மற்றும் அன்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தை உருவாக்குவதில் உதவுகிறார்கள். ”