அமைதியான புரட்சியாளர்கள்


உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு சமூகப்பள்ளியின் சிறுவர்கள் ஒரு வருகையாளரைப் பார்த்து புன்னகைக்கின்றனர். லக்னௌ’வில் உள்ள FAS ஆசிரியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பாடத்திட்டம் மற்றும் திட்டமிடலுக்கு உதவியாக பயிற்சிகள் வழங்குகிறது.

அமைதியான புரட்சியாளர்கள்


8 அக்டோபர் 2021


டாஸ்டோய், உத்தரப் பிரதேசம், இந்தியா — இந்த இளைஞர்களை முதன் முதலில் பார்க்கும்போது இவர்கள் பள்ளிகள் அமைப்பவர்களாகத் தோன்றாது.

இவர்கள் சிறிதும் தொடர்பே இல்லாத பின்னனியைச் சார்ந்தவர்கள். ஒருவர் உயர்நிலைப் பள்ளியை முடிக்காதவர், மற்றவர் ஒரு மெக்கானிக், மற்றுமொருவரோ கிராம “மருத்துவர்”

அல்லது அவர்கள் நடத்திக்கொண்டிருப்பது பள்ளிகள் என்பதுமுதல் பார்வையிலேயே யூகிக்கு முடிந்த ஒன்றல்ல. உதாரணமாக, மெக்கானிக்கான ராம் விலாஸ் பால், தன் உடன்பிறந்தவருடன் சேர்ந்து ஒரு சிறு நிலத்திற்குச் சொந்தக்காரராக இருக்கின்றார். இந்த நிலத்தில் ஒரு பக்கம் மாட்டுத்தொழுவமும், மற்றொ பக்கம் பள்ளிக்கூடமும் உள்ளன. இந்த எட்டு பேர்களுக்கும் சமூகத் தன்மைமாற்றமே பொதுவான லட்சியம் என்பதும் அத்தகைய லட்சியத்தின் நிறைவேற்றத்திற்கான இடம் பள்ளிக்கூடம் என்பதும் அவர்களின் நம்பிக்கையாகும். எப்போதுமே அடக்கமாகப் பேசும் திரு பால் கூறுவது போல, இந்தியாவில் உள்ள மக்கள் இதையே பள்ளிகளில் எதிர்பார்க்கின்றனர்.

“சமூகமும் குடும்பங்களும் பொறுப்புமிக்கக் குடிகளை உருவாக்கிட பள்ளிகளையே நம்பியுள்ளனர்,” என்கிறார் அவர். “ஒரு குழந்தை தவறு செய்யும்போது, இதைத்தான் உங்கள் பள்ளி ஆசிரியர்கள் சொல்லிக்கொடுகின்றார்களா?” என மக்கள் கேட்பதுண்டு.

இந்த எட்டு பேரில் இருவரைத் தவிர மற்றவர் அனைவரும் 20வயதானவர்கள். பல இளைஞர்கள் வேலை தேடுவதற்காக கரங்களை நோக்கிபடையெடுக்கும் வேளை இவர்கள் மட்டும் கிராமத்திலேயே தங்கி அடுத்த தலைமுறையினரை வார்ப்பதில் உதவுகின்றனர். பெரும் முதலீடு இல்லாமலும் அளவுக்கு மீறிய வாக்குறுதிகள் இன்றியும் இதை செய்கின்றனர்.

லக்னௌ அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நியூ ஐடீல் அகாடமி’யின் கணித வகுப்பு திறந்தவெளியில் கூடுகின்றது, அதே நேரம் மற்றொரு வகுப்பின் மாணவர்கள் கூறைக்குக் கீழ் ஒரு மேஜையைச்சுற்றி அமர்ந்துள்ளனர்.

பெரும்பாலன இளைஞர்கள் கிராமத்தார்களிடம் நிலம் மற்றும் தளவாடங்களைப் பெற்று கிராமத்தார்களின் உதவியோடும் கற்ற ஆனால் வேலையின்றி இருக்கும் கிராம இளைஞர்களை ஆசிரியர்களாக அமர்த்துவதன் மூலமாகவும் இந்த சமூகப் பள்ளிகளை ஆரம்பிக்கின்றனர். இந்த உதவிகளுக்குப் பதிலாக சிறு கட்டணம் ஒன்றை மட்டும வசூலித்து கிராமத்தாரின் குழந்தைகளுக்கு நல்ல பொதுக் கல்வி வழங்குவதாக இவர்கள் வாக்களிக்கின்றனர். (உதாரணமாக, பள்ளிக் கட்டணம் உயர்நிலை மானவர்களுக்கு சுமார் 50 ரூபாயாக இருக்கலாம்.) கிராமத்தார்களுக்கு, இது நல்ல ஏற்பாடகவே இருக்கின்றது. அரசாங்கப் பள்ளிகள் கட்டணங்கள் வசூலிப்பதலில்லையெனினும் அங்கு கல்வி மிகவும் தரக்குறைவாக உள்ளது. ஒரு பெற்றோர் கூறுவது போல, “1லிருந்து 10வரை எண்ண முடியாத எட்டாம் நிலை மாணவர்களை அங்கு காணலாம்.”

இன்று இவ்விதமான எட்டு பள்ளிகள் உத்தரப்பிரதேசத்தின் கக்கோரி, பந்தரா மற்றும் காரக்பூர் பகுதிகளில் உள்ளன. இவை மகானத்தின் தலைநகரமான லக்னெளவுக்கு அருகிலேயே உள்ளன.

இப்பள்ளிகளில் சில மிகவும் நன்றாகவே இயங்குகின்றன. உதாரணமாக 160 மாணவர்களைக் கொண்ட வினோத் குமார் யாதவின் குலோரி பொதுப் பள்ளியைக் குறிப்பிடலாம். 73 மாணவர்களைக் கொண்ட டாஸ்டோயில் உள்ள பாலின் Nine Point பள்ளி போன்ற மற்றவை சற்று சிரமத்துடனேயே இயங்கிவருகின்றன. பிரஜேஷ் குமார் போன்றோரின் கவனன்ட் பொதுப் பள்ளி போன்ற மற்றவை உடனடி உதவியை வேண்டி நிற்கின்றன. (அடுத்த வருடம் திரு குமார் தனது பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற உத்தேசித்துள்ளார்.)

FASன் உதவி

இவர்கள் அனைவரும் தங்கள் இலக்குகளை திட்டமிடவும் தொடர்ந்து செயல்படவும் லக்கனெளவில் உள்ள Foundation for the Advancement of Science (FAS) எனப்படும் அரசாங்க சார்பற்ற ஒரு இயக்கம் உதவுகின்றது. இந்த இயக்கம் சிரமமான நேரங்களில் அவர்களுக்கு வழிகாட்டி, சில வேளைகளில் ஒரிருவருக்கு ஊதியமும் வழங்குகின்றது. மேலும் இந்த இயக்கம் அப்பள்ளிகளில் பயன்படுத்திட ஒரு புதுமுறையான பாடமுறையையும் தயார் செய்கின்றது.

இந்த இயக்கம் தன்னாதாரமான மற்றும் தன்னிறைவான கிராமப்புற கல்வி முயல்வுகளில் பல வருடகால ஆராய்ச்சிக்குப் பிறகு இத்தகைய சமூகப் பள்ளிகளை நிறுவதில் முன்நிற்கின்றது.

“நாங்கள் உத்தரப் பிரதேசத்தில் பல டியூட்டோரியல் பள்ளிகளோடு ஒத்துழைத்துள்ளோம். அவை வெளிப் பொருளாதார ஆதரவை பெற்றிருந்தும் இறுதியில் அம்முயற்சிகள் தோல்வியுறவே செய்தன. இதற்கான தீர்வுகள் தங்கள் சொந்த வளங்களை பயன்படுத்துகின்ற ஒரு கிராமத்தின் உள்ளிருந்தே வரவேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்தோம், என ஒரு FAS அதிகாரி விளக்கினார்.

இத்தகைய சமூகப் பள்ளிகளுக்கு, தக்க செயலூக்கம், தூரநோக்கு, மற்றும் கடுமுயற்சி மற்றும் விடாமுயற்சி செய்திடவும் தயாராக உள்ள தனிநபர்களை FAS முதலில் தேடியது. பஹாய் கோட்பாடுகளின் உற்சாக உணர்வால் இயங்கும் இந்த நிறுவனம், தகுந்த உணர்வுகளுடைய படித்த ஆனால் வேலையற்ற இளைஞர்களை லக்கனெளவின் அக்கம் பக்கத்து கிராமங்களில் விரைவில் கண்டுபிடிக்க சிரமப்படவில்லை.

இயக்கத்தில் சேவையாற்றுவோர் பள்ளிகளை நிறுவதில் இளைஞர்கள் கண்டிப்பாக பிரச்சினைகளை எதிர்நோக்குவர் என உணர்ந்திருந்தனர், ஆனால் முன் அனுபவத்தின் வாயிலாக இத்தகைய பிரச்சினைகள் அவற்றோடு திட்டம் குறித்து சொந்தம்பாராட்டும் உணர்வையும் உருவாக்குகின்றன என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். ஒரு கிராமத்தில் இத்தகைய பள்ளிகளை உருவாக்கும் இச்சிரமம் மிகு காரியத்திற்கு பெரும் முயற்சியும் பொருப்புணர்வும் தேவைப்படுகின்றன. இப்பள்ளிகளுக்காக இந்த இளைஞர்கள் சிரமப்படும்போது, அவர்களுடைய மனவுறுதி மேலும் வலுப்பட்டு அப்பள்ளிகளின்பால் அவர்களுடைய பற்றும் அதிகரிக்கின்றது.

பெற்றோர்களின் கருத்து

சுந்தர்லால் என்பவர் தமது குடிசைக்கு வெளியே உட்கார்ந்திருந்தார். வெளியே சைக்கிள் டயரோடு விளையாடிக்கொண்டிருந்த தம்முடைய மகன்களை பிராஜேஷ் குமாரின் பள்ளிக்கு ஏன் அனுப்புகிறார் என கேட்கப்பட்டார். அதற்கு அவர் உடனே: “ஏனெனில் அவருடைய பள்ளிப் பிள்ளைகள் நல்ல மரியாதையுடைய மாணவர்களாக இருக்கின்றனர்,” என்றார்.

இந்த சமூகப் பள்ளிகள் குறித்து கேள்வி கேட்கப்படும்போது பெற்றோர்களிடையே இந்தப் பதிலே பல்லவியாக இருக்கின்றது.

திரு குமார் இதற்கு விளக்கமளிக்கின்றார்: “இப்பள்ளிகளை நாங்கள் ஆரம்பித்ததற்கான காரணம் வெளியே எங்கும் கிடைக்கும் அதே கல்வியை மிகவும் தரத்தோடு அளிப்பதற்காக அல்ல. மாறாக, புதிதும் மிகவும் இன்றியமையாததுமான ஒன்றை நன்னெறி கல்வியின் வாயிலாக அளிப்பதே எங்கள் நோக்கம்.”

இந்தப் பள்ளிகள் அனைத்தும் பஹாய் அனைத்துலக சமூகத்தினால் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் இளமிளைஞர்களுக்குமான நன்னெறி கல்வி குறித்த பாடமுறையையே பயன்படுத்துகின்றன.

நகரத்தில் நல்ல வேலைக்கு வாய்ப்பளிக்கக்கூடிய கல்விப்பயிற்சியில் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ள திரு குமார்: “குறைந்த முயற்சியில் நல்ல வருமானம் ஈட்டக்கூடிய எத்தனையோ வேலைகளை நான் செய்ய முடியும். ஆனால், இங்கு எனக்கென்று இல்லாமல், இந்த கிராமத்திற்கு, நன்னெறி, சமூகப் பொருளாதார மற்றும் பகுத்தறிவு மாற்றங்களை கொண்டுவர முயலுகிறேன்.”

நாட்டுப்புற இந்தியாவை பாதிக்கும் அதே சமூகப் பிரச்சினைகளை இந்த சமூகப் பள்ளிகளும் எதிர்நோக்குகின்றன. இவற்றில் முதன்மையாக ஜாதிப் பிரச்சினையும் பெண்கள் குறித்த முன்தப்பெண்ணங்களும் உள்ளன. டாஸ்டோய் கிராமத்து பஞ்சாயத்தின் உறுப்பினரான பகவான்தின், ஆம்பத்தில் ஜாதிப் பிரச்சனை தமது மகளை திரு பாலின் பள்ளிக்கு அனுப்புவதில் தடங்கலாக இருந்ததை ஒப்புக்கொள்கின்றார்.

திரு பகவான்தின், பால் வேறு ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தது தமது தயக்கத்திற்கு காரணமாக இருந்தது என்கிறார். ஆனால், அவருடைய மாணவர்கள் நன்றாகப் படிக்கவும் எழுதவும் மற்றும் ஒழுங்கு நிறைந்திருக்கவும் கண்டு, தமது மகளை அருகேயுள்ள வேறு ஒரு கிராமதிற்கு தமது மகளை அனுப்ப வேண்டும் எனும் காரணத்தினாலும் ஜாதி பிரச்சனையை ஒதுக்கி வைத்ததாக கூறுகின்றார். “நான் எடுத்த முடிவு குறித்து வருந்தியதே இல்லை.”

கோட்பாடுகள் கற்றுக்கொடுப்பது

பள்ளிகள் அனைத்திலும், சமத்துவம் குறித்த கல்வி மற்றும் பரஸ்பர மரியாதையின் தேவை பற்றி ஆரம்பத்திலிருந்தே அறிவுறுத்தப்படுகின்றது. இது பாடமுறையில் கலைகளைச் சேர்ப்பதின் வாயிலாகவும் பல்வேறு செய்முறைகளின் வாயிலாகவும் செயல்படுத்தப்படுகிறது.

உதாரணமாக, “குறுநாடகங்கள் மற்றும் பாடல்கள் வாயிலாக இந்த நெறிகளைக் கற்றுக்கொடுப்பது மிகவும் ஆக்கம் மிக்கதாக இருக்கின்றது,” என்றார் திரு யாதவ்.

இந்த இடங்களில் கல்விபெறுவது ஒருபுறம் இருக்க பெண்கள் வீட்டைவிட்டே வெளியேறுவதில்லை என்பதை கருத்தில் கொண்டு பெண் குழந்தைகளை ஒதுக்கும் பழக்கம் மிகவும் முன்செயலாக்கத்தோடு அனுகப்படுகின்றது.

கிராமத்தில் உள்ள பெற்றோர்களை அவர்களின் இல்லங்களிலேயே சென்று சந்தித்து தங்கள் மகன்களை மட்டும் அல்லாது தங்கள் மகள்களையும் பள்ளிக்கு அனுப்புவதன் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக் கூறுவோம். “மிகவும் பொறுமையான கருத்துரைகளுக்குப் பிறகு அவர்கள் புரிந்துகொள்கின்றனர்,” என திரு பால் விளக்குகின்றார்.

இப்போது இந்த இளம் தொழில்முனைவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை அவர்கள் தங்கள் பள்ளிகளை இலாபத்துடன் நடத்துவதே ஆகும். விலைவாசி உயர்வு, தொடர்ந்தாற்போல் பள்ளிக் கட்டணம் கட்டப்படாமை, மற்றும் குழந்தைகள் வயல்வேலைகளுக்கு இழுத்துச்செல்லப்படுவது போன்ற பிரச்சினைகளும் உள்ளடங்கும். பள்ளிகளின் உரிமையாளர்கள் இவற்றுக்கான தீர்வுகளைத் தேடும் அதே வேளை, FAS இந்தப் பள்ளிகள் கிராமங்களில் ஐயத்திற்கிடமில்லாத சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களை கொண்டுவருவதிலும், வெற்றிமிக்க கல்வி நிறுவனங்களாக உருவெடுப்பதற்கான உள்ளாற்றலிலும் உறுதியோடு இருக்கின்றது. பார்க்கப்போனால், உத்தரப்பிரதேசத்தில் FAS மேற்கொண்டு 20 வேலையற்ற இளைஞர்கள் இத்தகைய பள்ளிகளை துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

கட்டுரையும் படங்களும் – அராஷ் வாஃபா பாஃஸ்லி

மூலாதாரம்: https://news.bahai.org/story/639/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: