
தொற்றுநோய் காலத்தில் சமூகத்திற்கான தனித்துவமான பங்கை சுகாதார வல்லுநர்கள் காண்கின்றனர்
8 அக்டோபர் 2021
ஜுபர்ட்டன், தென் ஆப்பிரிக்கா – மருத்துவர்கள், தாதியாளர்கள், மற்றும் பிற சுகாதார வல்லுநர்கள் கொரோனா தொற்றிலிருந்து உலகம் முழுவதுமுள்ள மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு அயராமல் உழைத்து வருகின்றனர். இந்த சுகாதார நெருக்கடியை எதிர்கொள்வதில் ஒரு வலுவான சமூகத்தின் பங்கு குறித்த சில நடைமுறையான உதாரணங்களை எடுத்துக்காட்டுவதற்கு, பஹாய் உலக செய்தி சேவை இத்துறையில் பணிபுரிந்து வரும் சில பஹாய்களிடம் தொடர்புகொண்டது.

தென்னாப்பிரிக்காவில், சுகாதார நெருக்கடியிலிருந்து எழும் பல்வேறு தேவைகளுக்கான விடையிறுப்புக்கு சமூகத்தின் வலிமையைப் பெறுவதற்காக ஜூபெர்ட்டன் நகரில் அவர் இயக்கும் ஒரு கிளினிக்கின் சமீபத்திய முயற்சிகளை சினா பரஸ்தரன் விவரிக்கிறார். “அவர்களுடைய சமுதாயத்திற்குச் சேவை செய்வதற்கான ஆற்றல் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது என்பது உணரப்படும்போது புதிய சாத்தியங்கள் வெளிப்படுகின்றன.”
கொரொனா தொற்றிலிருந்து மீண்டெழுந்து வந்துள்ளோரின் உதவியுடன், பிறருடன் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய மக்களின் இணையதள வலையமைப்பு ஒன்றை பரஸ்தரனும் அவரது சக ஊழியர்களும் உருவாக்கியுள்ளனர். இந்த வலையமைப்பு தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் லேசான கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களுக்கு உணர்வுபூர்வமான ஆதரவை வழங்கவும், அவர்களின் மருத்துவம் சாரா கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் உதவுகிறது.

இந்தியாவின் இந்தூரில் உள்ள மூத்த மருத்துவ அதிகாரியான பிரகாஷ் கௌஷல், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவுவதில் ஒரு சமூகத்தின் ஆன்மீக வாழ்க்கையின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். “நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஓர் ஆதரவான சூழலை உருவாக்குவதில் ஒரு சமூகத்திற்குப் பெரும் பங்கு உண்டு. இது ஒன்றாகப் பிரார்த்திப்பதன் மூலமாகவும், தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலமாகவும், தேவைப்பட்டால் அவர்களுக்கு சில உதவிகளை வழங்குவதன் மூலமாகவும் இருக்கலாம். குடும்பத்தினருக்கும் நோயாளிக்கும் சமூகத்திலிருந்து அன்பு தேவைப்படும் நேரம் இது. இது அவர்களின் ஊக்கத்தை உயர்த்தி, அன்பு, ஆதரவு மற்றும் பிரார்த்தனைகளால் அவர்களைச் சூழ்ந்து கொள்வதன் மூலம் அமைதி, நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் நோயை எதிர்கொள்ள உதவுகிறது.”
தொற்றுநோய் ஆரம்பத்தில், அமெரிக்காவின் கேன்சஸ் நகரத்தின் ஐக்கிய அமெரிக்க மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவரான நாசிம் அஹ்மதியே, கோரொனா நச்சுயிரி அதிகரித்து வரும் நிகழ்வுகளைக் கொண்ட அண்டைப்புறவாசிகளுக்கு உதவும் பொருட்டு பல ஆண்டுகால சமூக நிர்மாணிப்பு முயற்சிகளின் மூலம் பேணப்பட்ட நெருக்கமான நட்புகள், எவ்வாறு வாய்க்காலிடப்படலாம் என்பதை உணர்ந்துள்ளார்.
டாக்டர் அஹ்மதியேவும் மற்றவர்களும் முக்கிய தேவையாக உள்ள ஒன்றைப் பூர்த்தி செய்வதற்காக வள ஆதாரங்களை விரைவாக திரட்டினர்–இந்த அண்டைப்புறத்தில் பொதுவாக பேசப்படும் மொழியில் கோவிட்-19 பற்றிய துல்லியமான தகவல்களை மொழிபெயர்ப்பது மற்றும் பரப்புதல். மிக அண்மையில், இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தி — அதே நேரத்தில் அரசாங்கத்தால் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு — இந்த அண்டைப்புறத்தில் வசிப்பவர்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வழிவகுத்தனர்.

இந்த சுகாதார வல்லுநர்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் அவர்கள் அனுபவிக்கும் உடல் மற்றும் மன சோர்வையும் பார்க்காமல், ஆன்மீக மெய்மையின் நனவுநிலை எவ்வாறு ஆற்றல் மற்றும் வலிமையின் பரந்த களஞ்சியத்தின் பயனைத் பெற அனுமதிக்கிறது என்பதை விவரிக்கின்றனர். பிரிட்டோரியாவில் ஒரு நோய்வெடிப்பை நிர்வகிக்க வேண்டிய ஒரு தென்னாப்பிரிக்க மருத்துவமனையின் மயக்கமருந்து நிபுணரான கோகோமொட்சோ மாபிலேன், பிரார்த்திப்பதற்கும் பஹாய் போதனைகளில் காணப்படும் ஆழ்ந்த கருத்துக்களைப் பற்றி பிரதிபலிப்பதற்கும் மற்றவர்களுடன் சேர்ந்துகொள்வது அவருக்கும் அவரது சகாக்களுக்கும் இதுபோன்ற கடினமான நேரங்களை நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டுடன் கடப்பதற்கு உதவியுள்ளது என்று விளக்குகிறார்.
“கோவிட்-19 பற்றிய விஷயம் என்னவென்றால், அது மக்களை தனிமைப்படுத்துகிறது” என்று டாக்டர் மாபிலேன் கூறுகிறார். “ஒரு சமூகத்தின் அங்கமாக இருப்பதும் மற்றவர்களிடமிருந்து ஆதரவு பெறுவதும் அவசியம். நண்பர்களுடன் நான் கொள்ளும் இணையதள வழிபாடுகள் துக்க காலங்களில் ஆறுதலையும் நம்பிக்கையையும் தருவது மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சிரமங்களை மாற்றுக் கண்ணுடன் பார்ப்பதற்கும், மற்றவர்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சியையும், தனிப்பட்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் காணும் பிற வழிகளுக்கும் என் மனதைத் திறக்கின்றது. மறு நாள், மேலும் அதிகமான நோயாளிகளுக்கு சேவையாற்றுவதற்காக இவ்வாறுதான் இல்லம் திரும்பிச் சென்று மீண்டும் முழுமையடைகிறோம்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1447/