பஹாய் வானொலி: வானொலி நிலையங்கள் பங்கேற்பை வரவேற்று, தொற்றுநோயின் போது மக்களை இணைக்கின்றன


பஹாய் வானொலி: வானொலி நிலையங்கள் பங்கேற்பை வரவேற்று, தொற்றுநோயின் போது மக்களை இணைக்கின்றன


8 அக்டோபர் 2021


தலாவேரா, பிலிப்பைன்ஸ் – தொற்றுநோயின் போது, பல நாடுகளில் பஹாய் சமூகங்களால் நடத்தப்படும் வானொலி நிலையங்கள், எல்லாவித பரஸ்பர செயல்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட்ட போது, முக்கிய செய்திகளுக்கான மூலாதாரங்களாகவும் சமூக வாழ்வின் அறிவிப்பு மையங்களாகவும் தாங்கள் செயல்படுவதைக் கண்டனர். அது ஒரு புதுப்பிக்கப்பட்ட நோக்கமாக இருந்தது.

பஹாய் சமூகங்களால் இயக்கப்படும் பல வானொலி நிலையங்கள், தொற்றுநோயின் போது முக்கிய செய்திகளுக்கான மூலாதாரங்களாகவும் சமூக வாழ்வின் அறிவிப்பு மையங்களாகவும் தாங்கள் செயல்படுவதைக் கண்டன

பிலிப்பைன்ஸின் மத்திய லூசோன் மண்டலத்தில் உள்ள ரேடியோ பஹாய், சுகாதார நெருக்கடியின் போது பிரார்த்தனைக்கு அர்ப்பணிக்கப்பட்ட பங்கேற்பு நிகழ்ச்சிகள், மண்டலத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இசையை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் ஒற்றுமை உணர்வை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளது. அதன் ஒளிபரப்பு ஆரம் (radius) சென்றடைய கடினமாக இருக்கும், 90 கிலோமீட்டர் தொலைதூர பகுதிகளுக்கு முக்கியமான செய்திகளை அனுப்ப நிலையத்தை அனுமதித்துள்ளது.

ரேடியோ பஹாயின் இயக்குனர் கிறிஸ்டின் புளோரஸ் கூறுகிறார், “குடும்பங்கள் ஒன்றாக இருப்பதில் அதிக நேரம் செலவிடுகின்றன, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பால் வகைப்படுத்தப்படும் வீட்டுச் சூழலுக்குப் பங்களிக்க நாங்கள் விரும்புகிறோம். உதாரணமாக, பிரார்த்தனைகள் மற்றும் பாடல்கள் பகலில் ஒவ்வொரு மணி நேரமும் ஒளிபரப்பப்படுகின்றன, அவற்றுள் பல நேயர்களால் பங்களிக்கப்படுகின்றன. தவறாமல் பிரார்த்திப்பது முன்னேற்றத்திற்கும் உத்வேகத்திற்கும் முக்கியமாகும். நாம் ஆன்மீக ஜீவர்கள், நம் இல்லங்களில்  தம் படைப்பாளருடன் தொடர்புறுதல் இயல்பானதே. ”

லூஸோன் மண்டலத்தில் உள்ள ரேடியோ பஹாய், சுகாதார நெருக்கடியின் போது 90 கிமீ ஆரம் கொண்ட இடங்களுக்கு பிரார்த்தனைக்கு அர்ப்பணிக்கப்பட்ட பங்கேற்பு நிகழ்ச்சிகள், மண்டலத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இசையை மேம்படுத்துதல் ஆகியவற்றை ஒலிபரப்புவதன் மூலம் ஒற்றுமை உணர்வை உருவாக்குவதற்கு குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளது.

நாட்டின் கல்வித் துறையுடன் ஒத்துழைப்பதன் மூலம் மண்டலத்தில் கல்வியல் தேவைகளுக்கும் இந்த நிலையம் உதவுகிறது. பொது சுகாதார நடவடிக்கைகள் காரணமாக தங்கள் பள்ளிகள் மூடப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளை ரேடியோ பஹாயின் கல்வி உபகரணங்களின் வழக்கமான ஒளிபரப்பு சென்றடைகிறுது. இந்த கல்வி ஒளிபரப்புகள் உண்மை மற்றும் தாராள மனப்பான்மை, பொறுமை மற்றும் இரக்கம் போன்ற கருப்பொருள்கள் பற்றிய பஹாய் போதனைகளின் உற்சாகம் பெற்ற பாடல்கள் மற்றும் கதைகளுடன் நிரப்பம் செய்யப்படுகின்றன.

“சமூக விலகல் காலத்தில் மக்களுள் உரிமை உணர்வு மற்றும் தொடர்பை வளர்ப்பதில் வானொலி ஒரு முக்கிய கருவியாக இருந்துள்ளது” என்று திருமதி ஃபுளோரஸ் கூறுகிறார். “இந்த நெருக்கடியை எதிர்கொள்ள ஒரு கூட்டு ஆற்றல் தேவை. மக்கள் தங்கள் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிரல்களை தங்கள் உள்ளூர் மொழியில் கேட்கும்போதும் உள்ளடக்கத்திற்கு அவர்கள் பங்களிக்கும் போதும் ஒரு பகிரப்பட்ட அடையாளம் பலப்படுத்தப்படுகிறது. பொதுவாக, மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது தகவல்களும் யோசனைகளும் பரிமாற்றப்படுகின்றன, ஆனால் இப்போது வானொலி நிலையம் எங்கள் மண்டலத்தில் இந்த தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது.”

பொது சுகாதார நடவடிக்கைகள் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளைச் சென்றடையும் கல்வித் திட்டங்களின் ஒளிபரப்பில் பொதுப் பள்ளிகளின் மாவட்ட மேற்பார்வையாளர்.

பசிபிக் பெருங்கடலில், பனாமாவில் உள்ள பஹாய் உத்வேக வானொலி நிலையம் ஒன்று, தொற்றுநோயின் போது ஊக்கமளிக்கும் சேவைச் செயல்களிலும் நடைமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்தியுள்ளது. நடமாட்டம் மீதான கட்டுப்பாடுகளின் சூழலில் பொது சேவைகளை அணுகப் போராடும் கிராமப்புற வாசிகளுக்கு ஆதரவை வழங்க வானொலி நேயர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஃபேபியோ ரோட்ரிகுவெஸ் கூறுகிறார், “எங்கள் நிகழ்ச்சிகள் சேவையை வலியுறுத்துகின்றன, மேலும் சமூகத்திற்கு பங்களிக்க அனைத்து மக்களுக்கும் உரிமை உண்டு என்ற கருத்தையும் வலியுறுத்துகின்றன. நிகழ்ச்சிகள் தயாரிப்பிற்கு உதவக்கூடிய இப்பகுதியைச் சேர்ந்த, அவர்களின் பொது அனுபவங்களின் மெய்ம்மையையும் அவர்களின் நம்பிக்கையையும் சக சமூக உறுப்பினர்களின் இதயங்களைச் சென்றடையும் வகையில் தெரிவிக்க முடிந்த மக்களை, இந்த நிலையம் வரவேற்கிறது. இது தங்கள் சமூகங்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் தீவிர பங்கேற்பாளர்களாக தங்களைக் காண அதிகமான மக்களை ஊக்குவிக்கிறது.

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படம். சிலி மாபூசே மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது பஹாய் வானொலியின் கவனம் செலுத்தும் ஒரு பகுதியாகும்.

லத்தீன் அமெரிக்காவின் பிற இடங்களில், சிலியின் லாப்ரான்சாவை தளமாகக் கொண்ட சிலி பஹாய் வானொலி, சுற்றியுள்ள பூர்வீக சமூகங்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளை உறுதிப்படுத்துவதற்காக அவர்களுடன் நெருக்கமான உரையாடலில் ஈடுபட்டுள்ளது. பகுதி மாபுசே மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது இந்த நிலையத்தின் மற்றொரு அக்கறையாகும்.

“மாபூச்சே மக்களின் உன்னதமான அம்சங்களை மேம்படுத்துவதில் வானொலி முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்த நெருக்கடியில் நம்பிக்கை மற்றும் ஆறுதலை அது அளிக்கிறது” என்று நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் கால்ஃபுகுவெரோ கூறுகிறார்.

“அதிகாலை பிரார்த்தனை ஓர் அடிப்படை பாரம்பரியம், மற்றும் மாபுச்சே பிரார்த்தனைகள் பெரும்பாலும் நிலையத்தின் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் சேர்க்கப்படுகின்றன, மற்றும் அவை சில நேரங்களில் சாண்டியாகோவில் உள்ள பஹாய் கோவிலில் இருந்து ஒளிபரப்பப்படுகின்றன.”

சில்லி பஹாய் வானொலியில் மாப்புச்சே மொழி பிரார்த்தனைகள் வழக்கமான ஒலிபரப்பாகும்

சிலி மற்றும் பனாமாவில் உள்ள வானொலி நிலையங்களுடன் ஒத்துழைக்கும் கேட்டி ஸ்கோகின் சமீபத்திய அனுபவங்களைப் பற்றி பிரதிபலிக்கிறார்: “இந்த பஹாய் வானொலி நிலையங்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. அவை உள்ளூர் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளன. இந்த முயற்சிகள் ஒருதலைப்பட்ச ஒளிபரப்பு சேவை மட்டுமல்ல, அவை சேவை செய்யும் சமூகங்களில் அவை அர்த்தமுள்ள இருப்பைக் கொண்டுள்ளன.

“ஊடகங்களில், எதையாவது உருவாக்கும் நபர்கள் உள்ளனர் மற்றும்–பொதுவாக பெறுநர்கள் போலவே–அவ்வுள்ளடக்கத்தைப் பயன்படுத்துபவர்களும் உள்ளனர். வேறு ஒன்றைப் பற்றி அறிய இப்பொழுது முயல்கிறோம். இந்த வானொலி நிலையங்கள் சமுதாய சேவைக்கான திறனாற்றலை உயர்த்துவதற்கும் சமூகம் முழுமைக்கும் குரல் கொடுப்பதற்கும் உதவுகின்றன.”

சுகாதார நெருக்கடியின் போது, பிலிப்பைன்ஸில் உள்ள ரேடியோ பஹாய், பிரார்த்தனைக்கு அர்ப்பணிக்கப்பட்ட பங்கேற்பு திட்டங்கள், மண்டலத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உத்வேகமூட்டும் இசை ஆகியவற்றின் மூலம் ஒன்றிணைந்த உணர்வை உருவாக்கி வருகிறது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1462/