“திறனாய்வை அடுத்து ஆக்கபூர்வ ஈடுபாடு”: இணைய ABS மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கூடுகிறார்கள்


“திறனாய்வை அடுத்து ஆக்கபூர்வ ஈடுபாடு”: இணைய ABS மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கூடுகிறார்கள்


8 அக்டோபர் 2021


டல்லாஸ், ஐக்கிய அமெரிக்கா – சமீபத்தில், வட அமெரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளிலிருந்து, இவ்வருடம் மெய்நிகராக ஏற்பாடு செய்யப்பட்ட பஹாய் ஆய்வுகள் சங்கத்தின் (ABS) வருட மாநாட்டில் 3,000’ற்கும் மேற்பட்ட மக்கள் பங்கு பெற்றனர்.

ஆரம்பத்தில் டெக்சஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரில் நடப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு, பொது சுகாதார நெருக்கடியின் விளைவாக முற்றிலும் மறு வடிவமைக்கப்பட வேண்டியதாயிற்று. பொதுவாக மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு நடைபெறும் அந்த நிகழ்ச்சி, இரண்டு வாரங்களுக்கு நடைபெற்றது.

“திறனாய்வை அடுத்து ஆக்கபூர்வ ஈடுபாடு” என்பது இவ்வருட கருப்பொருளாகும். வழங்கல்களும் கலந்துரையாடல்களும் உலகிற்கான தொற்றுநோயின் தாக்கங்கள், அறிவியல் மற்றும் புறநிலை உண்மைகள், சமுதாய தன்மைமாற்றத்தில் ஊடகத்தின் பங்கு போன்றவை உட்பட, பஹாய் போதனைகளின் அடிப்படையில் வெவ்வேறு பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்தின.

“இணையதள மாநாட்டுக்கான நிலைமாற்றமானது, பங்கேற்பாளர்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறோம் எனும் உணர்வைப் பெறவும், உபகரணங்களையும் அமர்வுகளையும் அடைவதற்கான கருவிகளைப் பெற்றிருப்பதையும், அவர்களின் பங்கேற்பு தேவைப்படுகிறது மற்றும் மதிக்கப்படுகின்றது என்பதை உறுதிசெய்திடவும் சங்கம் அதன் அணுகுமுறையை மறுசிந்தனை செய்திடத் தூண்டியது,” என சங்க நிர்வாகக் குழு செயலாளரான ஜூலியா பெர்ஜர் கூறுகிறார்.

“திறனாய்வை அடுத்து ஆக்கபூர்வ ஈடுபாடு” என்பது இவ்வருட கருப்பொருளாகும். வழங்கல்களும் கலந்துரையாடல்களும் உலகிற்கான தொற்றுநோயின் தாக்கங்கள், அறிவியல் மற்றும் புறநிலை உண்மைகள், சமுதாய தன்மைமாற்றத்தில் ஊடகத்தின் பங்கு போன்றவை உட்பட, பஹாய் போதனைகளின் அடிப்படையில் வெவ்வேறு பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்தின.

இவ்வருடம் மெய்நிகராக ஏற்பாடு செய்யப்பட்ட பஹாய் ஆய்வுகள் சங்கத்தின் (ABS) வருட மாநாட்டிற்கு வட அமெரிக்கா மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்து 3,000’ற்கும் மேற்பட்ட மக்கள் பங்கு பெற்றனர்.

சமுதாயமானது பல்வேறு இண பின்னணிகளைக் கொண்ட அதன் உறுப்பினர்களிடையே நல்லிணக்கமும் நீதியும் நிறைந்த உறவுகளின்பால் எவ்வாறு மேம்பாடு காணலாம் என்பது குறித்த கேள்வி கலந்துரையாடல்களின் முன்னணியில் இருந்தது. மனிதகுல ஒருமை குறித்த கோட்பாட்டை பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கைமுறையை உருவாக்குவதற்கான, ஆக்ககர செயல்பாட்டின் அடித்தலத்தில் வீற்றிருக்கும் அஸ்திவார கருத்தாக்கங்களை மாநாட்டு பங்கேற்பாளர்கள் ஆராய்ந்தனர்

பெரும்பாலும் போட்டி, எதிர்ப்பு, பிரிவினை, உயர்ந்தமை எனும் முறையில் கண்ணுறப்படும், ஆதிக்கம் செலுத்துதலுக்கான ஒரு வழியாக அதிகாரம் குறித்த தற்போது பரவலாக நிலவும் கருக்கோள்கள் எவ்வாறு இன நீதி குறித்த சொல்லாடலை வடிவமைக்க முடியும் மற்றும் இத்தகைய கருக்கோள்கள் அதிகாரம் குறித்த புதிய கருத்துகளின்படி எவ்வாறு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பது ஆய்விற்கான ஒரு பகுதியாக இருந்தது.

மாநாட்டில் கிளாரிமோன்ட் மெக்கென்னா கல்லூரியின் பேராசிரியரான டெரிக் ஸ்மித் வழங்கிய ஒரு விளக்கக்காட்சி, அமெரிக்க பஹாய் சமூகத்தின், குறிப்பாக ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், நாட்டில் இன சமத்துவத்திற்கு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பங்களித்த அனுபவத்தின் மீது கவனம் செலுத்தியது. டாக்டர் ஸ்மித் கூறுகிறார்: “இனவாதத்தால் மோசமாக சிதைந்த ஒரு அமெரிக்க சூழலில் இன ஒற்றுமையை வளர்ப்பதற்கான அவர்களின் முயற்சியில், கருப்பின பஹாய்கள் ஒற்றுமை, அன்பு, சேவை ஆகிய மனித ஆன்மாவின் சக்திகளை ஈர்ப்பதன் மூலம் போட்டிமுறைகளையும் முரண்பாடுகளையும் தவிர்த்து வருகின்றனர். இவை நுட்பமான சக்திகள், ஆனால் அவை ஆழமாக தன்மைமாற்றம் செய்யக்கூடியவை. ‘கட்டவிழ்த்தல்,’ ‘ஊக்குவித்தல்,’ ‘வாய்காலிடுதல்,’ ‘வழிகாட்டுதல்,’ மற்றும் ‘உதவிடுதல்’ போன்ற சொற்களுடன் தொடர்புடைய இந்த வகையான சக்தியை விவரிக்கவும் பேசவும் உதவும் முன்னோக்குகளையும் மொழியையும் பஹாய் போதனைகளில் காண்கிறோம்.”

சென்ற வருடம் எடுக்கப்பட்ட படம். சங்கத்தின் நோக்கம், மக்கள் பஹாய் போதனைகளை ஆராய்ந்து, பல்வகைப்பட்ட துறைகளில் மானிடத்தின் முன்னோக்குகளுடன் அவற்றைத் தொடர்புறச் செய்து, மானிடத்தின் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு அவற்றைப் பயன்படுத்த முயலுதல் ஆகியவையே.

மக்கள் பஹாய் போதனைகளை ஆராய்ந்து, பல்வகைப்பட்ட துறைகளில் மானிடத்தின் முன்னோக்குகளுடன் அவற்றைத் தொடர்புறச் செய்து, மானிடத்தின் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு அவற்றைப் பயன்படுத்த முயலுதல் ஆகியவையே சங்கத்தின் நோக்கம்.

இந்த ஆண்டு சூழ்நிலைகளுக்கு  ஏதுவாக, மாநாட்டிற்கு முந்தைய வாரங்களில் ஒரு குறிப்பிட்ட படிப்புத் துறையில் ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் தொடர்புடைய இலக்கியங்களுடன் ஈடுபடவும் ஒன்றாக ஆலோசிக்கவும். 20’க்கும் மேற்பட்ட “வாசிப்புக் குழுக்கள்” உருவாக்கப்பட்டன. இந்த விவாதங்களின் மூலம் பெறப்பட்ட நுண்ணறிவுகள் மாநாட்டு நிகழ்ச்சி மற்றும் வழங்கல்களுடன் பிணைக்கப்பட்டன.

“கற்றலின் ஒரு முக்கிய கூறு, புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக ஒரு கூட்டு சூழலில் வெவ்வேறு கண்ணோட்டங்களை ஒன்றிணைப்பதாகும்” என்று சங்கத்தின் கூட்டு முயற்சிகளுக்கான குழுவின் செல்வி அடைக்கலம் கூறுகிறார். “வாசிப்புக் குழுக்கள் போன்ற நீடித்த முன்முயற்சிகள் வெவ்வேறு ஒழுக்கங்கள் மற்றும் தொழில்முறை துறைகளில் சில அடிப்படை அனுமானங்களை அடையாளம் காணவும் மறுபரிசீலனை செய்யவும் தேவையான ஆழமான, கடுமையான மற்றும் தொடர்ச்சியான விவாதத்தை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன.”

இவ்வருட ABS மாநாட்டின் மற்றோர் சிறப்பம்சமாக, ஒரு திரைப்பட விழாவாகும். அதில் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் சமகால கருப்பொருள்கள் மீதான பஹாய் முன்னோக்குகளை ஆராயும் படைப்புகளை வழங்கினர்.

இவ்வருட ABS மாநாட்டின் மற்றோர் சிறப்பம்சமாக, ஒரு திரைப்பட விழாவாகும். அதில் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் சமகால கருப்பொருள்கள் மீதான பஹாய் முன்னோக்குகளை ஆராயும் படைப்புகளை வழங்கினர்.

“திருவிழா அமைப்பாளர்களில் ஒருவரான அமெலியா டைசன் கூறுகிறார்:  திரைப்பட தயாரிப்பாளர்களையும் பிறரையும் சமுதாயத்தில் ஊடகங்கள் மற்றும் திரைப்படங்களின் பங்கு, எடுத்துரைக்கப்படும் கதைகளின் தாக்கங்கள்,  மனித இயல்பு பற்றியும் இவ்வுலகில் நமது ஸ்தானம் ஆகியன பற்றி அவை கூறுகின்றவை குறித்து விமர்சன ரீதியாக சிந்திக்க வைப்பதற்கு முழு விழாவும் ஒழுங்கமைப்பது எங்கள் அணுகுமுறையாக இருந்தது.”

சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாநாட்டு அமர்வுகளின் பதிவுகள் ABS இணையப் பக்கம் வழி விரைவில் கிடைக்கும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1448/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: