மாணவர் அனைவருக்கும் சேவை செய்திட கடுமையாக உழைத்தல்


மாணவர் அனைவருக்கும் சேவை செய்திட கடுமையாக உழைத்தல்


8 அக்டோபர் 2021


லாஸ் மோராஸ், எல் சால்வடார் – மார்ச் மாதத்தில், தொற்றுநோய் காரணமாக எல் சால்வடார் முழுவதும் உள்ள பள்ளிகள் நேர்முகக் கல்வியைக் கைவிட நேர்ந்தபோது, நாட்டில் பஹாய் உதவேகம் பெற்ற பள்ளி ஒன்று, குடும்பங்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற சமூக உறுப்பினர்களில் அதன் 200 மாணவர்களுக்கும் உயர் தரமான கல்வியைப் பராமரிக்க உதவும் மகத்தான திறனாற்றல் களஞ்சியத்தை கண்டது.

ரித்வான் பள்ளியின் ஆசிரியரான மார்செல்லா கான்ட்ரெராஸ் கூறுகிறார், “எல்லோரையும் போலவே, நாங்கள் முன்னோடியற்ற ஒரு வருடத்தை அனுபவித்து வருகிறோம். ஆயினும்கூட, சேவையைப் பற்றிய பஹாய் போதனைகளினால், நம்பிக்கையின் ஒளி பெற்றோர்களுக்காகவும் எனது சகாக்களுக்காகவும் பிரகாசித்து, இந்த விலைமதிப்பற்ற ரத்தினங்களான, எங்கள் மாணவர்களுக்கு சேவை செய்ய ஊக்குவிக்கின்றது. இந்த நேரத்தில், ஆசிரியர்கள் இச்செயல்முறைக்கு ஒருங்கிணைவாக இருக்கும் மாணவர்களின் குடும்பங்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கக் கற்றுக்கொண்டனர்.

1989 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ரித்வான் பள்ளியின் முதல்வர் வனெசா ரெண்டெரோஸ் கூறுகையில், “இந்த நெருக்கடியின் போது மேம்பாட்டிற்கு ஒற்றுமை இன்றியமையாதது.” குழந்தைகளுக்கு தொடர்ந்து கல்வி கற்பிப்பதற்காக முழு சமூகத்துடனும் ஒரு குழுவாக பணியாற்ற நாங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்காக தங்கள் பணிகளுக்கும் அப்பாற்ட்டு செரல்படுகிறார்கள், தரமான கல்வியை அடைய முயல்கிறார்கள் மற்றும் இந்த நெருக்கடியின் போது ஒரு தூண் போன்று இருக்கின்ற தார்மீகக் கருத்தாக்கங்களை ஊக்குவிக்கின்றனர்.”

ரித்வான் பள்ளியின் ஆசிரியர்கள் இணையத்தின் மூலமும் இணைய வசதியற்ற அல்லது வசதி குறைந்த அண்டைப்புற வீதிகளில் பாதுகாப்பான தூரத்திலிருந்து வகுப்புகளை நடத்துவது போன்ற  வேறு வழிகளிலும் வகுப்புகளை வழங்கி வருகின்றனர்.

ரித்வான் பள்ளியின் ஆசிரியரான மார்செல்லா கான்ட்ரெராஸ், “எல்லோரையும் போலவே, நாங்கள் முன்னோடியற்ற ஒரு வருடத்தை அனுபவித்து வருகிறோம். ஆயினும்கூட, சேவையைப் பற்றிய பஹாய் போதனைகளினால், நம்பிக்கையின் ஒளி பெற்றோர்களுக்காகவும் எனது சகாக்களுக்காகவும் பிரகாசித்து, இந்த விலைமதிப்பற்ற ரத்தினங்களான, எங்கள் மாணவர்களுக்கு சேவை செய்ய ஊக்குவிக்கின்றது. இந்த நேரத்தில், ஆசிரியர்கள் இச்செயல்முறைக்கு ஒருங்கிணைவாக இருக்கும் மாணவர்களின் குடும்பங்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கக் கற்றுக்கொண்டனர்,” என்றார்

ஆரம்பத்தில், ஒவ்வொரு குடும்பத்தின் சூழ்நிலைகளையும் மதிப்பிடுவதற்காக பள்ளி தொடர்ச்சியான ஆய்வு வரிசைகளை அனுப்பியது. ஆண்டு கடந்து செல்லும்போது, ​​பெற்றோர்களுக்கு சிரமங்கள் நேரும்போது, பள்ளி ஒவ்வொரு பிரச்சினைக்கும் அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் பதிலளித்துள்ளது.

இணையதள வகுப்புகளை வழங்குவதோடு மட்டுமின்றி, குடும்பங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது இணைய அணுகல் இல்லாத அண்டைப்புற வீதிகளில் ஆசிரியர்கள் பாதுகாப்பான தூரத்திலிருந்து பாடங்களை நடத்துகின்றனர். பொது சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி, எல்லைக்குட்பட்ட நேர்முக கற்றலை மீண்டும் அறிமுகப்படுத்த அரசாங்க வழிகாட்டிகளின்படி இந்தப் பள்ளி இப்போது செயல்படுகிறது. ஒவ்வொரு வயதினரின் தேவைகளுக்கும் கல்வி முறைகள் பதிலளிக்க வேண்டும் என்று பள்ளியின் உடன்பணியாளரான ரெனே லெமுஸ் விளக்குகிறார். “இளைய குழந்தைகள் திறம்பட கற்றுக்கொள்ள பெற்றோரிடமிருந்து அதிக ஈடுபாடு தேவை. இந்தக் குழந்தைகள் தங்கள் கல்வியில் நிகழும் இடைவெளியினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மேலும், இணையவழி வகுப்புகளின் முறை அவர்களுக்கு அவ்வளவு பயனுள்ளதாக இருக்கவில்லை. எனவே, ரித்வான் பள்ளி ஓர் இல்லமுறை திட்டத்தை உருவாக்கியுள்ளது, அங்கு ஆசிரியர்கள் வீட்டுக்கல்விக்கு இளைய குழந்தைகளின் பெற்றோருடன் உடன்வருகிறார்கள்.”

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படம். தார்மீக மற்றும் ஆன்மீக கல்வி ரித்வான் பள்ளி மாணவர்களின் கற்றலின் இன்றியமையாத அம்சங்கள். நெருக்கடியின் போது பாடத் திட்டங்களில் அவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

தார்மீக மற்றும் ஆன்மீக கல்வி என்பது பள்ளியில் மாணவர்களின் கற்றலின் இன்றியமையாத அம்சங்கள் மற்றும் நெருக்கடியின் போது திட்டங்களில் அவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

ஒரு மாணவர் கூறுகிறார்: “மிக முக்கியமானவற்றைப் பற்றி சிந்திப்பதன் மூலம் எங்கள் உற்சாக ஆவிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்னொருவர் மேலும் கூறுவதாவது, “இந்த கடினமான காலங்களில் முன்னேற எனக்கு தேவையான அனைத்து வலிமையையும் எங்கள் ஆய்வுகளின் ஆன்மீக அம்சம் உதவியுள்ளது. என் ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழர்கள் மீது எனக்கு மிகுந்த அன்பு இருக்கிறது, ஏனென்றால் எல்லோரும் தங்களைப் பற்றி அதிகமாக கவலைப்படாமல்  மற்றவர்களின் தேவைகளைப் பற்றி அக்கறை கொண்டுள்ளனர்.”

திரு. லெமுஸ் சமீபத்திய மாதங்களில் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தில் இது ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றைப் பற்றி பிரதிபலிக்கின்றார். “பள்ளியை வீட்டிற்கு கொண்டு வருவதானது, அவர்கள் இளமையாக இருக்கும்போது முறையான கல்விக்கான வாய்ப்பைப் பெறாத சில பெற்றோர்களுக்கு பரந்த கல்வி மற்றும் கல்வியறிவு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் கணிணிதிரையின் முன்னால் இருந்து கற்கின்றார், அதே நேரத்தில், தங்கள் பிள்ளையின் அருகில் அமர்ந்திருக்கும் பெற்றோரும் கற்கிறார்கள்.

“கடந்த காலத்தில், கல்வி தொடர்பான அனைத்து விஷயங்களும் பள்ளியிடமே விடப்பட்டிருந்தன. ஆனால், புதிய சூழ்நிலைகள் பள்ளி-ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என எல்லோருமே பங்களிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றன. ஒரு முழு சமூகத்தின் அறிவுசார் மற்றும் ஆன்மீக கல்விக்கான புதிய பாதை உருவாகி வருகிறது.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1464/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: