வியொலெட் ஹாக்கே, 1928–20208 அக்டோபர் 2021


பஹாய் உலக மையம் – அனைத்துலக போதனை மையத்தின் முன்னாள் உறுப்பினரான வியொலிட் ஹாக்கே, செப்டம்பர் 24, 2020 அன்று ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் காலமானார். அவருக்கு 92 வயது.

உலக நீதிமன்றம் அனைத்து தேசிய ஆன்மீக சபைகளுக்கும் பின்வரும் செய்தியை அனுப்பியுள்ளது.

வியொலெட் ஹாக்கே

***

மிகவும் நேசிக்கப்பட்ட வியொலெட் ஹக்கே காலமாகியுள்ளார் எனும் செய்தி எங்களைத் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. சமயத்தின் ஆரம்பகால வரலாறு வரை அதன் வேர்கள் செல்லும் ஒரு புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்த அவர், பல தசாப்தங்களாக கடவுள் சமயத்திற்கு முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். முதலில் தமது சொந்த ஈரான் நாட்டிலும், பின்னர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் அவர் சேவை செய்துள்ளார். முன்னோடியாக இருக்கும்போது, ​​அல்லது துணை வாரிய உறுப்பினராக இருந்த காலத்தில், அல்லது ஆஸ்திரேலியாவில் ஒரு கண்டத்துவ ஆலோசகராக இருந்தபோதும், குறிப்பாக அனைத்துலக போதனை மையத்தின் உறுப்பினராக பணியாற்றிய பத்து ஆண்டுகளில், அவரது துணிச்சலான மனப்பான்மையும் போதிப்பதற்கான பிரகாசமான ஆர்வமும் அவர் நண்பர்களை, குறிப்பாக இளைஞர்களை அணிதிரட்டியதற்கு ஆதாரமாக இருந்தன. எப்போதும் ஊக்குவிப்பை வழங்கி வந்தார்; மற்றும், இதயங்களில் பஹாவுல்லாவின் அன்பெனும் சுடரை ஏற்றிவைத்தார். அசாதாரண மீள்ச்சித்திறம், பற்றுறுதி, மற்றும் தவறாத கருணை, பராமரிக்கும் உணர்வு மற்றும் உண்மையான மகிழ்ச்சி ஆகியவற்றை ஒன்றுகலக்கும் இயல்பை வியொலெட் பெற்றிருந்தார். கடைசிவரை, அவர் கடவுள் சேவைக்கே தமது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார்

அவரது கணவர் ரோடெரிக் மற்றும் அவரது மகள் சூஸன் இருவருக்கும் ​​எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, வயலட்டின் ஒளிரும் ஆத்மாவின் முன்னேற்றத்திற்காகவும், மர்ம உலகின் ஒளிக் கடலில் மூழ்கும்போது புனித வாசலில் எங்கள் பிரார்த்தனைகள் குறித்தும் உறுதியளிக்கின்றோம். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள நம்பிக்கையாளர்கள் சூழ்நிலைகள் அனுமதிக்கும் போது, அவரது சார்பாக அஞ்சலி கூட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உலக நீதிமன்றம்

மூலாதாரம்: https://news.bahai.org/story/1452/