
சமீபத்திய “பஹாய் உலகம்” கட்டுரைகள் பொருளாதார நீதி, இன ஒற்றுமை, சமூக நிர்மாணிப்பு ஆகியவற்றை ஆராய்கின்றன
17 செப்டம்பர் 2020
பஹாய் உலக மையம்–இன்று, பஹாய் உலகம் இணையத்தளம் மானிடத்தின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டுக்கு மிகவும் பொருத்தமான கருப்பொருள்கள் மீதான மூன்று புதிய கட்டுரைகளை பிரசுரித்துள்ளது.
“சமூகமும் கூட்டு நடவடிக்கையும்” எனும் கட்டுரை மனிதகுல ஒருமையின் அடித்தலத்தில் அமைந்த ஒரு புதுவித சமூகத்தை நிர்மாணிப்பதற்கான மக்கள் குழுமங்களின் நம்பிக்கையார்ந்த முயற்சிகளை வர்ணிப்பதுடன் அந்த முயற்சிகளுக்கு வழிகாட்டும் தொலைநோக்கு மற்றும் செயல்முறையை ஆராய்கின்றது.

இனம் சார்ந்த அநீதி எனும் நீண்டகால கொள்ளைநோயைக் கடந்து செல்வது “இன ஒற்றுமைக்கான இடம்சார் உத்திகள்” என்ற கட்டுரையின் பொருளாகும். இது பஹாய் கல்வித் திட்டங்கள் மற்றும் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளின் தன்மை மற்றும் அணுகுமுறைகளை ஆராய்வதுடன், அண்டைப்புறங்கள் மற்றும் கிராமங்களின் சூழலில், மனிதகுல சேவைக்கான திறனை உயர்த்திட முயல்கிறது.
சமுதாயத்தின் பெரும் செல்வந்தர்களுக்கும் மிகவும் ஏழ்மையான உறுப்பினர்களுக்கும் இடையில் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வுகள் “பொருளாதார நீதி சாத்தியமா?” என்ற கட்டுரையின் பொருளாகும். கட்டுரை உலகின் தற்போதைய பொருளாதார நிலையை ஆராய்வதுடன் நியாயமானதும் மனிதகுலம் அனைவருக்கும் பயனளிக்கூடிய ஒரு பொருளாதார முறைமையை நிர்மானிப்பதற்கான மகத்தான சவாலில் பஹாய் கோட்பாடுகளின் தாக்கங்களை ஆராய்கிறது.
The Bahá’í World website makes available a selection of thoughtful essays and long-form articles on a range of subjects of interest to the wider public, conveying advancements in Bahá’í thought and action and reflecting the Faith’s purpose in the world.
பஹாய் உலகம் இணையத்தளம், பரந்த சமூகத்தினருக்கு ஆர்வத்தைத் தூண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் மற்றும் பயனளிக்கும் பல கருப்பொருள்களிலான நீண்ட கட்டுரைகளையும் வழங்குகிறது. அக்கட்டுரைகள், பஹாய் சிந்தனை மற்றும் செயல் சார்ந்த மேம்பாடுகளை வழங்குவதுடன், உலகில் (பஹாய்) சமயத்தின் நோக்கத்தைப் பிரதிபலிக்கின்றன.
புதிய கட்டுரைகள் பிரசுரிக்கப்படும் போது சந்தாதாரர்களுக்குத் தெரிவிப்பதற்கான ஒரு மின்னஞ்சல் சந்தா உள்ளது.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1450/