
“நகரங்களை நிர்மாணிக்க பாடுபடுவோருக்கும் நகரங்களைச் சொந்தமாக்குதல்”: இந்தியாவின் பஹாய் இருக்கை நகரமயமாதலை கவனிக்கின்றது.
8 அக்டோபர் 2021
இந்தூர், இந்தியா – இந்திய நகர்களில் முறைசாரா பொருளாதாரத்தில் பயன்படுத்தப்படும் கோடி கணக்கான மக்களில், தொற்றுநோயின் காரணமாக மில்லியன் கணக்கானோர் தங்களின் கிராமங்களுக்குத் திரும்பிச் சென்றுள்ளனர். இந்த செக்டரில் பணிபுரியும் மக்களின் – இவர்களுள் பலர் சமுதாய பாதுகாப்பின்றி தற்காலிக நகர்ப்புற குடியிருப்புகளில் வாழ்கின்றனர் — மிகவும் நிச்சயமற்ற நிலை குறித்து இந்த வெகுஜன புலம்பெயர்வு பொதுமக்களுள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூரில் உள்ள தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி படிப்பாய்வுக்கான பஹாய் இருக்கை, அபிவிருத்தி சிந்தனைக்கான நீண்டகால அணுகுமுறையை ஊக்குவிப்பதில் இந்தக் காலகட்டம் குறிப்பான முக்கியத்துவமுடையதாகும். “நகரங்களை நிர்மாணிக்க பாடுபடுவோருக்கே அவற்றை உடைமையாக்குதல்” எனும் தலைப்பிலான இணையதள ஒன்றுகூடல் வரிசையில் பொருளாதார நிபுணர்களையும் கல்வியாளர்களையும் பஹாய் இருக்கை ஒன்றுகூட்டியது.
பஹாய் இருக்கையின் தலைவரும், துணை பேராசிரியருமான அராஷ் ஃபஸ்லி, மனித இயல்பின்—ஒவ்வொரு மனிதனிலும் மேன்மையைக் காணுகின்ற, அவர்கள் ஒவ்வொருவரையும் தப்பெண்ணம் மற்றும் தந்தை சுபாவத்திலிருந்து (paternalism) பாதுகாத்திடும்– ஒரு புதிய கருக்கோள் அபிவிருத்தி குறித்த எந்த கலந்துரையாடலுக்கும் எவ்வாறு இன்றியமையாததாக இருக்கின்றது என்பதை விளக்குகின்றார்.
“நகர்ப்புற ஏழ்மையில் வாழும், குறிப்பாக கிராமப்புறங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்துள்ளோர், ஒடுக்குதலுக்கு உட்பட்ட, பலவிதமான தேவைகளைக் கொண்ட, அல்லது உழைத்தலுக்கான ஒரு மூலாதாரமாக மட்டும் இருக்கும், ஒரு பரிதாபத்திற்குரிய கூட்டமாக பெரும்பாலும் பேசப்படுகின்றனர். இருப்பினும், ஒடுக்குதல் நிறைந்த அவர்களின் சூழ்நிலையை வைத்து அவர்களை வரையறுப்பது அவர்களுக்கு அவர்களின் முழு மனிதத்தன்மையையே மறுப்பதாகும்.
“நமது நகரங்கள் மிகவும் நிலையான, வளமான, அமைதியான எதிர்காலத்தை நோக்கி முன்னேற முதலில் ஒவ்வொரு மனிதனினிலும் உள்ளார்ந்த மேன்மை அங்கீகரிக்கப்பட வேண்டும். தற்காலிக குடியேற்றங்களில் வசிப்பவர்கள் மோசமான சூழ்நிலைகளின் எதிரில் அவர்களுக்கு மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் மீளுந்திறனை அளிக்கின்ற படைப்பாற்றல் மற்றும் புத்தி கூர்மை, வலுவான சமூகப் பிணைப்புகள் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகள் ஆகியவற்றின் மூலம் அர்த்தமுள்ள மற்றும் உற்பத்தி நிறைந்த வாழ்க்கையை நடத்துகிறார்கள்.”

அபிவிருத்தித் துறையில் இடைநிலை ஆராய்ச்சி மற்றும் புலமையை மேம்படுத்துவதற்காக, மனித செழிப்பானது லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தின் விளைவாகக் கருதும் ஒரு கண்ணோட்டத்தில் பஹாய் இருக்கை ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்தாபிக்கப்பட்டது. இருக்கை நடத்திய மிகச் சமீபத்திய கூட்டத்தில், பங்கேற்பாளர்கள் நகர்ப்புற வளர்ச்சி எவ்வாறு ஒதுக்கப்பட்ட மக்களை எவ்வாறு உள்ளடக்கிட முடியும் என்பதை ஆராய்ந்தனர்.
டெல்லியின் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் பார்த்தா முகோபாத்யாய் புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்புவதற்கான பல்வேறு காரணங்களைப் பற்றி பேசினார். “அவர்கள் தங்கள் குடும்பத்தை ஆதரிப்பதற்காக நகரத்திற்கு வந்துள்ளனர், கடினமான காலங்களில் கிராமத்தில் தங்கியிருப்பவர்களை கவனித்துக்கொள்வது தங்களின் பொறுப்பு என்று அவர்கள் உணர்கிறார்கள். அதே சமயம், அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்கள் நகரத்தில் கவனித்துக் கொள்ளப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. … இந்த இரண்டு நிலைகளிலும், [புலம்பெயர்ந்தோர்] அவர்கள் முழு வேலை வாழ்க்கையையும் அங்கேயே கழித்திருந்தாலும் அவர்கள் இன்னும் நகரத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை நாம் உணர்கிறோம்.”

ஒதுக்கப்பட்ட மக்கள் தங்களைத் தாங்களே வாதிட அனுமதிக்கும் கட்டமைப்புகளின் அவசியத்தையும் விவாதங்கள் எடுத்துரைத்தன. புது டில்லியின் நகர்ப்புற ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த சித்தார்த் அகர்வால், அதிகாரிகளுடன் “மென்மையான ஆனால் விடாமுயற்சியான பேச்சுவார்த்தை” மூலம் அவர்களின் சமூகங்களின் தேவைகளை மதிப்பிடவும், அவர்களின் உரிமைகளை நிலைநிறுத்தவும் கூடிய பெண்கள் குழுக்களின் உருவாக்கம் உட்பட தமது அமைப்பின் அனுபவத்தில் வெளிவந்த சமூக ஒற்றுமையின் பல உத்திகளைப் பற்றி பேசினார்.
பெங்களூரில் உள்ள அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான வந்தனா சுவாமி, “நகரங்கள் ஏழைகளுக்காக ஒருபோதும் கட்டப்படவில்லை” என்றும், நகர்ப்புறங்கள் வறுமையில் வாடும் மக்களின் இருப்பைக் கண்ணுக்குத் தெரியாத நிலையில் வைத்திருக்க முயற்சிக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

கருத்தரங்கைப் பிரதிபலிப்பதில், பஹாய் போதனைகளால் ஊக்குவிக்கப்பட்ட கருத்துக்கள் எவ்வாறு வளர்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு விளக்கமளிக்க முடியும் என்பதை டாக்டர் பாஸ்லி விளக்குகிறார். “நகர்ப்புற வளர்ச்சி மற்றும் கொள்கையை செயல்படுத்துவது பற்றிய புதிய வழிகளை அனுமதிக்கும் புதிய மொழி மற்றும் கருத்தாக்கங்களை வழங்குவதே இந்த உரையாடல்களின் நீண்டகால நோக்கமாகும்.
“பொருள் வளங்களை அணுகுவதற்கான கண்ணோட்டத்திலேயே இந்த விஷயத்தைக் கருதுவதற்கான பொதுவான வழிகள் உள்ளன. வறுமையில் வாடுவோருக்குப் பொருள் வசதிகள் கிடையாது என்பது உண்மையே என்றாலும், அவர்கள் அர்த்தமும் குறிக்கோளும் மிக்க வாழ்க்கை வாழ்கிறார்கள். சமூக முன்னேற்றத்திற்கு ஒரு லௌகீக மற்றும் ஆன்மீக பரிமாணம் இருப்பதை நாம் உணரும்போது, நகரத்தின் அனைத்து மக்களையும் ஒட்டுமொத்த லௌகீக மற்றும் ஆன்மீக செழிப்புக்கு சாத்தியங்கள் மிக்க பங்களிப்பாளர்களாக பார்க்க ஆரம்பிக்கிறோம்.
“வறுமை என்பது ஒரு பெரிய அநீதியாகும், அது முறைமையுடன் கவனிக்கப்பட வேண்டும். ஆனால் நல்ல நோக்கங் கொண்ட வளர்ச்சி தலையீடுகள் கூட வறுமையில் வாழும் மக்களைப் பற்றிய தந்தை சுபாவ அனுமானங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும் போது, அவை சார்புமை, சுரண்டல் மற்றும் மனக்கசப்பை உருவாக்குகின்றன என்பதை அனுபவம் காட்டுகிறது. இறுதியில், மக்கள் தங்கள் சொந்த வளர்ச்சியில் தாங்களே முதன்மையாளர்களாக மாறும் போதும், கூட்டு சமூக முன்னேற்றத்திற்கான பொதுவான குறிக்கோள்களை அடைய சமூகத்தில் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற உதவப்படும் போதும் மட்டுமே அபிவிருத்தியானது நீடித்த பலன்களைத் தரும். இந்த செயல்முறைக்குப் பங்களிக்கும் ஒவ்வொருவரிடமும் உள்ள திறனைக் கண்ணுற, பொருள்சார்ந்த சிந்தனையின் கட்டமைப்பிற்கு அப்பால் சென்று மக்களின் தார்மீக மற்றும் ஆன்மீக திறன்கள் கண்ணுறப்பட வேண்டும்.”
கருத்தரங்கின் பதிவு இங்கு காணப்படும்
மூலாதாரம்: https://news.bahai.org/story/1444/