
ஐக்கிய அமெரிக்காவில் இன தப்பெண்ணம் குறித்த பொது அறிக்கை முக்கிய உரையாடலைத் தூண்டியுள்ளது
8 அக்டோபர் 2021
சிக்காகோ – இன தப்பெண்ணம் மற்றும் அமைதியை நோக்கிய மேம்பாட்டுக்கு இன்றியமையாத ஆன்மீக கோட்பாடுகள் பற்றிய, சில நாள்களுக்கும் முன் வெளியிடப்பட்ட ஐக்கிய அமெரிக்க பஹாய்கள் தேசிய ஆன்மீக சபையின் பொது அறிக்கை ஒன்று நாடு முழுவதும் திறனாய்வு பிரதிபலிப்பைப் தூண்டிவிட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும், சமீபமான துயரநிகழ்வுகளும் நீண்ட சரித்திரமும் ஒன்றிணைந்து கருப்பினவாத எதிர்ப்பையும் தப்பெண்ணத்தின் பிற வடிவங்களையும் பொது மக்கள் விழிப்புணர்வுக்குக் கொண்டுவந்துள்ளன.
அவ்வறிக்கையின் ஒரு பகுதி பின்வருமாறு: “ஒரு நியாயமான சமுதாயத்தை உருவாக்குதல் மானிடம் ஒன்றே எனும் அஸ்திவார உண்மையைக் கண்டுணர்வதுடன் ஆரம்பிக்கின்றது. ஆனால், இவ்வுண்மையை நமது இதயங்களில் நம்புவது மட்டும் போதாது. செயல்படுவதற்கும், நமது தனிநபர், சமுதாய, ஸ்தாபன வாழ்க்கைகளின் எல்லா அம்சங்களையும் நீதி எனும் காண்ணாடியின் மூலம் காண்பதற்குமான தார்மீக கட்டாயத்தை உருவாக்குகின்றது. நாம் இதுவரை அடைந்திராதைவிட அதிக ஆழ்ந்த சமுதாய ஒழுங்கமைப்பை அது உட்குறிக்கின்றது. அதற்கு எல்லா இனத்தையும் பின்னணியையும் சேர்ந்த அமெரிக்கர்களின் பங்களிப்பு தேவைப்படுகின்றது, ஏனெனில் அத்தகைய உள்ளடக்கிய பங்கேற்பின் மூலமாக மட்டுமே புதிய தார்மீக மற்றும் சமுதாய திசைகாட்டிகள் வெளிப்பட இயலும்.”
ஐக்கிய அமெரிக்காவில் அடிமைத்தனத்தின் முடிவை நினைவுகூர்வதற்கு பாரம்பரியமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தேதியான 19 ஜூன் அன்று இவ்வறிக்கை வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில் சிக்காகோ டிரிப்யூனில் பிரசுரிக்கப்பட்ட இவ்வறிக்கை, தொடர்ந்து ஒரு பரந்த நெடுக்கங் கொண்ட மக்களைச் சென்றடையும் வகையில் பன்மடங்கான வேறு பல பிரசுரங்களிலும் பிரசுரிக்கப்பட்டது.
நாடு முழுவதுமுள்ள இளைஞர்கள், சக குடிமக்களிடையே அதிக இணக்கம் மற்றும் புரிந்துணர்வுக்குப் பங்களிக்கும் தங்களின் முயற்சிகளில் இவ்வறிக்கை எவ்வாறு உதவிட முடியும் என்பதை ஆராய்ந்த வருகின்றனர். சமீபமான இன ஒற்றுமை குறித்த தேசிய கருத்தரங்கு ஒன்றின் பங்கேற்பாளர்கள், தங்களின் கலந்துரையாடல்களுக்கு ஒளியூட்டும் யோசனைகளை இந்த அறிக்கையிலிருந்து பெற்றனர்.

தேசிய சபையினால் வெளியிடப்பட்ட இந்த செய்தி ஆர்வநம்பிக்கையூட்டுகின்றது; இனவாதத்தின் மூல காரணங்களின் மீது கவனம் செலுத்துவதற்குத் தேவைப்படுவன குறித்து உரைக்கின்றது: மனித குடும்பம் ஒன்றே எனும் அடிப்படை உண்மையினை கண்டுணர்வதால் வழிகாட்டப்படும் தொடர்ச்சியான மற்றும் உன்னிப்பான முயற்சி.
இந்தக் கருத்து ஒரு தேசிய பஹாய் சமூகத்தின் அனுபவத்தால் ஒளியூட்டப்படுகிறது; இதில் 20’ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்த மக்களும், இறுதியில் அனைத்து பின்னணியினைச் சார்ந்தோரும் இனரீதியான தப்பெண்ணத்தை ஒழிப்பதற்கு ஒன்றுசேர்ந்து முயன்று வந்துள்ளனர்.
நாட்டின் பேது விவகாரங்களுக்கான பஹாய் அலுவலகத்தின் மே லேம்ப்பிள், இந்த செய்தி மக்கள் எழுப்பி வரும் ஆழ்ந்த கேள்விகளின் மீது கவனம் செலுத்துகிறது என்கிறார். “ஒரு சமுதாயம் எனும் முறையில் நாம் யார் என அமெரிக்கர்கள் வினைவுகின்றனர். நமது நம்பிக்கை என்ன, மற்றும் நாம் எதை சகித்துக்கொள்வோம்? வாஸ்தவமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முயலும் முன்பாக எவ்வளவு காலத்திற்கு துன்பத்தின் தொடர்ச்சியை அனுமதிக்கப் போகின்றோம்.”
அலுவலகத்தின் P. J. ஆண்ட்ரூஸ் கூறுகிறார்: “நாம் ஆழ்ந்துள்ள ‘பிற’வாத கலாச்சாரத்தில், பல்வகைத்தன்மை பலவீனத்தின் மூலாதாரமாக காணப்படக்கூடும். ஆனால், உண்மையில் பல்வகைமை செல்வத்திற்கான மூலாதாரமாகும். பல்வகைமையில் ஒற்றுமையானது ஒரு சமுதாயம் எனும் முறையில் நம்மை ஆன்மீக ரீதியில் வலுப்படுத்துகின்றது.”

தற்போதைய சூழ்நிலைகள் குறித்து பேசிய, பொது விவகாரங்கள் அலுவலகத்தின் நிர்வாகியான அந்தோனி வான்ஸ்: சில வாரங்களில் மட்டுமே, இன நீதிக்கான கோரிக்கைகள் வலுவாக புதுப்பிக்கப்பட்டது மட்டுமின்றி, மாறாக ஐக்கிய அமெரிக்க மக்களிடையே மிகப் பரந்த ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். எங்கும் நிகழ்ச்சிகளை பதிவு செய்வதற்குறிய திறன்பேசிகளுடன், பல தலைமுறைகளாக கருப்பின சமூகம் பேசி வந்த அநீதிகள் இப்பொழுது மறுக்கவியலாத பொருண்மைகள் ஆகிவிட்டன. செயல்படாமையை பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு, இந்த மெய்நிலைமை குறித்து சமுதாயத்தின் பெரும் பகுதியினர் விழிப்புணர்வை அடைந்துள்ளனர். செயல்படுவதற்கு இந்த வாய்ப்பைப் பற்றிக்கொள்வதில், நடவடிக்கைகளை விரிவாக்குதல், கற்றல், முறைமையுடன் சிந்தித்தல், மற்றும் மிக முக்கியமாக, நீதி மற்றும் ஐக்கியத்தை நோக்கி நீடித்த மேம்பாட்டை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பஹாய்கள் முயல்கின்றனர்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1436/