புதிய அரசியலமைப்பு: சிலி நாட்டில் உரையாடல்கள் புதிய பாதைக்கு வழிவகுக்கின்றன


புதிய அரசியலமைப்பு: சிலி நாட்டில் உரையாடல்கள் புதிய பாதைக்கு வழிவகுக்கின்றன


8 அக்டோபர் 2021


ஸான்தியாகோ,  சிலி – இவ்வாரம் ஒரு புதிய அரசியலமைப்பை ஸ்தாபிப்பதற்கான வாக்களிப்புக்கு முன்னர், ஒரு நியாயமான சமுதாயத்தை நிர்மாணிப்பதற்கான உரையாடல்கள் நாடு முழுவதும் அதிக கவனத்தைக் கோரியுள்ளன.  கடந்த வருடம் முழுவதும், சிலி நாட்டு பஹாய்கள்,  தங்களின் சகநாட்டவர்களுடன் சேர்ந்து ஒரு லௌகீக மற்றும் ஆன்மீக ரீதியில் செழுமையான சமுதாயத்திற்கான அடித்தலங்களை ஆராய்வதற்கு, அடித்தட்டிலிருந்து தேசியநிலை வரை எல்லா மட்டங்களிலும் இந்த உரையாடல்களுக்கு பங்களித்து வந்துள்ளனர்.

இவ்வாரம் ஒரு புதிய அரசியலமைப்பை ஸ்தாபிப்பதற்கான வாக்களிப்புக்கு முன்னர், ஒரு நியாயமான சமுதாயத்தை நிர்மாணிப்பதற்கான உரையாடல்கள் நாடு முழுவதும் அதிக கவனத்தைக் கோரியுள்ளன.

“இது சிலி நாட்டுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நேரம்” என்று நாட்டின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் செயலாளர் ஃபெலிப்பெ டுஹார்ட் கூறுகிறார். “நம் நாட்டை ஒழுங்கமைப்பதற்கான கொள்கைகளைப் பற்றி கூட்டாக சிந்திக்க நம் அனைவருக்கும் ஒரு அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.”

சமூக முன்னேற்றம் குறித்த தேசிய சொல்லாடலில் பங்களிப்பதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பஹாய் சமூகம் மிக அண்மையில், நாடு முழுவதும் கலந்துரையாடல் தளங்களை உருவாக்குவதற்கு ஒரு பொது சமூக அமைப்பான அஹோரா நோஸ் டோகா பார்ட்டிசிப்பார்’உடன் (Ahora nos toca participar) (இப்போது பங்கேற்பதற்கான எங்கள் முறை) உடனுழைத்து வருகிறது. சமீபத்திய மாதங்களில் தொடர்ச்சியான கூட்டங்கள் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய ஒரு தேசிய நிகழ்வுக்கு வழிவகுத்தன. பெண்கள் மற்றும் பழங்குடி மக்களின் குரல் கேட்கப்படுவதை உறுதி செய்வதற்காக சிலி நாட்டு பஹாய்கள் அரசியலமைப்புச் செயல்முறைகளுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கூட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளனர்.

சுகாதார நெருக்கடிக்கு முன்னர் எடுக்கப்பட்ட படம். கடந்த வருடம் முழுவதும், சிலி நாட்டு பஹாய்கள்,  தங்களின் சகநாட்டவர்களுடன் சேர்ந்து ஒரு லௌகீக மற்றும் ஆன்மீக ரீதியில் செழுமையான சமுதாயத்திற்கான அடித்தலங்களை ஆராய்வதற்கு, அடித்தட்டிலிருந்து தேசியநிலை வரை எல்லா மட்டங்களிலும் இந்த உரையாடல்களுக்கு பங்களித்து வந்துள்ளனர்.

அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில், சான்தியாகோவில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தின் இயக்குனர் வெரோனிகா ஓரே, சில அனுமானங்களை எவ்வாறு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை விளக்கினார்: “நாம் காணும் வரலாற்று முக்கியத்துவமான தருணம், தொற்றுநோயின் தாக்கம், ஒரு கூட்டு மனசாட்சியின் விழிப்புணர்வு, ஆகியன சமுதாயத்திற்கான ஒரு புதிய கட்டமைப்பைத் தேட நம் நாட்டை உந்துவிக்கிறது.”

“சீர்திருத்தங்களுக்கு அப்பால், ஓர் ஆழமான மாற்றம் தேவை” என்று திருமதி ஓரே தொடர்ந்தார். … பொருளாதார வளர்ச்சியின் முன்னோக்கின் மூலம் மட்டுமே நாம் அபிவிருத்தியைப் பார்க்கவில்லை, ஆனால் நீதி மற்றும் நமது அத்தியாவசிய ஒற்றுமை போன்ற ஆன்மீகக் கருத்தாக்கங்களையும் நாம் கருத்தில்கொள்கிறோம். கல்வியல் கொள்கைகளைப் பற்றி, அரசியலமைப்பு மாற்றங்களைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, ஒவ்வொரு மனிதனின் உன்னதத்தையும் கவனத்தில் கொண்டு, மனித இயல்பு பற்றிய நமது அனுமானங்களையும் மறுபரிசீலனை செய்வோம்.”

சுகாதார நெருக்கடிக்கு முன்னர் எடுக்கப்பட்ட படம். மாப்புச்சே சமூக உறுப்பினர்கள் குழுமம் ஒன்று சான்தியாகோவில் உள்ள் பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கு வருகையளிக்கின்றனர். சமுதாய மேம்பாடு குறித்த ஒரு தேசிய சொல்லாடலில் பங்களிப்பதற்காக நடத்தப்பட்ட விசேஷ ஒன்றுகூடல்களில் பெண்கள் மற்றும் பூர்வகுடியினரின் குரல்கள் ஒலிக்கப்படுவதை உறுதிசெய்திட சிலி நாட்டு பஹாய்கள் விசேஷ கவனம் செலுத்தியுள்ளனர்.  

சிலி நாட்டு பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் லூயிஸ் சாண்டோவல் கூறுகிறார், “சிலி சமுதாயத்தில் மாற்றத்திற்கான அபிலாஷைகள் வெளிப்பட்டுள்ளன–செல்வம் மற்றும் வறுமை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவம், இயற்கையின் பாதுகாப்பு, பொருளாதாரம். அவை அனைத்தும் ஒரு பொதுவான கூறுகளைக் கொண்டுள்ளன: இந்த அனைத்து துறைகளிலும் உள்ள சவால்களை லௌகீக வளர்ச்சியை வாழ்க்கை மற்றும் உறவுகளின் மையத்தில் வைக்கும் சமுதாயத்தின் ஒரு மாதிரியில் காணலாம். இது போதாது; இதைத் தாண்டி வாழ்க்கையின் ஆன்மீக பரிமாணத்தை நாம் அங்கீகரிக்க வேண்டும்.”

நீதிக்கான கோரிக்கையே இந்த உரையாடல்கள் அனைத்திற்கும் அடிப்படையாகும் என திரு டுஹார்ட் விளக்குகிறார். “இந்த கொள்கை அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் ஒரு திசையில் சமூக மாற்றத்திற்கான ஒரு செயல்முறையை வழிநடத்தும். நீதி பற்றிய பஹாய் கருத்தாக்கம் இதை ஒரு ஐக்கியப்பட்ட சமூகத்தின் ஒரு தூணாக முன்வைக்கின்றது.. நீதி எல்லா மக்களையும் கடவுளுக்கு முன்பாக ஒன்றென முன்வைக்கிறது, மற்றும் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் நிறுவனங்கள் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது. நீதி போன்ற ஆன்மீகக் கொள்கைகள் ஒரு சமூகத்திற்கான தூண்களை வழங்குகின்றன, அங்கு நாம் ஒவ்வொருவரும், நம்முடைய திறனாற்றல்களுடன், நாம் மேம்பாடு கண்டு நமது பங்கையும் ஆற்றிடலாம்.”

கடந்த ஆண்டு, சிலி சமுதாயத்தின் எதிர்காலம் குறித்து பல ஆழமான கலந்துரையாடல்கள் சான்தியாகோவில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்ல மைதானத்தில் நடந்துள்ளன, செல்வம் மற்றும் வறுமைக்கிடையிலான அகன்ற இடைவெளி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவம், இயற்கை பாதுகாப்பு, மற்றும் பொருளாதாரம் ஆகியன ஆராயப்பட்டன.

வழிபாட்டு இல்லத்தின் மூலம் அதிக ஒற்றுமையை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் எவ்வாறு நனவாகின்றன என்பதை திருமதி ஓரே விளக்குகிறார்: “திறந்து வைக்கப்பட்ட நான்கு ஆண்டுகளில், கோயில் அனைத்து தரப்பு மற்றும் பின்னணியிலிருந்தும் சுமார் இரண்டு மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. கடந்த ஓர் ஆண்டாக, குறிப்பாக வழிபாட்டு இல்லம் ஒரு காந்த மையமாக செயல்பட்டு வந்துள்ளது. அங்கு சிறப்புக் கூட்டங்களுல் அழைக்கப்பட்ட வருகையாளர்கள் கலந்துகொண்டுள்ளனர், மேலும் வழிபாடுகளில் பங்கேற்ற பின்னர், தேசிய அக்கறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆழ்ந்த விவாதங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள சிந்தனைமிக்க தொடர்புகளின் மூலம் நாம் ஒன்றாக ஒரு வலுவான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது தெளிவாகிறது. ”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1463/

பஹாய் வானொலி: வானொலி நிலையங்கள் பங்கேற்பை வரவேற்று, தொற்றுநோயின் போது மக்களை இணைக்கின்றன


பஹாய் வானொலி: வானொலி நிலையங்கள் பங்கேற்பை வரவேற்று, தொற்றுநோயின் போது மக்களை இணைக்கின்றன


8 அக்டோபர் 2021


தலாவேரா, பிலிப்பைன்ஸ் – தொற்றுநோயின் போது, பல நாடுகளில் பஹாய் சமூகங்களால் நடத்தப்படும் வானொலி நிலையங்கள், எல்லாவித பரஸ்பர செயல்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட்ட போது, முக்கிய செய்திகளுக்கான மூலாதாரங்களாகவும் சமூக வாழ்வின் அறிவிப்பு மையங்களாகவும் தாங்கள் செயல்படுவதைக் கண்டனர். அது ஒரு புதுப்பிக்கப்பட்ட நோக்கமாக இருந்தது.

பஹாய் சமூகங்களால் இயக்கப்படும் பல வானொலி நிலையங்கள், தொற்றுநோயின் போது முக்கிய செய்திகளுக்கான மூலாதாரங்களாகவும் சமூக வாழ்வின் அறிவிப்பு மையங்களாகவும் தாங்கள் செயல்படுவதைக் கண்டன

பிலிப்பைன்ஸின் மத்திய லூசோன் மண்டலத்தில் உள்ள ரேடியோ பஹாய், சுகாதார நெருக்கடியின் போது பிரார்த்தனைக்கு அர்ப்பணிக்கப்பட்ட பங்கேற்பு நிகழ்ச்சிகள், மண்டலத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இசையை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் ஒற்றுமை உணர்வை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளது. அதன் ஒளிபரப்பு ஆரம் (radius) சென்றடைய கடினமாக இருக்கும், 90 கிலோமீட்டர் தொலைதூர பகுதிகளுக்கு முக்கியமான செய்திகளை அனுப்ப நிலையத்தை அனுமதித்துள்ளது.

ரேடியோ பஹாயின் இயக்குனர் கிறிஸ்டின் புளோரஸ் கூறுகிறார், “குடும்பங்கள் ஒன்றாக இருப்பதில் அதிக நேரம் செலவிடுகின்றன, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பால் வகைப்படுத்தப்படும் வீட்டுச் சூழலுக்குப் பங்களிக்க நாங்கள் விரும்புகிறோம். உதாரணமாக, பிரார்த்தனைகள் மற்றும் பாடல்கள் பகலில் ஒவ்வொரு மணி நேரமும் ஒளிபரப்பப்படுகின்றன, அவற்றுள் பல நேயர்களால் பங்களிக்கப்படுகின்றன. தவறாமல் பிரார்த்திப்பது முன்னேற்றத்திற்கும் உத்வேகத்திற்கும் முக்கியமாகும். நாம் ஆன்மீக ஜீவர்கள், நம் இல்லங்களில்  தம் படைப்பாளருடன் தொடர்புறுதல் இயல்பானதே. ”

லூஸோன் மண்டலத்தில் உள்ள ரேடியோ பஹாய், சுகாதார நெருக்கடியின் போது 90 கிமீ ஆரம் கொண்ட இடங்களுக்கு பிரார்த்தனைக்கு அர்ப்பணிக்கப்பட்ட பங்கேற்பு நிகழ்ச்சிகள், மண்டலத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இசையை மேம்படுத்துதல் ஆகியவற்றை ஒலிபரப்புவதன் மூலம் ஒற்றுமை உணர்வை உருவாக்குவதற்கு குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளது.

நாட்டின் கல்வித் துறையுடன் ஒத்துழைப்பதன் மூலம் மண்டலத்தில் கல்வியல் தேவைகளுக்கும் இந்த நிலையம் உதவுகிறது. பொது சுகாதார நடவடிக்கைகள் காரணமாக தங்கள் பள்ளிகள் மூடப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளை ரேடியோ பஹாயின் கல்வி உபகரணங்களின் வழக்கமான ஒளிபரப்பு சென்றடைகிறுது. இந்த கல்வி ஒளிபரப்புகள் உண்மை மற்றும் தாராள மனப்பான்மை, பொறுமை மற்றும் இரக்கம் போன்ற கருப்பொருள்கள் பற்றிய பஹாய் போதனைகளின் உற்சாகம் பெற்ற பாடல்கள் மற்றும் கதைகளுடன் நிரப்பம் செய்யப்படுகின்றன.

“சமூக விலகல் காலத்தில் மக்களுள் உரிமை உணர்வு மற்றும் தொடர்பை வளர்ப்பதில் வானொலி ஒரு முக்கிய கருவியாக இருந்துள்ளது” என்று திருமதி ஃபுளோரஸ் கூறுகிறார். “இந்த நெருக்கடியை எதிர்கொள்ள ஒரு கூட்டு ஆற்றல் தேவை. மக்கள் தங்கள் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிரல்களை தங்கள் உள்ளூர் மொழியில் கேட்கும்போதும் உள்ளடக்கத்திற்கு அவர்கள் பங்களிக்கும் போதும் ஒரு பகிரப்பட்ட அடையாளம் பலப்படுத்தப்படுகிறது. பொதுவாக, மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது தகவல்களும் யோசனைகளும் பரிமாற்றப்படுகின்றன, ஆனால் இப்போது வானொலி நிலையம் எங்கள் மண்டலத்தில் இந்த தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது.”

பொது சுகாதார நடவடிக்கைகள் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளைச் சென்றடையும் கல்வித் திட்டங்களின் ஒளிபரப்பில் பொதுப் பள்ளிகளின் மாவட்ட மேற்பார்வையாளர்.

பசிபிக் பெருங்கடலில், பனாமாவில் உள்ள பஹாய் உத்வேக வானொலி நிலையம் ஒன்று, தொற்றுநோயின் போது ஊக்கமளிக்கும் சேவைச் செயல்களிலும் நடைமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்தியுள்ளது. நடமாட்டம் மீதான கட்டுப்பாடுகளின் சூழலில் பொது சேவைகளை அணுகப் போராடும் கிராமப்புற வாசிகளுக்கு ஆதரவை வழங்க வானொலி நேயர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஃபேபியோ ரோட்ரிகுவெஸ் கூறுகிறார், “எங்கள் நிகழ்ச்சிகள் சேவையை வலியுறுத்துகின்றன, மேலும் சமூகத்திற்கு பங்களிக்க அனைத்து மக்களுக்கும் உரிமை உண்டு என்ற கருத்தையும் வலியுறுத்துகின்றன. நிகழ்ச்சிகள் தயாரிப்பிற்கு உதவக்கூடிய இப்பகுதியைச் சேர்ந்த, அவர்களின் பொது அனுபவங்களின் மெய்ம்மையையும் அவர்களின் நம்பிக்கையையும் சக சமூக உறுப்பினர்களின் இதயங்களைச் சென்றடையும் வகையில் தெரிவிக்க முடிந்த மக்களை, இந்த நிலையம் வரவேற்கிறது. இது தங்கள் சமூகங்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் தீவிர பங்கேற்பாளர்களாக தங்களைக் காண அதிகமான மக்களை ஊக்குவிக்கிறது.

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படம். சிலி மாபூசே மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது பஹாய் வானொலியின் கவனம் செலுத்தும் ஒரு பகுதியாகும்.

லத்தீன் அமெரிக்காவின் பிற இடங்களில், சிலியின் லாப்ரான்சாவை தளமாகக் கொண்ட சிலி பஹாய் வானொலி, சுற்றியுள்ள பூர்வீக சமூகங்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளை உறுதிப்படுத்துவதற்காக அவர்களுடன் நெருக்கமான உரையாடலில் ஈடுபட்டுள்ளது. பகுதி மாபுசே மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது இந்த நிலையத்தின் மற்றொரு அக்கறையாகும்.

“மாபூச்சே மக்களின் உன்னதமான அம்சங்களை மேம்படுத்துவதில் வானொலி முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்த நெருக்கடியில் நம்பிக்கை மற்றும் ஆறுதலை அது அளிக்கிறது” என்று நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் கால்ஃபுகுவெரோ கூறுகிறார்.

“அதிகாலை பிரார்த்தனை ஓர் அடிப்படை பாரம்பரியம், மற்றும் மாபுச்சே பிரார்த்தனைகள் பெரும்பாலும் நிலையத்தின் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் சேர்க்கப்படுகின்றன, மற்றும் அவை சில நேரங்களில் சாண்டியாகோவில் உள்ள பஹாய் கோவிலில் இருந்து ஒளிபரப்பப்படுகின்றன.”

சில்லி பஹாய் வானொலியில் மாப்புச்சே மொழி பிரார்த்தனைகள் வழக்கமான ஒலிபரப்பாகும்

சிலி மற்றும் பனாமாவில் உள்ள வானொலி நிலையங்களுடன் ஒத்துழைக்கும் கேட்டி ஸ்கோகின் சமீபத்திய அனுபவங்களைப் பற்றி பிரதிபலிக்கிறார்: “இந்த பஹாய் வானொலி நிலையங்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. அவை உள்ளூர் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளன. இந்த முயற்சிகள் ஒருதலைப்பட்ச ஒளிபரப்பு சேவை மட்டுமல்ல, அவை சேவை செய்யும் சமூகங்களில் அவை அர்த்தமுள்ள இருப்பைக் கொண்டுள்ளன.

“ஊடகங்களில், எதையாவது உருவாக்கும் நபர்கள் உள்ளனர் மற்றும்–பொதுவாக பெறுநர்கள் போலவே–அவ்வுள்ளடக்கத்தைப் பயன்படுத்துபவர்களும் உள்ளனர். வேறு ஒன்றைப் பற்றி அறிய இப்பொழுது முயல்கிறோம். இந்த வானொலி நிலையங்கள் சமுதாய சேவைக்கான திறனாற்றலை உயர்த்துவதற்கும் சமூகம் முழுமைக்கும் குரல் கொடுப்பதற்கும் உதவுகின்றன.”

சுகாதார நெருக்கடியின் போது, பிலிப்பைன்ஸில் உள்ள ரேடியோ பஹாய், பிரார்த்தனைக்கு அர்ப்பணிக்கப்பட்ட பங்கேற்பு திட்டங்கள், மண்டலத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உத்வேகமூட்டும் இசை ஆகியவற்றின் மூலம் ஒன்றிணைந்த உணர்வை உருவாக்கி வருகிறது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1462/

“ஒரு பொருத்தமான நிர்வாகம்”: ஐநா’வின் 75’ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்க பி.ஐ.சி (BIC) ஓர் அறிக்கை வெளியிடுகிறது


“ஒரு பொருத்தமான நிர்வாகம்”: ஐநா’வின் 75’ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்க பி.ஐ.சி (BIC) ஓர் அறிக்கை வெளியிடுகிறது


8 அக்டோபர் 2021


B.I.C. நியூயோர்க், 22 அக்டோபர்   2020, (BWNS) — பஹாய் அனைத்துலக சமூகம் (பி.ஐ.சி.) ஐக்கிய நாடுகள் சபையின் 75ம் ஆண்டு நிறைவின் தொடக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டு, ஐ.நா. அதிகாரிகள், உறுப்பு நாடுகளின் தூதர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் இதர சமூக பணியாளர்களைச் சர்வதேச அமைதிக்கான சமூகத்தின் முன்னெடுப்பை ஆய்வு செய்ய அழைப்புவிடுக்கின்றது.

ஐ.நா’வின் 75’வது ஆண்டுநிறைவை ஒட்டி பஹாய் அனைத்துலக சமூகம் (BIC)  ஓர் அறிக்கையை வெளிட்டது. அந்த நிகழ்ச்சிக்கு ஐ.நா. அதிகாரிகள், உறுப்பு நாடுகளின் தூதர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் இதர சமூக பணியாளர்களைச் சர்வதேச அமைதிக்கான சமூகத்தின் முன்னெடுப்பை ஆய்வு செய்ய அழைப்புவிடுத்தது.

“பொருத்தமானதொரு நிர்வாகம்: ஒரு நேரிய உலகளாவிய ஒழுங்கை நோக்கிய மனுக்குலமும் பாதையும்,” எனும் அவ்வறிக்கை செப்டம்பரில் வெளியிடப்பட்ட குறுகிய காலத்திலேயே அனைத்துலக அமைப்புகள் பற்றிய ஆழ்ந்த பிரதிபலிப்பையும்  ஆலோசிக்கவல்ல உரையாடல்களையும் தூண்டியுள்ளது.

அவ்வறிக்கையைப் பற்றி தமது கருத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் நாட்டின் இராஜ்யப் பிரதிநிதியும் கெ.எ.ஐ.சி.ஐ.ஐ.டி-யின் துணை பொதுச் செயலாளருமான எச்.இ.அல்வாரோ அல்பகேட், “ [அறிக்கையில்] உலகளாவிய கூட்டணி குறித்த கருத்து நன்முறையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது….ஐ.நா. உறுப்பு நாடுகளை மட்டுமின்றி, உலகளாவிய கூட்டணியை ஏற்படுத்திட முக்கிய பங்காற்றும் பணியாளர்களை நான் பாராட்டுகின்றேன். அந்த உலகளாவிய கூட்டணிகளை ஏற்படுத்திடும் சமய பணியாளர்களின்மீது நான் கவனம் செலுத்த விரும்புகிறேன். மேம்பாடு, கல்வி, நலவாழ்வு இன்னும் பல துறைகளில் அவர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

“இன்று, ஐ.நா.வில், பல-சமய ஆலோசகர் பேரவை என்னும் ஓர் ஆக்கபூர்வமான அமைப்பைக் கொண்டுள்ளோம். ஐக்கிய நாடுகளின் சபையில் சமயங்களின் குரல் எழுப்பப்பட்டுவரும் நிலையில், அது ஒரு முதல் படியாகத் திகழ்கிறது. அப்பேரவை, பஹாய் சமூகம் மற்றும் அதன் பிரதிநிதியான, பாணி டுகால் அவர்களால் தலைமை வகிக்கப்படுகிறது. ஐ.நா. சபையில், அந்த முக்கியத்துவம் வாய்ந்த பேரவையின் வழி மேற்கொள்ளப்படும் நற்பணிகளுக்காக நான் பஹாய் சமூகத்தைப் பாராட்ட விரும்புகிறேன்.”

அவ்வறிக்கையைப் பற்றி தமது கருத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் நாட்டின் இராஜ்யப் பிரதிநிதியும் கெ.எ.ஐ.சி.ஐ.ஐ.டி-யின் துணை பொதுச் செயலாளருமான எச்.இ.அல்வாரோ அல்பகேட், “ [அறிக்கையில்] உலகளாவிய கூட்டணி குறித்த கருத்து நன்முறையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது….அந்த உலகளாவிய கூட்டணிகளை ஏற்படுத்திடும் சமய பணியாளர்களின்மீது நான் கவனம் செலுத்த விரும்புகிறேன். மேம்பாடு, கல்வி, நலவாழ்வு இன்னும் பல துறைகளில் அவர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

அமைதிக்கான சமயங்களின் பொதுச் செயலாளரான அஸ்ஸா கராம், அவ்வறிக்கையைப் பற்றி: “அது இக்காலகட்டத்தைப் பற்றியும் இம்மண்ணிலுள்ள ஒவ்வொரு மனிதன் மற்றும் ஒவ்வொரு ஸ்தாபனத்தின் தேவையைப் பற்றியும் மிகவும் அழுத்தமாகப் பேசுகிறது.” அவர் மேலும்: ”நாம் ஒன்றுகூதுவதற்கான . . . தேவை குறித்து அவ்வறிக்கை தெளிவாகவும் தீர்க்கமாகவும் சொல்திறமிக்கதாகவும் இருப்பதானது என்னை மிகவும் கவர்ந்துள்ளது. உலகெங்கிலுமுள்ள எல்லா சமய பாரம்பரியங்களிலும் மூலாதாரமாக இருக்கும் அதனைப் புரிந்துகொள்ள பஹாய் சமயம் எப்பொழுதுமே எனக்கு ஊக்கமளிகின்றது:. . . நாம் அனைவரும் ஒன்று. . . இக்கிரகத்தில் நமது உயிர்வாழ்வு, இக்ககிரகத்தின் உயிர்வாழ்வு இந்த எளிய விஷயத்தை நமது முறைமைகளில்(systems) ஆழப் பதிக்க விரும்புகிறோமா இல்லையா என்பதைப் பொறுத்தேயிருக்கின்றது. நாம் ஒன்றுபட்டால் வெற்றிபெறுவோம். நமது எல்லைகளே முக்கியமென கருதுவோமானால் நமது சுய-அழிவைத் தேடிக்கொள்வோம்,” எனக் கூறினார்.

அவ்வறிக்கை, “ஓர் உலக சமுதாயத்தை தோற்றுவிக்க மனுக்குல மேம்பாட்டினை உயிர்ப்பூட்டும் விசாலமான அனைத்துலக மனப்போக்கின் மீது கவனம் செலுத்துகிறது,” என ஐ.நா. 2020 பரப்பியக்கத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர் ஃபெர்குஸ் வாட் கூறுகிறார்.

திரு வாட்ஸ், அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள ஒற்றுமை குறித்த கருத்தாக்கம், “தேசிய, சட்ட, கலாச்சார, மற்றும் அரசியல் பாரம்பரியங்களை எவ்வாறு அரவணைக்கின்றது, ஆனால் ஒரு நெறிமுறை அடிப்படைக்குள் இருந்து, எங்குமுள்ள மக்களுக்கு அடிப்படையான பொது விழுமியங்களை நமக்கு நினைவூட்டுகின்றது: பரஸ்பர சார்புமை, நீதி குறித்த ஒரு பகிர்ந்துகொள்ளப்பட்ட நெறிமுறை, மற்றும் மனிதகுலம் ஒன்றென்பதை கண்டுணர்தல்.

“நடப்பிலுள்ள உருமாற்றம் ஒரு சீரான செயற்பாடு என்பதையும் அது ஒரு படிப்படியான செயற்பாடு என்பதையும் ஒவ்வொரு படியும் அடுத்த படியைச் சாத்தியமாக்கும் என்பதையும் அவ்வறிக்கை அங்கீகரிக்கின்றது.”

“ஒரு பொருத்தமான நிர்வாகம்: ஒரு நீதியான உலகளாவிய முறையை நோக்கிச் செல்லும் மானிடத்தின் பாதையும்” எனும் அவ்வறிக்கை, வெளியிடப்பட்ட சிறிது காலத்திற்குள் அனைத்துலக கட்டமைப்புகளின் பங்கு குறித்த ஆழ்ந்த பிரதிபலிப்பையும் சிந்தனையார்ந்த கலந்துரையாடலையும் தூண்டிவிட ஆரம்பித்துள்ளது.

அமைதி மற்றும் உலகளாவிய ஆட்சிமுறைக்கான மையத்தின் சொவைடா ம’ஆனி யுவிங், “ஒரே உயிரினமாக இருப்பது உலகளாவிய சவால்களுக்கு நம்மை ஆளாக்குகிறது என்பதை நாம் அறிய வருகிறோம். ஆனால், இப்பிரச்னைகளைச் சமாளிக்க தேவைப்படும் உலகளாவிய தீர்மானிக்கும் அமைப்பு துல்லியமாக இல்லை என்பதை நாம் உணர்கிறோம். அதனால்தான் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் அனைத்துலக சபை போன்ற ஒரு புதிய அமைப்பு தேவைப்படுகிறது,” என்கிறார்.

ஸ்டீம்சன் மையத்தின் நேரிய பாதுகாப்பு 2020 காரியத்திட்ட இயக்குநர், ரிச்சார்ட் பொன்ஜியோ, அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உலகளாவிய குடிமை நெறிமுறை குறித்த கருத்து உயரிய நிலையிலான அனைத்துலக ஒத்துழைப்பை நிர்மாணிப்பதற்கு அத்தியாவசியம் எனச் சிறப்பித்துக் கூறுவதோடு: “உலகளாவிய குடிமை நெறிமுறை பற்றி ஒவ்வொருவர்க்கும் சொந்த அபிப்ராயம் உண்டு. ‘பொருத்தமானதோர் ஆட்சிமுறை,’ எனும் அறிக்கையில் அது குறிப்பிடப்பட்டுள்ளதும் அந்த நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து எந்த பிரச்னையும் இல்லாமல் நாம் ஒன்றுகூடி, சவால்களைச் சமாளிக்க ஓர் உலகளாவிய அமைப்பு, ஸ்தாபனங்கள், விதிமுறைகள் மற்றும் கருவிகளை மட்டும் உருவாக்காமல், இந்த ஸ்தாபனங்களுக்கு அஸ்திவாரமாக இருக்கும் நெறிமுறை மற்றும் ஒழுக்கக் கோட்பாடுகளும் இருக்க வேண்டுமென நமக்கு சவால்விட்டிருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உலகளாவிய குடிமை நெறிமுறையின் மையத்தில் அது இருக்கிறது.

வருகின்ற கால் நூற்றாண்டு—ஐக்கிய நாட்டுச் சபையின் 75ம் ஆண்டு விழாவிலிருந்து அதன் நூற்றாண்டு வரைக்கும்—மனுக்குலத்தின் நற்பேற்றினை நிர்ணயிக்கும் இக்கட்டான காலகட்டமாக இருக்குமென (பி.ஐ.சி.)   பஹாய் அனைத்துலக சமூகம் எதிர்பார்க்கின்றது.

வருகின்ற கால் நூற்றாண்டு—ஐக்கிய நாட்டுச் சபையின் 75ம் ஆண்டு விழாவிலிருந்து அதன் நூற்றாண்டு வரைக்கும்—மனுக்குலத்தின் நற்பேற்றினை நிர்ணயிக்கும் இக்கட்டான காலகட்டமாக இருக்குமென (பி.ஐ.சி.)   பஹாய் அனைத்துலக சமூகம் எதிர்பார்க்கின்றது. உலகெங்கிலுமிருந்து 200 பங்கேற்பாளர்களை வரவேற்றிருந்த அந்தத் தொடக்க விழா, உலகளாவிய ஒத்துழைப்பு முறைமைகளை   வலுப்படுத்திடும் தேவை குறித்த உரையாடல்களுக்காக  பஹாய் அனைத்துலக சமூகம் வழங்கும்  பல பங்களிப்புகளில் ஒன்றான இதனை மேலும் ஆய்வு செய்வதற்கான அழைப்பாகவும் திகழ்கிறது.

பஹாய் அனைத்துலக சமூகத்தின் தலை பிரதிநியான பானி டுகால்: “இது தொடர்ச்சியான உரையாடல்களின் ஆரம்பமாகும். இது உலக அரசாங்கங்கள் மற்றும் மக்களிடையே சமத்துவம், ஒற்றுமை, நீடித்த அமைதி மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்ட ஐ.நா.வின் நூற்றாண்டு நிறைவுக்கு நம்மை கொண்டுவருவதற்கான மாற்றம் சார்ந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும். அடுத்த 25 ஆண்டுகளும் மானிடத்தில் வாழ்வில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1461/

கோவிலுக்கான அடிக்கல் நடுதல் கொங்கோ நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது


கோவிலுக்கான அடிக்கல் நடுதல் கொங்கோ நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது


8 அக்டோபர் 2021


கின்ஷாசா, காங்கோ ஜனநாயக குடியரசு, 18 அக்டோபர் 2020, (BWNS) – காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டி.ஆர்.சி) தேசிய பஹாய் வழிபாட்டு இல்லத்தின் கட்டுமானம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. கோவில் நிலத்தில் அடிக்கல் நாட்டு சடங்கும் நடைபெற்று, அது தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. கோயில் மற்றும் தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பு. கின்ஷாசாவின் புறநகரில் அமைந்துள்ள இந்த இடம் அரசாங்க அதிகாரிகள், மத சமூகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பாரம்பரிய தலைவர்களை விருந்தினராக கொண்டிருந்தது. அதே நேரத்தில், இந்த முக்கியமான மைல்கல்லைக் குறிக்க எண்ணற்ற மக்கள் பிரார்த்தனையில் இணைந்ததால், அப்பரந்த நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.

பணித்திட்டத்தின் ஒரு புதிய கட்டத்தை குறிக்கும் ஒரு விழா அதிகாரிகள், சமயத்தலைவர்கள், பாராம்பரிய தலைவர்கள் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.

தேசிய ஆன்மீக சபை, இந்த நிகழ்விற்காக எழுதப்பட்ட ஒரு கடிதத்தில், வழிபாட்டு இல்லம் பஹாய் வழிபாடு மற்றும் சேவை குறித்த கருத்தின் அத்தியாவசிய கூறுகளை உள்ளடக்கியுள்ளது என்று கூறுகிறது, “இவை இரண்டும் உலகின் மீளுருவாக்கத்திற்கு மிகவும் முக்கியம். அதில் பஹாவுல்லா உருவாக்கிய மிகச்சிறந்த நிறுவனங்களில் ஒன்றான கோவிலின் மேன்மை, ஆற்றல், வழிபாட்டு இல்லத்தின் தனித்துவமான நிலை ஆகியவை உள்ளன. … இன்று நடைபெற்ற விழாவுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு, ஒரு விதை மண்ணில் விதைக்கப்படுவதுடன் ஒப்பிடலாம்–அது வளர்ந்து, விரைவில் மிகவும் மதிப்புமிக்க பழங்களை உற்பத்தி செய்யும் என்ற நம்பிக்கை.”

தற்போதைய சுகாதார வழிகாட்டிகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒரு நேர்த்தியான கூட்டத்தை நடத்த அனுமதித்தன

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த தருணத்தின் வருகையும் அது பிரதிநிதிப்பதும் நாடு முழுவதும் சமூகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.ஆர்.சியின் பரந்த நாடு முழுவதிலும் உள்ள மக்கள் அந்த இடத்திலிருந்து உடல் ரீதியாக தொலைவில் இருந்தாலும், அந்த இடத்திலிருந்து ஏற்கனவே வெளிப்படும் ஒற்றுமை உணர்வு அவர்களின் சமூகத்திற்கு அதிக தீவிரத்துடன் சேவை செய்வதற்கான அவர்களின் முயற்சிகளைத் தூண்டுகிறது என தெற்கு கிவுவின் மண்டல பஹாய் கவுன்சிலின் செயலாளர் பஷில்வாங்கோ ம்பலீகோ விளக்குகிறார். “முன்னேற்றத்தின் ஒவ்வொரு அடியும் தெற்கு கிவு மற்றும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தின் எழுச்சியை, சமூக மாற்றத்திற்கான பல தசாப்த கால முயற்சிகளின் விளைவாக நாங்கள் பார்க்கிறோம். “

டி.ஆர்.சியின் தேசிய ஆன்மீக சபையின் செயலாளர் லாவோசியே முட்டொம்போ ட்ஷியோங்கோ கூறுகையில், இந்த நிகழ்வில் மாறுபட்ட நபர்கள் இருப்பது ஒரு வழிபாட்டு இல்லத்தின் ஒன்றிணைக்கும் பங்கைக் குறிக்கிறது. “இது ஒரு பஹாய் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் தங்கள் படைப்பாளருக்கு பிரார்த்தனை செய்வதற்கான ஒரு வழிபாட்டு இல்லம். இந்தக் கோயில் ஒற்றுமையின் உருவகமாக இருக்கும் மற்றும் கொங்கோ சமுதாயத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லை பிரதிபலிக்கிறது. அவரது எழுத்துகள் ஒன்றில், ‘அப்துல்-பஹா இதுபோன்ற வழிபாட்டுத் தலங்களை உருவாக்குவது ‘மக்கள் ஒன்றுகூடுவதையும், ஒருவருக்கொருவர் இணக்கமாகி, பிரார்த்தனையில் ஈடுபடுவதை ஏதுவாக்குகின்றது; இதன் விளைவாக, இந்த ஒன்றுகூடலினால், ஒற்றுமையும் பாசமும் மனித இதயத்தில் வளர்ந்து செழிக்கும்,’” எனக் கூறுகிறார்.

நிகழ்வில் மாறுபட்ட நபர்கள் இருப்பது ஒரு வழிபாட்டு இல்லத்தின் ஒன்றிணைக்கும் பங்கைக் குறிப்பதாக டி.ஆர்.சியின் தேசிய ஆன்மீக சபையின் செயலாளர் லாவோசியே முட்டொம்போ ட்ஷியோங்கோ கூறுகிறார்.

சமூக வாழ்வின் வடிவங்களில் பிரார்த்தனையின் மகத்தான தாக்கம் வழிபாட்டு இல்லத்தைப் பற்றி பிரதிபலிக்க வெள்ளிக்கிழமை கூடியிருந்த மேற்கு கசாய் மண்டலத்தில் உள்ள பாரம்பரிய தலைவர்களால் விவாதிக்கப்பட்டது, அவர்கள் னர். ம்பெம்பே கிராமத்தின் தலைமை போப் ங்கோகாடி கூறுகிறார், “பஹாய் வழிபாட்டுக் கூட்டங்களில் பல்வேறு மக்கள் ஈடுபடுவதை நாங்கள் காண்கிறோம்; நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றாக நடக்கிறோம். பிரார்த்தனை நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, கிராமம் மாற்றம் கண்டுள்ளது. நானும் மாறியுள்ளேன்.

“எப்போதும் மோதலில் இருந்தவர்கள், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாதவர்கள் இப்போது ஒற்றுமையாக இருக்கிறார்கள். கடவுளுடைய திருவாக்கின் சக்தி மகத்தானது. இதுதான் மோதலில் ஈடுபட்டவர்களை ஒன்றிணைத்துள்ளது. “இந்த உள்ளூரின் தலைவராக இருந்தபோதும் நான் எப்போதும் மற்ற அதிகாரிகளுடன் ஒன்றிணைந்திருக்கவில்லை, ஆனால் வழிபாட்டுக் கூட்டங்கள் மூலம் நாங்கள் ஒற்றுமையாகிவிட்டோம். இதுதான் ஒரு சமூகமாக வாழ எங்களை அனுமதித்துள்ளது. இதைத்தான் வழிபாட்டு இல்லம் குறிக்கிறது. ”

சமூக வாழ்வின் வடிவங்களில் பிரார்த்தனையின் மகத்தான தாக்கம் வழிபாட்டு இல்லத்தைப் பற்றி பிரதிபலிக்க வெள்ளிக்கிழமை கூடியிருந்த மேற்கு கசாய் மண்டலத்தில் உள்ள பாரம்பரிய தலைவர்களால் விவாதிக்கப்பட்டது

பாப் பெருமானார் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் பஹாய் புனித தினத்துடன் இந்த அற்புதமான விழா இணைவாகியுள்ளது. தற்போதைய சுகாதார வழிகாட்டிகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒரு நேர்த்தியான கூட்டத்தை நடத்த அனுமதிக்கின்றன. ஒரு நேரடி ஸ்ட்ரீம் மூலம் இணையத்தில் ஒளிபரப்பப்பட்டு தேசிய தொலைக்காட்சி செய்தி சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட இந்த விழா, புதிய கட்டிடம் எழும் இடத்திலேயே ஒரு குறியீடான முதல் கல்நாட்டின் மூலம் உச்சக்கட்டத்தை அடைந்தது.

தேசிய வழிபாட்டு இல்லத்தை உருவாக்குவதற்கான திட்டங்கள் 2012’இல் அறிவிக்கப்பட்டன. அப்போதிருந்து டி.ஆர்.சியின் பஹாய்கள் கட்டடக் கலைஞர்களையும் இந்த தனித்துவமான கட்டமைப்பிற்குப் பொருத்தமான தளத்தையும் அடையாளம் கண்டு வந்துள்ளனர்.

வழிபாட்டு இல்லத்தின் வடிவமைப்பு பாரம்பரிய கலைப்படைப்புகள், கட்டமைப்புகள் மற்றும் டி.ஆர்.சியின் இயற்கை அம்சங்களால் உத்வேகம் பெற்றுள்ளது.

ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ள, உலகெங்கிலும் கட்டுமானத்தில் உள்ள பல பஹாய் கோயில்களில் ஒன்றான இந்த வழிபாட்டு இல்லம், வழிபாடு மற்றும் சேவையின் ஒருங்கிணைந்த பங்குகளைப் பிரதிபலிக்கிறது. கின்ஷாசாவில் உள்ள வழிபாட்டு இல்லத்தின் வடிவமைப்பு பாரம்பரிய கலைப்படைப்புகள், கட்டமைப்புகள் மற்றும் டி.ஆர்.சியின் இயற்கை அம்சங்களால் உத்வேகம் பெற்றுள்ளது. காங்கோ நதியின் உருவகம், அதன் துணை நதிகள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒரு பெரிய நீரோட்டமாக சேகரிக்கும் மழைநீர், உலகம் ஒன்றுபடுவதையும் ஐக்கியமாவதையும் குறிக்கிறது,  பல்வேறு காங்கோ மக்களின் கலைப்படைப்பை நினைவூட்டும் குவிமாடத்தின் வெளிப்புறத்தை அலங்கரிக்கும் வடிவங்கள் மூலம் இது வெளிப்படுத்தப்படுகிறது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1460/

பெய்ரூட் இளைஞர்கள் பேரழிவு மீட்சி வலையமைப்பை உருவாக்குகிறார்கள்


பெய்ரூட் இளைஞர்கள் பேரழிவு மீட்சி வலையமைப்பை உருவாக்குகிறார்கள்


8 அக்டோபர் 2021


பெய்ரூட், 16 அக்டோபர் 2020, (BWNS) – ஆகஸ்ட் மாதத்தில் பெய்ரூட்டை உலுக்கிய வெடிப்புக்குப் பின்னர், பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர் குழு ஒன்று விரைவாகச் சந்தித்து நிவாரணம் மற்றும் மீட்புக்கு உதவுவதற்கான திட்டங்களை உருவாக்கியது. தங்களைச் சுற்றியுள்ள மக்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க “உதவி மையம்” என்று அழைக்கப்படும் ஒரு தன்னார்வ வலையமைப்பை அவர்கள் உருவாக்கினர், இது அடுத்தடுத்து வந்த மாதங்களில் தொடர்ந்துவரும் தேவைகளின்பால் கவனம் செலுத்தும் ஒன்றாக பரிணமித்தது.

பெய்ரூட்டை உலுக்கிய வெடிப்புக்குப் பின்னர், பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர் குழு ஒன்று விரைவாகச் சந்தித்து நிவாரணம் மற்றும் மீட்புக்குத் திறனாற்றல்களை வழநடத்தி வருகின்றது.

“நாங்கள் எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்,” என்று இந்த முயற்சியின் முன்னணியில் உள்ள இளைஞர்களில் ஒருவரான கரீம் மோஸஹேம் கூறுகிறார்.

ஆன்மீக மற்றும் தார்மீக வலுவூட்டலை நோக்கமாகக் கொண்ட இளைஞர்களின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் அவர்களுக்கு ஒத்துழைப்பைப் பேணுவதற்கான அனுபவத்தையும், சிறு குழுக்களிடையே பகிரப்பட்ட முயற்சியின் ஓர் உணர்வையும் அளித்தன. இப்போது அவர்கள் ஒரு தன்னார்வ வலையமைப்பை உருவாக்குவதற்கு இந்த திறனை வாய்க்காலிடலாம்.

“நாங்கள் ஒரு மிகச் சிறிய நடவடிக்கையை எடுக்க முடிவு செய்தோம், இது உதவி தேவைப்படும் மற்றவர்களைக் கண்காணிக்கவும், ஏற்கனவே இருந்த முயற்சிகளை அடையாளம் காணவும் ஒரு செய்தியிடல் குழுவை ஆரம்பித்து, எங்கள் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளின் மூலம் நாங்கள் சந்தித்த எங்கள் நண்பர்கள் மற்றும் மக்கள் அனைவரையும் அழைக்க வழிவகுத்தது.

சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் சேவையின் உணர்வைப் பகிர்ந்து கொண்டனர். அது கடினமான சூழ்நிலைகளில் பணியாற்ற தேவையான சக்தியை அவர்களுக்கு வழங்கியது.

“நாங்கள் தொடங்கியபோது, ‘நாம் 10 இளைஞர்கள் மட்டுமே. நாம் எவ்வாறு உதவ முடியும்?’ என சிந்தித்தோம். ஆனால் நாங்கள் எங்கள் சமூகத்திற்கும் நம் நாட்டிற்கும் சேவை செய்ய விரும்பினோம். அந்த 10 பங்கேற்பாளர்கள் விரைவாக பல்வேறு வயது மற்றும் பின்னணியைச் சேர்ந்த உதவி வழங்கிடும் 80 தன்னார்வலராக அதிகரித்த போது நாங்கள் நம்பிக்கை அடைந்தோம்”

சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் சேவையின் உணர்வைப் பகிர்ந்து கொண்டனர். அது கடினமான சூழ்நிலைகளில் பணியாற்ற தேவையான சக்தியை அவர்களுக்கு வழங்கியது. ஒரு மாதத்திற்கும் மேலாக, அவர்கள் தினமும் 300 உணவுகளை விநியோகித்து வந்தனர், அத்துடன் ஆடை நன்கொடைகளையும் ஏற்பாடு செய்தனர், சேதமடைந்த சொத்துக்களை சுத்தம் செய்ய உதவினர், உடைந்த ஜன்னல்களை மூடினர், மற்றும் பிற பணிகளை மேற்கொண்டனர். தங்களையும் பிறரையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க பொருத்தமான உபகரணங்களைப் பயன்படுத்துவது, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவற்றில் அவர்கள் எச்சரிக்கையாக இருந்தனர்.

தன்னார்வலர்கள் உணர்ந்த ஆற்றல் மற்றும் அவசர உணர்வு முறைமையான நடவடிக்கை மூலம் மிகவும் திறம்பட மாற்றப்படும் என்பதை முன்முயற்சியின் மையத்தில் உள்ள இளைஞர்கள் அனுபவத்தின் மூலம் அறிந்திருந்தனர். ஒவ்வொரு காலையிலும், உதவியளிப்புக்கு வெளியே செல்வதற்கு முன், தொண்டர்களிடையே பணிகளின் விவரம் விநியோகிக்கப்படும். மாலை நேரங்களில், அந்தக் குழு அந்த நாளின் அனுபவத்தைப் பற்றி சம்பந்தப்பட்ட அனைவருடனும் பிரதிபலிக்கும், தேவைகளை மதிப்பீடு செய்யும் மற்றும் அடுத்த நாளுக்கான புதிய பணிகளின் பட்டியலைத் தீர்மானிக்கும்.

லெபனானின் பஹாய் தேசிய ஆன்மீக சபை உறுப்பினரான ஹோடா வாலஸ், “இந்த சிறிய இளைஞர் குழு எவ்வாறு நடவடிக்கைக்காக முன்னெழுந்தது என்பதைப் பார்ப்பது மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது” என்கிறார். இளம் வயதினராக இருந்தாலும், அவர்கள் பல ஆண்டுகளாக தங்கள் சமூகங்களுக்கு சேவை செய்து வருகின்றனர், மேலும் பஹாய் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வி செயல்முறை மூலம் அவர்களின் திறன்களை வளர்த்து வருகின்றனர்.

அது அவர்கள் சமூகத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் தங்களை முகவர்களாக பார்ப்பதற்கு அவர்களுக்கு உதவுகிறது. அடிப்படை புள்ளிவிவரங்களை பராமரித்தல், வளங்களை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடுதல் மற்றும் உதவி மையத்தை ஒழுங்கமைக்கும்போது இயற்கையாகவே வந்த கற்றல் முறையில் செயல்படுவது போன்ற ஒழுங்கமைப்புத் திறன்களை அவர்கள் பெற்றுள்ளனர். ”

தன்னார்வலர்கள் உணர்ந்த ஆற்றல் மற்றும் அவசர உணர்வு முறைமையான நடவடிக்கை மூலம் மிகவும் திறம்பட மாற்றப்படும் என்பதை முன்முயற்சியின் மையத்தில் உள்ள இளைஞர்கள் அனுபவத்தின் மூலம் அறிந்திருந்தனர்.

முன்முயற்சியின் மையத்தில் பணிபுரிபவர்கள் இணையதள கூட்டங்களில் தங்கள் சமூகத்துடன் சேர்ந்து பிரார்த்தனை செய்வது தங்களுக்கு ஆதரவாக இருப்பதைக் கண்டனர். திருமதி வாலஸ் கூறுகிறார், “பிரார்த்தனையானது, அதிர்ச்சி மற்றும் சோகம் சார்ந்த அந்த நாட்களில் பலரைத் தக்க வைத்துக் கொண்டதுடன், நம்பிக்கையையும் தந்தது. ஒரு பக்தி மனப்பான்மையின் முக்கியத்துவத்தை நாங்கள் காண்கிறோம், இது இந்த பேரழிவை எதிர்கொள்வதில் நமக்கு மேலும் மீட்சித்திறம் வழங்கும் சமூக உறவுகளுக்கு வலுவூட்டவும் ஆன்மீக வேர்களை ஆழப்படுத்தவும் உதவுகிறது.”

தன்னார்வலர்களில் பலர் இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளபோதும், மற்றவர்களுக்கு சேவை செய்வதில் நம்பிக்கையைக் கண்டனர். மருத்துவ மனோத்ததுவ நிபுணரான மஹா வாகிம் கூறுகிறார்: “என் அலுவலகம் அழிக்கப்பட்டது, அது எனக்கு பேரழிவை ஏற்படுத்தியது. ஒன்றும் செய்யாமல், நிராதரவானவர் என நினைப்பதற்குப் பதிலாக, ஒரு நண்பர் என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியபோது நான் ஹெல்பிங் ஹப் உதவி மையத்தில் சேர்ந்தேன். இது என்னை குணப்படுத்தும் பயணத்தின் முதல் படியாகும். எழுந்து, நான் ஏதாவது செய்கிறேன், மற்றவர்களுக்கு உதவுகிறேன் என்று உணர இது எனக்கு உதவியது. எல்லோரும் எப்படி ஒன்று சேர்ந்துள்ளனர் என்பது எனக்கு ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது.”

ஒவ்வொரு காலையிலும், உதவியளிப்புக்கு வெளியே செல்வதற்கு முன், தொண்டர்களிடையே பணிகளின் விவரம் விநியோகிக்கப்படும். மாலை நேரங்களில், அந்தக் குழு அந்த நாளின் அனுபவத்தைப் பற்றி சம்பந்தப்பட்ட அனைவருடனும் பிரதிபலிக்கும், தேவைகளை மதிப்பீடு செய்யும் மற்றும் அடுத்த நாளுக்கான புதிய பணிகளின் பட்டியலைத் தீர்மானிக்கும்.

பெய்ரூட் வெடிப்பிற்குப் பின்னர் உடனடியாக பதிலளிக்கும் வகையில் ஹெல்பிங் ஹப் உதவி மையம் தோன்றினாலும், சமீபத்திய வாரங்களில் இது நீண்டகால வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதுடன், தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்ள மற்ற குழுக்கள் மற்றும் அமைப்புகளுடன் அதிகரிக்கும் முறையில் ஒத்துழைத்துள்ளது. அடித்தட்டில் இருந்து தகவல்களை சேகரிக்கும் நிலையில் இளைஞர்கள் உள்ளனர், இது உன்னிப்பாக பதிவு செய்யப்பட்டு, வெவ்வேறு தேவைகளை, சிறப்பாக உதவி வழங்கிடும் நிலையில் உள்ள பிற அமைப்புகளின் கவனத்திற்குக் கொண்டுவர பயன்படுகிறது.

முதல் நாட்களில் இருந்து ஹெல்பிங் ஹப் உதவி மையத்துடன் பணிபுரிந்து வந்துள்ள லாரா மன்சூர் இவ்வாறு கூறுகிறார்: “பஹாய் கல்விச் செயல்பாட்டின் ஒரு முக்கிய அம்சம் மக்களிடையே ஒற்றுமையை அதிகரிப்பதன் மூலம் நீண்டகால நடவடிக்கைக்கான திறனை மேம்படுத்துவதாகும். நாங்கள் அடித்தளத்தில் இருந்தபோது ஒழுங்கமைப்பின் அவசியத்தை உணர்ந்தோம். உதாரணமாக, பெய்ரூட்டின் ஒரு பகுதி உணவு, நீர் மற்றும் பிற உதவிகளால் நிரப்பம் அடைந்தன,

அதே வேளை மற்ற பகுதிகள் குறைந்த கவனத்தை அல்லது எந்த கவனத்தையும் பெறவில்லை. எனவே, அமைப்புகள் தங்களுக்குள் ஒன்றுடன் ஒன்று முயற்சிகளை ஒருங்கிணைக்க உதவும் மற்றொரு முயற்சியை இப்போது தொடங்கினோம்.

“இது வெவ்வேறு சமூக நடிப்பாளர்களை ஐக்கியத்துடன் ஆலோசிக்கவும் செயல்படவும் அனுமதித்துள்ளது. நாங்கள் அனைவரும் நாங்கள் ஒன்றுபட்டுள்ள இலக்குகளைப் பற்றி பேசுவதற்கு 50 பேருடனான இணையதள சந்திப்புகள் இப்போது உள்ளன. ஒரு கூட்டுத் தொலைநோக்கு மற்றும் குறிக்கோள் உணர்வை மேம்படுத்திக் கொண்டிருப்பது வெளிப்புற உதவிகளின் ஆதரவுடன் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான கூடுதல் திறனை நம் அனைவருக்கும் அளிக்கிறது.” இந்த அனுபவம் இளைஞர்களுக்கு எப்படி அர்த்தமாகின்றது என்பதன் மீது கரீம் பிரதிபலிக்கிறார். “இளைஞர்களான நம் அனைவருக்கும் வாழ்க்கையில் நம் உண்மையான நோக்கம் பற்றி ஒரு மெய்நிலை சோதனை உள்ளது. நாங்கள் அடித்தட்டு மக்களுடன் காலையிலிருந்து இரவு வரை மக்களுக்கு உதவி வந்த அந்த வாரங்கள் மிகவும் கடினமானவை. ஆனால், நாங்கள் ஒன்றுபட்டு இருந்ததால் அது மிகவும் நேர்த்தியாக இருந்தது, எங்கள் சேவை எங்களுக்கு நம்பிக்கையளித்தது. நாம் அன்றாட வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பும்போது, ஒரு நோக்கம் இல்லாமல் நாளுக்கு நாள் வேலை செய்வதில் நாம் திருப்தி அடையவில்லை என்பதை உணர்கிறோம். நமது சமூகங்களுக்கு நாம் சேவை செய்ய வேண்டும், ஏனெனில் உண்மையான மகிழ்ச்சி அங்கிருந்துதான் தோன்றுகிறது.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1459/

முன்னோடி மண்பாண்டக் கலை கிழக்கு மற்றும் மேற்கின் ஐக்கியத்தை நாடியது


முன்னோடி மண்பாண்டக் கலை கிழக்கு மற்றும் மேற்கின் ஐக்கியத்தை நாடியது


8 அக்டோபர் 2021


லண்டன் – நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு குயவுக் கலைஞர்கள்-ஒருவர் ஆங்கிலேயர், மற்றவர் ஜப்பானியர்-கிழக்கு மற்றும் மேற்கின் கலை மற்றும் மரபுகளை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் ஒரு படைத்தல் மாமுயற்சியைத் தொடங்கினர்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் ஸ்தாபிக்கப்பட்ட மட்பாண்ட பாரம்பரியம் மனிதகுல ஒற்றுமை குறித்த பஹாய் கோட்பாட்டினால் ஈர்க்கப்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளை ஒன்றிணைக்க முயன்றது.

பெர்னார்ட் லீச் 1887’இல் ஹாங்காங்கில் பிறந்து ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் வளர்ந்தார். தமது ஆரம்ப ஆண்டுகளிலிருந்தே, கிழக்கு மற்றும் மேற்கு நாடுகள் சந்திக்கவும் ஒன்றிணையவும் வேண்டியதன் அவசியத்தை அவர் ஆதரித்தார். அவரது கருத்தியல் மற்றும் மனிதகுலத்தின் மீதான தீவிர அக்கறை, அவரது கைவினை மூலம் வெளிப்பாடு கண்டது; பின்னர், அவர் பஹாய் சமயத்தைத் தழுவியதால் அது பலப்படுத்தப்பட்டு விரிவடைந்தது.

1920 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, லீச் தனது நண்பரான ஷோஜி ஹமாடாவுடன் இங்கிலாந்தின் செயின்ட் ஐவ்ஸ்’இல் ஸ்தாபித்த லீச் மட்பாண்டம், உலகின் மிக முக்கியமான மற்றும் செல்வாக்குமிக்க கைவினைப் பட்டறைகளில் ஒன்றாக மாறியது. அதன் நூற்றாண்டு விழா இப்போது பல சிறப்பு கண்காட்சிகளால் குறிக்கப்பட்டுள்ளது, இதில் ஃபார்ன்ஹாமில் உள்ள கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தை அடிப்படையாகக் கொண்ட கைவினை ஆய்வு மையம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க வைட் சேப்பல் கேலரி ஆகியவை அடங்கும். லீச் மட்பாண்ட மையத்திலேயே, படைப்பு முன்முயற்சிகளின் ஒரு நிகழ்ச்சிநிரலும் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

கைவினை ஆய்வு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் சைமன் ஓல்டிங் கூறுகையில், “லீச் பானை ஒரு பொருள் மட்டுமல்ல, யோசனைகள், எண்ணங்கள், குணாதிசயங்கள் போன்ற ஒரு வகையான களஞ்சியமாகவும் அது கருதப்படுகிறது. “கை, இதயம் மற்றும் தலை ஆகியவை ஒன்றிணைந்து செயல்படுகின்றன எனவும், அவற்றை ஆன்மீக மற்றும் மனிதநேய வாழ்க்கை சார்ந்த தனது சொந்த உணர்வுடன் இணைத்துக்கொள்ளவும் முடியும் எனவும் அவர் ஆழமாக நம்பினார்.”

புஜீமாவின் மருசன் சூளையில் ஜப்பானிய மாணவர்களுக்கு பெர்னார்ட் லீச் கற்பிக்கின்றார். கிராப்டிவ் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் கைவினை ஆய்வு மையத்தில் உள்ள பெர்னார்ட் லீச் காப்பகத்திலிருந்து, பி.எச்.எல் / 12677.

கிழக்கு மற்றும் மேற்கின் ஓர் இணைப்பாக்கம்

இளம் லீச் லண்டனில் சித்திரம் மற்றும் அச்சு தயாரித்தல் ஆகியவற்றைப் பயின்று, 1908’இல் பொறித்தல் (etching) போதிப்பதற்காக ஜப்பானுக்குத் திரும்பினார். வரி சித்திரத்தில் அவரது தேர்ச்சியைக் காட்டும் – அவரது முதல் படைப்புகள் சில ஃபார்ன்ஹாமில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல 1970’களில் லீச்சிற்காக பணியாற்றிய ஒரு பஹாய் ஆன மறைந்த ஆலன் பெல் தொகுப்பிலிருந்து கிடைத்தவையாகும். இது சமீபத்தில் கைவினைப் படிப்பாய்வு மையத்தால் கையகப்படுத்தப்பட்ட பெல் காப்பகம், இதற்கு முன்பு பகிரங்கமாகக் காட்டப்படாத பல கைவிணைகளை உள்ளடக்கியுள்ளது.

“கண்காட்சியின் தொடக்கமானது அவரது ஆரம்பகால மற்றும் இதுவரை பார்க்கப்படாத மாணவ வரைபடங்களை அவரது ஆரம்பகால ஜப்பானிய பொறிப்புகளுடன் தொடர்புபடுத்துகிறது” என்று பேராசிரியர் ஓல்டிங் கூறுகிறார். “ஜப்பானில் லீச் தனது சுய உருவப்படங்களில் மட்டுமின்றி, நிலப்பரப்பை சித்தரிப்பதிலும் தன்னைத்தானே நிலைப்படுத்திக்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இது. ஜப்பான் அவரது மனதிலும் அவரது நடைமுறையிலும் ஆழமாக பதிந்துள்ளது.”

டோக்கியோ, 1911 அறியப்படாத ஒருவரின் உதவியுடன் லீச் தயாரித்த முதல் ராகு வகை பானைகளில் ஒன்று. © கைவினை ஆய்வு மையம், கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகம், பி .75.67.

ஜப்பானில், அந்நாட்டின் பீங்கான் மரபுகளால் லீச் ஈர்க்கப்பட்டு, கைவினைக் கற்றலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, கிழக்கு மற்றும் பழைய ஆங்கில நுட்பங்களை இணைக்கும் அணுகுமுறையை உருவாக்கினார். பின்னர், 1920’இல், அவரும் ஹமாடாவும் செயின்ட் ஐவ்ஸ்’இல் ஒரு மட்பாண்ட மையத்தை அமைப்பதற்கான ஒரு நல்கையை (sponsorship) ஏற்றுக்கொண்டனர். ஆனால், சூளைகளுக்கு எரிபொருளைத் தருவதற்கு அவசியமான, கார்ன்வாலின் மரப் பற்றாக்குறை, மற்றும் உள்ளூர் களிமண் மற்றும் மெருகூட்டல்களுக்கான இயற்கை பொருட்களின் மோசமான கிடைக்கை ஆகியவை அவர்கள் செய்யத் திட்டமிட்டிருந்த சூழலுக்கும் குறைவான ஒரு சூழலை உண்டாக்கின. பல சவால்கள் மற்றும் மோசமான சூழல்களிலும் விடாமுயற்சியுடன், கலைஞர்-கைவினைஞர் குயவுக் கலைஞருக்கு ஒரு புதிய சகாப்தத்தை நிறுவுவதாகவும், பொருள்களுக்கு சத்தியத்தின் கருத்தை மீண்டும் நிலைநிறுத்துவதாகவும், எளிய வடிவமைப்பு மற்றும் நுட்பமான வண்ணங்களின் அழகை உறுதிப்படுத்துவதாகவும் லீச்’சும் ஹமாடா’வும் நம்பினர். கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் இணைப்பாக்கம் குறித்த அவர்களின் நம்பிக்கை அவர்களின் அணுகுமுறைக்கு அடித்தளமாக இருந்தது.

“லீச் கிழக்கு ஆசிய மட்பாண்டங்களிலிருந்து தனது சொந்த படைப்புகளில் ஐக்கொனோ கிராஃ முறையை அறிமுகப்படுத்தினார்” என்று பேராசிரியர் ஓல்டிங் கூறுகிறார். “இங்கிலாந்திற்கும் ஜப்பானுக்கும் இடையிலான முறைசார்தல், முறைசாராமை இரண்டையுமே நீங்கள் காணலாம்.” எளிய அலங்கார கருக்களான இலைகள், பறவைகள் மற்றும் மீன் ஆகியவற்றை  லீச் தனது பானைகளில் நிறைவடையச் செய்தார்.

லண்டனின் வைட் சேப்பல் ஆர்ட் கேலரியில் கெய் ஆல்டோஃப் கோஸ் உடன் பெர்னார்ட் லீச் எனும் கண்காட்சியில் ‘லில்லிகளுடன் சாலமன்’ என்ற தலைப்பில் பெர்னார்ட் லீச்சின் ஒரு குவளை. பட உபயம் லெய்செஸ்டர் அருங்காட்சியகங்கள் © பெர்னார்ட் லீச் எஸ்டேட்.

நம்பிக்கை மற்றும் நடைமுறை

1940 ஆம் ஆண்டில் லீச் முறையாக ஏற்றுக்கொண்ட–அவரது நண்பரான அமெரிக்க ஓவியர் மார்க் டோபியால் அறிமுகப்படுத்தப்பட்ட–பஹாய் சமயத்தை அவர் கண்டுபிடித்ததன் மூலம் அவரது தனிப்பட்ட நம்பிக்கைகள் பலப்படுத்தப்பட்டன. அவருடன் குறிப்பாக ஒத்திசைவு கண்ட பஹாவுல்லாவின் போதனைகளில் ஒன்று, “… கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் உண்மையான மதிப்பு பாராட்டப்பட வேண்டும், ஏனென்றால் அவர்கள் மனிதகுலத்தின் விவகாரங்களை முன்னேற்றுகிறார்கள்,” என்பதாகும்.

அழகான, கையால் செய்யப்பட்ட கைவினைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் சமூகத்தின் நல்வாழ்வுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும் என்று லீச் எப்போதும் நம்பியிருந்தார். ஆனால், காலப்போக்கில், மனிதகுலம் எதிர்கொள்ளும் பெரிய சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரே தீர்வு அதிக அளவில் ஒற்றுமையை அடைவதே என்பதை அவர் உணர்ந்தார். “பஹாவுல்லா ஓர் அவதாரம் என நான் நம்புகிறேன், மனிதகுல சமுதாயத்தை ஸ்தாபிக்கக்கூடிய ஆன்மீக அடித்தளத்தை வழங்குவதே அவரது பணி” என்று அவர் எழுதினார். 1954’இல் அவர் புனித பூமிக்கு யாத்திரை மேற்கொண்டபோது அவரது ஆன்மீக உணர்வுகள் மேலும் தூண்டப்பட்டன. கிழக்கு மற்றும் மேற்கு இடையே அதிக ஒற்றுமைக்கு பங்களிப்பதற்கான தனது முயற்சிகளை முடுக்கிவிட வேண்டும் என்ற அவரது உணர்வை பஹாய் ஆலயங்களில் அவரது பிரார்த்தனைகளின் அனுபவம் வலுப்படுத்தியது.

“பூரணத்துவத்தை நோக்கி முயல்வோமானால், ​​கலை மதத்துடன் இணைவான ஒன்றாகும், மற்றும் இந்த உண்மை கிழக்கில் சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என்று லீச் தனது நீண்ட வாழ்க்கையின் முடிவில் எழுதினார். “புத்தியையும் உள்ளுணர்வையும், இதயத்திலிருந்து தலையையும், மனிதனைக் கடவுளிடமிருந்தும் பிரித்தபோது நமது இருமைவாதம் தொடங்கியது.”

தமது மகன் டேவிட் மற்றும் மாணவர்களுடன் இங்கிலாந்தின் செயின்ட் இவ்ஸில் உள்ள பழைய மட்பாண்ட மையத்தில் . கிராஃப்ஸ் ஸ்டடி சென்டரில் உள்ள பெர்னார்ட் லீச் காப்பகத்திலிருந்து, கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகம், பி.எச்.எல் / 8999A

பயிற்றலின் முக்கியத்துவம் லீச் மட்பாண்டத்தின் நடைமுறையின் மையமாக இருந்தது. சுற்றியுள்ள பகுதி மற்றும் வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் மற்றும் பழகுனர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனர், இது ஒரு தனித்துவமான சர்வதேச சூழலை உருவாக்கியது. முட்டைக் கோப்பைகள் முதல் பெரிய சமையல் பானைகள் வரை 100’க்கும் மேற்பட்ட நிலையான வடிவமைப்புகளை மீண்டும் மீண்டும் தயாரிக்கும் பணியில் பயிற்சி பெற்றவர்கள் பணிபுரிந்ததால், குயவுக் கலைஞர்கள் எனும் முறையில் கடுமையான பட்டறை ஒழுக்கம் மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு அத்தியாவசிய அடித்தளமாகக் காணப்பட்டது.

பேராசிரியர் ஓல்டிங் குறிப்பிடுகையில், “சாராம்சத்தில், இந்த ஸ்தாபகக் கோட்பாடுகள் மற்றும் பானைகளாக அவர் கருதியவற்றிலிருந்து லீச் விலகிச் செல்லவில்லை. இந்த பயிற்சி பெற்றவர்கள் பின்னர் தங்கள் சொந்த மட்பாண்ட மையங்களை நிறுவி, அதே மரபுவழியில் பணிபுரிந்து, சிறிய அளவிலான ஸ்டுடியோ மட்பாண்டவியலை, கடினமான ஆனால் நிறைவான படைப்பு மற்றும் உணர்ச்சிபூர்வமான வாழ்க்கையை நடத்தக்கூடிய வழிமுறையாக அவர்கள் கண்டனர். ”

காய் ஆல்டோஃப் பெர்னார்ட் லீச்சுடன் பயணிக்கின்றார், லண்டனின் வைட் சேப்பல் கேலரியில் 7 அக்டோபர் 2020 – 10 ஜனவரி 2021’இல், ஓர் இளம் பார்வையாளர் நிறுவலில் ஒரு பெர்னார்ட் லீச் குடத்தை ஆய்வு செய்கிறார்,. புகைப்படம்: பாலி எல்டெஸ்

லீச் ஸ்தாபித்த மரபு, இருபதாம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் ஆதிக்கம் செலுத்தி, உலகம் முழுவதும் எண்ணற்ற இரசிகர்களை ஈர்த்தது. வைட் சேப்பல் கேலரியில், சமகால ஜெர்மன் கலைஞர் காய் ஆல்டோஃப் முக்கிய சேகரிப்பிலிருந்து லீச்’சின் 45 பொருட்கூறுகளைத் தேர்ந்தெடுத்துள்ளார், இதற்காக அவர் சிறப்புக் கண்ணாடிக் கூடுகளை (vitrines) வடிவமைத்துள்ளார்.

“அல்தாஃப் பெர்னார்ட் லீச்சின் வேலை மற்றும் பொருள்களை உருவாக்குவதற்கான அவரது அணுகுமுறை ஆகியவற்றினால் ஈர்க்கப்பட்டுள்ளார்” என்று கியூரேட்டர் எமிலி பட்லர் கூறுகிறார். “கலைகளுடனும் பொருள்களுடன் எவ்வாறு வாழ முடியும் மற்றும் பயனுள்ளதாகவும் இருக்கும் அழகு மற்றும் பயன்பாட்டின் இந்த இணைப்பாக்கத்தில் அவர் மிகவும் ஆர்வமாக உள்ளார். காய் ஆல்டோஃப் பெர்னார்ட் லீச்சுடன் பயணிக்கிறார் எனும் கண்காட்சியின் தலைப்பின் மூலம், எனது பணி தத்துவம் பெர்னார்ட் லீச் போன்றதாக இருக்க விரும்புகிறேன் என்று அவர் கூறுகிறார்.”

பெர்னார்ட் லீச் மற்றும் ஷோஜி ஹமாடா, ஒரு ஆங்கில இடைக்கால குடத்தை இரசிக்கிறார்கள், 1966. கிராஃப்டிவ்ஸ் ஸ்டடி சென்டரில் உள்ள பெர்னார்ட் லீச் காப்பகத்திலிருந்து, கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகம், பி.எச்.எல் / 12872.

ஹமாடா 1978 இல் இறந்தார், அடுத்த ஆண்டு 92 வயதில் லீச் மரணித்தார், ஆனால் கலாச்சாரங்களுக்கிடையில் ஒரு நீடித்த நட்பையும் புரிந்துணர்வையும் உருவாக்க இந்த இரண்டு குயவுக் கலைஞர்களும் வேலை செய்வதற்கான ஒரு வழியை எங்கு நிறுவினார்கள் என்பதைப் பார்க்க பார்வையாளர்கள் இன்னும் உலகம் முழுவதிலுமிருந்து செயின்ட் ஐவ்ஸ்’க்குப் பயணம் செய்கின்றனர். அதன் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், லீச் மட்பாண்டம் ஓராண்டு கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டிருந்தது, மற்றும் அவற்றில் பெரும்பாலானவை தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கவோ அல்லது மாற்றவோ கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் தற்போதைய இயக்குனர் லிப்பி பக்லி கூறுகையில், “லீச் மட்பாண்டம் எப்போதுமே மாறிவரும் பின்னணியில் மீள்திறத்தை வெளிப்படுத்தியுள்ளது, மேலும் காலத்தின் சோதனையினின்று தப்பிப்பிழைத்து வருகிறது, தொடர்ந்து சவால்களின் எதிரில் புதுமைகளைப் புகுத்தி சவால்களுக்கு பதிலளிக்கிறது. மேலும், எங்கள் நிறுவனர்களின் உறுதியான மனப்பான்மையில், நாங்கள் இவ்வாறுதான் தொடர்ந்து தடையின்றி செயல்படுகிறோம்.”

“நவீன மற்றும் உற்சாகமான வழிகளில், நமது மிகவும் நெருக்கடியான வருடத்திலும், இனி வரும் காலத்திலும், கற்றுக்கொள்வது, கௌரவிப்பது மற்றும் பெர்னார்ட் லீச் மற்றும் ஷோஜி ஹமாடாவின் மரபுகளைத் தொடர்வதில் இந்த முக்கியமான ஆண்டு முழுவதும் மக்கள் தொடர்ந்து எங்களுடன் சேர்ந்து கொண்டாடுவார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1458/

பல்கலைக்கழகம், கோவிட் முதல் அலை மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை அமலாக்குகின்றது


பல்கலைக்கழகம், கோவிட் முதல் அலை மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை அமலாக்குகின்றது 


8 அக்டோபர் 2021


சாந்த்தா குரூஸ், பொலீவியா – தற்போதய நிலையில் எல்லா கல்விக் கழகங்களும் மேற்கொண்டுள்ள சவால்களின் மத்தியில், பொலீயாவின் நூர் பல்கலைக் கழகம், தற்பொழுதுள்ள சூழ்நிலைகளை சமாளிக்க முயன்று கொண்டிருக்கும் அதே வேளையில் , கோவிட் முதல் அலையின் போது கற்றுக் கொண்ட அனுபவப் பாடங்களின் அடிப்படையில் விரைவாக மாறி வரும் சூழ்நிலைக்குத் தன்னை பொருத்தமாக்கிவருகின்றது.

பொலிவியாவில் உள்ள பஹாய் ஊக்கம் பெற்ற பல்கலைக்கழகம், கல்வி ஆண்டு தொடரும் போது ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆதரவளிக்க கோவிட்-19 ‘இன் முதல் அலைகளின் அனுபவங்களிலிருந்து பயன் பெறுகின்றது

தனது கடந்த கற்றல் அனுபவத்திலிருந்து பெற்ற இரண்டு அம்சங்கள் தற்போதைய நிலைக்கு பயனளிக்கும்வகையில் அமைந்துள்ளன. ஒன்று மாணவர்களைத் தனியாக விட்டுவிடாமல் அவர்களை அணுக்கமுடன் ஈடுபடவைப்பதாகும். மற்றொன்று தற்போதைய சூழ்நிலைக்கு ஒவ்வான தொழில்நுட்ப சாதனங்களை அடையாளம்கண்டு அவற்றை விவேகத்துடன் பயன்படுத்துவதாகும்.

“எல்லா பணியாளர்களும் குறிப்பாக மாணவர்களின் நலனை கருத்த்தில் கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, முயற்சித்து மாணவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது தேவைகளை உறுதிப் படுத்துவதும், இணைய வழிவழங்கப் படும் பாடங்களில் நேரடியாக கலந்து கொள்ள இயலாத மாணவர்களுக்கு ஒவ்வொரு இணையவழிகற்றல் பாடங்களை பதிவாக்கம் செய்வதுமாகும்” என பல்கலைக கழக முகவர் வில்லியம் ஷோயாய்கூறுகின்றார்.

38 ஆண்டுகளுக்கு முன்பு சாந்த்தா குரூஸில் நிறுவப்பட்ட நூர் பல்கலைக்கழகம் பொலிவியாவில் ஒரு குறிப்பிடத்தக்க கல்வி மையமாக வளர்ந்துள்ளது. பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியலில் பலவிதமான திட்டங்களை வழங்குகிறது மற்றும் அனைத்து துறைகளிலும் ஒரு முக்கிய அம்சமாக தார்மீக திறன்களின் வளர்ச்சியை வலியுறுத்துகிறது.

மாணவர்களின் தேவைகளை கவனிப்பதற்கு ஒரு சிறப்பு செயற்குழு அமைக்கப் பட்டுள்ளது. மாணவர்களிடம்அவர்களது சூழ்நிலையைப் பற்றி உரையாடி, அவர்களுக்கு தேவைப்பட்டால் தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்துதரப்படுகின்றது. சுகாதார ஆலோசனை மற்றும் மாணவர் ஆலோசனை பணிக்கான நிபுனத்துவ வள ஆதாரங்களும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

தொழில்நுட்ப சாதனங்களை விழிப்புணர்வுடன் பயன்படுத்தல்

இணையம் வழி கற்றல் முறை அமுலாக்கம் ஆரம்பமாகியதோடு, பல்கலைக் கழகம் விழிப்புணர்வோடு தனது இயக்கத்திற்கு தேவையான தொழில்நுட்ப சாதனங்களைத் தேர்வு செய்து  வருகின்றது. “எந்த ஒருதொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதும் செயல்முறைகளின்பாலும் உறவுமுறைகளின்பாலும் தாக்கத்தைஏற்படுத்தும். ஏனெனில் ஒவ்வொரு வகை தொழில்நுட்பமும் ஒரு குறிப்பிட்ட தொடர்புமுறைக்கு சாதகமாகஅமைவதோடு, நீண்ட கால விளைவுகளையும் உண்டாக்கலாம் என்பதை நாங்கள் உணர்கிறோம்,” என திருஷோயாய் கூறுகின்றார்.

மார்ச் மாதம் ஆரம்பித்த முதல் செமெஸ்டரின் போது சில ஆசிரியர்கள் பதிவாக்கம் செய்யப்பட்ட தங்களது உரைகளை மாணவர்களுக்கு வழங்கி, குழும செய்திகளின் வழி மாணவர்களுடன் உறவாடினர். இதன் வழி பாடங்களை எல்லோரும் பெற முடிந்த போதும், மாணவர்கள் ஒன்று சேர்ந்து கற்கும் கூட்டு அனுபவத்தை இழக்க வேண்டியதாயிற்று. சில மாணவர்கள் குழும காணொளி வழி கலந்துரையாடலின் போது காட்டிய ஈடுபாட்டைவிட இந்த அனுகு முறையின் வழி குறைந்த ஈடுபாடு காட்டினர்.

இணையவழி பாடமுறை மாற்றத்தினால், பல்கலைக்கழகம் பொருத்தமான தொழில்நுட்பங்களை தேர்வு செய்து வருகின்றது.

நூர் பல்கலைக் கழகத்தின் தொலைநோக்கு இலக்கின்படி, கல்வி என்பது வெறும் தகவல்களையும் அறிவையும் அளிப்பதல்ல. “பல்வகை மாணவர்களும்  ஆசிரியர்களும் இணைந்து உறவாடுவதில்தான் அதிகமான கற்றல்  செயல் முறை உண்டாகின்றது. பாட பொருளடக்கம் மட்டும் அத்தகைய கற்றல் செயல் முறையை ஏற்படுத்த இயலாது. தன்னிச்சையாக படிக்கும் மாணவர்கள் அதே பாட பொருளடக்கத்தை அறிந்து கொள்ள இயலும் ஆனால் சமூகத்திற்கு திறன்பட பங்களிக்க  தேவையான திறன்கள், மனப்போக்குகள். நன்நெறி மற்றும்ஆன்மீகப் பண்புகளை கற்பதற்கு பல்வகை மக்களோடு இணைந்து கற்பதே மேல்.

ஆகவே, மாறி வரும் சூழ்நிலைக்குப் பொருத்தமாக்கிக் கொள்வதில் முக்கிய அம்சம் முடிந்தளவு மாணவர்களுக்கும்ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை நிலைப்படுத்தவதே ஆகும்.”

கல்வியைப் பற்றி விரிவடையும் புரிதல்

திரு ஷோயாயின்  விளக்கத்தின்படி, கோவிட்  தொற்று நோய் பரவல் பல சவால்களை உருவாக்கியபோதும், நூர் பல்கலைக் கழகம் புதிய கல்வி அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கான வாய்புக்களைப் பெற்றுள்ளது. “கடந்தகால ஆற்றல் செயல்பாடு முறைமைகளையும் வழக்கமான வடிவமைப்புக்களையும் மீண்டும் செயல்படுத்தவில்லை, மாறாக முன்கவனத்துடன் கற்றல் அனுபவங்களை மேலும் சீராக்குவதற்கான வகைகளை, கடந்த காலங்களில் யூகித்திருக்க இயலாத வகையில் கையாண்டுள்ளோம்.” சில தொழில்நுட்ப சாதனங்களின் வழி மாணவர்களும் ஆசிரியர்களும் புதிய தொடர்பு முறைகளை அறிந்துகொண்டதால், இப்பொழுது கற்றலானது இடம்,-நேரம் ஆகிய வரம்பிற்குள் அமையத் தேவையில்லை. உதாரணமாக, கேள்விகள் எழுப்ப விரும்பும் பொழுது மாணவர்கள் குழுமச் செய்தி வழி தொடர்பு கொள்கின்றனர். ஆசிரியர்களும் மற்ற மாணவர்களும் கேள்விகளுக்குக் கருத்து தெறிவிக்கின்றனர் மற்றும் கூடுதலான வள ஆதாரங்களைப் பகிர்கின்றனர். முன்பு நேரடி தொடர்பு முறைக்கு மட்டுமே எண்ணம் கொண்டிருந்தோம் ஆனால் இன்று செயலாற்றல் இயங்கு முறை மேலும் பரினாமத்துவ வகையில் அமைந்துள்ளது. இன்று ஆசிரியரின் பங்கு ஓர் ஒருங்கிணைப்பாளராக அமைகின்றது. முன்பு போல் மாணவர்கள் முன் நின்று தகவல்  வழங்குபவர் என்ற நிலை இல்லை. கற்றல் செயல் முறையில் மாணவர்களின் மேலும் அதிகமான ஈடுபாட்டையும் பங்காற்றலையும் உண்டுபண்ண நாங்கள் சில விஷயங்களை மாற்று கருத்துக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டியதாயிற்று.

நூர் பல்கலைகக்கழகத்தின் தொலைநோக்கில், கல்வியானது தகவல் மற்றும் அறிவை வெளிப்படுத்துவதை விட மேம்பட்டதாகும். “நிறைய கற்றல் செயல்முறைகள் மாறுபட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையேயான தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு பாடத்தின் உள்ளடக்கம் மட்டுமே செய்யமுடியாத ஒன்றை வழங்குகிறது.”

மாணவர்களின் ஒரு புதிய தொலைநோக்கு

ரொமினா என்ற மாணவர் கற்றல் செயல் முறையில் ஏற்பட்டுள்ள மாற்று நிலையைப் பற்றி சிந்திக்கும் பொழுது அவர் கூறியதாவது: “ இந்த மறைமுக வகுப்புக்கள் சூழ்நிலை கஷ்டமாக இருப்பினும், பல்கலைக் கழகம் காட்டிவரும் கைவிடா முயற்சியிலும் அரவனைப்பிலும், அளிக்கப்பட்ட கருவிகளாலும் நாங்கள் உற்சாகம்அடைந்துள்ளோம். “

நூர் பல்கலைக் கழகத்தின் ஒரு தனிச் சிறப்பு அம்சம் என்னவெனில் அது சமூக சேவையை ஒருவரின் வாழ்வின்இன்றியமையா அங்கமாகக் கருதுகின்றது.

“நூர் பல்கலைக் கழகத்தில் நாங்கள் வளர்த்துக் கொள்ளும் சேவை உணர்வின் காரணமாக நாங்கள் இந்த நெருக்கடி காலத்தில் செயலற்று இருக்கவில்லை. மாறாக நாங்கள் எங்கள் சக நண்பர்களோடும் மற்றவர்களோடும்  கைகோர்த்து மற்றவர்களின் துன்பத்தை நீக்குவதற்கு உதவியாற்றி வந்துள்ளோம்.”

இந்த ஆண்டு நூர் பல்கலைக் கழகத்தில் ஏற்படும் மாற்றங்கள் அதனை ஒரு கல்விக் கூடமாக மட்டுமன்றி, தனதுசமூகத்தின் நிலையை மேம்படுத்துவதற்கான கூட்டு இயக்கமாகவும் அது உருவெடுக்கின்றது.

இந்த ஆண்டு நூர் பல்கலைக் கழகத்தில் ஏற்படும் மாற்றங்கள் அதனை ஒரு கல்விக் கூடமாக மட்டுமன்றி, தனதுசமூகத்தின் நிலையை மேம்படுத்துவதற்கான கூட்டு இயக்கமாகவும் அது உருவெடுக்கின்றது.

இறுதி ஆண்டு மாணவரான சஸ்ஸான் கூறுகிறார்: “இந்த ஆண்டு பல்கலைக் கழகம் ஒரு புத்துணர்வு பெற்றிருப்பதை நீங்கள் உணரலாம். அந்த உணர்வை நண்பர்களின் உரையாடல்களிலும், சக நாட்டுப்பிரஜைகளுக்கு உயரிய நோக்குடன் சேவையாற்ற வேண்டும் என்ற அவர்களது கடப்பாட்டிலும் காணலாம்.

“இந்த கோவிட் தொற்று நோய் பரவல் நூர் பல்கலைக் கழக மாணவர்களின் அடையாளத்தை வலுவடையச்செய்துள்ளது. அவர்கள் கல்வியின் ஒரு பகுதியாக, தங்களது சமூகத்தின் தேவைகளுக்கு கவனம் செலுத்தியும் ஒருவொருக்கொருவர் இந்த இக்கட்டான வேளையில அரவனைப்புக் காட்டியும் வருகின்றனர்.”

சாந்த்தா குரூஸில் முப்பத்தெட்டு  ஆண்டுகளுக்கு முன்பு ஸ்தாபிக்கப் பட்ட நூர் பல்கலைக் கழகம் பொலீவியாவின் ஒரு முக்கிய கல்வி நிலையமாக இப்பொழுது விளங்குகிறது. அப்பல்கலைக் கழகம் கலை, விஞ்ஞானத் துரைகளில் பல்வேறு செயல்திட்டங்களை வழங்கி வருவதோடு, நன்நெறி ஆற்றல்களை எல்லா கற்றல் துரைகளிலும் வலியுறுத்துகின்றது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1457/

தொற்றுநோய் பத்திரிக்கையியல் மீது விமர்சன பிரதிபலிப்பைத் தூண்டியுள்ளது


தொற்றுநோய் பத்திரிக்கையியல் மீது விமர்சன பிரதிபலிப்பைத் தூண்டியுள்ளது


8 அக்டோபர் 2021


அம்மான், ஜோர்டான் – இந்த ஆண்டின் தொடக்கத்தில், உலகெங்கும் தொற்றுநோய் பரவிக் கொண்டிருந்தபோது, செய்தி அறிக்கையில் அசாதாரணமான ஒன்று நிகழ்ந்தது–சமுதாய தன்மைமாற்றம் மற்றும் ஒருமைப்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய ஆழமான கருத்துக்கள் உலகளவில் தலைப்புச் செய்திகளாக இருந்தன. இப்போது முனைப்பில் குறைந்திருந்தாலும், செய்தி நிறுவனங்கள் தொடர்ந்து இத்தகைய கதைகளை வெளியிடுகின்றன; அவற்றில் பல நெருக்கடிக்கு முன்னர் பொருத்தமற்றவை அல்லது முக்கியமற்றவை என்று கருதப்பட்டிருந்தன.

ஊடக வல்லுநர்களிடையே அதிகரித்த ஆர்வத்திற்கு பதிலளிக்கும் வகையில், பல நாடுகளில் உள்ள பஹாய் சமூகங்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பிறருடன் சமுதாய நல்லிணக்கத்திற்கு ஊடகங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் மற்றும் மனிதகுலம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த ஆழமான உரையாடல்களை எவ்வாறு தூண்டலாம் என்பதை ஆராய்ந்து வருகின்றன.

இந்த துறையில் புதிய அணுகுமுறைகள் குறித்து ஊடக வல்லுநர்களிடையே அதிகரித்த ஆர்வத்திற்கு பதிலளிக்கும் வகையில், பல நாடுகளில் உள்ள பஹாய் சமூகங்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பிறருடன் சமுதாய நல்லிணக்கத்திற்கு ஊடகங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் மற்றும் மனிதகுலம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த ஆழமான உரையாடல்களை எவ்வாறு தூண்டலாம் என்பதை ஆராய்ந்து வருகின்றன.

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படம். ஜோர்டான் நாட்டு பஹாய்கள் ஊடகவியலாளர்களுடன் ஊடகங்கள் எவ்வாறு சமூகத்திற்கு நம்பிக்கைக்கான மூலாதாரமாக இருக்க முடியும் என்பது குறித்து வட்டமேசை விவாதங்களை நடத்தி வருகின்றன.

ஜோர்டான் நாட்டு பஹாய்கள் ஊடகவியலாளர்களுடன் ஊடகங்கள் எவ்வாறு சமூகத்திற்கு நம்பிக்கைக்கான மூலாதாரமாக இருக்க முடியும் என்பது குறித்து வட்டமேசை விவாதங்களை நடத்தி வருகின்றன. “ஊடகத்தை சமுதாயத்தின் ஓர் இன்றியமையா அம்சமாக பஹாய் போதனைகள் காண்கின்றன. அவை பல்வேறு மக்களின் அனுபவ நெடுக்கத்தைப் பிரதிபலிக்கும் உலகிற்கான ஒரு கண்ணாடியின் ஆற்றலைக் கொண்டுள்ளன,” என்கிறார், அந்த நாட்டு பஹாய் சமூகத்தின் வெளிவிவகார அலுவலகத்தின்  தஹானி ரூஹி.

“கடந்த சில மாதங்களில் சில நேரத்தில், உலகத்தைப் பற்றிய ஒரு முழுமையான காட்சி செய்தி அறிக்கைகளில் பிரதிபலிக்கப்பட்டது: பரபரப்பான கதைகள் மட்டுமின்றி, ஒவ்வொரு சமூகத்திலும் நிலவும் ஆக்கபூர்வமான செயல்முறைகளும். நம்பிக்கையைத் தூண்டும் ஊடகத்தின் சக்தி இந்த நேரத்தில் குறிப்பாகத் தெரியவருகின்றது. பெரிய மற்றும் சிறிய– நேர்மறையான முன்னேற்றங்களுக்கு உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது மக்களின் மேன்மையையும் தங்களின் சொந்தத் தேவைகளைவிட சக குடிமக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கும் திறனைக் காட்டுகிறது.”

பத்திரிக்கையாளர்களுடன் ஜோர்டான் பஹாய்களின் கலந்துரையாடல்

வட்டமேசை கூட்டங்களில் பங்கேற்ற அல்-காஃட் செய்தித்தாளின் கஃடா அல்-ஷேக் கூறுகிறார்: “இந்த கலந்துரையாடல் தளங்கள் முன்னேற்றம் தொடர்பான முக்கியமான கருத்துக்களை நன்கு புரிந்துகொள்வதற்கும், எங்கள் பணிக்கான அவற்றின் தாக்கங்கள் குறித்து ஆழமாக சிந்திக்கவும் அனுமதிக்கின்றன. சமுதாய மற்றும் பொருளாதார ஒருமைப்பாடு குறித்த பிரச்சினைகள் மற்றும் ஊடகங்கள் மக்களின் முன்னுரிமைகள் உணர்வுக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது பற்றி நாங்கள் ஒன்றாக கலந்தாலோசிக்கும்போது, பத்திரிகையாளர்கள் எனும் முறையில் எங்கள் நோக்கம் குறித்த எங்களின் விழிப்புணர்வு பலப்படுத்தப்படுகிறது. ”

ஜோர்டானில் வட்டமேஜை பங்கேற்பாளர்கள் வணிக நலன்களால் வடிவமைக்கப்பட்ட ஊடகத் துறையில் கட்டமைப்புக் காரணிகளின் தாக்கத்தையும் கவனித்து வருகின்றனர். “ஊடகங்களைப் பயன்படுத்துவோர் தங்களைப் போட்டியாளர்களாகப் பார்க்கக்கூடாது, மாறாக ஒத்துழைப்பாளர்களாகப் பார்க்க வேண்டும். எந்தவொரு ஊடகத்தையும் நாங்கள் தயாரிக்கும் போதும் நாங்கள் உண்மையைத் தேடுகின்றோம், ”என்று ஒரு விவாதத்தின் போது கிழக்கு மற்றும் மேற்கு உரையாடல் மற்றும் நிலையான மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் மஹ்மூத் ஹிஷ்மே கூறினார்.

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படம். முதல் வரைவு மற்றும் ஊடக மாற்றத்திற்கான மையத்துடன் இணைந்து ஆஸ்திரேலியாவின் பஹாய் சமூகம் நடத்திய கட்டமைக்கப்பட்ட கலந்துரையாடல்கள், ஆஸ்திரேலிய ஊடக நிலப்பரப்பை மறுபரிசீலனை செய்ய ஊடக பயிற்சியாளர்களை ஒன்றுகூட்டுகின்றன.

உலகின் மறுபக்கத்தில், நாட்டில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமான,  சமூக ஒற்றுமைக்கு எவ்வாறு உகந்திருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்திட, ஆஸ்திரேலிய பஹாய் சமூகம் ஊடகவியலாளர்களையும் மற்றவர்களையும் ஒன்றுகூட்டி வருகின்றது. அத்தகைய ஒரு முயற்சியி தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட கலந்துரையாடல்களை உள்ளடக்கியிருந்தது. அதில் முதல் வரைவு மற்றும் ஊடக மாற்றத்திற்கான மையத்துடன் இணைந்து  ஆஸ்திரேலிய ஊடக நிலப்பரப்பை மறுவடிவமைக்க ஊடக பயிற்சியாளர்கள் ஒன்றுதிரட்டப்பட்டனர்.

“பஹாய் கலந்தாலோசனை கோட்பாட்டை பயன்படுத்துவதன் மூலம், மாறுபட்ட அனுபவங்களை மரியாதையுடனும் ஊக்கமளிக்கும் மற்றும் ஆற்றல்மிக்க சூழலில் பரிமாறிக்கொள்ள எங்களுக்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது” என்று வெளிவிவகார அலுவலகத்தின் வீனஸ் கஃலேசி கூறுகிறார். “பெரும் நேரப்பற்றாக்குறையுடன், பலக்கியமான முடிவுகள் எடுக்கப்படும், பெரும்பாலும் வேகம் நிறைந்து ஒரு சூழலில், ஊடக பயிற்சியாளர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளுக்கு வழிகாட்டும் கொள்கைகளையும் மதிப்புகளையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றி ஓய்வாக  சிந்திப்பதற்கான வாய்ப்பிற்கு மதிப்புணர்வளிக்கின்றனர்.”

 சமூக ஒற்றுமைக்கு எவ்வாறு உகந்திருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்திட, பத்திரிக்கையாளர்களையும், ஊடக பயிற்சியாளர்களையும் ஆஸ்திரேலிய பஹாய் சமூகம் ஒன்றுகூட்டி வருகின்றது.

ஒரு கூட்டத்தில், ‘நியூஸ் ஒம்பூட்ஸ்மேன் மற்றும் ஸ்டாண்டர்ட்ஸ் எடிட்டர்களின் அமைப்பின்’ நிர்வாக இயக்குனர் எலன் சன்டர்லேண்ட் கூறுகையில், “பிளவுகளை முன்னிலைப்படுத்துவதற்கும் மேற்பட்டு ஊடகங்கள் என்ன செய்ய முடியும் என்பது பற்றி இந்த நேரத்தில் நிறைய பேர் பேசுகிறார்கள், ஆனால், நம்மை ஒன்றுபடுத்தும் விஷயங்களைப் பற்றி பேசலாம். இது பாரம்பரியமாக அம்பலப்படுத்த பிரச்சினைகளைக் காணுகின்ற ஒரு மோதல் மாதிரியில் கட்டமைக்கப்பட்டுள்ள பத்திரிகையியலுக்கு சவாலானது.  கடினமான கேள்விகளைக் கேட்பதற்கு பத்திரிகைக்கு ஒரு அடிப்படை தேவை இருப்பதை அங்கீகரிக்கும் அதே வேளையில் ஆக்கபூர்வமான வழிகளைக் கண்டுபிடிப்பது, ஆராய்வதற்கான மிகவும் சுவாரஸ்யமான விடயமாகும்.”

ஆஸ்திரேலியாவில் மிகச் சமீபத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்கள், தற்போதைய சுகாதார நெருக்கடி “மனிதகுலத்தின் சிறந்த நன்மைக்காக” செயல்படுவதற்கான ஊடகங்களின் பொறுப்பை முன்னெப்போதையும் விட அதிகமாகக் காட்டியுள்ளது என்று தெரிவித்தனர். யதார்த்தங்களைப் பற்றி தெரிவிப்பதில் துல்லியம் தேவைப்படுவதைப் போலவே, பங்கேற்பாளர்கள் நல்லிணக்கத்திற்கு உகந்த விழுமியங்களை வெளிப்படுத்த கதைகளின் அவசியத்தைக் குறிப்பிட்டுள்ளனர். தொற்றுநோயின் போது சமூகத்தால் தூண்டப்பட்ட பிரதிசெயல் மற்றும் மீட்சித்திறம் பற்றிய கதைகளை அறிவிக்க நாட்டின் செய்தி நிறுவனங்களின் பெரும் முயற்சிகள் இதற்கான எடுத்துக்காட்டுகளை உள்ளடக்கியுள்ளன.

ஸ்பெய்ன் நாட்டில், பஹாய் சமூகம், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற சமூக நடிகர்களுடன் நெருக்கடிகளுக்கு விடையிறுக்கும் வகையில் பிரிவினை மற்றும் துருவமுனைப்பைக் கடக்க வேண்டியதன் அவசியம் குறித்து உரையாடல்களை நடத்தி வருகிறது.

இதற்கிடையில், ஸ்பெய்ன் நாட்டில், பஹாய் சமூகம், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற சமூக நடிகர்களுடன் நெருக்கடிகளுக்கு விடையிறுக்கும் வகையில் பிரிவினை மற்றும் துருவமுனைப்பைக் கடக்க வேண்டியதன் அவசியம் குறித்து உரையாடல்களை நடத்தி வருகிறது.

“தொற்றுநோயின் ஆரம்பத்தில், புதிய தலைப்புகள் பொதுமக்களின் நனவுநிலைக்குள் நுழைந்தன” என்று நாட்டின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் செர்ஜியோ காஃர்ஷியா கூறுகிறார். “அதிக சர்வதேச ஒத்துழைப்பின் தேவை பற்றிய விவாதங்கள்; பொருளாதார மாதிரிகள் மிகவும் நிலையான, உள்ளடக்கிய மற்றும் மீட்சித்திறம் மிக்கதாக தன்மைமாற வேண்டிய அவசியம்; மற்றும் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் பல ஆழமான கருத்துக்களின் மீது ஊடகங்கள் கவனம் செலுத்தின.

“ஊடகச் செய்திப்பரப்பின் பழைய வடிவங்கள் சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் தோன்றினாலும், இந்த மாற்றம் ஊடகங்கள் எவ்வாறு மனித சிந்தனையின் தொடுவானங்களைத் திறக்க முடியும் என்பதையும், பகிரப்பட்ட உலகில் நமது பொதுவான எதிர்காலம் குறித்த ஆழமான விவாதத்தை பேணுவதையும் காட்டுகிறது. சமுதாயத்தின் பல்வேறு கூறுகளுக்கிடையிலான உறவுகளின் தொனியை அமைப்பதற்கு ஊடகங்கள் பங்களிக்கின்றன. மேலும், இது நாம் ஓருலகம் என்ற உணர்வையும் நமது பொதுவான சவால்களை எதிர்கொள்ள அவ்வாறு ஒரே மக்களாக பணியாற்ற வேண்டும் எனும் உணர்வை அது உருவாக்கிட முடியும்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1456/