கொங்கோ ஜனநாயக குடியரசில் முதல் பஹாய் கோவில் வடிவம் திரைநீக்கப்பட்டுள்ளது.


கொ.ஜ.குடியரசின் (DRC) பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கான வடிவமைப்பு பாரம்பரிய சித்திரவேலைப்பாடுகள், கட்டமைப்புகள், மற்றும் அந்நாட்டின் இயற்கை அம்சங்களினால் உத்வேகம் பெற்றதாகும். இந்த பஹாய் வழிபாட்டு இல்லமானது, DRC’யின் பஹாய்களால் பல தசாப்தங்களாக பேணப்பட்ட துடிப்பான பக்தி உணர்வை உள்ளடக்கியிருக்கும்.

கொங்கோ ஜனநாயக குடியரசில் முதல் பஹாய் கோவில் வடிவம் திரைநீக்கப்பட்டுள்ளது.


8 அக்டோபர் 2021


கொ.ஜ.குடியரசின் தேசிய ஆன்மீக சபை அந்நாட்டின் முதல் வழிபாட்டு இல்லத்தின் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது.

மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்குப் பிறகு, கொ.ஜ.குடியரசில் நிர்மாணிக்கப்படவிருக்கும் தேசிய வழிபாட்டு இல்லத்தின் வடிவமைப்பு, அந்நாட்டு பஹாய்களின் தேசிய ஆன்மீக சபையின் ஓர் இணையவழி அறிவிப்பின் மூலம் இன்று திரைநீக்கம் கண்டது.

“பஹாய் தேசிய ஆன்மீக சபையின் செயலாளரான லாவோசியே முத்தும்போ த்ஷியொங்கோ, “இது கோ.ஜ.குடியரசின் பஹாய்கள் நீண்டகாலமாக காத்திருந்த ஒரு தருணமாகும்,” என்றார். “உறுதியான கால்களுடன், இங்கு ஆப்பிரிக்க கண்டத்தின் நடுமையத்தில், எங்களின் முதல் வழிபாட்டு இல்லத்தை நிர்மாணிப்பதற்கான ஒரு புதிய அடியை எடுத்து வைத்து, நமது சமுதாயத்திற்கு சேவையாற்றுவதற்கான எங்களின் எல்லா முயற்சிகளுக்கு ஒரு புதிய உந்துவிசையை வழங்குகின்றது.

கின்ஷாஷாவின் வெளிப்புறத்தில் உள்ள வழிபாட்டு இல்லத்திற்கான இடம், ஒரு வளமான பள்ளத்தாக்கின் ஓரத்திலிருந்து கொங்கோ நதியை நோக்கியவாறு அமைந்துள்ளது.

கேப் டௌன், தென் ஆப்பிரிக்காவிலுள்ள வொல்ஃப் கட்டிடக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட வடிவமைப்பு, பாரம்பரிய கலைகள், கட்டமைப்புகள், இயற்கை அம்சங்கள் பஹாய் புனித போதனைகளினால், குறிப்பாக கடவுளின் அருட்கொடை எல்லா மக்களின் மீதும் அயராமல் பாய்ந்து கொண்டிருக்கின்றது எனும் ஆன்மீக கோட்பாட்டினால் உத்வேகம் பெற்றதாகும்.

கின்ஷாஷாவின் வெளிப்புறத்தில் உள்ள வழிபாட்டு இல்லத்திற்கான இடம், ஒரு வளமான பள்ளத்தாக்கின் ஓரத்திலிருந்து கொங்கோ நதியை நோக்கியவாறு அமைந்துள்ளது.  அதன் துணைநதிகள் நாட்டின் எல்லா பாகங்களிலிருந்தும் மழைநீரைச் சேகரித்து ஒரே பெரும் நதியாக விளங்கும் இந்த ஆறு, கோவிலின் வடிவமைப்பில் பிரதிபலிக்கப்படும் எல்லா மக்களும் ஒன்றாக வருவது எனும் ஓர் ஆற்றல்மிக்க உருவகத்தை வழங்குகின்றது.  மத்திய கட்டமைப்பின் குவிமாடத்தின் வெளிப்புறத்தை அலங்கரிக்கவிருக்கும் வடிவங்கள், பல்வேறு கொங்கோலிய மக்களின் கலைப்படைப்புகளை நினைவுகூரும் ஒரு பாணியில் இந்த யோசனையை வெளிப்படுத்தும். 

கொங்கோ ஜனநாயக குடியரசில் கட்டப்படவிருக்கும் தேசிய வழிபாட்டு இல்லத்தின் உள்புற வடிவத்தின் காட்சி.

வடிவமைப்பு குறித்து கட்டிடக்கலைஞர்கள் பின்வருமாறு விமர்சிக்கின்றனர்: “நாங்கள் 19’ஆம் நூற்றாண்டு கொங்கோலிய கட்டிடக்கலை சார்ந்த ஓர் உருவகத்தினால் உத்வேகம் பெற்றோம். அது பனை ஓலைகளால் செய்யப்பட்ட ஒரு பரவளைய கூரையுடன் கூடிய நுணுக்கமாக நெய்யப்பட்ட மூங்கில் முகப்புகளை கொண்டதாக இருக்கும் மிக அழகான கட்டமைப்புகளைக் காட்டியது. இந்த வீடுகள் இராட்சச பாவோபாப் மரங்களுக்கிடையில் அமைந்திருந்தன. கோவில் கூறையின் அலைஅலையான அமைப்பு இந்த வரலாற்றைக் குறிப்பிடுகின்றது.

கின்ஷாஷாவிலிருந்து கொங்கோ ஆற்றின் ஒரு காட்சி. அதன் துணைநதிகள் நாட்டின் எல்லா பாகங்களிலிருந்தும் மழைநீரைச் சேகரித்து ஒரே பெரும் நதியாக விளங்கும் இந்த ஆறு, கோவிலின் வடிவமைப்பில் பிரதிபலிக்கப்படும் எல்லா மக்களும் ஒன்றாக வருவது எனும் ஓர் ஆற்றல்மிக்க உருவகத்தை வழங்குகின்றது.  மத்திய கட்டமைப்பின் குவிமாடத்தின் வெளிப்புறத்தை அலங்கரிக்கவிருக்கும் வடிவங்கள், பல்வேறு கொங்கோலிய மக்களின் கலைப்படைப்புகளை நினைவுகூரும் ஒரு பாணியில் இந்த யோசனையை வெளிப்படுத்தும். 

வழிபாட்டு இல்லமானது, கொங்கோ பஹாய்களினால் பல தசாப்தங்களாகப் பேணப்பட்ட துடிப்பான பக்தி உணர்விற்கு உருவங்கொடுக்கும். நாட்டில், எல்லா வயது, சமயங்கள் சார்ந்த சுமார் 200,000 மக்களுக்கும் மேற்பட்டு, தங்கள் அண்டைப்புறங்களிலும் கிராமங்களிலும் பஹாய் வழிபாட்டு ஒன்றுகூடல்களில் பங்கேற்கின்றனர். தற்போதைய முடக்க நடவடிக்கைகளுக்கு இடையிலும், அரசாங்கத்தினால் செயல்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும் அதே வேளை இந்த வழிபாடு சார்ந்த வாழ்க்கையின் தீவிரம் அதிகரிப்பே கண்டுள்ளது.  

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன்னதாக எடுக்கப்பட்ட படங்கள். தேசிய வழிபாட்டு இல்லமானது, கொங்கோ பஹாய்களினால் பல தசாப்தங்களாகப் பேணப்பட்ட துடிப்பான பக்தி உணர்விற்கு உருவங்கொடுக்கும். நாட்டில், எல்லா வயது, சமயங்கள் சார்ந்த சுமார் 200,000 மக்களுக்கும் மேற்பட்டு, தங்கள் அண்டைப்புறங்களிலும் கிராமங்களிலும் பஹாய் வழிபாட்டு ஒன்றுகூடல்களில் வாடிக்கையாகப் பங்கேற்கின்றனர்.

இந்த அனுபவங்களின் மீது பிரதிபலித்த திரு முத்தோம்போ, “எல்லா சமயம் சார்ந்த சமூக்தினரும் பஹாய் வழிபாட்டுக் கூட்டங்களுக்கு வருகின்றனர். வந்து, நமது சமுதாயத்தின் தேவைகள் குறித்து பிரதிபலித்து, தோழமையில் வளர்ச்சி காண்கின்றனர்.

“வழிபாட்டு இல்லம் ஒவ்வொரு திசையையும் எதிர்நோக்கும் ஒன்பது கதவுகளுடன் கட்டப்பட்டு அனைத்து மக்களுக்கும் திறந்திருக்கும், இது பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்ற கொள்கையை தினசரி யதார்த்தமாக மாற்ற அனுமதிக்கிறது. சமீபத்திய காலங்களில் உலகம் மிக மோசமான நெருக்கடிகளில் ஒன்றைக் கடந்து செல்லும் இந்த தருணத்தில், இந்த ஆலயத்தின் தோற்றம் நம்பிக்கையைத் தூண்டுவதிலும் அனைவரையும் செயல்பட ஊக்குவிப்பதிலும் பிரார்த்தனை வகிக்கும் முக்கிய பங்கைக் குறிக்கிறது.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1438/