நேப்பாள கிராமம் நீண்டகால உக்தியாக விவசாய திறனாற்றலை மேம்படுத்துகின்றது


நேப்பாள கிராமம் நீண்டகால உக்தியாக விவசாய திறனாற்றலை மேம்படுத்துகின்றது


8 அக்டோபர் 2021


மோதிபாஸ்தி, நேப்பாளம் – பலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தொற்றுநோய்க்கிடையே இல்லம் திரும்புவதால், நேப்பாளத்தின் மோதிபாஸ்தி பஹாய் உள்ளூர் ஆன்மீக சபை, சமூகம் தனது சொந்த உணவை உற்பத்தி செய்வதற்கான திறனாற்றலை மேம்படுத்துவதற்கு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி எண்ணி வருகின்றது.

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன்பாக எடுக்கப்பட்ட படம்.நேப்பாளத்தின் மோதிபாஸ்தி பஹாய் உள்ளூர் ஆன்மீக சபை, சமூகம் தனது சொந்த உணவை உற்பத்தி செய்வதற்கான திறனாற்றலை மேம்படுத்துவதற்கு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி எண்ணி வருகின்றது.

“இப்போது பல அரசாங்க சார்பற்ற அமைப்புகளும் முகவான்மைகளும் மக்களின் உடனடி தேவைகளுக்கு உதவிவருகின்றன” என்று உள்ளூர் ஆன்மீக சபை உறுப்பினர் ஹேமந்த் பிரகாஷ் புதா கூறினார். “ஆனால் சபை நீண்டகால தீர்வுகளைப் பற்றி சிந்திக்க இயலும் என்பதை உணர்கிறது. இந்த கிராமத்தில் உணவு உற்பத்தி செய்வதற்கான நிலமும் திறமையும் உள்ளது. எங்கள் விவசாய முயற்சிகளை ஒரு சமூகமாக ஒழுங்கமைக்காவிட்டால் நாங்கள் எவ்வாறு சமாளிக்க முடியும்?”

தொற்றுநோய் ஆரம்பத்திலிருந்தே சமூகத்தின் தேவைகளை அடையாளங் கண்டு ஈடுசெய்வதற்கு உதவியாக உள்ளூர் ஆன்மீக சபை வாரந்தோறும் கலந்தாலோசனை செய்து வருகின்றது. சமீபமாக, அப்பகுதிவாசிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத நிலங்களில் விவசாயம் செய்வதற்கான வாய்ப்புகளுடன் கிராமத்திற்கு திரும்பி வருகின்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் தொடர்புப் படுத்தி வருகின்றது.

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன்பாக எடுக்கப்பட்ட படம். நேப்பாளத்தின் காஞ்சன்பூர் மாவட்டத்தின் மக்கள், சமுதாய சேவைக்கு திறனாற்றலை உருவாக்கும் பஹாய் சமூகத்தின் கல்வியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

“எங்களின் அணுகுமுறை, மற்றவர்களைச் சார்ந்திருக்கும்,  சிலர் எல்லாம் பெற்றிருந்தும் மற்றவர் இல்லாதிருப்பதுமான அணுகுமுறையல்ல,” என மோதிபாஸ்டியில் வசிக்கும் பிரசாத் ஆச்சார்யா கூறுகிறார். “சமூகத்திற்கு எல்லாருமே எவ்வாறு பங்களிக்க இயலும் என்பதை நாங்கள் பார்க்கின்றோம். இது, எல்லாருமே ஒரே குடும்பம் மற்றும் எல்லாருமே மற்றவரின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மனிதகுல ஒருமை குறித்த பஹாய் கோட்பாட்டின் ஓர் அம்சமாகும்.

உள்ளூர் சார்ந்த அறிவு மற்றும் வல்லுனர் ஆலோசனையின் பயனைப் பெற்று, கிராமத்திற்கு சிறந்த ஊட்டத்திற்கான மூலாதாரத்தை வழங்கிடக்கூடிய பயிர் மற்றும் கால்நடைகளைத் தீர்மானிப்பதற்கு சபை குடும்பங்களுக்கு உதவிவருகின்றது.

நேப்பாள, மோதிபாஸ்தி பஹாய் உள்ளூர் ஆன்மீக சபையின் உறுப்பினர் ஒருவர், சில கிராமவாசிகளால் எதிர்நோக்கப்படும் நீர்பாசன பிரச்சினையை வர்ணிக்கும் ஒரு கடிடதத்தை வழங்க மேயரை சந்திக்கின்றார்.

தடைகளை சமாளிக்க சமூகத்திற்கு உதவுவதில் சபை வளத்துடன் இருக்கின்றது. உதாரணமாக, கிராமத்தின் ஒரு பகுதி, பாசனத்திற்கு தண்ணீர் இல்லாததைக் கண்டறிந்தபோது, கிணறு தோண்டுவதற்கு ஏற்பாடு செய்த உள்ளூர் மற்றும் மண்டல அதிகாரிகளிடம் சபை உதவி கோரியது.

இந்த அனுபவங்களைப் பிரதிபலிக்கும் திரு. பிரகாஷ் புதா இவ்வாறு கூறுகிறார்: “ஓர் உணவு நெருக்கடிக்கான சாத்தியத்தின் எதிரில், பொருட்களின் விலை அதிகரித்து வருவது மற்றும் குழந்தைகளின் கல்வி போன்ற பிற பிரச்சினைகள் குறித்து சமூகம் அக்கறை கொண்டுள்ளது. மக்கள் ஆன்மீக வழியில்–அன்பாகவும், கனிவாகவும்–கலந்தாலோசிக்கும்போது, அவர்களுக்கு முன் இருக்கும் வாய்ப்புகள் மற்றும் அவர்கள் எவ்வாறு முன்னேற முடியும் என்பதை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள். கலந்தாலோசனையானது, நாம் நடவடிக்கை எடுத்து விஷயங்களை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது.”

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன்பாக எடுக்கப்பட்ட படம். மோதிபாஸ்தியில் ஒரு படிப்பு வட்டம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1437/