
பஹாய் அனைத்துலக சமூகம் (BIC) ஐ.நா.’வுடன் 75 வருடங்களைக் குறிக்கின்றது, நியாயமான உலகளாவிய முறை ஒன்றை எதிர்ப்பார்க்கின்றது
21 செப்டம்பர் 2020
BIC நியூ யார்க் — ஐநா அதன் 75’வது வருடத்தை அடைந்துள்ள வேளை, பஹாய் அனைத்துலக சமூகம் (BIC) அந்த நிகழ்வைக் குறிக்க ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. எண்ணிலடங்கா சவால்களுக்கிடையில் ஐ.நா. நிலைத்து வந்தும், உலகளாவிய நிர்வாகம் குறித்த மானிடத்தின் முதல் தீவிர முயற்சியான, League of Nations’இன் 25 வருடகாலத்தை இதுவரை மும்மடங்கு மிஞ்சி உள்ளதும், மிகவும் ஈர்க்கக்கூடிய ஒரு சாதனை என BIC கூறுகிறது.

மானிடம் தற்போதைய நமது தீவிர சவால்களை எதிர்கொள்ளவும் வரும் வருடங்களில் மேம்பாட்டுக்கான மகத்தான வாய்ப்புகளை பற்றிக்கொள்ளவும் வேண்டுமானால் உலகளாவிய ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட வேண்டியதன் தேவையை அந்த அறிக்கை வலியுறுத்துகின்றது.
மனித குடும்பத்தின் ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் சார்ந்திருப்பதை ஒப்புக்கொள்வது; எல்லார் மீதும் ஓர் உண்மையான அக்கறை, வேறுபாடு இல்லாமல்; நாடுகள் ஒன்றிலிருந்து மற்றொன்று கற்றுக்கொள்ளும் திறன், மற்றும் பின்னடைவுகள் மற்றும் தவறான நடவடிக்கைகளை கற்றல் செயல்முறையின் தவிர்க்க முடியாத அம்சங்களாக மனப்பூர்வத்துடன் ஏற்றுக்கொள்வது; மற்றும், லௌகீக மேம்பாடு ஆன்மீக மற்றும் சமூக மேம்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதற்கான நனவுடனான முயற்சி ஆகியன உட்பட, நீடித்த, உலகளாவிய அமைதியை நோக்கிய ஓர் இயக்கத்திற்குத் தேவையான கூறுகளை அது ஆராய்கிறது.
“கடந்த காலங்களில் மதிப்பிடப்படாத அளவீடுகளில் இன்று ஒத்துழைப்பு சாத்தியமாகின்றது. இது, முன்னேற்றத்திற்கான இணையற்ற வாய்ப்புகளைத் திறக்கிறது” என்று அந்த அறிக்கை கூறுகிறது. “நாடுகளின் சமூகத்தின் முன் உள்ள பணி… சர்வதேச அரசியல் மற்றும் அதிகாரத்தின் இயந்திரங்கள் பெருகிய முறையில் ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையை நோக்கி செலுத்தப்படுவதை உறுதி செய்வதாகும்.”
BIC, தனது அறிக்கையில், சர்வதேச சமூகம் தன்னை எவ்வாறு சிறப்பாக ஒழுங்கமைக்க முடியும் என்பது குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்கத் தொடங்குவதற்கு ஒரு தக்க தருணமாக இதைக் கருதுவதுடன், மேலும் கருத்தில் கொள்ளத் தகுதியான பல முன்முயற்சிகளையும் புதுமைகளையும் அது பரிந்துரைக்கின்றது. எடுத்துக்காட்டாக, கொள்கைகள் எவ்வாறு தலைமுறைகளை பாதிக்கக்கூடும் என்பதற்கான எதிர்கால விவகாரங்கள் குறித்த கருத்துகளை ஸ்தாபனமயமாக்கும் ஓர் உலகப் பேரவை, மற்றும் உலகளாவிய நெருக்கடிகளுக்கான ஆயத்தம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பயன்பாடு, அல்லது கல்வி அல்லது வேலைவாய்ப்புகளுக்கான எதிர்காலம் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு கவனம் செலுத்துதல்.
“ஒரு பொருத்தமான நிர்வாகம்: மானிடமும் ஒரு நியாயமான உலகளாவிய ஒழுங்கை நோக்கிய பாதையும்” என்ற தலைப்பில், இந்த அறிக்கை ஐ.நா. பொதுச் சபையின் 75’வது ஆண்டு நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில் வெளியிடப்படுகிறது. இது இன்று ஐ.நா. பொதுச்செயலாளர் மற்றும் உறுப்பு நாடுகளின் தூதர்களுக்கும் அனுப்பப்பட்டது.
உலகளாவிய சுகாதார நெருக்கடி மனிதகுலத்தின் ஒன்றுக்கொன்று சார்ந்தமைப் பற்றி ஆழமான மதிப்புணர்வைத் தூண்டியுள்ள ஒரு நேரத்தில், இந்த ஆண்டுவிழா சர்வதேச கட்டமைப்புகள் மற்றும் ஐ.நா.வுக்கு செய்யக்கூடிய சீர்திருத்தங்களின் பங்கு பற்றிய விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.
இந்த விவாதங்களுக்கு BIC அளிக்கும் பல பங்களிப்புகளில் இந்த அறிக்கையும் ஒன்றாகும். அடுத்த மாதம் ஐ.நா. அதிகாரிகளுடனும் தூதர்களுடன் ஓர் இணையதள கூட்டத்தில் அந்த அறிக்கையிலுள்ள ஆழ்ந்த கருப்பொருள்கள் பற்றிய அதன் ஆய்வை BIC தொடரும்.
மூலாதாரம்:https://news.bahai.org/story/1451/