பல்கலைக்கழகம், கோவிட் முதல் அலை மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை அமலாக்குகின்றது


பல்கலைக்கழகம், கோவிட் முதல் அலை மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை அமலாக்குகின்றது 


8 அக்டோபர் 2021


சாந்த்தா குரூஸ், பொலீவியா – தற்போதய நிலையில் எல்லா கல்விக் கழகங்களும் மேற்கொண்டுள்ள சவால்களின் மத்தியில், பொலீயாவின் நூர் பல்கலைக் கழகம், தற்பொழுதுள்ள சூழ்நிலைகளை சமாளிக்க முயன்று கொண்டிருக்கும் அதே வேளையில் , கோவிட் முதல் அலையின் போது கற்றுக் கொண்ட அனுபவப் பாடங்களின் அடிப்படையில் விரைவாக மாறி வரும் சூழ்நிலைக்குத் தன்னை பொருத்தமாக்கிவருகின்றது.

பொலிவியாவில் உள்ள பஹாய் ஊக்கம் பெற்ற பல்கலைக்கழகம், கல்வி ஆண்டு தொடரும் போது ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆதரவளிக்க கோவிட்-19 ‘இன் முதல் அலைகளின் அனுபவங்களிலிருந்து பயன் பெறுகின்றது

தனது கடந்த கற்றல் அனுபவத்திலிருந்து பெற்ற இரண்டு அம்சங்கள் தற்போதைய நிலைக்கு பயனளிக்கும்வகையில் அமைந்துள்ளன. ஒன்று மாணவர்களைத் தனியாக விட்டுவிடாமல் அவர்களை அணுக்கமுடன் ஈடுபடவைப்பதாகும். மற்றொன்று தற்போதைய சூழ்நிலைக்கு ஒவ்வான தொழில்நுட்ப சாதனங்களை அடையாளம்கண்டு அவற்றை விவேகத்துடன் பயன்படுத்துவதாகும்.

“எல்லா பணியாளர்களும் குறிப்பாக மாணவர்களின் நலனை கருத்த்தில் கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, முயற்சித்து மாணவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது தேவைகளை உறுதிப் படுத்துவதும், இணைய வழிவழங்கப் படும் பாடங்களில் நேரடியாக கலந்து கொள்ள இயலாத மாணவர்களுக்கு ஒவ்வொரு இணையவழிகற்றல் பாடங்களை பதிவாக்கம் செய்வதுமாகும்” என பல்கலைக கழக முகவர் வில்லியம் ஷோயாய்கூறுகின்றார்.

38 ஆண்டுகளுக்கு முன்பு சாந்த்தா குரூஸில் நிறுவப்பட்ட நூர் பல்கலைக்கழகம் பொலிவியாவில் ஒரு குறிப்பிடத்தக்க கல்வி மையமாக வளர்ந்துள்ளது. பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியலில் பலவிதமான திட்டங்களை வழங்குகிறது மற்றும் அனைத்து துறைகளிலும் ஒரு முக்கிய அம்சமாக தார்மீக திறன்களின் வளர்ச்சியை வலியுறுத்துகிறது.

மாணவர்களின் தேவைகளை கவனிப்பதற்கு ஒரு சிறப்பு செயற்குழு அமைக்கப் பட்டுள்ளது. மாணவர்களிடம்அவர்களது சூழ்நிலையைப் பற்றி உரையாடி, அவர்களுக்கு தேவைப்பட்டால் தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்துதரப்படுகின்றது. சுகாதார ஆலோசனை மற்றும் மாணவர் ஆலோசனை பணிக்கான நிபுனத்துவ வள ஆதாரங்களும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

தொழில்நுட்ப சாதனங்களை விழிப்புணர்வுடன் பயன்படுத்தல்

இணையம் வழி கற்றல் முறை அமுலாக்கம் ஆரம்பமாகியதோடு, பல்கலைக் கழகம் விழிப்புணர்வோடு தனது இயக்கத்திற்கு தேவையான தொழில்நுட்ப சாதனங்களைத் தேர்வு செய்து  வருகின்றது. “எந்த ஒருதொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதும் செயல்முறைகளின்பாலும் உறவுமுறைகளின்பாலும் தாக்கத்தைஏற்படுத்தும். ஏனெனில் ஒவ்வொரு வகை தொழில்நுட்பமும் ஒரு குறிப்பிட்ட தொடர்புமுறைக்கு சாதகமாகஅமைவதோடு, நீண்ட கால விளைவுகளையும் உண்டாக்கலாம் என்பதை நாங்கள் உணர்கிறோம்,” என திருஷோயாய் கூறுகின்றார்.

மார்ச் மாதம் ஆரம்பித்த முதல் செமெஸ்டரின் போது சில ஆசிரியர்கள் பதிவாக்கம் செய்யப்பட்ட தங்களது உரைகளை மாணவர்களுக்கு வழங்கி, குழும செய்திகளின் வழி மாணவர்களுடன் உறவாடினர். இதன் வழி பாடங்களை எல்லோரும் பெற முடிந்த போதும், மாணவர்கள் ஒன்று சேர்ந்து கற்கும் கூட்டு அனுபவத்தை இழக்க வேண்டியதாயிற்று. சில மாணவர்கள் குழும காணொளி வழி கலந்துரையாடலின் போது காட்டிய ஈடுபாட்டைவிட இந்த அனுகு முறையின் வழி குறைந்த ஈடுபாடு காட்டினர்.

இணையவழி பாடமுறை மாற்றத்தினால், பல்கலைக்கழகம் பொருத்தமான தொழில்நுட்பங்களை தேர்வு செய்து வருகின்றது.

நூர் பல்கலைக் கழகத்தின் தொலைநோக்கு இலக்கின்படி, கல்வி என்பது வெறும் தகவல்களையும் அறிவையும் அளிப்பதல்ல. “பல்வகை மாணவர்களும்  ஆசிரியர்களும் இணைந்து உறவாடுவதில்தான் அதிகமான கற்றல்  செயல் முறை உண்டாகின்றது. பாட பொருளடக்கம் மட்டும் அத்தகைய கற்றல் செயல் முறையை ஏற்படுத்த இயலாது. தன்னிச்சையாக படிக்கும் மாணவர்கள் அதே பாட பொருளடக்கத்தை அறிந்து கொள்ள இயலும் ஆனால் சமூகத்திற்கு திறன்பட பங்களிக்க  தேவையான திறன்கள், மனப்போக்குகள். நன்நெறி மற்றும்ஆன்மீகப் பண்புகளை கற்பதற்கு பல்வகை மக்களோடு இணைந்து கற்பதே மேல்.

ஆகவே, மாறி வரும் சூழ்நிலைக்குப் பொருத்தமாக்கிக் கொள்வதில் முக்கிய அம்சம் முடிந்தளவு மாணவர்களுக்கும்ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை நிலைப்படுத்தவதே ஆகும்.”

கல்வியைப் பற்றி விரிவடையும் புரிதல்

திரு ஷோயாயின்  விளக்கத்தின்படி, கோவிட்  தொற்று நோய் பரவல் பல சவால்களை உருவாக்கியபோதும், நூர் பல்கலைக் கழகம் புதிய கல்வி அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கான வாய்புக்களைப் பெற்றுள்ளது. “கடந்தகால ஆற்றல் செயல்பாடு முறைமைகளையும் வழக்கமான வடிவமைப்புக்களையும் மீண்டும் செயல்படுத்தவில்லை, மாறாக முன்கவனத்துடன் கற்றல் அனுபவங்களை மேலும் சீராக்குவதற்கான வகைகளை, கடந்த காலங்களில் யூகித்திருக்க இயலாத வகையில் கையாண்டுள்ளோம்.” சில தொழில்நுட்ப சாதனங்களின் வழி மாணவர்களும் ஆசிரியர்களும் புதிய தொடர்பு முறைகளை அறிந்துகொண்டதால், இப்பொழுது கற்றலானது இடம்,-நேரம் ஆகிய வரம்பிற்குள் அமையத் தேவையில்லை. உதாரணமாக, கேள்விகள் எழுப்ப விரும்பும் பொழுது மாணவர்கள் குழுமச் செய்தி வழி தொடர்பு கொள்கின்றனர். ஆசிரியர்களும் மற்ற மாணவர்களும் கேள்விகளுக்குக் கருத்து தெறிவிக்கின்றனர் மற்றும் கூடுதலான வள ஆதாரங்களைப் பகிர்கின்றனர். முன்பு நேரடி தொடர்பு முறைக்கு மட்டுமே எண்ணம் கொண்டிருந்தோம் ஆனால் இன்று செயலாற்றல் இயங்கு முறை மேலும் பரினாமத்துவ வகையில் அமைந்துள்ளது. இன்று ஆசிரியரின் பங்கு ஓர் ஒருங்கிணைப்பாளராக அமைகின்றது. முன்பு போல் மாணவர்கள் முன் நின்று தகவல்  வழங்குபவர் என்ற நிலை இல்லை. கற்றல் செயல் முறையில் மாணவர்களின் மேலும் அதிகமான ஈடுபாட்டையும் பங்காற்றலையும் உண்டுபண்ண நாங்கள் சில விஷயங்களை மாற்று கருத்துக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டியதாயிற்று.

நூர் பல்கலைகக்கழகத்தின் தொலைநோக்கில், கல்வியானது தகவல் மற்றும் அறிவை வெளிப்படுத்துவதை விட மேம்பட்டதாகும். “நிறைய கற்றல் செயல்முறைகள் மாறுபட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையேயான தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு பாடத்தின் உள்ளடக்கம் மட்டுமே செய்யமுடியாத ஒன்றை வழங்குகிறது.”

மாணவர்களின் ஒரு புதிய தொலைநோக்கு

ரொமினா என்ற மாணவர் கற்றல் செயல் முறையில் ஏற்பட்டுள்ள மாற்று நிலையைப் பற்றி சிந்திக்கும் பொழுது அவர் கூறியதாவது: “ இந்த மறைமுக வகுப்புக்கள் சூழ்நிலை கஷ்டமாக இருப்பினும், பல்கலைக் கழகம் காட்டிவரும் கைவிடா முயற்சியிலும் அரவனைப்பிலும், அளிக்கப்பட்ட கருவிகளாலும் நாங்கள் உற்சாகம்அடைந்துள்ளோம். “

நூர் பல்கலைக் கழகத்தின் ஒரு தனிச் சிறப்பு அம்சம் என்னவெனில் அது சமூக சேவையை ஒருவரின் வாழ்வின்இன்றியமையா அங்கமாகக் கருதுகின்றது.

“நூர் பல்கலைக் கழகத்தில் நாங்கள் வளர்த்துக் கொள்ளும் சேவை உணர்வின் காரணமாக நாங்கள் இந்த நெருக்கடி காலத்தில் செயலற்று இருக்கவில்லை. மாறாக நாங்கள் எங்கள் சக நண்பர்களோடும் மற்றவர்களோடும்  கைகோர்த்து மற்றவர்களின் துன்பத்தை நீக்குவதற்கு உதவியாற்றி வந்துள்ளோம்.”

இந்த ஆண்டு நூர் பல்கலைக் கழகத்தில் ஏற்படும் மாற்றங்கள் அதனை ஒரு கல்விக் கூடமாக மட்டுமன்றி, தனதுசமூகத்தின் நிலையை மேம்படுத்துவதற்கான கூட்டு இயக்கமாகவும் அது உருவெடுக்கின்றது.

இந்த ஆண்டு நூர் பல்கலைக் கழகத்தில் ஏற்படும் மாற்றங்கள் அதனை ஒரு கல்விக் கூடமாக மட்டுமன்றி, தனதுசமூகத்தின் நிலையை மேம்படுத்துவதற்கான கூட்டு இயக்கமாகவும் அது உருவெடுக்கின்றது.

இறுதி ஆண்டு மாணவரான சஸ்ஸான் கூறுகிறார்: “இந்த ஆண்டு பல்கலைக் கழகம் ஒரு புத்துணர்வு பெற்றிருப்பதை நீங்கள் உணரலாம். அந்த உணர்வை நண்பர்களின் உரையாடல்களிலும், சக நாட்டுப்பிரஜைகளுக்கு உயரிய நோக்குடன் சேவையாற்ற வேண்டும் என்ற அவர்களது கடப்பாட்டிலும் காணலாம்.

“இந்த கோவிட் தொற்று நோய் பரவல் நூர் பல்கலைக் கழக மாணவர்களின் அடையாளத்தை வலுவடையச்செய்துள்ளது. அவர்கள் கல்வியின் ஒரு பகுதியாக, தங்களது சமூகத்தின் தேவைகளுக்கு கவனம் செலுத்தியும் ஒருவொருக்கொருவர் இந்த இக்கட்டான வேளையில அரவனைப்புக் காட்டியும் வருகின்றனர்.”

சாந்த்தா குரூஸில் முப்பத்தெட்டு  ஆண்டுகளுக்கு முன்பு ஸ்தாபிக்கப் பட்ட நூர் பல்கலைக் கழகம் பொலீவியாவின் ஒரு முக்கிய கல்வி நிலையமாக இப்பொழுது விளங்குகிறது. அப்பல்கலைக் கழகம் கலை, விஞ்ஞானத் துரைகளில் பல்வேறு செயல்திட்டங்களை வழங்கி வருவதோடு, நன்நெறி ஆற்றல்களை எல்லா கற்றல் துரைகளிலும் வலியுறுத்துகின்றது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1457/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: