எழுத்து மூலமாக தரப்படாத அழைப்பு…
லூயிஸ் மெத்யூஸ் என்பவரின் சகோதரரான ஹேர்ரி ரேண்டால் செல்வச் செழிப்பும், சமூக அந்தஸ்தும் உள்ளவர். அவர் பிரபல ஹார்வார்டு பல்கலைகழகத்தில் ஹார்லன் ஒபெருடன் ஒரே வகுப்பில் கல்விப்பயின்றவர். எனவே, பஹாய் சமயம் ஹார்லனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, அவரும் ஒரு பஹாய் நம்பிக்கையாளராக ஆனவுடன், அவர் தனது நண்பரான ஹேர்ரி ரேண்டாலுக்கு அச்சமயத்தை அறிமுகம் செய்த வைத்தார். பல்வேறு விவகாரங்களில் ஹெர்ரி ரேண்டால் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததனால், அவர் அச்செய்தியில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. இது ஹார்லானுக்கு மனநிறைவளிக்கவில்லை. போஸ்டன் நகருக்கு அப்துல் பஹா வருகை தரவிருக்கின்றார் என்பது ஹாலான் கேள்விப்பட்டவுடன், ஹேர்ரி ரண்டால் அங்கு சென்று அப்துல் பஹாவைச் சந்திக்க வேண்டும் என்றும், அவரது உரையைக் கேட்க வேண்டும் என்றும் ஹார்லன் வலியுறுத்தி வந்தார். எனவே, தனது நண்பரின் மனதை மகிழ்விப்பதற்காக அப்துல் பஹாவின் உரையைக் கேட்பதற்கு ஹேர்ரி ரண்டால் சம்மதம் தெரிவித்தார்.

அந்நண்பர்கள் இருவரும் அப்துல் பஹாவின் உரையைக் கேட்க சென்ற போது, ஹேர்ரி ரேண்டாலின் மனைவியான ரூத் அவர்களுடன் ஒன்று சேர்ந்து போக இயலவில்லை. ஏனெனில், தனக்கு இருந்து வந்த காசநோய்க் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இல்லம் திரும்பியிருந்ததுடன், அப்பயணத்தில் ஈடுபடும் அளவுக்கு அவரது உடல் நிலை அவ்வளவு ஆரோக்கிமாகவும் இல்லை.
ஹார்லனும், ஹெர்ரியும் அக்கூட்டத்திற்குச் சென்று, அவ்வுரையைச் செவிமடுத்தனர். எனினும், அக்க கூட்டத்திற்குப் பிறகு அப்துல் பஹாவை தனிப்பட்ட முறையில் ஹேர்ரி சந்திக்க வேண்டும் என ஹார்லன் விரும்பினார். அந்த ஏற்பாட்டில் ஹேர்ரி ஆர்வங் கொள்ளவில்லையெனினும், தனது நண்பரின் விருப்பத்திற்கேற்ப அப்துல் பஹாவை ஹேர்ரி சந்தித்தார். மறுநாள் பிற்பகலில் ஹேர்ரியின் இல்லத்தில் தாம் தேநீர் அருந்த வரப்போவதாக அந்த சந்திப்பின்போது ஹேர்ரியிடம் அப்துல் பஹா கூறினார். தாம் அப்துல் பஹாவை தனது இல்லத்திற்கு வருமாறு அழைத்திராத நிலையிலும், அவரிடமிருந்து திடீரென வந்த அந்தத் தகவல் குறித்து மிகவும் வியப்பும், திகைப்பும் அடைந்த ஹெர்ரி, மறுநாள் தனது இல்லத்தில் நடைபெறவுள்ள தேநீர் நிகழ்வுக்கு என்ன செய்ய வேண்டும் என தனது நண்பர் ஹார்லானிடம் கேட்டார்.
அதற்குப் பதிலாக, ஹார்லான், அவருக்குத் தேநீர் தயாரித்து கொடுத்து விடுங்கள். உங்களால் வேறு என்ன செய்ய முடியும்?” என்றார்.
“ஆனால், நான் எப்படி அதை செய்வது? ரூத் இன்னமும் நோயுடன் இருக்கிறார். மேலும், நான் என் வேலையில் மிகவும் ஈடுபாடு கொண்டிருக்கின்றேன். என்ன செய்வது?” என்று ஹேர்ரி சொன்னார்.
அதனைக் கேட்டு சிரித்த ஹார்லன், “உங்களுக்கு அப்துல் பஹாவைப் பற்றி தெரியாது அல்லது இதற்குப் பின்னால் ஏதோ ஒரு காரணம் இருக்கின்றது. அந்த காரணத்தினால் காரியம் பிறந்து விடும். உங்களுடைய வீட்டில் நிறைய வேலைக்காரர்கள் இருக்கின்றனர். மாஸ்டர் அப்துல் பஹாவுக்கு அவர்கள் ஒரு கோப்பை தேநீர் தயாரித்துக் கொடுக்கட்டுமே. அந்த நிகழ்வுக்கு உங்களுடைய நண்பர்கள் சிலரையும் அழைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
எனவே, அந்தத் தேநீர் நிகழ்வை அவ்வாறே ஏற்பாடு செய்வது என முடிவெடுத்து ஹேர்ரி ஏற்பாடு செய்தார். மறுநாள் பிற்பகலில் அந்த அழகிய இல்லத்தை அப்துல் பஹா வந்தடைந்தார். அவரை வரவேற்க ஒரு சிறிய குழுவினர் அந்த இல்லத்தின் முற்றத்தில் ஒன்று திரண்டிருந்தனர். ஹேர்ரியின் மனைவி ரூத் ரேண்டாலும் அங்கு இருந்தார். மென்மையும், நேர்த்தியும் கொண்ட ரூத் ரேண்டால், குளிர் காற்றின் பாதிப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நீண்ட இருக்கையின் கோடியில் அமர்ந்திருந்தார். அங்கு குழுமியிருந்த மற்றவர்களைப் பற்றி அக்கறைக் கொள்ளாமல், ரூத் ரேண்டால் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி அப்துல் பஹா நடந்து வந்தார். அவர் நடந்து வந்த வேகத்தில் அவரது நீண்ட வெண்ணிற மேல்சட்டையும் காற்றில் தவழ்ந்தது; அவரது அழகிய கண்கள் ஒளியும், அன்பும் கொண்டு நிரம்பியிருந்தன. அருகில் வந்த அப்துல் பஹா, ரூத் ரேண்டாலை நோக்கி குணிந்த பாங்கில், மெதுவான குரலில், என் மகளே, என் அன்பு மகளே” எனக் கூறி, தமது கைகளை ரூத் ரெண்டாலின் தோள்களின் மீது வைத்தார். அதன் பிறகு அவர் பின்னால் திரும்பி புன்சிரிப்புடன் மற்ற விருந்தினர்களைச் சந்தித்து அளவிலாவினார்.
மறுநாள், ரூத் ரேண்டால், மருத்துவமனைக்குச் சென்று தனது மருத்துவரைச் சந்திக்க வேண்டிய நாள். கடந்த வாரம் ரூத் ரேண்டாலை அம்மருத்துவர் சந்தித்தபோது, நோய்க் கடுமையாக இருப்பதால், அவர் மீண்டும் மருத்துமனைக்கு சிகிச்சைக்காக வர வேண்டும் என அம்மருத்துவர் கூறியிருந்தார். அதன் காரணமாகவே அம்மருத்துவமனைக்கு வந்த ரூத் ரெண்டால், மீண்டும் தாம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டியிருக்குமே எனக் கவலையடைந்து, எப்போது தனது இல்லத்திற்கு மீண்டும் திரும்பிச் செல்லலாம் என்ற நினைப்பில் இருந்தார். அம்மருத்துவர் அவரைப் பரிசோதித்தவுடன் திகைப்புற்றார். என்ன ஆச்சரியம்! அப்பெண்மணி என்ன செய்ததால் அந்த நோய் இப்படி ஆகி விட்டது என அம்மருத்துவர் வியந்தார். அதவாது, ரூத் ரேண்டாலின் வியாதி பரிபூரணமாகக் குணமாகி விட்டதுடன், காசநோய்க்கான எந்த அடையாளமும் அவரது உடலில் காணப்படவே இல்லை. ஹேர்ரியும், ரேண்டாலும் புறக்கணிக்க முடியாததது இந்த அனுபவம். எனவே, அத்தம்பதியர் தங்களுடைய புகழொளிமிக்க வாழ்வில் சமயச் சேவையில் நீண்டகால போதித்தல் பணியை அவ்வாறாகத் தொடங்கினர்.
(1934ம் ஆண்டு கோடைகாலத்தில் க்ரீன் ஏக்ரில் ஹார்லன் ஓபர் கூறியது)