பஹாய் சேதிமங்கள் உலக மரபுடைமைத் தலங்களாகத் தேர்வு


பஹாய் சேதிமங்கள் உலக மரபுடைமைத் தலங்களாகத் தேர்வு


8 அக்டோபர் 2021


குவெபெக் நகரம் — இந்த நகரத்தில் கூடிய ஐக்கிய நாட்டு செயற்குழு ஒன்று இஸ்ரேலில் உள்ள இரு பஹாய் நிறைவாலயங்கள் “தனிச்சிறப்புமிக்க சர்வதேச மதிப்பினைப்” பெற்றிருப்பதால் மனிதகுலத்தின் கலாச்சார மரபுடைமைகளின் ஒரு பகுதியாக கருதப்பட வேண்டும் எனத் தீர்மானித்துள்ளது.

இஸ்ரேலின் ஹைஃபாவில் உள்ள கார்மல் மலையின் வடக்கு சரிவில் உள்ள பாப் பெருமானாரின் ஆலயம் உலக மரபுச்செல்வ பட்டியலில் பெயரிடப்பட்ட பஹாய் தளங்களுள் ஒன்றாகும். ஹைஃபாவில் ஒரு பிரபல தலமான இது, ஆண்டுக்கு அரை மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது.

யுனெஸ்கோவின் உலக மரபுடைமை செயற்குழுவின் இந்தத் தீர்மானத்தினால் பஹாய்களின் இரு அதி முக்கிய இடங்களான – தங்கள் சமயத்தின் ஸ்தாபகர்களின் நினைவாலயங்கள் – சீனப் பெருஞ் சுவர், பிரமிட்கள், தாஜ் மஹால், மற்றும் ஸ்டோன்ஹெஞ் போன்ற அனைத்துலக ரீதியில் முக்கியமானவை என அடையாளங்காணப்பட்டுள்ள இடங்களின் வரிசையில் இடம் பெருகின்றன.

இந்த உலக மரபுடைமை வரிசையில் உலகளாவிய சமய முக்கியத்துவம் பெற்ற இடங்களான வட்டிக்கன், ஜெருசல நகரின் பழைய பகுதி, ஆஃப்கானிஸ்தானில் உள்ள, சமீபத்தில் வெடி வைக்கப்பட்ட பாமியன் புத்த சிலைகளும் இடம் பெற்றுள்ளன.

ஐக்கிய நாட்டின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோவினால் பராமரிக்கப்பட்டுவரும் இந்தப் பட்டியலில், இந்த நவீன காலத்தில் உதித்த சமயமரபுத் தொடர்புள்ள முதல் இரு தலங்களாகும்.

இஸ்ரேலின் வடகறையிலுள்ள பழைய ஆக்கோவுக்கு அருகிலும், ஹைஃபாவிலுள்ள கார்மல் மலையிலும் உள்ள இவ்விரு நினைவாலயங்களும், பஹாவுல்லா, பாப் ஆகியோர்களான பஹாய் சமய ஸ்தாபகர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடங்களாகும்.

பஹாவுல்லா, பாப் ஆகிய இருவரும் கடவுளின் அவதாரபுருஷர்கள் என்பது பஹாய்களின் நம்பிக்கை; அவர்களின் புனிதக்கல்லறைகள் சுமார் 50 லட்ச விசுவாசிகளைக் கொண்ட ஒரு சமயசமூகத்தினரின் புனித யாத்திரைக்கான தலங்களாகும். பஹாவுல்லாவின் நினைவாலயம் உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் தங்கள் பிரார்த்தனையின்போது முகம் திருப்ப வேண்டிய மையமாகும், மற்றும் ஜெருசலத்தில் உள்ள யூதர்களின் மேற்குக்சுவர், மெக்காவிலுள்ள இஸ்லாமியர்களின் காபா போன்றவற்றிற்கு இணையான ஒரு முக்கியத்துவத்துவத்தை இது வழங்குகிறது.

பஹாவுல்லா இரானில் பிறந்து, அன்று ஒட்டமான் சாம்ராஜ்யத்தில் இருந்த ஆக்கோவுக்கு நாடுகடத்தப்பட்டு, 1892ல் அங்கு விண்ணேற்றமடைந்தார். பாப் அவர்கள் 1850ல் மரணதண்டனைக்குள்ளாகி, அவரது உடல் பின்னாளில் ஹைஃபாவுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

ஹைஃபா நகருக்கு வடக்கில் உள்ள பஹாவுல்லாவின் நினைவாலயம் – பஹாய் சமயத்தவர்களுக்கு உலகிலேயே மிகவும் புனிதமான இடம் – இது உலக மரபுச்செல்வ வரிசையில் இடம்பெற்றுள்ளது.

இவ்விரு நினைவாலயங்களும் அவற்றைச் சுற்றியுள்ள தோட்டங்களின் காரணத்தினால் தனிச்சிறப்பு பெற்றுள்ளன. அப்பூந்தோட்டங்கள் பல கலாச்சாரங்களின் வடிவக்கூறுகளை உள்ளடக்கியுள்ளன. பஹாய் புனித யாத்ரீகர்கள் உட்பட அத்தோட்டங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களும் சுற்றுப்பயணிகளும் வருடந்தோரும் வருகை புரிகின்றனர்.

“சுமார் 150 வருடங்களில் மத்திய கிழக்கில் மட்டுமே காணப்பட்ட ஒரு சிறிய சமூகமாக இருந்து இன்று உலகளாவிய நிலையில்  கிட்டத்தட்ட உலகின் ஒவ்வொரு நாட்டிலும் விசுவாசிகளைக் கொண்டுள்ள ஓர் உலக சமூகமாக ளர்ந்துவிட்ட இச்சமூகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் யுனெஸ்கோவின் இந்த அங்கீகாரத்தை நாங்கள் வரவேற்கின்றோம்,” என பஹாய் அனைத்துலக சமூகத்தின் பொதுச் செயலாளரான திரு அல்பர்ட் லிங்கன் கூறினார்.

“இதற்கான நியமனத்தை முன்னுரைத்த இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு நாங்கள் பெரிதும் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்,” என அவர் மேலும் கூறினார்.

உலக மரபுடைமைப் பட்டியல் 1972ல் யுனெஸ்கோவினால், “கலாச்சார மற்றும் இயற்கை சார்ந்த தனிச்சிறந்த அனைத்துலக மதிப்புடைய மரபுடைமைகளை” அடையாளங்காணவும், பாதுகாக்கவும் மற்றும் பராமரிக்கவும் நிறுவப்பட்டது. இதுவரை, 184 நாடுகள் இந்த உலக மரபுடைமை உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. இந்த உடன்படிக்கை இந்தப் பட்டியலுக்குத் தேர்வுறுவதற்கான பொதுவான அளவுமுறைகளை வரையறுக்கின்றது, மற்றும் இதுவரை கிழக்கு ஆப்பிரிக்காவுள்ள செரங்கெட்டி மற்றும் ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப்பை உள்ளடக்கிய 850க்கும் அதிகமான இடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள.

உலக மரபுடைமை செயற்குழு உலக மரபுடைமை உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ள 21 நாடுகளை உள்ளடக்கியுள்ளது. இக் குழு அதன் குழுத்தலைவரின் நாட்டில் ஆண்டுதோரும் ஒன்றுகூடுகிறது. இவ்வருடத் தலைவராக கனடா நாட்டின் டாக். கிருஸ்டினா கேமரனாவார் மற்றும், தானே உலக மரபுடைமை தலங்களில் ஒன்றான குவெபெக்கில் கூடிய கூட்டம், அந்த நகரத்தின் 400வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தோடு ஒன்றுசேர்ந்திருந்தது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/642/

நெருக்கடி காலங்களின் போது ஆசிரியர்களின் தனிச்சிறப்பான பங்கு வெளிப்படுகின்றது


நெருக்கடி காலங்களின் போது ஆசிரியர்களின் தனிச்சிறப்பான பங்கு வெளிப்படுகின்றது


8 அக்டோபர் 2021


பாங்குவி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு – உலகின் சில பாகங்களில் தொற்றுநோயின் போது, சில கல்வியாளர்கள் முறையான கல்வியைத் தொடர்வதை குறைவான இணைய வசதிகள் தடுத்திடவில்லை. இத்தகைய இடங்களில் உள்ள பஹாய் உத்வேக சமூகப் பள்ளிகள் தங்கள் மாணவர்களின் கல்வியல் தேவைகளை ஈடு செய்திட தற்போதைய சூழ்நிலைகளுக்குப் பொருந்தும் ஆக்ககர வழிகளைக் காண்கின்றனர்.

https://news.bahai.org/story/1435/slideshow/1/“பிள்ளைகளுக்கு ஓர் உயர்தர கல்வியை வழங்கவும், கல்வியல் மற்றும் ஆன்மீக அம்சங்களை ஒன்றிணைத்து, அவர்கள் தங்கள் சமுதாயத்தின் மேம்பாட்டிற்குப் பங்களித்திட ஆயத்தமாக்கவும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை உள்ளடக்கிய உள்ளூர் மக்களின் ஆவல்களிலிருந்து இப்பள்ளிகள் தோன்றியுள்ளன,” என்கிறார் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் சமூகப் பள்ளிகளுக்கு ஆதரவளிக்கும், Fondation Nahid et Hushang Ahdieh எனப்படும் ஓர் அறவாரியத்தின் ஜூடிகேய்ல் மொக்கோலே.

“பிள்ளைகளுக்கு ஓர் உயர்தர கல்வியை வழங்கவும், கல்வியல் மற்றும் ஆன்மீக அம்சங்களை ஒன்றிணைத்து, அவர்கள் தங்கள் சமுதாயத்தின் மேம்பாட்டிற்குப் பங்களித்திட ஆயத்தமாக்கவும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை உள்ளடக்கிய உள்ளூர் மக்களின் ஆவல்களிலிருந்து இப்பள்ளிகள் தோன்றியுள்ளன,” என்கிறார் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் சமூகப் பள்ளிகளுக்கு ஆதரவளிக்கும், Fondation Nahid et Hushang Ahdieh எனப்படும் ஓர் அறவாரியத்தின் ஜூடிகேய்ல் மொக்கோலே. அவை சமூகத்தின் வாழ்வோடு அணுக்கமாக இணைக்கப்பட்டும், இப்போதைய சூழ்நிலைகளின் வழி மக்களுக்கு உதவுவதற்கான முக்கிய ஸ்தாபனங்களாக இருந்து வருகின்றன.

அந்த பஹாய் உத்வேக அமைப்பின் இயக்குனரான கிலிமென்ட் ஃபெய்ஸூரே, “சமூகம் அப்பள்ளி அவர்களுக்குச் சொந்தமானது என உணர்கின்றனர். போதிப்பதற்கும் நிர்வகிப்பதற்குமான திறனாற்றலை வளர்ப்பதற்கு எங்கள் அமைப்பு உதவுகின்றது, ஆனால் பள்ளியின் நிர்வாகம், பொருள்வளம், மற்றும் கல்வியல் திட்டங்களுக்கு சமூகத்தினரே உடைமையாளர்கள் ஆவர். இந்த சீர்குலைவு மிக்க காலத்திலும் அவர்கள் இக்கடமையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

பாங்குயி, மத்திய ஆப்பிரிக்க குடியரசின் ஒரு சமூகப் பள்ளியின் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்கின்றனர். “பன்முகப்படுத்தப்பட்ட பள்ளிகள் குறித்த அணுகுமுறை எதிர்ப்பாராத வாய்ப்புகளை உருவாக்குகின்றது,” என்கிறார் திரு மொக்கோலே.  Mokolé.  “கல்வியல் கோட்பாடுகள் மற்றும் திறன்கள் குறித்து அவர்களின் புரிதலை அதிகரித்துக்கொள்ள பெற்றோர்களுக்கு உதவுவதற்கான ஒரு வாய்ப்பை இது வழங்கியுள்ளது. இது மிகவும் மதிப்புவாய்ந்த ஒன்றாகும் ஏனெனில் ஓர் இல்லமே பிள்ளைகளின் கல்விக்கான ஒரு பிரதான நிகழ்விடமாகும்.”

நாட்டின் தற்போதைய சுகாதார நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் இல்லங்களிலேயே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் எழுதுதல், படித்தல், கணித நடவடிக்கைகள், மற்றும் ஆன்மீக கருப்பொருள்களில் மாணவர்களுக்கு உதவக்கூடிய ஒருவர் ஒவ்வொரு சிறிய குடும்பக் குழுமங்களுக்கும் இருப்பதை உறுதிசெய்திட கூடுதல் தொண்டாசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றனர்.   

பாங்குயி, மத்திய ஆப்பிரிக்க குடியரசின் ஒரு சமூகப் பள்ளியின் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்கின்றனர். “பன்முகப்படுத்தப்பட்ட பள்ளிகள் குறித்த அணுகுமுறை எதிர்ப்பாராத வாய்ப்புகளை உருவாக்குகின்றது,” என்கிறார் திரு மொக்கோலே.  Mokolé.  “கல்வியல் கோட்பாடுகள் மற்றும் திறன்கள் குறித்து அவர்களின் புரிதலை அதிகரித்துக்கொள்ள பெற்றோர்களுக்கு உதவுவதற்கான ஒரு வாய்ப்பை இது வழங்கியுள்ளது. இது மிகவும் மதிப்புவாய்ந்த ஒன்றாகும் ஏனெனில் ஓர் இல்லமே பிள்ளைகளின் கல்விக்கான ஒரு பிரதான நிகழ்விடமாகும்.”

இந்தோனேசியாவின் வடக்கு சுமாத்ரா மண்டலத்தில் உள்ள பஹாய் உத்வேக சமூகப் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர். அங்கு தனிப்பட்ட பாடங்கள் இடைநிறுத்தப்பட வேண்டியுள்ளது. நாட்டில் உள்ள சமூகப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று வீட்டுப்பாட வேலைகளைக் கொடுத்தல் மற்றும் எடுத்தல் பணிகளை செய்துவருகின்றனர்.

உள்ளூர் சமூகங்கள் தங்கள் பிள்ளைகளில் கல்வியில் முதன்மையாளர்களாக இருக்கலாம் என்பது இப்பள்ளிகளின் அடித்தலமாகவுள்ள பஹாய் கோட்பாடாகும். இத்தகைய உடைமை உணர்வோடு, தங்களின் அரசாங்கங்கள் ஏற்படுத்தியுள்ள பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்கும் அதே வேளை தொற்றுநோயின் போது கல்வியல் திட்டங்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு சமூகங்கள் முடிவெடுத்தன. இந்தோனேசியாவின் தனிப்பட்ட பாடங்கள் இடைநிறுத்தப்பட வேண்டியிருந்த போது, நாட்டில் உள்ள சமூகப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று வீட்டுப்பாட வேலைகளைக் கொடுத்தல் மற்றும் எடுத்தல் பணிகளை செய்துவருகின்றனர்.

மற்றவிடங்களில், இந்த பொருளாதார சிரமங்களின் போது சமூகப் பள்ளிகள் தொடர்ந்து நடத்தப்படுவதற்கு ஏதுவாக, ஆசிரியர்களுக்கு உதவுவதற்கு குடும்பங்கள் தங்களின் பொருள்வளங்களை ஒன்றுதிரட்டியுள்ளன உதாரணத்திற்கு, மலாவி நாட்டில், பெற்றோர் தங்கள் நிலங்களில் விளையும் பொருள்களை ஆசிரியர்களுக்கு வழங்கி வருகின்றனர். ஆசிரியர்கள் தங்கள் வகுப்புகளில் ஈடுபட்டிருந்த போது, சில பெற்றோர்கள் அந்த ஆசிரியர்களின் நிலங்களில் வேலை செய்தனர்.   

“தங்கள் பிள்ளைகளின் ஆசிரியர்களாக இருக்கக்கூடிய தனிநபர்களை பெற்றோரே தேர்ந்தெடுத்துள்ளபடியால், ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்கிடையில் நம்பகம் இருந்து வந்துள்ளது,” என்கிறார் மலாவி பாம்பினோ அறவாரியம் சார்ந்த சமூகப்பள்ளிகளின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அன்ட்ரூ ன்ஹலேன். “அதனால்தான் தற்போதைய சூழ்நிலையில், அவர்கள் ஆசிரயர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்திட விரும்புகின்றனர். 

இந்தியாவின் மணிப்பூரில் உள்ள லங்காதேலில் உள்ள ஒரு சமூகப் பள்ளியின் ஆசிரியர்கள், சுகாதார நெருக்கடியின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வீட்டிலேயே மேற்கொள்ள பள்ளிப் பாடங்களை விநியோகிக்கின்றனர்.

இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கால்ச்சினி’யில் இத்தகைய பள்ளிகளின் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள உறவுகள் வகுப்பறை நடவடிக்கைகளுக்கும் அப்பால் நீட்டிக்கப்படுகின்றன. கிராமத்தில் ஓர் உணவு விநியோகத்திற்காக ஓர் அமைப்பு தொண்டர்களைத் தேடும் போது, அதற்கு சமூகப் பள்ளியின் ஆசிரியர்கள் உதவுமாறு கிராமவாசிகள் கேட்டுக்கொண்டனர், ஏனெனில் அந்த உணவு விநியோகத்தை அவர்களால் பாரபட்சமின்றி மேற்கொள்ள முடியும் என்றனர்.   

நாட்டின் மற்றொரு மண்டலத்தில், மணிப்பூரின் லங்காத்தெல்’லில் உள்ள ஒரு சமூகப்பள்ளியில் பணிபுரியும் மாச்சாஸனா கோயிஜாம் கூறுகிறார்:

“சிறுவர்களுக்கு கல்வியளிப்பதே நாம் செய்யக்கூடிய சேவைகளுள் மிகவும் உயர்ந்த ஒரு சேவையென பஹாய் போதனைகள் கூறுகின்றன. நன்நடத்தைகளை உருவாக்கிக்கொள்ளவும், உலகிற்கு ஓர் ஒளியாகத் திகழவும், தங்களின் பிள்ளைகளை அறிவியல்களிலும், ஆன்மீக விஷயங்களிலும் அறிவூட்டுவதற்கு ஆசிரியர்கள் செய்திடும் தியாகங்களை–குறிப்பாக இப்பொழுது–பெற்றோர் உணர்கின்றனர்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1435/