
அமெரிக்க ஜாஸ் இசையமைப்பாளர்கள் 2008 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் ஒரு பாடலை எழுதியுள்ளனர்.
8 அக்டோபர் 2021
பிரன்ஸ்விக், ஜோர்ஜியா, ஐக்கிய அமெரிக்கா — தங்களின் சீன இசை, பிரேசில் சம்பா, மற்றும் அமெரிக்க ஜாஸ் குறித்த அறிவைக் கொண்டு இரு ஜாஸ் இசையமைப்பாளர்கள் ஒலிம்பிக் விளையாட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு பாட்டை எழுதியுள்ளனர். (பாடலை இங்கு கேட்கலாம்)

“பெய்ஜிங் ஒலிம்பிக் ஹாவ் யுய்ங் (Good Luck),” எனும் பாட்டை பிஃல் மோரிசன் மற்றும் வில்லியம்ஸ் என்பவரும் அமைத்துள்ளனர். இப்பாடல் ஒலிம்பிக் செயற்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு போட்டியின் இறுதிச் சுற்றில் தேர்வு செய்யப்பட்ட 30 பாடல்களில் ஒன்றாகும்.
இப்போட்டி சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்தது. இதில் இறுதியில் சுமார் 3000 பாடல்கள் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டன என இதன் ஏற்பாட்டாளர்கள் கூறினார். ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 8 ஆகஸ்ட்டில் ஆரம்பித்தன.
பாடல்கள் எங்கெங்கிலுமிருந்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவை யாவும் பெய்ஜிங் நகர் மற்றும் சீன தேசத்தின் தனிச்சிறப்பான பின்னனி மற்றும் பன்பாட்டைப் பிரதிபலிக்க வேண்டுமென விதிமுறைகள் கூறின.
திரு மொரிசன் திரு வில்லியம்ஸ் ஆகியோர் நீண்டகாலமாக பஹாய்களாக இருந்துவருகின்றனர். இவர்கள் சீனாவில் பல பாடல் பதிவுகளைச் செய்தும் அங்கு பலமுறை பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெற்ற பாடல்களில் இவர்களின் பாடல் மட்டுமே அமெரிக்காவிலிருந்து பெறப்பட்ட பாடலாகும். சீனாவுக்கு வெளியே இருந்து சில பாடல்கள் மட்டுமே போட்டிக்குப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இவர்களின் பாட்டின் வரிகள் பஹாய் சமயத்தின் கோட்பாடுகள் சிலவற்றை உள்ளடக்கியுள்ளன: “உலக ஒற்றுமைக்காக — ஒரே உலகக் குடும்பம் — உலகமே கொண்டாடும்” மற்றும் “அனைவருக்காகவும் அமைதி மற்றும் நட்பைப் பரப்புவோம் — கதவுகளைத் திறப்போம் — உலகம் ஒன்றுகூடட்டும்,” போன்றவை. இவ்விருவரும், பிற கலைஞர்களோடு சேர்ந்து, கீத் வில்லியம்ஸ் பங்கு பெறும் ‘பிஃல் மோரிசன் குழுவினர்’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சிகள் படைக்கின்றனர்.
பாஸ் இசைக் கலைஞர் மற்றும் பாடல் இயற்றுனரான திரு மோரிசன், ஏறத்தாழ தமது வாழ்நாள் முழுவதையுமே ஓர் இசைக் கலைஞராக கழித்தவர். இவர் தமது கலைத் தொழிலை முதலில் பாஸ்டன் நகரில் ஆரம்பித்து பிறகு அனைதுலக ரீதித்கு வந்தவர். இவர் நாட் கிங் கோல் எனும் புகழ் பெற்ற இசைக் கலைஞரின் தம்பியான பிஃரெடி கோல் என்பவரோடு சுமார் ஐந்து வருடங்கள் கலைத்தொழில் புரிந்தார். அப்போது அவர் பிரேசில் நாட்டில் அடிக்கடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இப்போது இவர் பிரன்ஸ்விக் நகர், ஜோர்ஜியா, ஐக்கிய அமெரிக்காவில் வாழ்கின்றார்.
சான் பிரான்சிஸ்கோ நகரில் பிறந்தவரான திரு வில்லியம்ஸ், பாஸ்டன் நகரின் பெர்க்கிலீ காலேஜில் பட்டப்படிப்பை முடித்த ஒரு பாடகர், பியானோ இசைக்கலைஞர், பாடல் இயற்றுனர் மற்றும் இசையமைப்பாளராவார். இவர் டிஸ்ஸி கில்லெப்சி மற்றும் லையனல் ஹாம்ப்டனுடன் நிகழ்ச்சிகள் படைத்துள்ளார். சுமார் ஐந்து வருடங்கள் இவர் தமது சொந்த குழுவைக் கொண்டிருந்தார் மற்றும் இப்போது பிரன்ஸ்விக் நகரில் வாழ்கின்றார்.
திரு மோரிசன் மற்றும் திரு வில்லியம்ஸும், “உலக ஒற்றுமை ஜாஸ் குழுமம்” எனும் பெயரில் — இப்பெயரை இப்போதும் அவ்வப்போது பயன்படுத்துகின்றனர் —
“China Sky” மற்றும் “Hollow Reed,” எனும் இரு பாடல் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிக்கு வந்த பாடல்கள் பெரும்பாலும் பண்களாக அமைக்கப்பட்டிருந்தன, ஆனால், தங்களின் “பெய்ஜிங் ஒலிம்பிக் ஹாவ் யுய்ங்” பாடல் ஒரு கொண்டாட்ட ஒன்றுகூடல் நிகழ்ச்சியின் சுவையைக் கொண்டுள்ளது என திரு வில்லியம்ஸ் கூறினார்
“மனிதக் குடும்பமாக எங்களோடு ஒன்றுகூடுங்கள்,” என இப்பாடலின் வரிகள் அமைந்துள்ளதாக திரு வில்லியம்ஸ் மேலும் கூறுகிறார் மற்றும் சோனி இசையினால் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ ஒலிம்பிக் குறுந்தட்டில் இப்பாடலும் இடம்பெறும். இப்பாடலை கீழ்க்காணும் வலைப்பக்கத்தில் செவிமடுக்கலாம்: http://www.philmorrisontrio.com.
மூலாதாரம்: https://news.bahai.org/story/649/