சமோவா ஜூப்லி விழாவில் அரச வரவேற்பு


சமோவா ஜூப்லி விழாவில் அரச வரவேற்பு


8 அக்டோபர் 2021


சமோவா தீவின் தேசிய ஆன்மீக சபையின் ஓர் அங்கத்தினராகிய, முலிபோலா அலே அவர்கள் 50வது வருட விழா, கோவில் கட்டப்பட்ட 20வது வருட விழா ஆகியவற்றின் போது உரையாற்றுகிறார் > பெரிய நிழற்படம் > மற்ற படங்கள் அப்பியா, சமோவா, 30 நவம்பர் 2004 (BWNS) — “ஒரு கடலின் அலைகள்” என பெயிரடப்பட்ட மாநாட்டின் போது பங்கேற்பாளர்கள் அரச வரவேற்பைப் பெற்றனர். இந்த மாநாடு சமோவா தீவில் பஹாய் சமயத்தின் 50வது ஆண்டு மற்றும் சமோவா பஹாய் கோவிலின் 20வது வருட விழாவை ஒட்டி நடைபெற்றது.

சமோவா அரசரான, மேன்மை மிகு 2வது சுசுகா மலியதோவா தனுமாபிஃலி அவர்கள் “தெய்வீகத் தந்தையிடம் ஆழ்ந்த வியப்பும் நன்றியுணர்வும்” கொண்ட தமது வாழ்த்துக்களை வருகை தந்தோருக்கு தெரிவிப்பததாக கூறினார். 

பஹாய் சமயத்தின் ஓர் அங்கத்தினராகிய மாட்சிமை தங்கிய அரசர், “பல நண்பர்கள் ஒன்று சேர்ந்து விலைமதிப்பற்ற இச்சமயத்தை அதன் தற்போதைய வளர்ச்சி கட்டத்தை அடைய உதவியுள்ளனர். உலகைச் சுற்றியுள்ள பஹாய்களை சந்திப்பதென்பது எனக்கு எப்போதுமே பெருமகிழ்வுக்கு காரணமாகும்“ என அவ்வேளையில் குறிப்பிட்டார்.

தமது பேருரையில் சமோவாவில் உள்ள பஹாய் கோவிலைப் பற்றி அவர் மேலும் ஒரு சிறப்புரை ஆற்றினார். அது அந்த விழாவை ஒட்டி அவருடைய மகளான சூசுகா தோவா தொஸி மலியதோவா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு விருந்தின்போது ஆற்றப்பட்டது. சூசுகாவும் பஹாய் சமயத்தின் ஓர் அங்கத்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

“இப்போது இங்கு நாம் கொண்டாடும் பல வெற்றிகளுள் ஒரு வெற்றி தனிச்சிறப்பு மிக்கதாக இருக்கின்றது. அது, இங்கு இருபது வருடங்களுக்கு முன்பு அர்ப்பணம் செய்யப்பட்ட பஹாய் கோவில் கட்டப்பட்டதாகும்,”என அவர் மேலும் கூறினார்.

சமோவா கோவில் குவிமாடத்தின் உட்புற காட்சி

22 செப்டம்பர் 2004ல் நடந்த அந்த சிறப்பு விருந்தில், சமோவா தீவின் இடைக்கால பிரதமர் பிஃயாமே மத்தாபாஃ நாவோமி, அமைச்சரவையின் பிற அங்கத்தினர்கள், தலைமை நீதிபதி, வெளிநாட்டுத் தூதர்கள், மற்றும் கிருஸ்தவ தேவாலயங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

கூடியிருந்த 150 பஹாய்களுள் 1954ல் பஹாய் சமயத்தை சமோவா தீவுக்குக் கொண்டு வந்த லில்லியன் விஸ்-அலாயி, கோவிலின் கட்டடக் கலைஞரான ஹோஸ்ஸேன் அமானட் ஆகியோரும் அடங்குவர்.

நிகழ்ச்சி உலக நீதி மன்றத்தின் சிறப்பு செய்தியை வாசிப்பதோடு ஆரம்பிக்கப்பட்டது. அதனை சமோவா தேசிய ஆன்மீக சபையின் செயலாளரான ஸ்டீவன் பெர்சிவல் வாசித்தார்.

“உங்கள் தேசம் என்றும் நிலையான ஓர் சிறப்பை பெற்றுள்ளது. தமது ஆட்சியின் போதே பறாய் சமயத்தை ஏற்றுக்கொண்ட முதல் அரசரான, 2வது சுசுகா மலியதோவா தனுமாபிஃலியைப் பெற்றதன் வாயிலாக உங்கள் நாடு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது” என உலக நீதி மன்றம் தனது செய்தியில் குறிப்பிட்டது.

“சமோவாவின் பஹாய் சமூகம் இவ்வட்டாரத்தின் பிற பகுதிகளிலும் முக்கிய சேவைகள் ஆற்றியுள்ளது. அவர்கள் தங்கள் உத்வேகம், அர்ப்பண உணர்வு, மற்றும் தீவிரம் போன்றவற்றினால் தனிச்சிறப்பு பெற்று விளங்குகின்றனர்,” என உலக நீதி மன்றம் கூறியுள்ளது.

சமோவா அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்பாளர்களை வரவேற்ற சமோவாவின் இடைக்கால பிரதமரான பிஃயாமே மட்டாபாஃ நவோமி அவர்கள், பஹாய் சமயம் சமோவோவிற்கு வழங்கி வந்துள்ள 50 வருட கால சேவைக்கு நன்றி தெரிவித்தார்.

“அமைதியை நிர்மானிப்பது, அடிப்படை மனித உரிமையின் மேம்பாடு, ஆண் பெண் சமத்துவம், கல்வி, சுகாதாரம் மற்றம் தொடர்ந்து தாங்கப்படக்கூடிய மேம்பாடு ஆகியவை உள்ளிட்ட நாகரீகத்திற்கான உண்மையான அஸ்திவாரம் சமயமே என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்;” என அவர் மேலும் கூறினார்.

“இறைவனின் நாமம் உச்சரிக்கப்படும் வாசஸ்தலங்கள், உலக நீதி மன்றம் ஆகியவை ஆசீர்வதிக்கப்படுமாக; நாட்டின் தலைவரான மாட்சிமை தங்கிய அரசரையும் இறைவனின் ஆசிகள் சூழட்டடமாக,” என அவர் மேலும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளர்கள், இசைக் குழுக்கள், மற்றும் நடனக் குழுக்களும் பங்குபெற்றனர்.

அடுத்த நாள் 400க்கும் மேற்பட்டவர்கள் அரசரின் தனி மாளிகையில் விருந்து உபசரிப்பில் கலந்துகொண்டனர். இதில் பல முக்கிய பிரமுகர்கள் பங்குபெற்றனர்.

அதே நாளில் தியாபாபாதாவில் உள்ள பஹாய் கோவிலுக்கு அனைவரும் விஜயம் செய்தனர். பஹாய் சமயம் சமோவாவுக்கு வந்த நாள், கோவிலின் அர்ப்பன நாள் ஆகியவை பாட்டு மற்றும் நடனம் மூலம் நினைவுகூறப்பட்டன.

அந்த நிகழ்வின் போது பல நினைவில் நிற்கும் பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. தொங்கா தீவு பஹாய்கள் திருமதி விஸ்-அலாயிக்கு கண்ட ஆலோசகர் எனும் முறையில் நற்சேவைகள் பல புரிந்த அவரது கனவரின் ஞாபகார்த்தமாக பாரம்பரிய தாபா துனி ஒன்றை வழங்கினர்.

டாக்டர் யுகோ கியாகெரி திரு அலாயி ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அனைவரும் வருகையளித்தனர். பிறகு அங்குள்ள பஹாய் மொன்ட்டிசாரி பள்ளிக்கும், பஹாய் மயானத்திற்கும் அவர்கள் சென்றனர்.

மாநாட்டின் அதிகாரபூர்வ திறப்பு விழாவின்போது தேசிய ஆன்மீக சபை தலைவர் திரு தித்தி நோபோஃவாகாதொதொவா, திருமதி விஸ்-அலாயியை 21 நாடுகளிலிருந்து வருகையளித்திருந்த சுமார் 600 பங்கேற்பாளர்களுக்கும் அறிமுகம் செய்துவைத்தார்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூ ஸீலாந்து தேசிய ஆன்மீக சபையின் அங்கத்தினர்களில் ஒருவராக இருந்த திருமதி விஸ்-அலாயி பஹாய் சமயத்தின் பாதுகாப்பாளாராகிய ஷோகி எபெஃண்டி அவர்கள் 1953ல் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பஹாய்களே இல்லாத நாடுகளுக்கு சமயத்தை கொண்டு செல்லும் முன்னோடிகளுள் ஒருவராக 1954ல் சமோவாவின் அப்பியா வந்து சேர்ந்தார். அவருடைய சகோதரரான பிஃராங்க் கொக்கொஸ் தீவில் பஹாய் சமயத்தை அறிமுகம் செய்தார். இதற்காக இருவரும் “பஹாவுல்லாவின் வீரத்திருத்தகைகள்” என அழைக்கப்பட்டனர்.

தொடர்ந்து சமோவா தீவிலேயே வசித்து வரும் திருமதி விஸ்-அலாயி, உணர்ச்சிபூர்வமான சொற்பொழிவு ஒன்றை ஆற்றினார். அப்போது “பஹாவுல்லாவின் வீரத்திருத்தகைகளுள்” 24 பேரின் பெயர்களை வாசித்தார். பசிபிஃக் தீவுகளுக்கு சமயத்தை கொண்டு சென்ற அவர்களுள் 15 பேர்கள் பெண்களாவர். அவர் மேலும், சமோவா மக்களை பாராட்டிப் பேசி, நடந்த பல சம்பவங்கள் பற்றியும் குறிப்பிட்டார். தெய்வ சமயத் திருக்கரங்களான திரு யுகோ கியாகெரி, அபு‘ல் காசிம் பாஃய்சி, திரு இனோக் ஒலிங்கா ஆகியோரின் வருகைகள் பற்றியும் பேசினார்.

கடந்த 50 வருடங்களில் சிறப்பு பஹாய் விருந்தினர்கள் பலரை சமோவா பஹாய் சமூகம் வரவேற்றுள்ளது. அவர்களுள், தெய்வ சமயத்திருக்கரம் திருமதி ரூஹிய்யா ரப்பானி, திரு கொல்லிஸ் பெஃதர்ஸ்டோன், திரு ரஹ்மத்துல்லா முஹாஜர், ஜோன் ரொபார்ட்ஸ், மற்றும் திரு வில்லியம் சியர்ஸ ஆகியோர் குறிப்பபித் தக்கவர்கள்.

ஒரு காலத்தில் சமோவாவின் ஒரே பஹாயாக இருந்த திருமதி விஸ்-அலாயி இன்று 29 உள்ளூர் ஆன்மீக சபைகளை உள்ளடக்கிய ஒரு பஹாய் சமூகத்தின் அங்கத்தினராவார்.

அடுத்த நாள், ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கு சென்றிருந்த பிரதம மந்திரி, ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அதில், “இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக, கொண்டாட்டங்கள் வெற்றிகரமாக அமையட்டுமாக” என குறிப்பிட்டிருந்தார்.

பங்கேற்பாளர்கள் பஹாய் சரித்திரம் பற்றிய உரைகளை செவிமடுத்தனர். பசிபிஃக் வட்டாரங்களுக்கு சமயத்தை கொண்டுவந்தவர்களுக்காக ஒரு சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சமோவா, அமெரிக்க சமோவா, ஆஸ்திரேலியா, பிஃஜி, நியூ ஸீலாந்து ஆகிய நாடுகளின் பாடற்குழுக்கள் இடம்பெற்றிருந்தன. கோவிலின் கட்டடக் கலைஞரான திரு அமானத் அவர்கள் கோவிலின் கீழ்த்தளத்தில் அமைந்திருக்கும் பொது மண்டபத்தில் ஓர் உரை நிகழ்த்தினார்.

பங்கேற்பாளர்கள் அரச குடும்பத்தினர் ஒருவரின் அழைப்பை ஏற்று சரித்திர மற்றும் புராண சிறப்புடைய ஓர் இடத்திற்கு வருகையளித்தனர். அன்று மாலை சமோவா பஹாய் இளைஞர்கள் 25 வருடங்களாக ஈரான் நாட்டில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கும் பஹாய்களின் நினைவாக நாடக நிகழ்வு ஒன்றை நடத்தினர். 27 செப்டம்பர் அன்று எல்லாரும் உள்ளூர் கடற்கரையில் பிக்னிக் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர்.

கொண்டாட்டங்களும் மாநாடும் தேசிய தொலைக்காட்சி, வானொலி, மற்றும் சமோவா பத்திரிக்கைகளில் விரிவான விளம்பரங்கள் பெற்றிருந்தன. சமோவா பஹாய்கள் சமோவா மக்களுக்கு விரிவான சேவைகள் ஆற்றியுள்ளனர். ஐந்து பாலர் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மனித உரிமை, கல்வி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் அவர்கள் சேவையாற்றிவருகின்றனர்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/337/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: