சமுதாயத்தில் பாலின வன்முறைக்கு எதிரான பாப்புவா நியூ கினி பஹாய்களின் அறிக்கை


முழு அறிக்கையையும் (pdf) இங்கு காணலாம்

 

பாலின சமத்துவத்திற்கு வழி அமைத்தல்

மேலும் ஒரு பாலினம் சார்ந்த வன்முறைக்கு பலியான ஒருவரை அடுத்து, பாப்புவா நியூ கினி  பஹாய்கள் பெருந்துயரத்துடன் எங்கள் சக நாட்டினருடன் சேர்ந்துகொள்கின்றோம். சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் எதிரான இத்தகைய வன்முறை மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களை நாங்கள் கண்டிக்கின்றோம்.

பாலினம் அடிப்படையிலான வன்முறை நம் நாட்டில் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது. அது, நம் சமுதாயத்தை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோயினுடைய அறிகுறியின் வெளிப்பாடாகும். நமது முன்னேற்றமும் வளம்பெறுதலும் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவதற்குக் காரணமான இந்த நோய்க்குரிய பல காரணங்களுள் ஆண் பெண் சமத்துவத்தை கண்டுணரத் தவறியுள்ளதே ஒரு காரணமாக இருக்கின்றது.

“ஆதலால், வன்முறையை ஒழித்தல் சட்டம் மற்றும் கொள்கையில் மாற்றங்கள் மட்டும் தேவைப் படவில்லை; கலாச்சாரம், மனப்பாங்குகள் மற்றும் நம்பிக்கைகளின் மட்டத்திலும் அடிப்படை மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இத்தகைய மாற்றங்கள், பெண் ஆண் சமத்துவம் என்பது எட்டப்பட வேண்டிய ஓர் இலக்கு மட்டுமல்ல, மாறாக மனித இயல்பு குறித்து அங்கீகரித்து அரவணைக்கப்பட வேண்டிய ஓர் உண்மையுமாகும்… மனிதராக நம்மை உருவாக்கும் அந்த சாராம்சம் ‘ஆண்பாலோ’ ‘பெண்பாலோ’ அல்ல. …சமத்துவம் என்பது வள ஆதாரத்தின் ஓர் எண்ணிக்கை, சமுதாய முறைகளின் ஒரு தொகுப்பு ஆகியவற்றுக்கும் மேலான ஒன்றாகும். அது ஒவ்வொரு மனிதனிலும் உள்ளார்ந்துள்ள மேன்மையின் பிரதிபலிப்பாகும்.”[1]

இதன் வெளிச்சத்தில், பாலினம் சார்ந்த வன்முறையை முற்றாக ஒழிப்பதற்கு, ஒரு முழு சமூகம் எனும் முறையில், இந்தக் கோட்பாட்டின் ஆன்மீக உண்மையை கூட்டாகக் கண்டுணர்ந்தும் கடைப்பிடிக்கவும் வேண்டும்.  “பெண்ணும் ஆணும் என்றுமே கடவுளின் பார்வையில் சமமானவர்களாக இருந்துள்ளனர், அவ்வாறே இருந்தும் வருவர்,”[2] என பஹாய் திருவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. இது, ஆன்மாவின் சாராம்சத்திலிருந்து கிளைத்துள்ள ஓர் அடிப்படை ஆன்மீக உண்மையாகும்; இது எல்லா மனிதர்களுக்குமே வழங்கப்பட்டுள்ளது. ஆன்மாவுக்கு பாலினம் கிடையாது; ஆன்மீக திறனாற்றல்கள் மட்டுமே மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுகின்றன.  

நமது சமூக செழுமை ஆண் பெண் இருபாலரின் சமமான பங்கேற்புடன் பிணைக்கப்பட்டுள்ளது. “ஏனெனில், “மானிட உலகு இரண்டு இறக்கைகளைக் கொண்டுள்ளது: ஆண் மற்றும் பெண். இந்த இரண்டு இறக்கைகளும் சம அளவான வலிமை பெற்றிரா வரை, பறவையால் பறக்க இயலாது. மானிடமானது, உண்மையான சாதனைகளின் உச்சங்களுக்கு பறந்து செல்ல முடியாது. இரண்டு இறக்கைகளும் வலிமையில் சமமாகும் போது, சமமான சலுகைகளை அனுபவிக்கும் போது, மனிதனின் பறப்பு அபரிமித உயர்வாகவும் அசாதாரனமானதாகவும் இருந்திடும்” [3]

ஆண் பெண் சமத்துவம் குறித்த கருத்து, நமது சமூகங்களில் ஆன்மீக மற்றும் தார்மீக கல்வியையும் செயலாக்கம் பெற்ற நடவடிக்கையையும் வேண்டுகின்றது. அன்பு, நீதி, சமத்துவம், கருணை எனும் இந்த சில ஆன்மீகப் பண்புகள், குடும்பச் சூழல்களிலும் பள்ளிகளிலும் என நமது சமுதாயத்தின் நடுமத்தியில் கற்பிக்கப்படவும் நடைமுறைப்படுத்தப்படவும் வேண்டும். அது அன்பார்ந்த கலந்தாலோசனையுடன் இணைக்கப்பட வேண்டும்; ஏனெனில், கலந்தாலோசனையானது, “மக்களின் மனச்சாந்தி மற்றும் மகிழ்ச்சிக்கு உகந்த மிகவும் வலிமையான கருவிகளுள் ஒன்றாகும்[4]; அது ஒற்றுமை, புரிதல் ஆகியவற்றைப் பேணுகின்றது.

ஒரு விரிவான சூழலில் கண்ணுறும் போது, பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறையும் பாகுபாடும் முரண்பாடு, அநீதி, பாதுகாப்பின்மை ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படும் ஒரு சமுதாய முறையின் அறிகுறிகளுள் ஒன்றாகும். குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரல்களால் கட்டுப்படுத்தப்படும்-அதன் கட்டமைப்புகளும் செயல்முறைகளும் பொதுநலத்திற்கு சேவை செய்ய அவற்றால் இயலாது என்பதை நிரூபித்துக் காட்டுகின்றன. பெண்களுக்கும் சிறுமியர்களுக்கும் எதிரான வன்முறையை ஒழித்துக்கட்ட நாம் முயலும் போது, விரிவானதும் நீண்டகாலமானதுமான இலக்கின்பால் நாம் பார்வையிழந்திடக் கூடாது: குறிப்பாக, நீதியும் நியாயமும் மிக்க ஒரு சமுதாய முறையை நிர்மாணிப்பதில் பெண்களும் ஆண்களும் தோளுடன் தோள் சேர்ந்து பணிபுரியும் ஒரு சூழ்நிலையை உருவாக்குதல்.” [5]

சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் சிறிது முன்பாக, வெளிப்படுத்தப்பட்ட சமயவரலாற்றில் முதன் முறையாக, பஹாய் சமயத்தின் அவதார ஸ்தாபகரான பஹாவுல்லா, ஆண் பெண் சமத்துவத்தைப் பிரகடனப்படுத்தினார்.  இந்தப் பிரகடனத்தை ஓர் இலட்சியமாக அல்லது ஒரு பக்திமிகு நம்பிக்கையாக அவர் விட்டுவிடவில்லை, மாறாக அதை தமது சமுதாய முறையின் கட்டமைப்பிற்குள் ஓர் அடிப்படை காரணியாக நெய்துவிட்டிருந்தார். பெண்களின் கல்விக்கு ஆண்களைப் போன்று அதே தரத்தையும் சமுதாயத்தில் சம உரிமைகளையும் கோரும் சட்டங்கள் இயற்றுவதன் மூலம் ஆதரித்தார்.  

பஹாய்களுக்கு, பாலின சமத்துவம் என்பது பூமியின் ஒருமைப்படுத்தல், உலக அமைப்புமுறை மடிப்பவிழ்தல் ஆகியவற்றிற்கு இன்றயமையாத ஓர் ஆன்மீக மற்றும் தார்மீக செந்தரமாகும்.  பெண்கள் மற்றும் ஆண்களின் பண்புகள், திறமைகள், திறன்கள் ஆகியன இல்லாமல் இப்பூமியின் முழு பொருளாதார மற்றும் சமுதாய அபிவிருத்தி அறவே இயலாத ஒன்றாகிவிடும். 

வளரிளமைப் பருவத்திலிருந்து முதிர்ச்சிநிலைக்கான மானிடத்தின் தற்போதைய கடப்பில், பரிணமித்து வரும் இந்த சமத்துவத்தின் அடையாளங்கள் எங்கும் காணப்படுகின்றன. பஹாய் கண்ணோட்டத்தில், இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல, ஏனெனில் “பெண்கள் தங்களின் மிக உயரிய வாய்ப்புகளிலிருந்து தடுக்கப்படும் வரை, ஆண்களும் ஆதே காலம் வரை அவர்களுக்குரிய மகத்துவத்தை அடையமுடியமலேயே இருப்பர்.[6]

நாம் தற்போது பிரவேசிக்கும் இந்த காலகட்டத்தின் பண்புகள் பஹாய் திருவாக்குகளில் காணப்படும் பின்வரும் கூற்றிலிருந்து கூர்கவனத்திற்கு மேலும் கொண்டுவரப்படுகின்றது.

கடந்தகாலத்தில் உலகம் முரடான ஆட்சிக்கு உட்பட்டும், உடல் மற்றும் மனம் சார்ந்த அதிக வன்மையும் முரடும் மிக்க பண்புகளின் காரணமாக பெண்கள் மீது ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர்.  ஆனால், இந்த நிலை மாறி வருகின்றது, வலிமை அதன் ஆற்றலை இழந்துவருகின்றது, மன விழிப்புணர்வு, உள்ளுணர்வு, பெண்கள் பலசாலிகளாக விளங்கும் அன்பு மற்றும் சேவை சார்ந்த ஆன்மீகப் பண்புகள் ஏற்றம் கண்டு வருகின்றன. ஆதலால், புதிய யுகமானது, ஆண்மை இலட்சியங்கள் குறைவாகவும், பெண்மை இலட்சியங்கள் அதிகமாக இருக்கவிருக்கும் ஒரு காலமாக இருக்கும், அல்லது, துல்லியமாகக் கூறுவதானால், நாகரிகத்தின் ஆண்மை மற்றும் பெண்மை அம்சங்கள் சீரொழுங்குடன் இருந்திடும். 

கடந்த நூறாண்டுகளுக்கும் மேல், பாலின சமத்துவ கோட்பாட்டை உண்மையென பஹாய் உலகம் ஏற்று வந்தும், இக்கோட்பாட்டை தனிநபர், குடும்ப, மற்றும் சமூக வாழ்வில் அமல்படுத்துவதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டுமுள்ளது. பஹாய் சமூகத்தில் குடும்பத்தின் அஸ்திவாரமாக விளங்கும் திருமணம் எனும் ஸ்தாபனம், இச்செயல்முறையின் ஒரு பகுதியாகும். ஒரு பஹாய் திருமணம் நடைபெறுவதற்கு முன்பாக, ஒருவரை ஒருவர் தன்னிச்சையாக தேர்வு செய்துள்ள ஜோடி, பெற்றோர் அனைவரின் சம்மதத்தையும் பெற்று, அதை சமூகத்தின் நிர்வாக அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும். “மெய்யாகவே, நாங்கள் அனைவரும், கடவுளின் விருப்பத்திற்கு அடிபனிவோம்,” [7] என இருவரும் உச்சரிக்கும் சத்திய பிரமானத்துடன் புதிதாக திருமணம் செய்துகொண்டோர் உண்மையான ஆன்மீக ஒற்றுமை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கைகளை ஒன்றாக ஆரம்பிக்கின்றனர்.

கடவுளின் முன்னிலையில் ஒவ்வொரு மனிதனின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளில் வேரூன்றியுள்ள இந்த ஒற்றுமையும் சமத்துவமும், குடும்பத்தில் மடிப்பவிழ்கின்றன. இங்கு, தனிநபருடன், சமூகம், தேசம், மானிடம் ஆகியவற்றின் அபிவிருத்திக்கு இன்றியமையாத விழுமியங்கள் மற்றும் மனப்பான்மைகள் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்பட வேண்டும். பஹாய் கண்ணோட்டத்தில், ஒரு மனித ஒருமம் எனும் முறையில் குடும்பம் பவித்திரத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப கற்பிக்கப்பட வேண்டும். குடும்பத்தில் எல்லா விழுமியங்களும் கற்பிக்கப்பட வேண்டும். குடும்ப பந்தத்தின் நெறிமை சதா கருதப்பட வேண்டும் மற்றும் தனி உறுப்பினர்களின் உரிமைகள் மீறப்படக்கூடாது…  இந்த உரிமைகளும் தனிச்சிறப்புரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும், ஆயினும் குடும்ப ஒற்றுமை பராமரிக்கப்பட வேண்டும்.  ஒன்றில் ஏற்படும் காயம் அனைத்தின் காயமாக கருதப்பட வேண்டும்; ஒன்றின் சௌகர்யம், அனைவரின் சௌகர்யமாகும்; ஒருவரின் மரியாதை அனைவரின் மரியாதையாகும்.  

பிள்ளைகளின் கல்விக்கான பொறுப்பை பெற்றோர் இருவருமே பகிர்ந்துகொண்ட போதும், மானிடத்தின் முதல் கல்வியாளர் எனும் முறையில் அன்னைக்கே அங்கீகாரம் வழங்கப்படுகிறது, இந்தப் பணிக்காக அந்தத் தாய் கவனத்துடன் ஆயத்தமாக்கப்பட வேண்டும். உண்மையில், பிள்ளையின் குழந்தைப் பருவத்திலிருந்து பெண்ணே பயிற்சியாளராக இருக்கின்றார் என்பதால்,  பஹாய் கண்ணோட்டத்தின்படி, தந்தையைவிட தாயின் கல்வியே அதிக முக்கியத்துவம் உடையதாகின்றது. தாய் என்பார் தானே குறைபாடும் பூரணமின்மையும் உடையவாராக இருப்பின் அக்குழந்தையும் அதே போன்று குறைபாடுகள் உடையதாக இருந்திடும்; ஆதலால், பெண்ணில் குறைபாடு மானிடம் அனைத்திலும் ஒரு குறைபாட்டை உட்குறிக்கின்றது, ஏனெனில் தாயே குழந்தையை வளர்த்து அதன் வளர்ச்சியைப் பேணி வழிகாட்டுகின்றார்.  

பஹாய்கள் வாழ்க்கையை ‘சமயம்சார்ந்த’ ‘சமயமற்ற’ வாழ்க்கை என பிரிப்பதில்லை என்பதாலும் சமயநம்பிக்கை என்பது சமுதாய நடவடிக்கைகள், அதன் உண்மைகள் அனைத்தும் அடங்கிய ஆண் பெண் கல்வியில், வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதாலும், கல்வியானது “விஷயங்களின் புதிய ஒழுங்குமுறையில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கின்றது.” இதன் காரணமாக, ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கட்டாயமான ஒன்றாகும். ஒரு குடும்பத்தில் பெண்ணையும் ஆணையும் ஒன்றாக கல்வி கற்பிக்க போதுமான பணம் இல்லையெனில், இருக்கும் பணம் அப்பெண்ணின் கல்விக்கே அர்ப்பணிக்கப்பட வேண்டும், ஏனெனில் அவளே சாத்தியங்கள் மிக்க தாயாக இருக்கின்றாள். பெற்றோர் இல்லையெனில் சமூகமே அக்குழந்தையின் கல்விக்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும், இந்த விரிவான கல்விக்கு ஒவ்வொரு பிள்ளைக்கும் ஏதாவது தொழில், கலை, அல்லது வணிகம் கற்பிக்கப்பட வேண்டும், அதன் மூலம் சமூகத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் தனது சொந்த வாழ்வாதாரத்தை ஈட்டிட இயலும்.  

மனித பரிணாமத்தின் இப்புதிய யுகத்தின் உணர்வில், “மகள்களும் மகன்களும் படிப்பில் ஒரே பாடத்திட்டத்தைப் பின்பற்றி, அதன் மூலம் பாலினத்தின் ஒற்றுமையை ஊக்குவித்திட ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே பயிற்சிமுறை ஏற்றுக்கொள்ளப்படுவது குறித்து பஹாவுல்லா பிரகடனம் செய்துள்ளார்”[8] என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

பஹாய் திருவாக்குகள் “எல்லா மனிதத் துறைகளிலும் பெண்களின் பிரவேசம் மறுக்கமுடியாத மற்றும் ஆட்சேபிக்கமுடியாத விஷயமென வாக்குறுதியளிக்கின்றன.  எந்த ஆத்மாவும் அதைக் குறைக்கவோ தடுக்கவோ முடியாது”; “எந்த இயக்கத்திலும்” பெண்கள் “பின்தள்ளப்பட மாட்டார்கள்;   அவர்கள் மானிட உலகின் மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படும் அளவிற்கு யாவற்றிலும் சாதனை செய்வார்கள், எல்லா விவகாரங்களிலும் பங்கெடுப்பார்கள்”;   “உலக விவகாரங்களில் பெண்கள் முழுமையாகவும் சமமாகவும் பங்கேற்கும்போது …போர் நிறுத்தப்படும்.”[9] உலக ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஸ்தாபிப்பதில் பெண்களின் இந்த பங்களிப்பு தவிர்க்க முடியாமல் அங்கீகரிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும்.

கடந்தகாலங்களில் மானிடம் பூரணமின்மையால் குறைபாடும் விளைவுத்திறமற்றதாகவும் இருந்துள்ளது. போர்களும் அவற்றால் ஏற்படும் அழிவுகளும் உலகை மழுங்கடித்துள்ளன. பெண்கள் கல்வி அதனை ஒழிப்பதிலும் முடிவுக்குக் கொண்டுவருவதிலும் ஒரு மகத்தான படியாக இருந்திடும், ஏனெனில் பெண்ணானவள் போர்களுக்கு எதிராக தனது முழு செல்வாக்கையும் பயன்படுத்துவாள்…  சர்வலோக அமைதி, அனைத்துலக மத்தியஸ்தம் ஆகியவற்றை ஸ்தாபிப்பதில் அவள் பெரும் காரணியாக இருப்பாள். உறுதியாகவே, பெண்னாவள் மனிதருக்கிடையில் போரை ஒழித்திடுவாள்.  

இருப்பினும், தனது சாத்தியமிக்க ஆற்றல்களை முழுமையாக மேம்படுத்திக்கொள்ளும் பெரும் கடமை பெண்ணின் மீது சுமத்தப்பட்டுள்ளது. மேலும், பெண்ணின் திறனாற்றலுக்கும், சாதனைகளுக்கும் ஒப்புதல் அளிக்க ஆண்கள் வற்புறுத்தப்பட,  அதிக பூரணத்துவம் பெறவும், எல்லா விதத்திலும் ஆணுக்கு சமமானவராகிடவும், தான் பின்தங்கியுள்ள அனைத்திலும் மேம்பாடு அடைந்திடவும் அவள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.,   

நிச்சயமாக, இனம், தேசியம், வகுப்பு, சமயம், அல்லது பாலினம் கருதாமல், ஒவ்வொரு தனிநபரின் சாத்தியமான ஒழுக்கநெறிகள் மற்றும் திறன்களின் அபிவிருத்தியில்தான் மனுக்குலத்தின் நல்வாழ்வு அடங்கியுள்ளது. இதன் காரணமாக, பிரிவினை, அடக்குமுறை ஆகியவற்றிற்கு காரமான தப்பெண்ணங்கள், பஹாய் சமூக வாழ்வில் முறைமையுடன் ஒழிக்கப்படுகின்றன. பன்மையில் ஒருமை எனும் கருத்தாக்கத்தில் வேரூன்றிய ஒரு தனித்தன்மை மிக்க நிர்வாக முறையானது, சமூகத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் கல்வியை வலியுறுத்துவதுடன், கடந்தகாலத்தில் தங்களின் உரிமைகளை இழந்தோர் அனைவரின் உடனடியான ஒருங்கிணைத்தலையும் அனுமதிக்கின்றது. எவ்வித நியமனமோ பிரச்சாரமோ இன்றி இரகசிய வாக்குகளின் மூலம் இயங்கும், பஹாய் தேர்தல் முறையானது சர்வலோக பங்கேற்பை ஊக்குவிக்கின்றது: பஹாய் விவகாரங்களின் செயல்பாட்டில் முடிவெடுக்கும் பொறுப்பைக் கொண்ட உள்ளூர் அல்லது தேசிய நிர்வாக அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதி ஒவ்வொரு முதிய பஹாய் அன்பருக்கும் உண்டு. நீண்டகாலமாக சம வாய்ப்புகளை இழந்துவந்துள்ள பெண்கள், இப்பொழுது சுலபமாக சமுதாயத்தின் வாழ்வில் ஒன்றிணைக்கப்பட முடிவது, பஹாய் சமூக வாழ்வின் எல்லா துறைகளிலும் பெண்கள் பங்கேற்பின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தப்படுகின்றது. 

பஹாய் உலக சமூகத்தில் இன்று, 200’க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் ஓர் உலகளாவிய சமுதாயத்தை நிர்மாணிப்பதில் ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் பணிபுரிகின்றனர். மனித சாத்தியக்கூறுகளின் நிறைவேற்றத்தைத் தடுக்கும் எல்லா தடைகளையும் நீக்கியுள்ள பஹாவுல்லாவினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள அனைத்தையும் ஊடுருவவல்ல ஆன்மீக சக்தியே ஓர் உலக நாகரிகம் நிறுவப்படுவதற்கான, அவர்களின் முழு பங்களிப்பு சாத்தியப்படுவதற்கான, காரணம் என பஹாய்கள் நம்புகின்றனர். பஹாய் கண்ணோட்டத்தில், இது ஒளிமிகு நூற்றாண்டு என்பதால், திருவாக்கு எனும் மெய்ம்மைச் சூரியன் தன்னை மனிதகுலம் முழுமைக்கும் வெளிப்படுத்தியுள்ளது என்பது தெளிவாக உள்ளது. பெண்மையின் செயல்திறம் அல்லது திறனாற்றலே மானிட உலகில் மறைவாக உள்ள சாத்தியக்கூறுகளுள் ஒன்றாகும். தெய்வீகப் பிரகாசத்தின் பேரொளிமிக்க கதிர்களின் மூலம், இக்காலகட்டத்தில் பெண்களின் திறனாற்றலானது அத்தகைய விழிப்புணர்வும்  வெளிப்பாடும் கண்டுள்ளதானது, ஆண் பெண் சமத்துவம் என்பது ஓர் நிலைப்படுத்தப்பட்ட பொருண்மையாக இருக்கின்றது.  

பாப்புவா நியூ கினி பஹாய்கள், பலியானோருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தங்களின் பிரார்த்தனைகளை வழங்கி, “உங்கள் உள்ளங்களின் சிந்தனைகள் அனைத்தையும் அன்பு மற்றும் ஒற்றுமையின்பால் மையப்படுத்துமாறும்… ஒரு போர் எனும் எண்ணம் வரும்போது அது அதைவிட வலுவான அன்பு எனும் எண்ணத்தால் அழிக்கப்படல் வேண்டும்” எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.” [10]

தொலைபேசி: (+675) 71034101  மின்னஞ்சல்: NSAExternalAffairs@bahai.org.pg

இணையதளம்: http://www.bahai.org.pg


[1] பஹாய் அனைத்துலக சமூகம், பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறை ஒழிப்பு, பெண்கள் ஸ்தானம் குறித்த 57’வது கமிஷனின் அமர்வுக்கான பங்களிப்பு, நியூ யார்க் 2012, பக் 1.

[2] பஹாவுல்லா, பாரசீக மற்றும் அரபு நிருபம் ஒன்றின் மொழிபெயர்ப்பு, ‘பெண்களில்’ மேற்கோளிடப்பட்டது: பஹாவுல்லா, அப்துல்-பஹா, ஷோகி எஃபென்டி ஆகியோர் உட்பட உலக நீதிமன்றத்தின் எழுத்துக்களின் உரைப்பகுதிகள், தொகுப்பு. உலக நீதிமன்றத்தின் ஆய்வுத் துறை (தோர்ன்ஹில், ஒன்டாரியோ: கேனேடிய பஹாய்களின் தேசிய ஆன்மீக சபை, 1986, எண் 54

[3] அப்துல்-பஹா அனைத்துலக அமைதியின் பிரகடனம். ஐக்கிய அமெரிக்கா மற்றும் கெனடாவுக்கான அப்துல்-பஹாவின் பயணங்களின் வழங்கப்பட்ட உரைகள், 1912, தொகுப்பு. ஹோவார்ட் மேக்நட், 2’வது பதிப்பு

[4] ‘அப்துல்-பஹா, பாரசீக நிருபம் ஒன்றிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது

[5] Ibid., பஹாய் அனைத்துலக சமூகம், பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறை ஒழிப்பு, பெண்கள் ஸ்தானம் குறித்த 57’வது கமிஷனின் அமர்வுக்கான பங்களிப்பு, நியூ யார்க் 2012, பக் 1.

[6] அப்துல்-பஹா, பாரீஸ் பேருரைகள்: 1912-1913, பாரீஸ் நகரில் அப்துல்-பஹா வழங்கிய உரைகள், மறுபதிப்பு. (லன்டன்: பஹாய் பிரசுர காப்பகம், 1979), பக. 133

[7] பஹாவுல்லா, கித்தாப்-இ-அக்டாஸ், பக். 105

[8] அப்துல்-பஹா அனைத்துலக அமைதியின் பிரகடனம், பக். 175

[9] Ibid., பாரீஸ் பேருரைகள், பக்.237.

[10] Ibid., பாரீஸ் பேருரைகள், பக்.29.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: