
8 அக்டோபர் 2021
பஹாய் உலக மையம் – உலக நீதிமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான டக்லஸ் மார்ட்டின், செப்டம்பர் 28, 2020 அன்று கனடாவின் டொராண்டோ நகரில் காலமானார். அவருக்கு 93 வயது.
உலக நீதிமன்றம் அனைத்து தேசிய ஆன்மீக சபைகளுக்கும் பின்வரும் செய்தியை அனுப்பியுள்ளது.
* * *
துக்ககரமான இதயங்கள் ஏற்கனவே துக்கத்தில் மூழ்கியுள்ளன. நாங்கள் மிகவும் நேசித்த, மிகவும் பாராட்டப்பட்ட முன்னாள் சகாவான டக்ளஸ் மார்ட்டின் மறைவை அறிவிக்கிறோம். ஓர் இளைஞராக பஹாவுல்லாவின் சமயத்தைத் தழுவிய அவர், பல தசாப்தங்களாக சிறப்பான சேவையில் தனது வாழ்க்கையைக் கடவுளின் சமயத்திற்காக அர்ப்பணித்தார். ஈரான் நாட்டில் பஹாய் சமூகத்தைத் தீவிரமாகப் பாதுகாப்பது உட்பட, அவரது பொது வழங்கல்களில் இருந்ததைப் போலவே, சமயத்தைத் தெளிவாகவும் தொலைநோக்குடனும் முன்வைப்பதற்காக அவர் பெற்ற சிறந்த ஆற்றல்கள் அவரது அறிவார்ந்த எழுத்துக்களில் பிரகாசித்தன. சமயத்தின் நிர்வாகத்தில் சுமைமிகுந்த பொறுப்புகளை நிறைவேற்றும் அதே வேளை இந்தப் பணிகளில் பெரும்பாலானவற்றையும் அவர் மேற்கொண்டார். கனடாவின் தேசிய ஆன்மீக சபை உறுப்பினராகக் கழித்த கால் நூற்றாண்டும் இதில் அடங்கும். அவ்வேளை பெரும்பான்மையாக அவர் அதன் செயலாளராக இருந்தார். வரலாறு சார்ந்த மகத்தான சக்திகளைப் பற்றிய அவரது பிரகாசமான அறிவாற்றல் மற்றும் அசாதாரணமான புரிதல், அவரது வலிமையான வெளிப்படுத்தும் சக்திகளுடன் இணைந்து, பஹாய் அனைத்துலக சமூகத்தின் மக்கள் தகவல் அலுவலகத்தின் பொது இயக்குநராக அவர் கழித்த ஆண்டுகளின் போது மிகவும் வெளிப்படையாக இருந்துடன், பன்னிரண்டு ஆண்டுகள் அவர் உலக நீதிமன்ற உறுப்பினராக பணியாற்றுவதற்கான முன்னோடியாகவும் இருந்தது. உறுதியான, சாதுர்யமான, மற்றும் கூரிய நுண்ணறிவால் ஆசீர்வதிக்கப்பட்ட அவரது இழப்பு ஆழமாக உணரப்படும்.
இப்போது தமது அன்பு மனைவி எலிசபெத்துடன் மீண்டும் ஒன்றிணைந்துள்ள அன்பார்ந்த டக்லஸ், அப்ஹா இராஜ்யத்தில் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படவும், அவருடைய ஒளிரும் ஆத்மா உயர்விலுள்ள எல்லையற்ற பகுதிகளில் நித்தியமாக மேம்பாடு காணக்கூடும் என்றும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள நண்பர்கள் சூழ்நிலைகள் அனுமதிக்கும் விதம் ஒவ்வொரு வழிபாட்டு இல்லத்திலும் வழிபாடுகள் உட்பட அஞ்சலிகள் ஏற்பாடு செய்வதன் மூலம் அவருக்கு மரியாதை செலுத்துமாறு அழைக்கப்படுகிறார்கள்.
உலக நீதிமன்றம்
மூலாதாரம்: https://news.bahai.org/story/1455/