
8 அக்டோபர் 2021
ஐக்கிய அமெரிக்காவில் உள்ள பஹாய் ஊக்கம் பெற்ற அமைப்பான பெற்றோர் பல்கலைக்கழகம், இன தப்பெண்ணம் குறித்து நாட்டில் தற்போது பரவலான விழிப்புணர்வு நிலவும் ஒரு தருணத்தில், ஜோர்ஜியாவின் சவன்னாவில் இன சமத்துவத்தை ஊக்குவிக்கும் பல தசாப்த கால அனுபவத்தைப் பயன்படுத்தி வருகிறது. சமத்துவம் மற்றும் நீதி தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்கு ஆக்கபூர்வமான இணைய கலந்துரையாடல் தளங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் சமூக உறுப்பினர்களுக்கும் நகரத்தலைவருக்கும் மற்றும் காவல்துறைத் தலைவர் உட்பட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்த அமைப்பு பாலம் அமைத்து வருகிறது.

சவன்னாவின் கல்வி அமைப்பில் இன ஏற்றத்தாழ்வுகள் குறித்த பதற்றத்தின் மற்றொரு தருணத்தில், முட்டுக்கட்டைக்கு வழிவகுத்த எதிர்ப்பு மனப்பான்மைக்குப் பதிலாக நாம் பஹாய் கலந்தாலோசனை கொள்கையைப் பயன்படுத்தக்கூடிய ஒரு சூழலில், பெற்றோர், நகரம் மற்றும் பள்ளி அதிகாரிகள் மற்றும் பிற சமூக உறுப்பினர்களை ஒரு கற்றல் சூழலில் இணைக்கும் ஒரு வழியாக, பெற்றோர் பல்கலைக்கழகம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. இத்தகைய கூட்டங்களில், நடவடிக்கை குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக சமூகத்தின் பல்வேறு உறுப்பினர்களின் முன்னோக்குகள் கேட்கப்படுகின்றன.
பெற்றோர் பல்கலைக்கழகம், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து ஆலோசிக்க அனுமதிக்கும் கல்வித் திட்டங்களை, பெரும்பாலும் பள்ளி நிர்வாகம் மற்றும் நகராட்சி அரசாங்கத்தின் பங்களிப்புடன் இப்போது நடத்தி வருகிறது.

ஆப்பிரிக்க-அமெரிக்க குடிமக்கள் மீதான பொலிஸ் வன்முறை தொடர்பாக நாடு முழுவதும் அமைதியின்மை வெடித்த சில நாட்களில், இந்த அமைப்பு சவன்னாவின் காவல்துறைத் தலைவரை பொது உறுப்பினர்களுடன் ஆன்லைன் கலந்துரையாடலுக்கு அழைத்தது. சமூக உறுப்பினர்களின் கவலைகள் அதிகாரிகளால் பகிர்ந்து கொள்ளப்பட்டன என்பதை ஒப்புக்கொள்வது ஆக்கபூர்வமான உரையாடல் நடைபெற தேவையான பரஸ்பர புரிந்துணர்வை உருவாக்க உதவியது. “நான் பார்ப்பதைக் கண்டு நான் திகைத்துப் போகிறேன்,” என்று காவல்துறைத் தலைவர் ராய் மினெட்டர் கூறினார். “நான் இந்த சீருடையை வேலை செய்ய அணிந்திருக்கிறேன், ஆனால் நான் ஒவ்வொரு நாளும் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்க ஆணாக வாழ்கிறேன், எனவே நான் எங்கிருந்து வந்தேன் என்பதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன், நான் கடந்து வந்ததை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் …”
ஆப்பிரிக்க-அமெரிக்க குடிமக்கள் மீதான போலீஸ் வன்முறை தொடர்பாக நாடு முழுவதும் அமைதியின்மை வெடித்த சில நாட்களில், இந்த அமைப்பு பொது உறுப்பினர்களுடன் இணையதள கலந்துரையாடலுக்கு சவன்னாவின் காவல்துறைத் தலைவரை அழைத்தது. சமூக உறுப்பினர்களின் கவலைகள் அதிகாரிகளால் பகிர்ந்து கொள்ளப்பட்டன என்பதை ஒப்புக்கொள்வதானது ஆக்கபூர்வமான உரையாடல் நடைபெற தேவையான பரஸ்பர புரிந்துணர்வை உருவாக்க உதவியது. “நடப்பதைக் கண்டு நான் திடுக்கிட்டுள்ளேன்,” என்று காவல்துறைத் தலைவர் ராய் மினெட்டர் கூறினார். “என் வேலைக்காக நான் இந்த சீருடையை அணிந்திருக்கிறேன், ஆனால் நான் ஒவ்வொரு நாளும் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்க ஆணாகத்தான் வாழ்கிறேன், ஆதலால் நான் எங்கிருந்து வந்தேன் என்பதை என்னால் ஒருபோதும் மறக்க முடியவில்லை, நான் கடந்து வந்ததை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் …”
அடுத்தடுத்து நிகழ்ந்த உரையாடல்கள் பொதுப் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்துவதில் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிடையே பகிரப்பட்ட பொது நோக்க உணர்வை பலப்படுத்தியுள்ளன.

அரிதாகவே பரஸ்பரமாக செயல்படும், பெற்றோருக்கும் உள்ளூர் ஸ்தாபனங்களுக்கும் இடையிலும் அதே வேளை சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கிடையில் நெருக்கமான ஈடுபாட்டை ஏற்படுத்துவதில் பெற்றோர் பல்கலைக்கழகம் வகிக்கும் முக்கிய பங்கை மேயரும் காவல்துறைத் தலைவரும் எடுத்துரைத்தனர். “இதுபோன்ற அழைப்பில் இருப்பது போன்றும், அதே வேளை நம் சமூகங்களில் உள்ள இளைஞர்களுடனும் உறவுகளை மேம்படுத்துவதற்கு பல வழிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது முக்கியம், என்று காவல்துறைத் தலைமை மினிஸ்டர் கூறினார்.
எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, திரு. ஓ’நீல் வெவ்வேறு சமூக நடவடிக்கையாளர்களுக்கிடையிலான உறவுகளில் தேவைப்படும் தன்மைமாற்றத்தைப் பற்றி பேசினார். “மோதல் மற்றும் எதிர்ப்பின் அணுகுமுறைகள் நாம் எவ்வாறு இனவாதத்திலிருந்து விடுபடுவோம் என்பதற்கு உதவாது. மனிதகுலத்தின் ஒற்றுமையை உணர்ந்து கொள்வதன் அடிப்படையில் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் சமூக ஸ்தாபனங்களுக்கு இடையே நாம் உடனுழைத்தலான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1446/