
8 அக்டோபர் 2021
பிரஸ்சல்ஸ் – புலம்பெயர்வோர் மற்றும் தஞ்சம் தேடுவோரின் வரவு குறித்து கவனம் செலுத்திட, உடனடி பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பொருட்டு எல்லைக் கட்டுப்பாடு, மற்றும் புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றை நாடுகள் மேற்கொள்கின்றன. இருப்பினும், சமீபமான வருடங்களில், இவ்வித புலம்பெயர்வுக்கான அடிப்படை காரணங்களைக் கணிப்பதற்கான நீண்டகால கவனத்தின் தேவை குறித்து ஓர் அதிகரிக்கும் உணர்வு உண்டாகி வருகின்றது.

பிரஸ்சல்ஸில் உள்ள பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) அலுவலகத்தின் பங்களிப்பு, புலம்பெயர்தலின் அடிப்படை இயக்கிகளின் மீது கவனம் செலுத்துதலை உள்ளடக்கியுள்ளதோடு, அது இதன் தொடர்பில் சிந்தித்தலை ஊக்குவித்துள்ளது. கொள்கை வகுப்பாளர்களுடனும் பொது சமுதாய அமைப்புகளுடனும் இந்த இயக்கிகளை ஒன்றாக ஆராய்வதற்கு ஐரோப்பிய கமிஷனின் கூட்டு ஆய்வு மையத்துடன் கலந்துரையாடல் தளங்களை இந்த அலுவலகம் உருவாக்கி வருகின்றது.
பிரஸ்சல்ஸ் அலுவலகத்தின் ரேச்சல் பயானி, இந்த கலந்துரையாடல்களுக்குப் பொருந்தும் சில ஆன்மீக கருத்தாக்கங்கள் குறித்து பேசுகிறார். மனிதகுல ஒருமை குறித்த பஹாய் கோட்பாடு, ஓர் இடத்திலுள்ள மக்கள் இந்த தீர்மானங்களின் தாக்கத்தை தங்களின் சொந்த சூழல்களுக்கு மட்டுமின்றி மானிடம் முழுமைக்கும் பரிசீலிப்பதன் மீது ஆழ்ந்த தாத்பர்யங்களை கொண்டுள்ளன. புலம்பெயர்வு மற்றும் இடப்பெயர்ச்சி குறித்த கொள்கைப் பதில்செயல்களுக்கான ஒரு புதிய அணுகுமுறை இந்தக் கோட்பாட்டை கருத்தில் கொள்ள வேண்டும், ஏனெனில் ஐரோப்பாவின் நல்வாழ்வு உலகின் மற்ற பகுதிகளிலிருந்து தனியாக மேம்படுத்தப் பட முடியாது.
இந்த அலுவலகம் கவனத்தை ஈர்த்துள்ள இயக்கிகளுள் விவசாய கொள்கைகளுக்கும் ஆப்பிரிக்காவில் புலம்பெயர்வுக்கான காரணங்களுக்கும் இடையினான தொடர்பும் ஒன்றாகும். இந்தத் தலைப்பு குறித்த சமீபமான ஒன்றுகூடலில், பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரஸ்சல்ஸ் அலுவலகமும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் இணையாக ஓர் இணைய கலந்துரையாடலை சென்ற வாரம் ஏற்பாடு செய்து, அதற்கு சுமார் 80’க்கும் மேற்பட்ட கொள்கை வகுப்பாளர்களையும் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து பிற சமுதாய நடவடிக்கையாளர்களையும் ஒன்றுகூட்டியது.

“சமீபமான வருடங்களில், மக்கள் தங்களின் தாய்நாடுகளை விட்டு வெளியேறுவதற்கு உந்துவிசையாக விளங்கும் காரணிகளின்பால் மேலும் அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதற்கு ஒப்புதல் உருவாகி வருகின்றது,” என்கிறார் மிஸ். பயானி. விவசாயம், வணிகம், முதலீடு, சுற்றுச்சூழல் ஆகியன உட்பட வெவ்வேறு கொள்களைத் துறைகள் எவ்வாறு புலம்பெயர்வுக்கான இயக்கிகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நாங்கள் ஆராய விரும்புகின்றோம்.”
“கொள்கைகளின் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளைக் கண்டறிவது கடினம், ஆனால் இது அனைத்து மனிதகுலத்தின் நல்வாழ்வையும் மனதில் கொண்டு நீண்டகால உத்திகளை வளர்ப்பதற்கான முயற்சிகளைத் தடுக்கக்கூடாது.”
கூட்டத்தில் புலம்பெயர்ந்தோர் பெரும்பாலும் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கும், அங்கிருந்து பிற நாடுகளுக்கும் கண்டங்களுக்கும் செல்லும் பாதையை பங்கேற்பாளர்கள் அடையாளங் கண்டனர். பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடிகள், விவசாயிகளால் நில இழப்பு மற்றும் ஆபிரிக்காவில் கிராமப்புறங்களை விட்டு வெளியேற மக்களைத் தூண்டும் பிற காரணிகளானவை கண்டம் மற்றும் அதற்கு அப்பால் சிற்றலை விளைவுகளை எவ்வாறு ஏற்படுத்துகின்றன என்பது பற்றிய விவாதங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
கிராமப்புறங்களில் மக்கள் இருக்கும் இடத்தில்தான் புலம்பெயர்வு தொடங்குகிறது. மக்கள் தங்கள் கிராமப்புறங்களில் அதிருப்தி அடைந்தால், அவர்கள் நகரங்களுக்குத் தள்ளப்படுகிறார்கள், பின்னர் வெளிநாடுகளுக்குத் தள்ளப்படுகிறார்கள் ”என்று ஆப்பிரிக்க யூனியன் கமிஷனில் புலம்பெயர்வுக்கான திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெஃப்ரி வஃபுலா குண்டு கூறினார்.
ஐரோப்பிய இளம் விவசாயிகள் பேரவையின் தலைவர் ஜேன்ஸ் மேய்ஸ், குறிப்பாக கிராமப்புற இளைஞர்களிடையே, விவசாயத்தைச் சுற்றியுள்ள நேர்மறையான கலாச்சார மனப்பான்மைகள், உலகின் எந்தப் பகுதியிலும் கிராமப்புற சமூகங்களை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய அங்கமாகும் என்று குறிப்பிட்டார்.
“விவசாயத்தை நோக்கிய மனநிலையை மாற்றுவதற்கு தடைகள் நீக்கப்படுவது அவசியமாகும்,” என்று திரு. மேஸ் கூறுகிறார். “ஐரோப்பாவில் உள்ள முக்கிய தடைகள்–நமது ஆப்பிரிக்க சகாக்களிடமிருந்தும் நாம் செவிமடுப்பவை கூட—நிலத்திற்கான வாய்ப்பு, விநியோகத் தொடர்புகள், மற்றும் ஆரம்பிப்பதற்கு உள்நாட்டு மூலதனம் இல்லாவிடினும் முதலீடு ஆகியன. இவை நமது ஒட்டுமொத்த சமூகங்களாலும் சமாளிக்கப்பட வேண்டும்.”

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பைச் சேர்ந்த ஜோசலின் பிரவுன்-ஹால் கூறுகிறார், “… விவசாயமானது தீர்வின் ஒரு பகுதியாக இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம் மற்றும் புலம்பெயர்வு ஏற்படும்போது அது கவனிக்கப்படாமல் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான ஐரோப்பிய ஆணைய பொது இயக்குனரகத்தின் லியோனார்ட் மிஸ்ஸி, கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து ஒரு நிலையான பொருளாதார மீட்சியைப் பெறுவதற்கு இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மேலும் நெகிழ்வுத்தன்மை உடைய விவசாய முறைகளை உருவாக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதைக் கவனித்தார். “வர்த்தகம் போன்ற அமைப்புகளைச் சுற்றியுள்ள பலவீனங்களை கோவிட் அம்பலப்படுத்தியுள்ளது. எதிர்கால அதிர்ச்சிகளின் போது எந்த வகையான உணவு முறைகள் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும்? … இந்த விஷயங்களை உண்மையிலேயே நிவர்த்தி செய்யும் முறைமை அணுகுமுறை நம்மிடம் இல்லையென்றால், நம்மால் மீள்ச்சி பெற முடியாது. மேல்நிலையில் இருந்து வரும் தீர்வுகள் வேலை செய்யாது. நமக்கு ஒரு விவசாயி மற்றும் மனித உரிமைகளின் உந்தம் பெற்ற செயல்முறை தேவை.”
உகாண்டாவில் உள்ள பஹாய் ஈர்ப்புப் பெற்ற அமைப்பான கிமான்யா-என்ஜியோ அறக்கட்டளைக்கான அறிவியல் மற்றும் கல்வியின் கலெங்கா மசைடியோ, விவசாய முறைகள் குறித்த அறிவை உருவாக்குவதில் கிராமப்புற சமூகங்களின் பங்கேற்பை அனுமதிப்பதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.
“தனிநபர்களுக்கும் கிராமப்புற சமூக உறுப்பினர்களுக்கும் அதிகாரம் அளிப்பதே முக்கிய பிரச்சினையாகும், இதனால் அவர்கள் தங்கள் சொந்த சமூக, பொருளாதார மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்கான உரிமையை கையிலெடுத்துக் கொள்ள முடியும்” என்று திரு மசாய்டியோ கூறுகிறார். “இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எப்போதும் வெளியில் இருந்து வரும் என்று நாம் நினைப்பதை விட … அவ்வளர்ச்சி கிராமப்புற சமூகங்களிலிருந்தே தொடங்கப்பட வேண்டும்.”

இந்த கலந்துரையாடல்களைப் பற்றி திருமதி பேயானி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “சர்வதேச முறையில் உள்ள குறைபாடுகளையும் மேலும் எந்தவொரு பிரச்சினையையும் திறம்பட சமாளிக்க ஒற்றுமை எவ்வாறு தேவைப்படுகிறது என்பதையும் தொற்றுநோய் முனைப்புடன் எடுத்துக்காட்டுகிறது. கண்டங்கள் முழுவதிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்களும் சமூக நடவடிக்கையாளர்களும் ஒன்றிணைந்து சிந்திக்கக்கூடிய ஒரு தளத்தைக் பெற்றிருப்பது நமது அத்தியாவசிய ஒற்றுமையைப் பற்றிய உயர்த்தப்பட்ட புரிதலின் வெளிச்சத்தில் சர்வதேச அக்கறை கொண்ட ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதில் ஒரு முக்கிய படியாக இருந்திடும்.
“சமூக முன்னேற்றத்திற்கு பங்களிப்பதற்கான முயற்சிகள் விஞ்ஞானம் மற்றும் மதத்தின் நுண்ணறிவு ஆகிய இரண்டையும் ஈர்க்கும்போது, வாய்ப்புகள் மற்றும் அணுகுமுறைகள் வெளிப்படுகின்றன, இல்லையெனில் அவை புலப்படாமலேயே இருக்கும்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1442/